VFX

You might also like

You are on page 1of 95

VFX Mo-Cap, Matchmoving, Compositing:

உலக சினிமா உத்திகள்

நவீனா அலெக்சாண்டர்
வர்ஷினி
Andhazahi
Vaitheeswaran Chockalingam, Gajiniganth Gulam Dhasthagir, Arun Kumar,
Mahendran Ameeragam, David J Praveen, Karthik Dilli, Surendar Lohia,
Aravind Sankar, Rameez Raja, Zahir Ibn Jaffarullah, Varshini
Copyright © 2017 by Naveena Alexander & Varshini
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or
transmitted in any form or by any means, including photocopying, recording, or
other electronic or mechanical methods, without the prior written permission of
the publisher/Author, except in the case of brief quotations embodied in critical
reviews and certain other noncommercial uses permitted by copyright law. For
permission requests, write to the publisher/Author, at the email below.

www.andhazahi.in
First Edition. Sep. 2017
Price Rs. 90/-
Andhazahi
12, Pillayar Koil Street, Durga Nagar,Tambaram-Santorium,
Chennai - 47
Printed in Chennai, Tamil Nadu.
ப�ொருளடக்கம்

முன்னுரை 1

அணுகுதல் 4

இண்டி பிளிம் மேக்கிங் ப்ரி-ப்ரோடக்சன் (Pre-Production) – VFX 16

ஆன் சூட் – ம�ோஷன் கேப்சர் (Motion Capture) த�ொழில் நுட்பம் 29

மேட்ச்-மூவிங் (Matchmoving) VFX த�ொழில் நுட்பம் 39

கம்போசிட்டிங் – (Compositing) VFX த�ொழில் நுட்பம் 59

VFX த�ொழில் நுட்பத்தின் அடுத்தகட்டம் 77

Reference Books 89

IV
அந்தாழையின் பிற உலக சினிமா வெளியீடுகள்

நவீனா அலெக்சாண்டர்
உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை: திரைக்கதை உத்தி,
கேமிரா உத்தி, எடிட்டிங் உத்தி
க�ொரில்லா பிலிம் மேக்கிங்: Handbook For Independent Filmmakers
மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள்: An Introductory To Next Gen
Screenwriting

வர்ஷினி
தி ஆஸ்கார்ஸ்

நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி


பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்: An Intro To Film Festival Circuit
இண்டர்நெட் சினிமா: VOD (Video On Demand) Next Gen Film Distribution
For Indie Filmmakers
உலக சினிமாக்களின் கேமிரா & எடிட்டிங் உத்திகள்: Handbook For Indie
Filmmakers
மம்பல்கோர் & சிங்கிள் கேரக்டர் திரைக்கதை உத்திகள்: An Intro Of
Single Character Screenplay For Indie Filmmakers

V
முன்னுரை

க லைக்கும் அதை சாத்தியப்படுத்தும்

கலைகளை வெளிப்படுத்த உதவும் அது சார்ந்த


த�ொழில் நுட்பங்கள் ஒரு கட்டத்தில் தான் வெளிப்படுத்த
வந்த கலைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதன்மையான
த�ொழில்
நுட்பங்களுக்கும் எப்போதுமே ஏழாம் ப�ொருத்தம்தான்.

இடத்தை அதுவே பிடித்துக்கொள்வது என்பது காலம்தோறும்


த�ொடர்ந்துக�ொண்டிருக்கும் அக்கப்போர் சங்கதி. சினிமா என்கிற
நவீன கலையும் இதற்கு விதி விலக்கு கிடையாது.

மற்ற எந்த கலைகளையும் விட சினிமா கலை பல நிலைகளில்


த�ொழில் நுட்பங்களை சார்ந்து இயங்க கூடிய ஒன்று. சின்ன
த�ொழில் நுட்ப வளர்ச்சிகளும் கூட அதிகம் சினிமாவின் கலை
வெளிப்பாட்டுத் தன்மையை மட்டுப்படுத்தி அதை த�ொழில் நுட்ப
வளர்ச்சிகளின் வெளிப்பாடு ஒன்றாக மட்டுமே மாற்றிவிடும்
அபாயம் அதிகம் இருக்கிறது. சினிமா கலையின் நூறு ஆண்டு கால
வரலாற்றில் இது கண் கூடாகவே தெரியக் கூடிய ஒன்று. மெளனப்
படங்களின் கலை வெளிப்பாட்டுத் தன்மையை பேசும் படங்களில்
காண்பது அரிது.

பேசும் கருப்பு வெள்ளை திரைப்படங்களின் கலை வெளிப்பாட்டுத்


தன்மையை, வண்ணத் திரைப்படங்களில் காண்பது கடினம்.
வண்ணத் திரைப்படங்களின் கலைத் தன்மையை இன்றைய VFX
காட்சிகள் நிறைந்த திரைப்படங்களில் காண முடியாது. எதிர்
காலத்தில் விர்டுவல் ரியாலிட்டி (Virtual Reality) மற்றும் ஆர்டிபிசியல்
இண்டலிஜன்ஸ் (Artificial Intelligence) த�ொழில் நுட்ப வளர்ச்சிகளின்
துணைக�ொண்டு வெளிவர இருக்கும் திரைப்படங்கள் VFX காட்சிகள்
நிறைந்த திரைப்படங்களின் கலைத் தன்மையை வெளிப்படுத்துமா
என்பது கேள்விக் குறிதான்.

1
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

த�ொழில் நுட்ப வளர்ச்சிகளை ஒருப�ோதும் தடுத்து நிறுத்திவிட


முடியாது. அதற்காக த�ொழில் நுட்ப வளர்ச்சிகள் சினிமா
கலையை அழித்துக்கொண்டிருக்கிறது என்று புலம்பிக்கொண்டும்
இருந்துவிட முடியாது. திரைக்கதையை முதன்மைப் படுத்தி
அதற்கு உதவி செய்வதற்கு மாத்திரமே த�ொழில் நுட்பங்கள் என்கிற
கட்டுப்பாட்டுடன் இயங்கும்போது நிச்சயம் சினிமாவின் கலை
வெளிப்பாட்டுத் தன்மையை எந்த காலத்திலும் எதற்காகவும்
சமரசம் செய்துக�ொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.

த�ொடர்ச்சியான த�ொழில் நுட்ப வளர்ச்சிகளின் காரணமாக VFX


காட்சிகளால் நிரப்பப்பட்ட பல பெரிய பட்ஜெட் ஹாலிவுட்
திரைப்படங்கள் உலகம் முழுவதற்கும் என்று வெளியிடப்படுகிறது.
இப்படியான திரைப்படங்கள், காட்சிகளில் கிராபிக்ஸ் காட்சிகளின்
ஆர்ப்பாட்டத்தையும், பிரம்மாண்டத்தையும் மாத்திரமே
சினிமா அனுபவங்களாக வெளிப்படுத்திவிட்டு வந்த வழி
தெரியாமல் காணாமல் ப�ோய்விடுகின்றன. ஆர்ப்பாட்டங்களும்
பிரம்மாண்டங்களும் பார்வையாளனை திரைக்கு வெளியிலேயே
வைத்து வாய் பிளக்க செய்து அனுப்பிவைத்துவிடுகின்றன.
மெளன திரைப்படங்கள் பார்வையாளனை திரைக்குள்
இழுத்துக்கொண்டதில் பத்து சதவிகிதத்தையும் கூட இன்றைய VFX
காட்சிகள் நிறைந்த திரைப்படங்களால் த�ொட முடிவதில்லை.

இப்படி ச�ொல்வது ஒரேயடியாக VFX த�ொழில் நுட்பங்களின்


மீதான மட்டையடி அடிக்கும் செயல் என்று நினைத்துவிட
வேண்டாம். VFX த�ொழில் நுட்பங்கள் நிச்சயம் வேண்டும்
ஆனால் அவைகள் திரைக்கதையை மேலும் அழகு படுத்துவதற்கு
என்பதாக மாத்திரமே இருக்கவேண்டும். வணிக வசூலை
குறிவைத்து திரைக்கதையில் வலிந்து VFX த�ொழில் நுட்பங்கள்
நிறைந்த காட்சிகள் திணிக்கப்படும்போதே அது துருத்திக்கொண்டு
வெளிவந்து சினிமா கலை பார்வையாளனுக்குள் ஏற்படுத்தும்
திரை அனுபவத்தை இல்லாமல் ஆக்கிவிடும்.

திரைக்கதைக்கு ஏற்ப VFX த�ொழில் நுட்பங்களை கச்சிதமாக


பயன்படுத்துவதற்கான உதாரணமாக பீட்டர் ஜாக்சனின் The Lord
Of The Rings திரைப்படத்தையும், குல்லிர்மோ டெல் டார�ோவின்
Pan’s Labrynith திரைப்படத்தையும் குறிப்பிடலாம். இந்த இரு
2
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

திரைப்படங்களிலும் திரைக்கதை என்பது அலாதியான திரை


அனுபவத்தை ஏற்படுத்த அதை அடுத்த நிலைக்கு எடுத்த செல்லக்
கூடியதாக செயல்பட்டிருப்பவைகள் VFX த�ொழில் நுட்ப காட்சிகள்.
ஆக வாரி இறைக்க பெரும் பட்ஜெட் இருக்கிற ஒரே காரணத்திற்காக
VFX காட்சிகளால் ஒரு திரைப்படத்தை குளிப்பாட்டி அனுப்புவது
ஒருப�ோதும் சினிமா என்கிற கலையை அடுத்த நிலைக்கு எடுத்து
செல்லப்போவதில்லை.

அந்த வகையில் இண்டி திரைப்படங்கள் இதிலிருந்து தனித்து


நிற்க கூடியவைகள். அவைகளால் உண்மையான கலை
தன்மை வெளிப்படும் திரைப்படங்களை த�ொடர்ந்து படைக்க
முடியும். காரணம் பெரும் பட்ஜெட்களை க�ோரி நிற்கும் VFX
காட்சிகளை அவைகளால் பயன்படுத்த முடியாது என்பதால்.
இந்த நிலை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதும் கேள்விக்
குறிதான். டிஜிட்டல் கேமிரா த�ொழில் நுட்பம் எப்படி இண்டி
படைப்பாளிகளுக்கு பெரும் வரம�ோ அதேப�ோல VFX த�ொழில்
நுட்பங்களின் வளர்ச்சியும் வரமாக அமைந்துக�ொண்டிருக்கிறது.

பெரும் பட்ஜெட் திரைப்படங்களில் சாத்தியப்படக் கூடிய VFX


காட்சிகளில் பலவற்றை இன்றைக்கு ல�ோ பட்ஜெட் இண்டி
இயக்குனர்களாலும் அவர்களின் படைப்புகளில் சாத்தியப்படுத்த
முடியும். இண்டி இயக்குனர்களுக்கு சாத்தியப்படக் கூடிய VFX
த�ொழில் நுட்பங்களைப் குறித்த ஒரு அறிமுகத்தையும் புரிதலையும்
உண்டாக்கவே இந்த புத்தகத்தை எழுதுவது என்று முடிவு செய்தோம்.
VFX வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பதை விட அதை
அணுகி முடிந்த வரை அதை குறித்த த�ொழில் நுட்ப அறிவை ஒரு
இண்டி இயக்குனர் வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில் அது அவருக்கு
மிகப்பெரும் உதவிகளையும் சாத்தியக் கூறுகளையும் திறந்துவிடக்
கூடிய அலாவுதீன் விளக்காக இருக்கும் என்பதில் மாற்றுக்
கருத்திற்கு இடமே இருக்கப்போவதில்லை. அதற்கான ஒரு முதல்
படியாக இந்த புத்தகம் செயல்படும் என்கிற நம்பிக்கையிலேயே
இதை நானும் எனது நண்பர் வர்ஷினியும் எழுத உட்கார்ந்தோம்.
இப்போது இந்த புத்தகம் உங்களின் கைகளில்.

நவீனா அலெக்சாண்டர் (9841959890)


வர்ஷினி (https://www.facebook.com/varshinitripura/)
3
அணுகுதல்

ஒ ரு எடிட்டர் எப்படி சிந்திக்கிறார் என்பதை புரிந்துக�ொள்ள


மனிதனின் சிந்தனை முறைகள் குறித்தும், தத்துவம் குறித்தும்,
உளவியல் குறித்தும் த�ொடர்ந்து படிப்பதாக ச�ொல்கிறார்
உலகின் தலை சிறந்த எடிட்டர்களில் ஒருவராக கருதப்படும் காரன்
பியர்ல்மான். எடிட்டிங் குறித்து இவர் எழுதிய Cutting Rythms என்கிற
புத்தகம் எடிட்டிங் குறித்த பல புதிய புரிதல்களை தரக் கூடியது. நாம்
இங்கே பேச இருப்பது எடிட்டிங் குறித்தது இல்லையென்றாலும்
அந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் அவர் விளக்கும் ஒரு விசயம்
மிக முக்கியமானது. ஒருவகையில் நாம் த�ொடர்ந்து வலியுறுத்தி வரும்
நம்முடைய கருத்திற்கு வலு சேர்க்க கூடியதும் கூட.

அது ஒரு திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதும் நிலையிலேயே


அந்த திரைப்படத்திற்கு என்று முடிவு செய்திருக்கும் எடிட்டரை
ப்ரோஜக்டிற்குள் க�ொண்டு வந்துவிட வேண்டும் என்பது. அதாவது
திரைக்கதை எழுதும்போது எடிட்டருடன் கலந்தால�ோசித்து
திரைக்கதையை எழுத வேண்டும் என்று ச�ொல்கிறார் காரன்.
நம்முடைய உலக சினிமா குறித்த புத்தகங்களில் நாம் த�ொடர்ச்சியாக
குறிப்பிடுவது திரைக்கதை எழுதும்போதே அதை இறுதியான
எடிட்டிங் ஸ்கிரிப்டாக எழுத வேண்டும் என்பது. சரி அதற்கும்
VFX குறித்து பேச இருக்கும் இந்த புத்தகத்திற்கும் என்ன த�ொடர்பு
என்றால் அவசரம் வேண்டாம். முழு புத்தகமும் இதைத்தானே பேச
இருக்கிறது.

VFX (Visual Special Effects – விசுவல் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்) என்றாலே


அது பெரும் பட்ஜெட் க�ொண்ட திரைப்படங்களுக்கானது
என்கிற புரிதல் ப�ொதுவானதாக இருக்கிறது. அதில் தவறு
ஒன்றுமில்லைதான். நிச்சயமாக கண்களை பறிக்கும், ஆளை அசத்தும்
விசுவல் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள் பெரும் பட்ஜெட் க�ொண்ட
திரைப்படங்களுக்கானதுதான். ஆனால் அவை பெரும் பட்ஜெட்
4
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

திரைப்படங்களுக்கு மட்டுமே உரியது என்கிற புரிதலில்தான்


நமக்கு சற்று மாற்றம் வேண்டியிருக்கிறது. VFX மிக மிக குறைந்த
பட்ஜெட்டில் இயங்க கூடிய இண்டி படைப்பாளிகளுக்கும் பெரும்
அளவில் உதவக் கூடியது.

டிஜிட்டல் த�ொழில் நுட்பம் எப்படி பிளிம் ர�ோல் என்கிற மிகப்


பெரும் கட்டுகளில் இருந்து இண்டி படைப்பாளிகளை விடுவித்து
அவர்களை படு சுதந்திரமாகவும் மிக குறைந்த பட்ஜெட்டிலும்
இயங்குவதற்கான கதவுகளை திறந்துவிட்டத�ோ அதே வேலையை
இப்போது VFX மென்பொருட்கள் செய்யத் த�ொடங்கியிருக்கின்றன.
வருங்காலத்தில் இந்த மென்பொருட்களின் அடுத்தகட்ட த�ொழில்
நுட்ப வளர்ச்சிகள் என்பது இண்டி படைப்பாளிகளுக்கான
“மீண்டும் ஒரு டிஜிட்டல் வசந்தம்” என்பதில் எவ்வித மாற்றுக்
கருத்திற்கும் இடமிருக்கப்போவதில்லை.

டிஜிட்டல் த�ொழில் நுட்பம் பிளிம் ர�ோல் என்கிற கட்டுகளில்


இருந்து இண்டி படைப்பாளிகளை விடுவித்துவிட்டாலும்
இப்படியான த�ொழில் நுட்ப சாதகத்தை பயன்படுத்தி வருடத்திற்கு
எத்தனை இண்டி திரைப்படங்கள் மிக குறைந்த பட்ஜெட்டில்
எடுக்கப்படுகின்றன என்கிற எதிர் கேள்வி கண்டிப்பாக எழத்தானே
செய்யும். இதே கேள்வியை VFX த�ொழில் நுட்ப வளர்ச்சிகள�ோடும்
த�ொடர்புபடுத்தி எழுப்ப முடியும். VFX த�ொழில் நுட்பங்கள்
அதிகளவில் இண்டி படைப்பாளிகளுக்கு - அவர்களின் மிக குறைந்த
பட்ஜெட்டிற்குள் – உதவி செய்யும் வகையில் இயங்குவதாக
இருந்தாலும் வருடத்திற்கு எத்தனை இண்டி திரைப்படங்கள் VFX
உண்டாக்கி தரும் த�ொழில் நுட்ப சாதகங்களைப் பயன்படுத்தி
எடுக்கப்படும்?

இரண்டு கேள்விகளுக்குமான ஒரே விடை நாம் த�ொடர்ந்து


வலியுறுத்தி வரும், காரன் அவருடைய புத்தகத்தின் முதல்
அத்தியாயத்தில் வலியுறுத்தும் விசயத்தில் இருக்கிறது.
இரண்டு கேள்விகளுக்கான விடைகளையும் தனித் தனியாக
பார்ப்போம். அதன் வழி VFX த�ொழில் நுட்பங்கள் எப்படி
இண்டி படைப்பாளிகளுக்கான தனிப் பெரும் வரப் பிரசாதமாக
இருக்கிறது, இருக்கும் என்பதை பார்ப்போம். டிஜிட்டல் த�ொழில்
நுட்ப வளர்ச்சி பிளிம் ர�ோல் செலவை இல்லாமல் ஆக்கிய பிறகு
5
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

வருடத்திற்கு எத்தனை இண்டி திரைப்படங்கள் வெளிவருகின்றன


என்கிற கேள்வியை சற்றே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏன் இண்டி திரைப்படங்கள் அதிகம் வெளிவருவதில்லை?

ஏன் அதிகம் வெளிவருவதில்லை என்பதற்கான விடை


திரைக்கதையை, எழுதி முடிக்கப்பட்ட திரைக்கதையை எப்படி
படம் பிடிக்கிற�ோம் என்கிற செயல் முறையில் இருக்கிறது. மிக
குறைந்த பட்ஜெட்டை கையில் வைத்துக்கொண்டு வழமையான
முறையில் இயங்குவதும் இயங்க நினைப்பதுமே இண்டி
திரைப்படங்கள் அதிகளவில் வெளிவருவதில் பிரச்சனையை
ஏற்படுத்துகிறது. வழமையான முறை என்று இங்கே நாம்
குறிப்பிடுவது பெரும் பட்ஜெட் திரைப்படங்களை எடுக்கும்போது
என்னவிதமான செயல் முறைகள் கடைபிடிக்கப்படுகிறத�ோ அதே
விதமான செயல் முறைகளை. நம்மூரில் ல�ோ பட்ஜெட் இண்டி
திரைப்படத்திற்கும், ஜீர�ோ பட்ஜெட் திரைப்படத்திற்குமே
வித்தியாசம் தெரியாத ப�ோது எங்கிருந்து வழமையான முறையில்
இருந்து வேறுபட்டு இயங்குவதாம்!

இண்டி பிளிம் மேக்கிங் (Indie Filmmaking) வகை மாதிரிக்குள் உட்


பிரிவுகளாக அடங்க கூடியவைகள் க�ொரில்லா பிளிம் மேக்கிங், ல�ோ
பட்ஜெட் பிளிம் மேக்கிங் மற்றும் ஜீர�ோ பட்ஜெட் பிளிம் மேக்கிங்.
இவை மூன்றும் மிக குறைந்த பட்ஜெட்டில் அல்லது பட்ஜெட்டே
இல்லாமல் எடுக்கப்பட்டாலும் இவை மூன்றின் செயல்படுத்தலும்
(execution) ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமானவைகள். இவை
மூன்றையும் ஒரே வார்த்தையில் இண்டி பிளிம் மேக்கிங் என்று
குறிப்பிட முடியும். குறிப்பிட வேண்டும். நம்மிடையே இண்டி
பிளிம் மேக்கிங் என்கிற பதம் கிடையாது. ஜீர�ோ பட்ஜெட் பிளிம்
மேக்கிங் என்கிற ச�ொற் பதமே வழக்கில் இருக்கிறது.

சரி அது ப�ோகட்டும். ஜீர�ோ பட்ஜெட் பிளிம் மேக்கிங் என்று


அடையாளப்படுத்தப்படும் சங்கதியாவது அதன் உள்ளார்ந்த
தன்மையுடன் செயல்படுத்தப்படுகிறதா என்றால் நிச்சயமாக
இல்லை. நம்மிடையே மாத்திரம் அல்ல உலகம் முழுவதும்
இதுதான் நிலை. ஜீர�ோ பட்ஜெட் பிளிம் மேக்கிங் என்றால்
படம் பிடிக்கும் கருவிகளையும், நடிகர்களையும், த�ொழில்
நுட்ப கலைஞர்களையும், படம் பிடிக்கும் இடங்களையும்
6
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

இலவசமாக பயன்படுத்திக்கொள்வது என்கிற மேல�ோட்டமான


ம�ொன்னையான புரிதலே பரவலாக இருக்கிறது.

இந்த புரிதலின் காரணமாக படப்பிடிப்பு கருவிகளையும்,


நடிகர்களையும், த�ொழில் நுட்பக் கலைஞர்களையும் இலவசமாக
பயன்படுத்திக்கொண்டே வழமையான பெரும் பட்ஜெட்
திரைப்படங்கள் இயங்கும் முறையில் இயங்குகிறார்கள். இதுதான்
பிரச்சனைக்கான மூலம். இண்டி பிளிம் மேக்கிங் (க�ொரில்லா
பிளிம் மேக்கிங், ல�ோ பட்ஜெட் மற்றும் ஜீர�ோ பட்ஜெட் பிளிம்
மேக்கிங்) வழமையான பெரும் பட்ஜெட் செயல்படுத்தல் (execution)
முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

உதாரணமாக பெரும் பட்ஜெட் திரைப்படத்தை


செயல்படுத்தும்போது (shooting) ஸ்டேஜிங் அண்ட் பிளாக்கிங்கை
ப�ொறுத்து இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் இரண்டுக்கு
மேற்பட்ட அசிஸ்டெண்ட்கள் தேவைப்படலாம். திரைக்கதை
பெரும் பட்ஜெட்டிற்கு ஏற்ப பிரம்மாண்டமான காட்சியை
உள்ளடக்கி இருக்கும் என்பதால் தேவையும்படும். ஆனால் ல�ோ
பட்ஜெட்டை கையில் வைத்துக்கொண்டு ஒரு இண்டி இயக்குனர்
(இண்டி பிளிம் மேக்கிங் குறித்த புரிதல் அறிந்தவர் என்றால்)
திரைக்கதையை எழுத உட்காரும்போது இயல்பாகவே அதிக
ப�ொருட் செலவை க�ோரக் கூடிய காட்சிகளை தவிர்த்துவிடுவார்.
எளிய காட்சியை படம் பிடிக்க எதற்கு இயக்குனருக்கும்,
ஒளிப்பதிவாளருக்கும் வச வச என்று அசிஸ்டெண்டுகள்?

ஜீர�ோ பட்ஜெட்தானே எத்தனை அசிஸ்டெண்டுகள் இருந்தால்


என்ன, அவர்களுக்கு சம்பளமா தரப் ப�ோகிற�ோம் என்று
ச�ொல்லிக்கொண்டு எளிய காட்சி ஒன்றை படம் பிடிக்க
அதிகளவில் வளங்களை (resources – இங்கே மனித வளம் மற்றும்
நேரத்தை குறிக்கிறது) பயன்படுத்துவது என்பது வழமையான
பெரும் பட்ஜெட் திரைப்பட செயல்படுத்தல் முறையை பார்த்து
இண்டி படைப்பாளிகளும் சூடுப் ப�ோட்டுக்கொள்ளுவது
தவறான புரிதலுக்கான த�ொடக்க புள்ளி. இந்த த�ொடக்க புள்ளியை
த�ொடர்ந்து பின்பற்றப்படும் அனைத்து வழமையான சங்கதிகளும்
இண்டி திரைப்படங்கள் அதிகளவில் வெளிவராமல் ப�ோவதற்கான
மிக மிக முக்கிய காரணியாக அமைகின்றன.
7
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

ஒரு இண்டி திரைப்படத்திற்கான செயலாக்க இயங்கு


வெளி கட்டுப்பாடுகளை உணர்ந்துக�ொள்ளாமலேயே, அந்த
கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப திரைக்கதையை உருவாக்க வேண்டும்
என்கிற புரிதல் இல்லாமலேயே படப்பிடிப்பிற்கான கருவிகளும்,
மனித வளமும் இலவசமாக கிடைக்கிறது என்கிற ஒரே
காரணத்திற்காக இண்டி திரைப்படம் (ஜீர�ோ பட்ஜெட் திரைப்படம்)
என்று ச�ொல்லிக்கொண்டு பெரும் பட்ஜெட் திரைப்படத்திற்கான
திரைக்கதையை உருவாக்கி, பெரும் பட்ஜெட் திரைப்படங்கள்
செயல்படுத்தப்படும் முறையிலேயே இண்டி திரைப்படத்தையும்
செயல்படுத்துவது முதல் க�ோணல் முற்றிலும் க�ோணல் என்றாகி
இண்டி திரைப்படங்கள் அதிகம் வெளிவருவதை தடுத்துவிடுகிறது.
உலகம் முழுவதிலும் இதே அணுகுமுறைதான் பிரச்சனையாக
இருக்கிறது என்றால் நம்மூரில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது
என்பதும் கூட அறியப்படாத நிலையில்தான் இருக்கிறது.

இதே தவறு VFX விசயத்திலும் நடக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.


உண்டு என்பதை விட இருக்கின்றன என்று ச�ொல்வது சரியாக
இருக்கும். பெரும் பட்ஜெட் திரைப்படங்கள் VFX காட்சிகளை
க�ொண்டு இரசிகர்களை திரையரங்கிற்கு இழுக்க வேண்டும்
என்கிற அடிப்படையிலேயே அதற்கு ஏற்ற திரைக்கதைகளை,
இயக்குனர் மற்றும் பிற த�ொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு
செய்து திட்டமிட்டு வேலை செய்கின்றன. இப்படி மிக தெளிவாக
குறிவைத்து தேர்ந்தெடுக்கப்படும் திரைக்கதையில் எவ்வளவு VFX
காட்சிகள் (ஷாட்கள்) வந்தாலும் அது பார்வையாளனுக்கு களைப்பு
(ஒரு சில திரைப்படங்கள் தவிர்த்து) ஏற்படுத்தப் ப�ோவதில்லை.
மேலும் தேவைப்படும் VFX காட்சிகளை (ஆயிரத்திற்கு மேல்
சென்றாலும் கூட) உருவாக்குவதற்கான பட்ஜெட், VFX த�ொழில்
நுட்ப கலைஞர்கள் மற்றும் சாதனங்களை பெறுவதிலும் எத்தகைய
பிரச்சனையும் இருக்கப்போவதில்லை.

குறைந்த பட்ஜெட்டில் இயங்கும் இண்டி படைப்பாளி


தன்னுடைய திரைக்கதையில் அதிகமான VFX ஷாட்களை
க�ொண்டு வருவாரேயானால் அவரால் குறிப்பிட்ட ப்ரோஜக்டில்
பாதி கிணற்றையும் கூட தாண்ட முடியாமல் ப�ோய்விடும்.
பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட VFX காட்சிகள் க�ொண்ட
திரைப்படத்தை பார்த்துவிட்டு அதேப் ப�ோன்ற காட்சிகளை
8
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

தன்னுடைய இண்டி திரைப்படத்திலும் க�ொண்டுவர வேண்டும்


என்று நினைப்பது மிகவும் தவறான அணுமுறையாக
முடிந்துவிடும். VFX காட்சிகளை மனதில் க�ொண்டு திரைக்கதையை
உருவாக்குவதை விட்டு விட்டு குறைந்த பட்ஜெட்டை கையில்
வைத்துக்கொண்டு எழுதப்படும் திரைக்கதைக்கு எந்த வகையில்
VFX த�ொழில் நுட்பம் உதவும் என்று சிந்திப்பது அந்த த�ொழில்
நுட்பத்தை முழு அளவில் பயன்படுத்திக்கொள்வதற்கு – மிக
குறைந்த பட்ஜெட்டில்தான் – வழி செய்யும்.

இண்டி படைப்பாளிகளைப் ப�ொறுத்த வரையில் கையில்


இருக்கும் குறைந்த பட்ஜெட்டும், வளங்களுமே (மனித வளம்,
த�ொழில் நுட்ப கருவிகள் மற்றும் நேரம்) அவர்களின் இயங்கு
வெளியை தீர்மானிக்க கூடியவைகள். இதன் அடிப்படையிலேயே
அவர்களின் திரைக்கதையும் எழுதப்பட வேண்டும். பிளிம் ர�ோல்
செலவுகளில் இருந்து விடுவித்துவிட்ட டிஜிட்டல் கேமிராவ�ோ
அல்லது முற்றிலும் கற்பனை உலகங்களை சாத்தியமாக்க கூடிய
VFX த�ொழில் நுட்பங்கள�ோ ஒருப�ோதும் திரைக்கதையை
தீர்மானிப்பவைகளாக இருக்க கூடாது. முடியாது என்றும் கூட
ச�ொல்லலாம். அடுத்து எப்படி செயல்பட (execution) ப�ோகிற�ோம்
என்பதையும் திரைக்கதை எழுதும் ப�ோதே இண்டி படைப்பாளி
தெளிவாக தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் கேமிரா த�ொழில் நுட்பம�ோ அல்லது VFX த�ொழில்


நுட்பங்கள�ோ நாம் மேலேப் பார்த்த இண்டி படைப்பாளிகளின்
இரண்டு அணுகு முறைகளைப் ப�ொறுத்தே அவர்களுக்கு
எவ்வளவிற்கு உதவியாக இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.
இரண்டு அணுகு முறைகளையும் தனித் தனியாக பார்ப்போம்.
கையில் இருக்கும் வளங்களை க�ொண்டு திரைக்கதை அமைப்பது
திரைக்கதையை எந்த வடிவில் செயல்படுத்துவது

கையில் இருக்கும் வளங்களை க�ொண்டு திரைக்கதை அமைப்பது


ஒரு இண்டி படைப்பாளியின் கையில் இருக்கும் வளங்களின்
பட்டியலில் இருக்க கூடியவைகள், மிக குறைந்த பட்ஜெட்
(சில பத்தாயிரங்கள்), த�ொழில் முறை அனுபவமற்ற நடிகர்கள்,
டிஜிட்டல் கேமிரா (வாடகைக்கு பெற்றது அல்லது ச�ொந்தமாக
வைத்திருப்பது), கேமிராவை இயக்க கூடிய ஒளிப்பதிவாளர்
9
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

(சில இண்டி இயக்குனர்கள் அவர்களே ஒளிப்பதிவாளராகவும்


செயல்படுவதுண்டு), எடிட்டர் மற்றும் தெரிந்த படப்பிடிப்பு
இடங்கள்.

மேலேப் பார்த்த புற வளங்களையும் தாண்டி இண்டி


படைப்பாளி தனிப்பட்ட முறையில் பல திறமைகளை
க�ொண்டவராக இருக்கவேண்டும். பலத் திறமைகள் என்று நாம்
உள்ளடக்குவது கற்பனை திறனையும் தாண்டி த�ொழில் நுட்ப
திறன்களையும்தான். வெறும் இயக்கத்தை மட்டுமே கவனிப்பேன்
என்று ச�ொல்லிக்கொண்டு இண்டி திரைப்படங்களை இயக்க
இறங்கினால் அது பூனை சூடுப�ோட்டுக்கொண்ட கதையாகிவிடும்.
இண்டி பிளிம் மேக்கிங் என்பது முழுக்க முழுக்க தனித்து இயங்க
கூடிய அளவிற்கான தன்னம்பிக்கையும், சூழ் நிலைகளுக்கு
ஏற்ப சாமர்த்தியமாக (அதே சமயத்தில் சிக்கனமாக) ஒரு சில
ந�ொடிகளுக்குள்ளாக முடிவெடுக்கும் திறனும், எதற்கும்
யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் அனைத்து வேலைகளையும்
இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து முடிக்கும் மன உறுதியையும்
க�ோரி நிற்பது.

திரைப்பட உருவாக்கம் பல பேர் கூடி நின்று தேர் இழுக்கும் குழு


செயல்பாடு என்று ச�ொல்வது பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு
வேண்டுமானால் ப�ொருந்திப்போகலாம் ஆனால் இண்டி பிளிம்
மேக்கிங்கிற்கு இது முற்றிலும் முரணானது. இண்டி திரைப்பட
உருவாக்கம் ஒன் மேன் ஆர்மி செயல்பாடு. இங்கே களத்தில்
பாதுகாப்பு வீரனும் இண்டி படைப்பாளிதான், தாக்குதல் நடத்தும்
வீரனும் இண்டி படைப்பாளிதான், தாக்குதலுக்கு திட்டம் வகுத்து
தலைமை ப�ொறுப்பில் இருந்து கட்டளைகள் க�ொடுப்பதும்
இண்டி படைப்பாளிதான், களத்தின் ஊடே ஆயுதங்களை
தூக்கிக்கொண்டு ஓடுவதும் இண்டி படைப்பாளிதான், அவனுக்கு
காயம் பட்டுவிட்டால் அவனை அவனே தூக்கி சுமந்துக�ொண்டு
ஓடி மருத்துவம் பார்த்துக்கொள்வதும் அவனேதான். இவ்வளவு
செயல்பாடுகளும் அவனேதான்.

எனக்கு திரைக்கதையும் எழுத வராது, அதற்கு உதவி செய்ய


ஒரு கூட்டம் வேண்டும் (திரைக்கதை எழுத வராது என்று
தெரிந்துவிட்டது என்றால் இண்டி பிளிம் மேக்கிங் முறையை
10
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

ய�ோசித்தும் பார்த்துவிட வேண்டாம்), படப்பிடிப்பு களத்திற்கு


சென்றப் பிறகு காட்சிகளை கம்போஸ் செய்ய ஒளிப்பதிவாளரை
நம்பிக்கொண்டிருப்பது, அப்படியே உருண்டு புரண்டு அவர்
காலில் விழுந்து, இவர் வாயில் அசிங்கப்பட்டு படப்பிடிப்பை
முடித்து காட்சிகளை எடுத்து வந்து வைத்துக்கொண்டு எடிட்டரை
தேடி அலைந்து பிடித்து, எடுத்து வந்திருக்கும் காட்சிகளை கண்டு
அஷ்டம சனியையே கண்டு விட்ட பீதியில் எடிட்டர் அலறிப்
புடைத்து தப்பி ஓட, அவரை துரத்திப் பிடித்து அவருடைய கைகளை
கால்களாக நினைத்து கெஞ்சி, அவருடைய சாபங்களுக்கு ஆளாகி
இறுதியாக திரைப்படத்தை எப்படியாவது எடுத்து வந்துவிடலாம்
என்கிற நினைப்பில் இண்டி பிளிம் மேக்கிங்கை கற்பனை
செய்வதாக இருந்தால் மன்னித்துக்கொள்ளவும் அதற்கான இடம்
இண்டி பிளிம் மேக்கிங் கிடையாது.

ஒன் மேன் ஆர்மி செயல்பாடும், துல்லியமும்தான் இண்டி பிளிம்


மேக்கிங்கிற்கான மிக முக்கிய தேவைகள். எனக்கு கற்பனை
மாத்திரமே வரும் இதெல்லாம் உடம்பிற்கும் மூளைக்கும்
ஆகாது என்று த�ோன்றுமானால் இண்டி பிளிம் மேக்கிங்கை
மறந்துவிடுவது நல்லது. டிஜிட்டல் கேமிராவையும், VFX
த�ொழில் நுட்பத்தையும் பயன்படுத்த எவ்வளவிற்கு அதற்கு ஏற்ற
திரைக்கதை அவசியம�ோ அதேப�ோல இண்டி பிளிம் மேக்கிங்கிற்கு
ஏற்ற திரைக்கதை உருவாக்கத்திற்கு கற்பனை திறனும், தனித்து
இயங்கும் திறனும், துல்லியமாக திட்டமிடும் திறனும் அவசியம்.
கூடவே பிரிப்போரடக்சன் (Pre-production), ஆன் சூட் (On Shoot)
மற்றும் ப�ோஸ்ட் ப்ரோடக்சன் (Post Production) த�ொழில் நுட்பங்கள்
குறித்தும் அறிந்திருப்பது மிக மிக அவசியம்.

பிரிப்போரடக்சன் கட்டத்தில்,
1. திரைக்கதை எழுத்தாளர்
2. ல�ோகேசன் ஸ்கவுட் (Location Scout)
3. VFX சூப்ரவைசர் (VFX Supervisor)
4. ஸ்கிரிப்ட் ப்ரேக் டவுன் (Script Breakdown)
5. ஸ்டோரி ப�ோர்ட் ஆர்டிஸ்ட் (Story Board Artist)
6. கேஸ்டிங் டைரக்டர் (Casting Director)
7. ரிகர்சல்ஸ் க�ோ-ஆர்டினேட்டர் (Rehearsal Coordinator)
8. ப்ரோடக்சன் மேனேஜர் (Prodcution Manager)
11
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

மேலேப் பார்த்த முக்கிய எட்டு பிரிவுகளில் இண்டி இயக்குனர்


எத்தகைய உதவியும் இல்லாமல் (உதவி கிடைத்தால் அது
கூடுதல் அனுகூலம்) தன்னந்தனியாக செயல்பட்டாக வேண்டும்.
திரைக்கதை எழுத உட்காருவதற்கு முன்பே 75% திரைப்பட
வேலைகள் முடிந்துவிடும் அளவிற்கு படு துல்லியமாக
ஒவ்வொரு விசயத்தையும் முன் கூட்டியே ஆராய்ந்து, புரிந்து
திட்டமிட்டுக்கொள்வது அவசியம். திட்டமிட்ட விசயங்களில்
எப்படியான நடைமுறை சிக்கல்கள் வரும் என்பதையும் முன்
கூட்டியே தீர்மானித்து அதற்கு ஏற்ப மாற்று திட்டங்களையும் (பிளான்
B) வகுத்துக்கொண்டப் பிறகே இண்டி இயக்குனர் திரைக்கதை எழுத
உட்கார வேண்டும். இப்படி ஒவ்வொரு அங்குலம் நகர்விலும் அதி
தீவிர திட்டமிடலும் மாற்று திட்டங்களும் தேவையாக இருப்பதால்
அதற்குத்தக்க சுவாரசியமான அதே சமயத்தில் இயக்குனர் பெயர்
ச�ொல்லும் (Auteur) திரைக்கதையை உருவாக்குவது என்பது
ச�ொல்லாமலேயே புரிந்துவிடும் படு சவாலான காரியம் என்று.

விசயம் இப்படியிருக்க கதை விவாதம் செய்கிறேன் பேர்வழி என்று


கும்பலை கூட்டிக்கொண்டு உட்கார்ந்தால் அது என்ன கதியில்
க�ொண்டு ப�ோய் நிறுத்தும் என்பதை ச�ொல்லி புரியவைக்க வேண்டிய
அவசியமிருக்காது என்பதால் மேற்கொண்டு பார்ப்போம். துள்ளிய
திட்டமிடல் மற்றும் மாற்று திட்டம் என்பது கைகளில் இருக்கும்
வளங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும். ஒரு இண்டி
இயக்குனரின் வளங்கள் என்று எதை நாம் குறிப்பிடுகிற�ோம்
என்பதை முன்பே பார்த்துவிட்டோம். அப்போதைக்கு கைகளில்
உறுதியாக இருக்கும் வளங்களை முன் வைத்தே இண்டி இயக்குனர்
திட்டங்களை வகுக்கவேண்டும்.

பிறகு பார்த்துக்கொள்ளலாம் அல்லது பின்னால் அதுவாகவே


நமக்கு கிடைத்துவிடும் என்று அனுமானம் அல்லது ஊகத்தின்
பெயரில் திட்டங்களை உருவாக்குவது கூடாது. எடுத்துக்கொண்ட
ப்ரோஜக்ட் முடியும் வரை என்ன வளங்கள் எல்லாம் உறுதியாக
கைகளில் இருக்கும் என்பதை அறிந்து உறுதிப்படுத்திக்கொண்டப்
பிறகே அந்த வளங்களை பயன்படுத்தி திரைக்கதையை உருவாக்க
வேண்டும். ஆக இண்டி பிளிம் மேக்கிங்கிற்கான திரைக்கதை என்பது
கற்பனையை தட்டிவிட்டு அல்லது ஒரு பிரச்சனையை அல்லது ஒரு
உண்மை சம்பவத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதை அப்படியே
12
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

திரைக்கதையாக மாற்றும் செயல்பாடு கிடையாது.

கைகளில் உறுதியாக இருக்கும் வளங்களை கருத்தில்கொண்டு


அதற்கு ஏற்ப திரைக்கதையை உருவாக்கும்போது ம�ொத்த
திரைப்படமாக்கல் செயல்பாடும் முழுக்க இண்டி இயக்குனரின்
ஒற்றை கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கும். இதற்காக
காத்திருந்தேன் அதனால் முடியாமல் ப�ோய்விட்டது, அவரை
நம்பியிருந்தேன் இறுதியில் நடக்காமல் ப�ோய்விட்டது
என்பதுப�ோன்ற புலம்பல்களை இது இல்லாமல் ஆக்கிவிடும். சரி
கைகளில் இருக்கும் வளங்களுக்கு ஏற்ப திரைக்கதை உருவாக்குவது
அவ்வளவு சுவாரசியமாக இருக்குமா என்றால் அங்குத்தான் ஒரு
படைப்பாளியின் முழு படைப்பு திறனும் அடங்கியிருக்கிறது.

வசித்தால் பாலாறும் தேனாறும் வழிந்தோடும் மாட


மாளிகையில்தான் வசிப்பேன் என்று ச�ொல்வதற்கும் வசிக்கும்
எலிப்பொந்து அளவு வீட்டையும் ச�ொர்க்கத்திற்கு நிகராக
அலங்கரித்து வைத்திருப்பதற்குமான வித்தியாசம் திரைக்கதையை
எழுதிவிட்டு அதற்கு ஏற்ற பட்ஜெட்டிற்கு அலைவதற்கும்,
கையில் இருக்கும் வளத்திற்கு ஏற்ப அச்சுர் வகை திரைக்கதையை
உருவாக்குவதற்கும் உண்டு. மேலும் சினிமா என்கிற கலையை
அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் ச�ோதனை முயற்ச்சி திரைப்படங்கள்
அனைத்தும் கைகளில் இருக்கும் வளங்களைக்கொண்டு
திரைக்கதையை உருவாக்கும் இண்டி படைப்பாளிகளாலேயே
பெரும்பான்மையாக உருவாக்கப்படுகிறது.

ஆன் சூட் (On Shoot) கட்டத்தில்,


1. இயக்குனர்
2. கேமிராமேன்
3. இயக்குனர் மற்றும் கேமிராமேன் அசிஸ்டெண்ட்ஸ்
4. ப்ரோடக்சன் மேனேஜர் (Prodcution Manager)

சூட்டிங் களத்தில் இயக்குனராகவும், கேமிராமேனாகவும்


இண்டி இயக்குனர் செயல்பட்டாக வேண்டும். கைபிடித்துவிட
ஒரு அசிஸ்டெண்ட், கால் பிடித்துவிட ஒரு அசிஸ்டெண்ட்,
கன்டினியுட்டி பார்க்க ஒரு அசிஸ்டெண்டுக்கு அசிஸ்டெண்ட்
என்றெல்லாம் திருவிழா கூட்டத்தை கூட்டிவைத்துக்கொண்டு
13
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

இண்டி படைப்பாளியாக இயங்க முடியாது. இயக்குனராகவும்


கேமிராமேனாகவும் செயல்படும்போது அவருக்கு அவரே பத்து
அசிஸ்டெண்ட்களாகவும் செயல்பட்டாக வேண்டும்.

படப்பிடிப்பின் ப�ோது காலை த�ொடங்கி மாலை வரை களத்தில்


நிகழ்த்தப்படும் செயல்கள் அனைத்தையும் அவர் ஒருவரே
தனியாளாக நின்று கையாள வேண்டியிருக்கும். இது சாத்தியம்தானா
என்றால் நிச்சயமாக சாத்தியமே. துல்லியமான திட்டமிடலும்,
த�ொழில் நுட்ப அறிவும், மன உறுதியும் இருந்தால். இதெல்லாம்
ஒருவருக்கு இருப்பது சாத்தியாம்தானா என்று முனகினால் ஒற்றை
உடம்பை வைத்துக்கொண்டு ஒற்றை ஆளாக தூங்க வேண்டும்,
சாப்பிட வேண்டும், மூச்சு விட்டாக வேண்டும், குழந்தை குட்டிகளை
பெற்றுக்கொள்ளவேண்டும் இதெல்லாம் சாத்தியம்தானா என்று
எத்தகைய கேள்வியும் இல்லாமல் உயிர் வாழ்ந்துக�ொண்டிருப்பது
எப்படி சாத்தியம�ோ அதேப�ோல பயிற்ச்சி எடுத்துக்கொண்டால்
அனைத்தும் சாத்தியமே.

ப�ோஸ்ட் ப்ரோடக்சன் (Post Production) கட்டத்தில்,


1. எடிட்டர்
2. VFX ஆர்டிஸ்ட் (VFX Artist)
3. VFX சூப்ரவைசர் (VFX Supervisor)
4. டப்பிங் சூப்ரவைசர்
5. இசையமைப்பாளர் (இசை ஞானம் இருக்கும் பட்சத்தில்)

சூட் செய்து எடுத்து வரப்பட்ட புட்டேஜ்களை (footages) எடிட்


செய்து, தேவைப்படும் இடங்களில் VFX ஷாட்களை உருவாக்கி
முக்கிய ஷாட்களுடன் இணைத்து (காம்போசிட் - Compositing) பிறகு
பின்னணி குரல் மற்றும் இசையை பதிவு செய்து எடிட் செய்து
வைக்கப்பட்டிருக்கும் வீடிய�ோவுடன் ரெண்டர் செய்து இறுதி
திரைப்படத்தை அவுட்புட்டாக வெளியே எடுக்கும் இந்த ஐந்து
கட்டத்திலும் இண்டி படைப்பாளி தனியாளாக நின்று களமாட
வேண்டியிருக்கும். வேண்டியிருக்கும் என்பதைவிட கட்டாயம்
வேண்டும் என்று ச�ொல்வது சரியாக இருக்கும்.

இந்த புத்தகம் முக்கியமாக VFX த�ொடர்பானது என்பதால் நாம்


மேலேப் பார்த்த மூன்று கட்டத்திலும் எந்தெந்த இடங்களில்
14
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

மிக முக்கியமாக ப�ோஸ்ட் ப்ரோடக்சன் VFX கட்டத்தில் இண்டி


படைப்பாளி அவர் அறிந்திருக்கும் VFX த�ொழில் நுட்ப அறிவை
பயன்படுத்தவேண்டியிருக்கும், அதற்கு அவருக்கு உதவக் கூடிய
இலவச VFX மென்பொருட்கள் எவை, அதை அவர் எப்படி
நடைமுறையில் (practical) ஆக்கப் பூர்வமாக பயன்படுத்துகிறார்
என்பதையெல்லாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரிவாக
பார்ப்போம்.

இயக்குனர் இயக்கம் ஒன்றில் மாத்திரமே கவனம் செலுத்த


வேண்டும் மற்ற விசயங்களில் கவனம் செலுத்துவது அவருடைய
கவனத்தை சிதறடித்து திரைப்பட உருவாக்க செயல்பாட்டை
குலைத்துவிடும் என்பதுப�ோன்ற அறிவுரைகள் எல்லாம் ப�ோன
தலைமுறைக்கானது. இன்றைய த�ொழில் நுட்ப வளர்ச்சிகளும்,
அவை சுலபமாகவும் ச�ொல்லப்போனால் இலவசமாகவும் கூட
இண்டி படைப்பாளிகளின் கைகளுக்கு கிடைக்கும் நிலையில்
இயக்கம் ஒன்றில் மாத்திரமே கவனம் செலுத்திக்கொண்டிருப்பேன்
என்று ச�ொல்வதும் அதையே ஆழமாக நம்புவதும் நமக்கான
வாய்ப்புகளை நாமே உருவாக்கும் செயல்பாட்டில் நமக்கு நாமே
தடைக்கல்லாக நிற்பதற்கு நிகராகும்.

திரைக்கதையை எந்த வடிவில் செயல்படுத்துவது


அதாவது எழுதிய திரைக்கதையை எந்த முறையில் படம் பிடிப்பது
என்கிற முடிவும் இண்டி பிளிம் மேக்கிங்கில் மிக முக்கியமானது.
க�ொரில்லா பிளிம் மேக்கிங் முறையில் படம் பிடிக்கப்போகிற�ோமா
அல்லது ல�ோ பட்ஜெட் முறையில் படம் பிடிக்க இருக்கிற�ோமா
என்பது இண்டி பிளிம் மேக்கிங்கில் எடுக்கப்பட வேண்டிய
முக்கிய முடிவாகும். இரண்டு முறையும் ஏறக் குறைய ஒன்றுதான்
என்றாலும் சில முக்கிய அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன.
VFX காட்சிகளை இதன் அடிப்படையில் வடிவமைத்து படம் பிடிக்க
வேண்டியிருக்கும்.

க�ொரில்லா பிளிம் மேக்கிங் என்பது நிறைய கேண்டிட்


ஷாட்களை (Candid shots) க�ொண்டதாக இருக்கும். ல�ோ பட்ஜெட்
திரைப்படங்கள் அப்படியானவை கிடையாது.

15
இண்டி பிளிம் மேக்கிங் ப்ரி-ப்ரோடக்சன் (Pre-
Production) – VFX

இ ண்டி பிளிம் மேக்கிங் செயல்பாட்டின் ப்ரி-ப்ரோடக்சனில்


இரண்டு கட்டங்களில் வெவ்வேறு முறைகளில் VFX
த�ொழில் நுட்பம் பின்னப்பட்டிருக்கும். திரைக்கதையை
எழுதும்போதே எப்படியான VFX ஷாட்கள் ல�ோ பட்ஜெட்டிற்குள்
சாத்தியப்படும் என்பதை தீர்மானிக்கும் கட்டம் மற்றொன்று
திரைக்கதைக்கு உத்தேச செயல் வடிவம் க�ொடுக்கும் ப்ரி-விஸ் (Pre-viz)
கட்டம். ப்ரி-விஸ் என்பது ப்ரி-விஷூவலைஷேசன் (Pre-vizualization)
என்பதன் சுருக்கம்.

பெரும் பட்ஜெட் திரைப்படங்களில் திரைக்கதை முழுதுமாக


எழுதி முடிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டதும் அதில் எவ்வளவு
VFX ஷாட்கள் இருக்கின்றன என்பது தனியாக பிரித்தெடுக்கப்பட்டு
கணக்கெடுக்கப்படும். இந்த கட்டத்தில் இயக்குனரும் அந்த
திரைப்படத்திற்கு என்று முடிவு செய்யப்பட்டிருக்கும் VFX
சூப்ரவைசரும் பிரித்தெடுக்கப்பட்ட VFX ஷாட்களை எப்படி, என்ன
மாதிரியான VFX த�ொழில் நுட்பங்களை வைத்து, தேவைப்பட்டால்
இருக்கும் VFX த�ொழில் நுட்பத்தில் புது விதமான (innovative)
அணுகு முறையை உள் நுழைத்து படம் பிடிப்பது என்று
கலந்தால�ோசிப்பார்கள்.

VFX ஷாட்களை படம் பிடிக்க தேவைப்படும் க்ரீன் மற்றும் ப்ளூ


ஸ்கிரீன் (Green & Blue Screen) செட் உருவாக்கம், ம�ோஷன் கேப்சர்
(Motion Capture) செட் உருவாக்கம், மினியேச்சர் (Miniature) செட்
உருவாக்கம், மேட் பெயிண்டிங் (Matte Painting) குறித்த முடிவுகள்
என்று பல விசயங்களில் இயக்குனரும், VFX சூப்ரவைசரும்
ஆல�ோசனையில் ஈடுபடுவார்கள். இந்த ஆல�ோசனைக்கு உதவும்
வகையில் திரைக்கதையை அடிப்படையாக வைத்து கான்செப்ட்
வரைப்படங்கள் உருவாக்கப்படும். இதற்கு என்று தனியாக
16
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

கான்செப்ட் ஆர்டிஸ்ட்கள் (Concept Artists) அமர்த்தப்படுவார்கள்.


அடுத்து ஸ்டோரிப�ோர்ட் ஆர்டிஸ்ட் அமர்த்தப்பட்டு இயக்குனர்
திரைக்கதையை எப்படியான கேமிரா க�ோணங்களில்
காட்சிவாரியாக படம் பிடிக்க ப�ோகிறார் என்பது ஸ்டோரிப�ோர்ட்
(Storyboard) வரைபடங்களாக வரையப்படும். இதற்கு
ஸ்டோரிப�ோர்ட் ஆர்டிஸ்ட் இயக்குனருடன் இணைந்து
செயல்பட்டாகவேண்டும். இயக்குனர் திரைக்கதையில்
இருக்கும் காட்சிகளை எப்படி தான் படம் பிடிக்க இருக்கிறேன்,
அந்த காட்சியில் கதாபாத்திரங்கள் எப்படி செயல்படுவார்கள்
என்பதை விளக்கி ச�ொல்ல ச�ொல்ல ஸ்டோரிப�ோர்ட் ஆர்டிஸ்ட்
அதை கார்டூன் வரைபடங்களாக உருவாக்குவார். இது முழு
திரைக்கதைக்குமானதாக இருக்கும்.

கான்செப்ட் மற்றும் ஸ்டோரிப�ோர்ட் வரைபடங்களை


வைத்துக்கொண்டு இயக்குனரும், VFX சூப்ரவைசரும் VFX
ஷாட்களை எப்படி படம் பிடிப்பது என்பது குறித்த இறுதி
முடிவுகளை எடுப்பார்கள். இந்த முடிவுகள் என்பது நாம்
முன்பே பார்த்ததைப்போல VFX த�ொழில் நுட்பத்தில் பல புதிய
கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதாகவும் இருக்கும். அதற்கான சில
உதாரணங்களை இப்போது பார்ப்போம். இரண்டாயிரத்திற்கு
பிறகான VFX புதிய முயற்ச்சிகளை மாத்திரம் இங்கே கணக்கில்
எடுத்துக்கொள்கிற�ோம். முதலில் The Matrix திரைப்படம்.
VFX த�ொழில் நுட்பம் த�ொடர்பாக இந்த திரைப்படத்தில்
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய த�ொழில் நுட்பம் யுனிவர்சல் கேப்சர்
(Universal Capture - UCap).

படம் 1 பார்க்கவும்.

Ucap என்பது பல கேமிராக்களைக்கொண்டு குறிப்பிட்ட


காட்சியை படம் பிடிப்பது. இதன் மூலம் படம் பிடிக்கப்பட்ட
காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்போது நினைத்த இடத்தில்
ப்ரோசன் மூவ்மெண்ட் (Frozen Moment) எபெக்டையும், 3d
கதாபாத்திரங்களுக்கு முக அமைப்பை (face texturing) உருவாக்கும்
எபெக்டையும் உருவாக்க முடியும். தத்ரூபமான மனித த�ோல்
அமைப்பை உருவாக்க சப்-சர்பேஸ் ஸ்கேட்டரிங் (Sub Surface
Scattering SSS) த�ொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
17
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

18
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

19
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

படம் 2 பார்க்கவும்.

குறிப்பாக ஏஜன்ட் ஸ்மித் கதாபாத்திரத்தின் பல உருவங்களை


உருவாக்க UCap த�ொழில் நுட்பம் மூலம் அந்த கதாபாத்திரத்தில்
நடித்த நடிகரின் முக பாவனைகள் ஐந்து தனித் தனி கேமிராக்களில்
வெவ்வேறு க�ோணங்களில் படம் பிடித்து பிறகு அதிலிருந்து
பெறப்பட்ட தரவுகளை (vertex data) ப�ோட்டோ ரியலிஸ்டிக்
டெக்ஸ்டர் மேப்பிங் (photo realistic texture mapping) உத்தியின் மூலம்
அந்த கதாபாத்திரத்தின் 3D உருவங்களுக்கு க�ொடுத்திருக்கிறார்கள்.

படம் 3 பார்க்கவும்.

படம் 4 பார்க்கவும்.

The Matrix Trilogy திரைப்படம் அது வெளிவந்த காலக்கட்டத்தில்


VFX த�ொழில் நுட்ப முன்னேற்றத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலை
நிகழ்த்தியதாக கருதப்பட்ட திரைப்படம். இதற்கு அடுத்து
குறிப்பிட்டு ச�ொல்லும் படியான புதிய முயற்ச்சி VFX த�ொழில்
நுட்ப வளர்ச்சியுடன் வெளிவந்த திரைப்படம் The Polar Express. இது
முழுக்க ம�ோசன் கேப்சர் (Motion Capture) த�ொழில் நுட்பத்தில் படம்
பிடிக்கப்பட்டது என்றாலும் (இதற்கு முன்பே ம�ோசன் கேப்சர்
த�ொழில் நுட்பத்தைக்கொண்டு எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள்
வெளிவந்துவிட்டன) 3D கதாபாத்திரங்களின் முக பாவனை
அனிமேசனில் ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்தியது இந்த
திரைப்படத்தின் VFX.

அந்த புதிய த�ொழில் நுட்பம் பேஷியல் டிராக்கிங் (Facial


Tracking). முப்பரிமாண மெய் நிகர் உலகில் (3D Virtual World
உதாரணமாக Maya 3DS Max மற்றும் Cinema 4D மென்பொருட்களில்)
உருவாக்கப்படும் கதாபாத்திரங்களை அசைய மற்றும் செயல்பட
(animating) வைக்கும் காரியத்தில் பெரும் தலைவலியாக இருப்பது
அந்த கதாபாத்திரங்களின் முக பாவனைகளும், தலை முடி
அசைவுகளுமே. இந்த இரண்டு செயல்பாட்டையும் (animation) மிக
துல்லிய தத்ரூபமாக க�ொண்டு வருவது என்பது மிகவும் சவாலான
காரியம். The Matrix Trilogy திரைப்படத்தின் Ucap த�ொழில் நுட்பம்
இதற்கு மேலே நாம் பார்த்த ஒருவிதமான தீர்வை க�ொண்டு வந்தது
20
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

என்றால் The Polar Express திரைப்படத்தில் மற்றொரு விதமான புதிய


முயற்ச்சி தீர்வு காணப்பட்டது.

இந்த திரைப்படம் முழுக்க 3D கதாபாத்திரங்களையும், அவை


உலவும் கற்பனை உலகையும் அடிப்படையாக வைத்து
எடுக்கப்பட்டது. இதில் சிறு பிள்ளை கதாபாத்திரம் உட்பட
பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டாம் ஹேங்சின் முக
பாவனைகளை 3D உருவங்களுக்கு (3D Characters) க�ொடுக்க
பேஷியல் டிராக்கிங் உத்தி முதன் முறையாக முயற்ச்சி செய்துப்
பார்க்கப்பட்டிருக்கிறது.

படம் 5 பார்க்கவும்.

ம�ோஷன் கேப்சர் உடையில் நடிக்கும் நடிகரின் முகம் முழுவதும் பல


புள்ளிகள் வைக்கப்படும். இதற்கு பேஷியல் டிராக்கிங் என்று பெயர்.
இந்த புள்ளிகள் நடிகரின் முக பாவனைகளை தரவுகளாக (data)
மாற்ற உதவும். இந்த தரவுகள் பிற்பாடு அந்த கதாபாத்திரத்திற்கான
3D உருவத்தின் முகத்திற்கு க�ொடுக்கப்படும். இதன் மூலம் மிக
கடினமான அதே சமயத்தில் மிகவும் விறைப்பாக த�ோன்றும் 3D
உருவங்களின் முக பாவனைகள் மிகவும் யதார்த்தமாக த�ோன்றும்.
3D உருவங்களின் முக பாவனைகளை அனிமேட் செய்யும் மிக
கடினமான வேலையும் இல்லாமல் ப�ோய்விடும்.

இதற்கு அடுத்து VFX த�ொழில் நுட்பத்தின் முக்கிய புதிய முயற்ச்சியை


க�ொண்டு வந்த திரைப்படம் Pirates Of The Caribbean Dead Man’s Chest.
ம�ோஷன் கேப்சர் த�ொழில் நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை
அறிவித்தது இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட IMOCAP
(Image Based Motion Capture) த�ொழில் நுட்பம். இந்த திரைப்படத்திற்கு
முன்பு வரையிலான ம�ோஷன் கேப்சர் த�ொழில் நுட்பம் என்பது 3D
கதாபாத்திரங்களுக்கு உண்டான நடிகர்களை மாத்திரம் தனியாக
ம�ோஷன் கேப்சர் படப்பிடிப்பு அரங்கிற்கு அழைத்து வந்து
காட்சிகளில் அவர்களின் பகுதிகள் மாத்திரம் ம�ோஷன் கேப்சர்
மற்றும் பேஷியல் டிராக்கிங் முறைப்படி படம் பிடிக்கப்பட்டு
அந்த தரவுகள் அந்த நடிகர்களுக்கு உண்டான 3D உருவங்களுக்கு
க�ொடுக்கப்பட்டு பிறகு அவை மற்ற நடிகர்களுடன் கலந்து வர
வேண்டிய லைவ் ஆக்சன் காட்சிகளுடன் (live action footage)
21
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

22
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

23
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

கம்போசிட் செய்யப்படும்.
தலையை சுற்றி மூக்கைத் த�ொடும் இப்படியான காரியத்தை மிக
எளிதான ஒன்றாக மாற்றிப்போட்டுவிட்டது IMOCAP த�ொழில்
நுட்பம்.

படம் 6 பார்க்கவும்.

ம�ோஷன் கேப்சர் உடை அணிந்திருக்கும் நடிகர்களை தனியாக


அழைத்து சென்று அதற்கு என்று இருக்கும் அரங்கில் வைத்து
சூட் செய்வதற்கு பதிலாக திரைப்படம் படம் பிடிக்கப்படும்
இடத்திலேயே மற்ற நடிகர்களுடன் அவர்களையும் IMOCAP
உடையில் நடிக்க செய்து அதை பிற்பாடு 3D உலகிற்கு எடுத்து
சென்று கம்போசிட் செய்யும் வசதியை IMOCAP த�ொழில் நுட்பம்
உண்டாக்கி க�ொடுத்தது. இந்த திரைப்படத்தின் தனித்துவமாக
கருதப்படும் டேவி ஜ�ோன்ஸ் 3D உருவ கதாபாத்திரம் ஒன்றை
மனதில் வைத்தே இந்த த�ொழில் நுட்பம் ச�ோதனை முறையில்
பரிச�ோதிக்கப்பட்டிருக்கிறது இந்த திரைப்படத்தில்.

படம் 7 பார்க்கவும்.

VFX ம�ோஷன் கேப்சர் த�ொழில் நுட்பத்தின் அடுத்த புதிய த�ொழில்


நுட்ப முயற்ச்சி லைட் ஸ்டேஜ் (Light Stage). The Lord of The Rings,
Avatar, The Curious Case of Benjamin Button, Spider-Man 2 மற்றும் King
Kong ப�ோன்றத் திரைப்படங்கள் இந்த த�ொழில் நுட்ப உத்தியை
பயன்படுத்தியிருக்கின்றன. ப�ோட்டோ ரியலிஸ்டிக் ஸ்கின் &
பேஷியல் எக்ஸ்பிரஷன் (Photo Realistic Skin & Facial Expression) மற்றும்
டிஜிட்டல் கவுன்டர்பார்ட் (digital counterpart) என்று அழைக்கப்படும்
ஒரு கதாபாத்திரத்தின் தத்ரூபமான நகல் கதாபாத்திரத்தை க�ொண்டு
வர இந்த த�ொழில் நுட்பம் உதவுகிறது.

படம் 8 பார்க்கவும்.

லைட் ஸ்டேஜ் த�ொழில் நுட்பம் நடிகர்களின் முக பாவனைகளை


பல க�ோணங்களில் பல கேமிராக்கள் க�ொண்டு ஸ்கேன்
செய்துக�ொள்கிறது. இதற்கென்று வடிவமைக்கப்பட்டிருக்கும்
ஒளியமைப்புக�ொண்ட (பந்துப�ோன்று) மேடையில் நடிகர்கள்
24
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

அமர்ந்து தேவைப்படும் முக பாவனைகள் நிகழ்த்த அவை


ஸ்கேன் செய்யப்பட்டு பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு என்று
உருவாக்கப்பட்டிருக்கும் 3D உருவத்திற்கு வழங்கப்படும். லைட்
ஸ்டேஜ் மேடையில் பல க�ோணங்களில் இருந்து பல வகைகளில்
ஒளியமைப்புகள் உருவாக்கப்பட்டு (சிமுலேட் – simulate)
நடிகர்களின் முக பாவனைகள் ஸ்கேன் செய்யப்படுவதால் 3D
உலகில் எப்படியான லைட்டிங் அமைப்புடனும் அவைகளை
ப�ொருந்தி ப�ோக வைக்க முடியும். மேலும் ப�ோட்டோ ரியலிஸ்டிக்
த�ோல் அமைப்பையும் க�ொண்டு வர இயலும்.

மேலேப் பார்த்த அனைத்து VFX புதிய முயற்ச்சிகளும், பெரும்


பட்ஜெட்டும் அதற்கு தக்க த�ொழில் நுட்ப வளர்ச்சி மற்றும்
வல்லுநர்களையும் க�ொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்களில்
பயன்படுத்தப்பட்டவைகள். ஆனால் ஒரு விசயத்தை நாம் இங்கே
கவனிக்க தவறிவிடக் கூடாது. VFX த�ொழில் நுட்பத்தின் அடுத்தகட்ட
வளர்ச்சிகளை முன்னெடுத்தவைகள் திரைக்கதைகளும் அந்த
திரைக்கதைகளில் வந்த தனித்துவமான கதாபாத்திரங்களும்
மாத்திரமே. VFX த�ொழில் நுட்பத்தின் ச�ோதனை முயற்ச்சிகளும்
அதன் அடிப்படையிலான வளர்ச்சிகளும் திடும் என்று
வானத்திலிருந்து குதித்து வந்துவிடவில்லை. படைப்பாளிகளின்
கற்பனைக்கு ஏற்ப அவைகள் தங்களை வளர்த்துக்கொள்கின்றன.
ஆக ஒரு திரைப்படத்திற்கு VFX காட்சிகள் என்பது தேவைப்பட்டால்
மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டும். திரைக்கதை அதற்கு
இடமளிக்காத வேலையில் அதை வைத்துக்கொண்டு வேடிக்கை
காட்டுவது பண விரயம் மற்றும் அபத்தம் மிகுந்த செயலாகும்.

இனி இந்த புத்தகத்தின் மையப் ப�ொருளான இண்டி


திரைப்படமாக்கலுக்கு வருவ�ோம். மேலேப் பார்த்த பெரும்
பட்ஜெட் திரைப்படங்களுக்கு உரிய VFX ச�ோதனை முயற்ச்சிகளை
ஒருக்காலும் ல�ோ பட்ஜெட்டில் இயங்கும் இண்டி இயக்குனர்களால்
கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. அதற்காக நான் VFX
காட்சிகள் அடங்கிய பெரிய பட்ஜெட்டிற்கான திரைக்கதையை
எழுதிவிட்டு, அதற்கு ஏற்ற தயாரிப்பு நிறுவனத்தைய�ோ அல்லது
தயாரிப்பாளரைய�ோ தேடி அலையப்போகிறேன் என்று ச�ொல்லி
திரிவது இன்றைய த�ொழில் நுட்ப வளர்ச்சிகளின் காலத்தில் ஏற்ற
செயலாக இருக்காது. மாறாக ல�ோ பட்ஜெட்டில், திரைக்கதைக்கு
25
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

தேவைப்படும் பட்சத்தில் அதற்கு ஏற்ப எப்படியான VFX ச�ோதனை


முயற்ச்சிகளை செய்துபார்க்கலாம் என்று ய�ோசிப்பதே பிழைக்கத்
தெரிந்த பிள்ளைக்கான – படைப்பாளிக்கான – வழியாகும்.

ஒரு இண்டி இயக்குனர் நிச்சயமாக VFX காட்சிகள் நிறைந்த


திரைக்கதையை எழுதப்போவதில்லை. ஆனால் VFX த�ொழில்
நுட்பத்தில் அவருக்கு இருக்கும் திறமை மற்றும் ல�ோ
பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் செய்யக் கூடிய VFX காட்சிகளை
முன்பே தெளிவாக திட்டமிட்டுக்கொண்டு அவர் திரைக்கதையை
எழுதி முடித்தப் பிறகு திரைக்கதையில் இருக்கும் VFX காட்சிகளை
பிரித்தெடுப்பது த�ொடங்கி, கான்செப்ட் ஆர்ட், ஸ்டோரிப�ோர்ட்,
ல�ோட பட்ஜெட்டிற்குள் அடங்க கூடிய VFX ச�ோதனை
முயற்ச்சிகள் என்று அனைத்தையும் அவர் ஒருவரே தனியாக நின்று
செயல்படுத்தவேண்டும்.

இதற்கான ஒரு உதாரணத்தை இப்போது பார்ப்போம். Dinner With


the Alchemist திரைப்படம் 2016-ல் வெளிவந்த இண்டி திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் ம�ொத்த பட்ஜெட் $40,000. இந்த
பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ப�ோட்டோ சூட் கூட நிகழ்த்த
முடியாது. ஆனால் இண்டி இயக்குனர் கேவின் குட் பீரியட் (Period
Genre) ஜானரில் அமைந்த இந்த திரைப்படத்தை முழுதுமாக எடுத்து
வெளிக்கொண்டும் வந்துவிட்டார். ல�ோ பட்ஜெட் இண்டி பிளிம்
மேக்கிங்கில் பீரியட் திரைக்கதை என்பது நினைத்தும் பார்க்க
முடியாத சங்கதி. சாத்தியமே இல்லாத ஒரு விசயம் ஆனால் கேவின்
குட் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு அவருக்கு உதவியது VFX த�ொழில் நுட்பம். தன் கையில்


இருக்கும் பட்ஜெட்டிற்கு ஏற்ப எப்படி VFX த�ொழில் நுட்பத்தை
பயன்படுத்திக்கொள்வது என்பது த�ொடர்பாக பல புதிய ச�ோதனை
முயற்ச்சி அணுகு முறைகளை செய்துப் பார்த்திருக்கிறார்.
பார்த்தத�ோடு மாத்திரமல்லாமல் அதை இந்த திரைப்படத்திலும்
பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பெரும் பட்ஜெட்டும்
நூற்றுக்கும் அதிகமான த�ொழில் நுட்ப வல்லுநர்களும் இருந்தால்
மாத்திரமே VFX த�ொழில் நுட்பத்தை வைத்து ஆட்டம் காட்ட
முடியும் என்றில்லை VFX த�ொழில் நுட்பம் தெரிந்திருக்கும்
பட்சத்தில் மிக மிக குறைந்த பட்ஜெட்டிலும் பிரம்மாண்டமான
26
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

காட்சிகளை VFX மூலம் உருவாக்க முடியும் என்பதை செயல்


வடிவில் நிருபித்துக்காட்டியிருக்கிறார் கேவின்.
அவரும் அவருடைய சக�ோதரர், இந்த இருவர் மட்டுமே ம�ொத்த
திரைப்படத்திற்கான VFX சூப்ரவைசர் மற்றும் ஆர்டிஸ்ட்களாக
செயல்பட்டிருக்கிறார்கள். திரைக்கதை அமெரிக்காவின் நியூ
ஆர்லியன்ஸ் நகரில் 1900-களில் நடைபெற்ற உண்மை சம்பவம்
ஒன்றை அடிப்படையாக க�ொண்டது. இருபதாம் நூற்றாண்டின்
த�ொடக்க காலக்கட்ட நியூ ஆர்லியன்ஸ் நகரை திரையில்
மீட்டுருவாக்கம் செய்ய கேவின் பயன்படுத்திக்கொண்டது
அமெரிக்காவின் மிகப் பெரும் நூலகமான லைப்ரரி ஆப் கான்க்ரஸ்
(Library Of Congress).

அந்த நூலகத்தின் புகைப்பட பாதுகாப்பு பிரிவில் இருந்த 1900-


களை சேர்ந்த நியூ ஆர்லியன்ஸ் நகர புகைப்படங்களை ஸ்கேன்
செய்து எடுத்து, அவைகளை கலர் கரக்சன் செய்து க்ரீன் ஸ்கிரீன்
(Green Screen) மேட் பெயிண்டிங் (matte painting) புட்டேஜ்களாக
(footage) பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். நடிகர்களைக்கொண்ட
க்ரீன் ஸ்கிரீன் லைவ் ஆக்சன் புட்டேஜ்களை எடுக்கும்போது அந்த
காட்சிக்கான கேமிரா க�ோணங்களை புகைப்படத்திலிருக்கும்
கேமிரா க�ோணத்துடன் ப�ொருந்தி வரும்படி அமைத்து
எடுத்திருக்கிறார்.

படம் 9 பார்க்கவும்.

இதன் காரணமாக சீம்லெஸ் (seamless) பீரியட் காட்சிகளை


உருவாக்கியிருக்கிறார். பழைய நியூ ஆர்லியன்ஸ் புகைப்படங்களை
ஒன்றிணைத்து, கலர் கரக்சன் மற்றும் சிறிய அனிமேஷன்களை
சேர்த்து அன்றைய காலக்கட்ட நியூ ஆர்லியன்ஸ் நகரின்
ஏரியல் பேன�ோரமிக் (Panoramic view) காட்சிகளையும் கூட VFX
த�ொழில் நுட்பம் வழியாக திரைப்படத்தில் மீட்டுருவாக்கம்
செய்திருக்கிறார். இவைகளை உருவாக்க அவருக்கு குறைந்த
பட்சமாக தேவைப்பட்டிருக்கும் VFX மென்பொருட்கள் Photoshop-
ம், After Effects-ம் மாத்திரமே. இவை இரண்டும் இண்டி இயக்குனரின்
பட்ஜெட்டிற்குள் அடங்க கூடியவைகளே.

VFX த�ொழில் நுட்பம் தெரிந்து வைத்திருந்த காரணத்தால்


27
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

கேவினால் தன்னுடைய பீரியட் திரைக்கதைக்கு ஏற்ப


செலவே இல்லாமல் எப்படியான VFX காட்சிகளை உருவாக்க
முடியும் என்பதும் அதை எப்படி செயல்படுத்துவது என்பது
குறித்தும் படப்பிடிப்பை த�ொடங்குவதற்கு முன்பே மிக
நன்றாக தெரிந்திருக்கிறது. இது துல்லியமான படப்பிடிப்பு
திட்டமிடலுக்கு அவருக்கு உதவியிருக்கிறது. இதையெல்லாம்
சாத்தியப்படுத்த அசிஸ்டெண்டுகள் என்கிறப் பெயரில் கும்பலை
கூட்டிக்கொண்டிருக்காமல் அவரும் அவருடைய சக�ோதரர் இருவர்
மாத்திரமே இணைந்து செயல்பட்டு இதை சாத்தியப்படுத்தியிருக்
கிறார்கள். இவர்களின் செயல்பாட்டிலிருந்து நமக்கு கிடைக்கும்
மற்றொரு பாடம் ல�ோ பட்ஜெட் இண்டி திரைப்படங்களை
உருவாக்க தேவைப்படுவதெல்லாம் கற்பனை திறனும் த�ொழில்
நுட்ப திறன்களும் ஒன்றிணைந்த துல்லிய திட்டமிடல் மாத்திரமே.

28
ஆன் சூட் – ம�ோஷன் கேப்சர் (Motion Capture)
த�ொழில் நுட்பம்

மி
கவும் சிக்கலான அதே சமயத்தில் உழைப்பை நேரத்தை
க�ோரும் 3D கதாபாத்திர அனிமேஷன் வேலையை மிக
எளிதாக்க கூடிய ம�ோஷன் கேப்சர் த�ொழில் நுட்பம் குறித்து
சற்று விரிவாக தெரிந்துக�ொள்வது அவசியமாகிறது.

ம�ோஷன் கேப்சர்
Mo-Cap (Motion Capture) என்பது அடிப்படையில் மனிதர்கள்
அல்லது மிருகங்களின் உடல் அசைவுகளை பதிவு செய்து அதை
3D உருவங்களுக்கு வழங்குவது. இதன் மூலம் கணினியில்
உருவாக்கப்பட்ட 3D மனித உருவங்கள�ோ அல்லது பாண்டசி
(fantasy) மிருக உருவங்கள�ோ படு யதார்த்தமான உடல் அசைவுகளை,
செயல்பாடுகளை (அனிமேசன்) பெறும்.

படம் 1 மற்றும் 2 பார்க்கவும்.

ச�ொல்வதற்கு மிக எளிதாக த�ோன்றினாலும் பெரும் செலவும்,


பல நிலைகளில் பல வல்லுனர்களின் துல்லிய உழைப்பையும்
க�ோரி நிற்பது Mo-Cap த�ொழில் நுட்பம். திரைப்படம் மற்றும்
வீடிய�ோ கேம் என்று இரண்டு துறைகளிலும் மிக அதிகளவில்
பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பது இது. வீடிய�ோ கேம்களைப்
ப�ொறுத்தவரையில் Mo-Cap என்பது தவிர்க்க முடியாத த�ொழில்
நுட்பம். ஆனால் திரைப்படம் என்று வரும்பொழுது திரைக்கதைக்கு
அவசியம் என்று த�ோன்றினால் மட்டுமே இந்த த�ொழில் நுட்பம்
பயன்படுத்தப்படும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற ரீதியில�ோ அல்லது சிறு பிள்ளை


விளையாட்டாகவ�ோ Mo-Cap த�ொழில் நுட்பத்தை விருப்பத்திற்கு

29
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

30
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

31
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

திரைப்படங்களில் பயன்படுத்திவிட முடியாது. க�ோடிகளில் காசை


கரியாக்குவது என்று முடிவு செய்துவிட்டால், கைகளில் க�ோடிகளில்
பணமும் இருந்தால் திரைக்கதைக்கு அவசியமேயில்லாமல்
இந்த த�ொழில் நுட்பத்தை திரைக்கதைக்குள் க�ொண்டுவந்து
விளையாடிப்பார்க்கலாம். ஆனால் அது அபத்தமாக பல்லை
இளித்துவிடும் என்பதற்கும் தயாராக இருந்துக�ொள்ளவேண்டும்.
‘இந்த ம�ொக்கைக்கு எதுக்குடா CG எபெக்ட்லாம்’ என்று
சர்வ சாதாரணமாக கடை க�ோடி திரை இரசிகனும் தரையில்
உமிழ்ந்துவிட்டு ப�ோவதை க�ோடிகளை கரியாக்கியதற்கான
விருதாக ஏற்றுக்கொள்ளும் ஜென் நிலையும் அதிகம் இருத்தல்
வேண்டும்.

Mo-Cap த�ொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கு என்றே தனித்த


அதற்கு ஏற்ற த�ொழில் நுட்ப கருவிகளும் கூறுகளும் க�ொண்ட
படப்பிடிப்புத் தளம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்படியான ஒரு படப்பிடிப்புத் தளத்தை உருவாக்குவது என்பது
திமிங்கலத்திற்கு தீணிப்போடும் கதை. க�ோடிகளை க�ொட்டி Mo-
Cap த�ொழில் நுட்பத்திற்கான படப்பிடிப்புத் தளத்தை உருவாக்க
வேண்டும். ஒரே ஒரு திரைப்படத்தை எடுப்பதற்காக Mo-Cap
படப்பிடிப்பு தளத்தை ச�ொந்தமாக உருவாக்குவது என்பது
மற்றொரு காசை கரியாக்கும் சங்கதி. த�ொடர்ச்சியாக பெரும்
பட்ஜெட் VFX காட்சிகள் க�ொண்ட திரைப்படங்களை எடுக்கும்
தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இயக்குனர்களுக்கும் மாத்திரமே
ச�ொந்தமாக Mo-Cap படப்பிடிப்பு தளத்தை உருவாக்குவது என்பது
இலாபம் தரக் கூடிய சாத்தியமான விசயம்.

உதாரணமாக ஜார்ஜ் லூக்காசின் ILM மற்றும் பீட்டர் ஜாக்சனின்


WETA நிறுவனங்களை ச�ொல்லலாம். ஜார்ஜ் லூக்காசும், பீட்டர்
ஜாக்சனும் அவர்களே பெரும் பட்ஜெட் VFX காட்சிகள் க�ொண்ட
திரைப்படங்களை த�ொடர்ச்சியாக எடுக்க கூடிய இயக்குனர்கள்
என்பதால் அவர்களுக்கு Mo-Cap படப்பிடிப்பு தளம் என்கிற
திமிங்கலத்தை கட்டி தீணிப்போட சக்தி இருக்கிறது. மேலும்
அவர்களின் நிறுவனங்கள் மற்ற ஹாலிவுட் பெரும் தயாரிப்பு
நிறுவனங்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கான VFX
காட்சிகளையும் அவுட் ச�ோர்சிங் (Outsourcing) முறையில் செய்து
க�ொடுப்பதால் அவைகளுக்கு இது இலாபகரமான த�ொழில்.
32
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

ஆக திரைக்கதைக்கு தேவையான VFX காட்சிகளை உருவாக்க


Mo-Cap த�ொழில் நுட்பத்தை பயன்படுத்துவது என்று தெளிவான
திட்டமிடலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் வேலையில் அடுத்து
செய்ய வேண்டியது Mo-Cap வேலையை முடித்துக்கொடுக்கும் ஒரு
நிறுவனத்தை பிடிப்பதுதான். எந்த நிறுவனத்தை தேர்வு செய்வது
என்பது படத்திற்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பட்ஜெட்டை
ப�ொறுத்தது.

Mo-Cap த�ொழில் நுட்பத்தின் அடிப்படை


பல த�ொழில் நுட்பங்களின் அடிப்படையில் Mo-Cap
செயல்படுத்தப்பட்டாலும் மிக பரவலாக பயன்படுத்தப்படும்
அடிப்படை த�ொழில் நுட்பம் ஆப்டிக்கல் ம�ோஷன் கேப்சர் (Optical
Motion Capture). இதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன,
பேசிவ் ஆப்டிக்கல் (Passive Optical)
ஆக்டிவ் ஆப்டிக்கல் (Active Optical)

பேசிவ் ஆப்டிக்கல் (Passive Optical) ம�ோசன் கேப்சர்


இந்த முறையில் நடிகரின் உடல�ோடு ப�ொருத்தப்பட்டிருக்கும்
புள்ளிகள் (reflective markers அல்லது LED’s) பல க�ோணங்களில்
இருந்து பல கேமிராக்களின் வழி படம் பிடிக்கப்படும். புள்ளிகள்
(மார்க்கர்ஸ்) மனித உடலின் அசைவுகள் உண்டாகும் முக்கிய 57
இடங்களில் ப�ொருத்தப்படும். ஒளியை உமிழும் இந்த 57 புள்ளிகளை
சுமார் 8 முதல் 16 (சில சமயங்களில் 300 கேமிராக்களைக்கொண்டும்
படம் பிடிப்பார்கள்) கேமிராக்களை க�ொண்டு படம் பிடிப்பார்கள்.

படம் 3 மற்றும் 4 பார்க்கவும்.

இது நடிகரின் உடல் அங்க அசைவு தரவுகளை படம் பிடிக்க.


நடிகரின் முக பாவனைகளை தனியாக படம் பிடிக்க பேசியல்
மார்கர்சும் 1 அல்லது 2 கேமிராக்களும் பயன்படுத்தப்படும்.

படம் 5 பார்க்கவும்.

பேசிவ் மற்றும் ஆக்டிவ் ஆப்டிக்கல் ம�ோசன் கேப்சர் முறைக்கு


அடுத்து மார்க் லெஸ் ம�ோசன் கேப்சர் (Markless Motion Capture)
முறையும் பயன்பாட்டில் இருக்கிறது. இவை தவிர பிச�ோ-எலக்ட்ரிக்
33
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

34
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

35
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

(Piezoelectric), மேக்னட்டிக் (Magnetic) மற்றும் இன்னர்ஷியல் (Inertial)


ம�ோசன் கேப்சர் த�ொழில் நுட்பங்களும் இருக்கின்றன.

Mo-Cap த�ொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் கேமிராக்கள்


நடிகர்களின் உடலில் ப�ொருத்தப்பட்டிருக்கும் புள்ளிகளை
(மார்க்கர்ஸ்) மாத்திரமே படம் பிடிக்கும். நடிகர்களின்
ஒட்டும�ொத்த உருவத்தையும் அது பதிவு செய்யாது. இதன்
காரணமாக நடிகரின் உடலில் ப�ொருத்தப்பட்டிருக்கும் புள்ளிகள்
மாத்திரமே இந்த கேமிராக்களின் அவுட் புட்டாக கிடைக்கும்.
இது எப்படி நடைபெறும் என்றால் இந்த கேமிராக்கள் லேசர்
ப�ோன்ற கதிர்களை வெளிப்படுத்தும். அவை நடிகரின் உடலில்
ப�ொருத்தப்பட்டிருக்கும் புள்ளிகளில் பட்டு பிரதிபலிக்கும்போது,
பிரதிபலிக்கும் லேசர் கதிர்களை மீண்டும் இந்த கேமிராக்கள்
பதிவு செய்துக�ொள்ளும். அதிக துல்லியமும் (high res) ஷட்டர்
வேகமும் (shutter speed) க�ொண்ட கேமிராக்களே இதற்கு என்று
பயன்படுத்தப்படும்.

படம் 6 மற்றும் 7 பார்க்கவும்.

கேமிரா உடன் சேர்ந்த ம�ோஷன் கேப்சர் உபகரணம் இரண்டு


விதமான மென்பொருட்களுடன் வரும். ஒன்று உபகரணத்தை
ப�ொருத்தி இயக்குவதற்கானது மற்றொன்று ம�ோஷன் கேப்சர்
மூலம் பெறப்பட்ட தரவுகளை அனிமேஷனுக்கு ஏற்ற வகையில்
அவுட்புட்டாக தருவதற்கான மென்பொருள். ம�ோஷன் கேப்சர்
மூலம் பெறப்பட்ட தரவுகளை அனிமேஷனுக்கு ஏற்ற வகையில்
பயன்படுத்துவதற்கான செயலை செய்ய மற்ற மென்பொருட்களும்
இருக்கின்றன. அவை AutoDesk MotionBuilder, Optitrack, IPSOFT மற்றும்
Vicon.

ம�ோஷன் கேப்சர் அவுட்புட் தரவுகளை கையாளும் AutoDesk


MotionBuilder ப�ோன்ற மென்பொருட்கள் டார்கெட்டிங் (Targeting),
கிளீன்-அப் (Clean up), சால்விங் (Solving) மற்றும் ரீ-டார்கெட்டிங்
(Re-Targeting) ப�ோன்ற வேலைகளை செய்ய உதவியாக இருக்கும்.
இவை அனைத்தும் ம�ோஷன் கேப்சர் தரவுகளை 3D உருவத்திற்கு
இறுதியாக க�ொடுப்பதற்கு முன்பாக பெறப்பட்டிருக்கும்
ம�ோஷன் கேப்சர் அனிமேஷன் தரவுகளை மேன்மைப்படுத்த
36
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

உபய�ோகிக்கப்படும் செயல் முறைகள். தேவையில்லாத கீ-


ப்ரேம்களையும் (Keyframes), ம�ோசன் கேப்சர் தரவுகளுடன் வரும்
ஒளி ஸ்பைக்குகளையும் (spikes) சீர்படுத்தவும் அகற்றவும் இந்த
செயல் முறைகள் கையாளப்படுகின்றன.

படம் 8 பார்க்கவும்.

AutoDesk MotionBuilder ப�ோன்ற மென்பொருளில் இருந்து வெளிவரும்


அனிமேஷன் அவுட்புட் அதற்கு என்று வடிவமைக்கப்பட்டிருக்கும்
3D உருவத்திற்கு வழங்கப்பட்டு இறுதி கம்போசிட்டிங் After
Effects ப�ோன்ற மென்பொருளில் நிகழ்த்தப்படும். ம�ோசன் கேப்சர்
த�ொழில் நுட்பத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பல வல்லுனர்களின்
உழைப்பு தேவைப்படும். பெரும் பட்ஜெட் மற்றும் அதிகமான VFX
ஷாட்கள் க�ொண்ட திரைப்படத்திற்கு இது இரண்டு மடங்கு அதிக
எண்ணிக்கையில் தேவையாக இருக்கும்.

பெரும் பட்ஜெட்கள் இருந்தால் மாத்திரமே ம�ோசன் கேப்சர்


த�ொழில் நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிற
நிலை ஐந்து வருடங்களுக்கு முன்பான நிலையாக இருக்கலாம்.
இப்போது நிலை தலை கீழாக மாறிக்கொண்டிருக்கிறது. ல�ோ
பட்ஜெட்டில் இயங்க கூடிய இண்டி படைப்பாளிகளுக்கும்
உதவ கூடிய கையடக்க பட்ஜெட் ம�ோசன் கேப்சர் த�ொழில் நுட்ப
வளர்ச்சிகள் வரத் த�ொடங்கிவிட்டன. டிஜிட்டல் கேமிராக்கள்
எப்படி பிளிம் ர�ோல் என்கிற மிகப் பெரும் கட்டிலிருந்து இண்டி
படைப்பாளிகளை விடுவித்தத�ோ அதேப�ோன்று இன்றைய
ம�ோசன் கேப்சர் த�ொழில் நுட்பத்தின் வளர்ச்சிகளும் ம�ோசன்
கேப்சர் த�ொழில் நுட்பத்தை இண்டி படைப்பாளிகளும் உரிய
ஒன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

உதாரணமாக Rokoko நிறுவனத்தின் Rokoko Smartsuit Pro ம�ோஷன்


கேப்சர் உடை மற்றும் உபகரணத்தை குறிப்பிடலாம். இது முழுக்க
இண்டி படைப்பாளிகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும்
ம�ோஷன் கேப்சர் கருவி. முன் திட்டமிடலுடனும், என்ன
செய்கிற�ோம் என்பதை நன்றாக தெரிந்தும் செய்யும் ஒரு இண்டி
இயக்குனர் இந்த கருவியை பயன்படுத்தி பெரும் பட்ஜெட் க�ொண்டு
உருவாக்கப்பட்டதுப் ப�ோன்ற ம�ோஷன் கேப்சர் அனிமேஷனை
37
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

அவருடைய இண்டி திரைப்படத்தில் உருவாக்க முடியும். இனி


வரும் நாட்களில் VFX த�ொழில் நுட்பம் இண்டி படைப்பாளிகளின்
பட்ஜெட்டிற்குள் க�ொண்டுவரக் கூடிய ம�ோஷன் கேப்சர் ப�ோன்ற
த�ொழில் நுட்பங்களை முழுதுமாக பயன்படுத்திக்கொள்ள இண்டி
படைப்பாளி தன்னை த�ொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப
அப்டேட் செய்துக�ொண்டபடி இருக்கவேண்டியது அவசியம்.

38
மேட்ச்-மூவிங் (Matchmoving) VFX த�ொழில்
நுட்பம்

இ ன்றைக்கு பெரும் வளர்ச்சிப் பெற்றிருக்கும் (மேலும்


வளர்ச்சியை ந�ோக்கி நகர்ந்துக�ொண்டிருக்கும்) வீடிய�ோ
கேம்கள் மற்றும் ஹாலிவுட் பிக் பட்ஜெட் பாண்டசி, மார்வல்
திரைப்படங்களின் VFX காட்சிகள் சாத்தியமாக முக்கிய காரணங்கள்
ம�ோசன் கேப்சர் த�ொழில் நுட்பமும் மேட்ச்-மூவிங் த�ொழில் நுட்பமும்.
ம�ோசன் கேப்சர் த�ொழில் நுட்பம் நடிகர்களின் உடல் அசைவுகளை
கணினி 3D உருவங்களுக்கு (3D CG Characters) க�ொடுக்க உதவுகிறது
என்றால் மேட்ச்-மூவிங் த�ொழில் நுட்பம் 3D உருவங்களை லைவ்
ஆக்சன் புட்டேஜ்க்குள் (Live Action Footages) ப�ொருத்த பயன்படுகிறது.
மேலும் லைவ் ஆக்சன் புட்டேஜ்களுடன் மேட் பெயிண்டிங் மற்றும்
எழுத்துகளை ப�ொருத்தவும் மேட்ச்-மூவிங் பயன்படுத்தப்படுகிறது.

எளிய ச�ொல்லாடலின் வழி மேட்ச்-மூவிங் த�ொழில் நுட்பம்


என்ன என்பது குறித்து பார்த்துவிட்டு பிறகு அது குறித்து
விரிவாக பேசுவ�ோம். இராட்சத மிருகம் ஒன்று பரபரப்பாக
இயங்கிக்கொண்டிருக்கும் நகருக்குள் புகுந்து அந்த நகரை
அடித்து ந�ொறுக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த
காட்சியை நிச்சயமாக யதார்த்த உலகில் படம் படிக்க முடியாது.
காரணம் இராட்சத மிருகத்திற்கு நாம் எங்கே ப�ோவது. ஆக இந்த
காட்சியை நிஜ உலக கேமிராவைக்கொண்டு படம் பிடிப்பது
என்பது த�ொடக்கத்திலேயே சாத்தியமில்லாத சங்கதி என்பது
தெரிந்துவிட்டது.

கண்டிப்பாக அந்த இராட்சத மிருகத்தை 3D கணினி உருவமாகத்தான்


(3D CG Character) கணினியில் உருவாக்க வேண்டும். 3D உருவத்தை
உருவாக்க Zbrush, Maya, Cinema 4D மற்றும் Blender ப�ோன்ற
மென்பொருட்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
இதில் Blender மென்பொருள் முற்றிலும் இலவசமானது.
39
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

இண்டி படைப்பாளிகளுக்கான மிகப் பெரும் பலங்களில்


ஒன்றாக செயல்படக் கூடியது Blender மென்பொருள். இந்த
மென்பொருளில் தேவையான உருவங்களை மாடல் செய்யத்
தெரிந்துக�ொண்டுவிட்டால் இண்டி படைப்பாளிக்கு கூடுதல்
அனுகூலம்.

ஆகட்டும் விசயத்திற்கு வருவ�ோம். காட்சிக்கான இராட்சத


உருவம் எப்படி இருக்கவேண்டும் என்பதை இயக்குனர் கான்சப்ட்
ஆர்டிஸ்டிடம் அவருடைய கற்பனை திறனைக் க�ொண்டு விளக்கி
ச�ொல்ல கான்சப்ட் ஆர்டிஸ்ட் கீழ் கண்ட இராட்ச உருவத்தை
இயக்குனருக்கு வரைந்துக�ொடுக்கிறார். இண்டி திரைப்படம்
என்றால் இங்கே கான்சப்ட் ஆர்டிஸ்ட் வேலையையும் இண்டி
படைப்பாளியே செய்தாக வேண்டும்.

படம் 1 பார்க்கவும்.

கான்சப்ட் ஆர்டிஸ்ட் வரைந்துக�ொடுத்த இராட்ச உருவத்தின்


வரைபடம் VFX சூப்ரவைசரிடம் க�ொடுக்கப்படும். அவர்
அதை மாடலிங் (Modelling) ஆர்டிஸ்டிடம் க�ொடுப்பார். இண்டி
திரைப்படம் என்றால் VFX சூப்ரவைசர் மற்றும் மாடலிங் ஆர்டிஸ்ட்
இரண்டும் சந்தேகமேயில்லாமல் இண்டி படைப்பாளிதான்.
மாடலிங் ஆர்டிஸ்ட் Maya அல்லது Cinema 4D மென்பொருளில்
இராட்ச உருவத்தின் வரைபடத்தை அடிப்படையாக க�ொண்டு
(இண்டி படைப்பாளி Blender மென்பொருளில் இதை செய்வார்)
இராட்சத உருவத்தின் 3D மெஸ் உருவத்தை (3D Mesh Model)
உருவாக்குவார்.

படம் 2 பார்க்கவும்.

3D மெஸ் உருவம் என்பது த�ோற்றத்தில் களிமண் சிலைப�ோன்று


இருக்கும். இந்த உருவத்தை தத்ரூபமாக காட்ட த�ோல் மற்றும் தசை
அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு பெயர் டெக்ஸ்டரிங்
(Texturing). இதை முடித்த பிறகு இராட்ச மிருகத்தின் 3D உருவம்
தயாராகிவிடும்.

படம் 3 பார்க்கவும்.
40
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

41
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

42
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

43
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

44
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

இராட்சத மிருகத்திற்கு அசைவுகளை க�ொடுக்க வேண்டுமானால்


அல்லது ம�ோசன் கேப்சர் மூலம் பெறப்பட்ட நடிகரின் உடல்
அசைவுகளை க�ொடுக்க வேண்டுமானால் அதற்கு முக்கியமாக
தேவைப்படுவது இராட்சத உருவத்திற்கான எலும்புக் கூடு.
இதற்கு ஸ்கேலட்டன் ரிக் (Skeleton Rig) என்று பெயர். ஸ்கேலட்டன்
ரிக்குகளை 3D உருவங்களுக்கு ப�ொருத்துவதற்கு பெயர் ரிக்கிங்
(Rigging).

படம் 4 பார்க்கவும்.

இராட்சத உருவத்திற்கு ரிக்கிங் செய்து முடித்தபிறகு தேவைக்கு


ஏற்ப லைட்டிங் செய்யப்படும். இதற்கு UV லைட்டிங் (UV Lighting)
என்று பெயர். இது இறுதியாக கம்போசிட் செய்யப்படும் காட்சிக்கு
ஏற்ப கம்போசிட் மென்பொருளில் மாற்றியமைக்கப்படும்.

படம் 5 பார்க்கவும்.

இதன் பிறகு இயக்குனரும் படப்பிடிப்பு குழுவும் இந்த இராட்ச


உருவம் அழிக்க வேண்டிய நகரை படம் பிடிக்க செல்வார்கள்.
காட்சிப்படி அது பரபரப்பு நிறைந்த நகர் என்பதால் எப்போதும்
பரபரப்பாக இருக்கும் நகர் ஒன்றை தேர்வு செய்து அங்கு முதலில்
எஸ்டாபிளிஷிங் ஷாட்களை படம் பிடித்துக்கொள்வார்கள்.
எஸ்டாபிளிஷிங் ஷாட்களை கேமிராவை லாக் செய்தும்
(ட்ராப�ோய்டில் ப�ொருத்தி), ஸ்டெட்கேம் ப�ோட்டு இயக்குனர்
படம் பிடித்துக்கொள்வார். இராட்ச உருவம் நகருக்குள் வந்த பிறகு
அதைப் பார்த்து மக்கள் அலறியடித்து சிதறிய�ோடும் காட்சிகளை
உண்மையாக எடுக்க முடியாது என்பதால் அந்த பகுதி காட்சிகளை
க்ரீன் ஸ்கிரீன் (Green Screen) ப�ோட்டு படம் பிடித்துக்கொள்ளலாம்
என்று இயக்குனரும், VFX சூப்ரவைசரும் முடிவு செய்து
அந்த நகரில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து
கிளம்பிவிடுவார்கள்.

படம் 6 பார்க்கவும்.

சில த�ொடர்பு காட்சிகளை கிரீன் ஸ்கிரீன் பின்னணியில் ப்ராப்


நடிகர்களை நடக்கவிட்டு மற்றொரு இடத்தில் வைத்து படம்
45
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

பிடிப்பார்கள்.

படம் 7 பார்க்கவும்.

இந்த காட்சிகளையும் கேமிராவை லாக் செய்து சில காட்சிகளையும்,


ஸ்டெட்கேம் வைத்தும் எடுத்துக்கொள்வார்கள். கேமிராவை
லாக் செய்து காட்சிகளை எடுக்கும்போது வெறும் கிரீன் ஸ்கிரீன்
பின்னணியில் அவைகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால்
ஸ்டெட்கேம�ோ அல்லது கேமிராவை ட�ோலியில் வைத்தோ
எடுக்கும்போது பின்னணியில் இருக்கும் கிரீன் ஸ்கிரீனில்
கண்டிப்பாக டிராக்கிங் மார்க்கர்களை வைத்தாக வேண்டும்.

படம் 8 பார்க்கவும்.

மேட்ச்-மூவிங் த�ொழில் நுட்பத்திற்கு இந்த க்ரீன் ஸ்கிரீன் டிராக்கிங்


புள்ளிகள் மிக மிக முக்கியமானது. இந்த புள்ளிகள் இல்லாத
பட்சத்தில் மேட்ச்-மூவிங் என்பது மிகவும் கடினமான காரியமாக
மாறிவிடும். இங்கே நன்றாக கவனத்தில் க�ொள்ள வேண்டியது.
கம்போசிட்டிங்கில், மேட் பெயிண்டிங் (Matte Painting – இது குறித்து
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்) படங்களை காட்சிக்கு
பின்னணியாக வைக்கும் பட்சத்தில் அந்த காட்சி க்ரீன் ஸ்கிரீனில்
எடுக்கப்படும். அப்படி எடுக்கப்படும் இந்த காட்சி கேமிரா நகர்வை
அடிப்படையாக க�ொண்டது என்றால் கண்டிப்பாக க்ரீன் ஸ்கிரீனில்
டிராக்கிங் மார்க்கர்ஸ் வைத்தாக வேண்டும்.

ஒருவேளை அந்த காட்சி க்ரீன் ஸ்கிரீன் ப�ொருத்தப்படாமல்


உண்மையான ல�ோக்கேசனில் ஸ்டெட் கேம் வைத்து எடுக்கப்பட்டு
பிற்பாடு 3D உருவம் அந்த காட்சியுடன் ப�ொருத்தப்பட வேண்டும்
என்றால் அந்த காட்சியில் எப்படியான மார்க்கர் புள்ளிகளையும்
பயன்படுத்தவேண்டிய அவசியம் கிடையாது. After Effects-Mocha
அல்லது boujou ப�ோன்ற டிராக்கிங் மென்பொருட்கள் அவைகளே
photogrammetry முறைப்படி அந்த காட்சியை டிராக் செய்து மேட்ச்-
மூவிங்கிற்கு தேவைப்படும் மார்க்கர்சை உருவாக்கிவிடும்.

படம் 9 பார்க்கவும்.

46
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

47
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

48
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

49
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

இராட்ச உருவம் பரபரப்பான நகருக்குள் புகுந்து நகரை அடித்து


ந�ொறுக்கும் காட்சிக்கு தேவையான அனைத்து விசயங்களும்
இப்போது இயக்குனரின் கைகளில் இருக்கிறது. அதாவது இராட்ச
உருவம் மாடல் மற்றும் ரிக் செய்யப்பட்டு அது நகரை எப்படி
அடித்து ந�ொறுக்கவேண்டும் என்கிற நடிப்பு அசைவுகள் மற்றொரு
நடிகரின் நடிப்பு அசைவுகள் வழியாக ம�ோஷன் கேப்சர் த�ொழில்
நுட்பம் மூலம் படம் பிடிக்கப்பட்டு அந்த தரவுகள் இராட்ச
உருவத்திற்கு க�ொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது Maya அல்லது
Cinema 4D அல்லது Blender ப�ோன்ற மென் ப�ொருளில் அந்த இராட்ச
உருவம் மிக க�ோபமாக நகரை அடித்து ந�ொறுக்குவதைப் ப�ோல
நகரும் காட்சி தனியாக கைகளில் இருக்கிறது. இது 3D உலகில்
இருக்கும் கணினி இராட்ச உருவத்தின் நடிப்பு.

பரபரப்பான நகரின் காட்சிகள் தனியாக உண்மையான


ல�ோக்கேஷனில், டிஜிட்டல் கேமிராக�ொண்டு படம்
பிடிக்கப்பட்டதும் கைகளில் இருக்கிறது. இராட்ச உருவை
பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடுவது ப�ோன்று க்ரீன் ஸ்கிரீன்
பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகளும் தனியாக இருக்கிறது.
இப்போது இந்த மூன்று காட்சிகளையும் இணைத்தால்தான்
இயக்குனர் எதிர்பார்க்கும் காட்சியை உருவாக்க முடியும். இந்த
மூன்று காட்சிகளையும் இணைப்பதற்கு பெயர் கம்போசிட்டிங்
இதை அடுத்து வர இருக்கும் அத்தியாயத்தில் பார்ப்போம்.
இப்போது கம்போசிட்டிங்கில் எப்படி 3D உருவில் கணினியில்
இருக்கும் இராட்ச உருவத்தை உண்மையான ல�ோக்கேஷனில்
படம் பிடிக்கப்பட்ட காட்சிக்குள் க�ொண்டுவருவது என்பதைக்
குறித்து பார்ப்போம்.

உண்மையான ல�ோக்கேஷனில் நடிகர்களை க�ொண்டு படம்


பிடிக்கப்பட்ட ஒரு காட்சிக்குள் 3D கணினி உருவங்கள் (3D CG
Characters) என்று அழைக்கப்படும் 3D ப�ொருட்களை க�ொண்டு வரும்
த�ொழில் நுட்பமே மேட்ச்-மூவிங். உண்மையான ல�ோக்கேஷனில்
நடிகர்களை க�ொண்டு படம் பிடிக்கப்பட்ட காட்சிக்கு லைவ் ஆக்சன்
புட்டேஜ் (Live Action footage) என்றுப் பெயர். இந்த காட்சிக்குள் 3D
கணினி உருவங்களை அப்படியே க�ொண்டு வந்து வைத்துவிட
முடியாது.

50
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

காரணம் லைவ் ஆக்சன் புட்டேஜின் கேமிரா லென்சும், ப�ோக்கல்


லென்த்தும், கேமிரா க�ோணமும் 3D கணினி உருவங்களில்
இருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும். இதன் காரணமாக லைவ்
ஆக்சன் புட்டேஜில் 3D கணினி உருவங்களை க�ொண்டு வந்து
வைக்கும்போது அந்த உருவங்கள் ஒன்று மிகவும் சின்னதாக
இருக்கலாம் அல்லது அளவிற்கு அதிகமாக இருக்கலாம். மேலும்
அவைகளின் செயல்பாடும் லைவ் ஆக்சன் புட்டேஜில் நடிகர்களின்
செயல்பாடும் வேறு வேறாக த�ோன்றும். இது அபத்தமாகத்தானே
முடியும். ஆக லைவ் ஆக்சன் புட்டேஜில் இருக்கும் செயல்பாட்டிற்கு
ஏற்ப 3D கணினி உருவங்களின் செயல்பாட்டை ஒத்துப்போக
வைக்க மேட்ச்-மூவிங் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணத்திற்கு திரும்புவ�ோம். பரபரப்பான நகரில் நுழைந்துவிட்ட


இராட்ச உருவம் வாகனங்கள் செல்லும் சாலையில் ஓடுகிறது.
வாகனங்கள் செல்லும் சாலை லைவ் ஆக்சன் புட்டேஜாக தனியாக
இயக்குனர் படம் பிடித்து வைத்திருக்கிறார்.

படம் 10 பார்க்கவும்.

இந்த காட்சிக்குள் இப்போது தனியாக கணினியில் தயாராகி நிற்கும்


3D இராட்சத உருவத்தை க�ொண்டு வந்தாக வேண்டும். கணினியில்
அந்த 3D இராட்சத உருவம் ஓடுவதை ப�ோன்ற ம�ோசன் கேப்சர்
அனிமேஷன் முன்பே செய்யப்பட்டுவிட்டது. இப்போது ஓடும்
அந்த 3D இராட்சத உருவத்தை இந்த காட்சிக்குள் க�ொண்டு வர
வேண்டும். இதற்கு முதலில் செய்ய வேண்டியது மேட்ச்-மூவிங்.
மேட்ச்-மூவிங்கை கேமிரா டிராக்கிங் என்றும் அழைப்பார்கள்.
இதை After Effects மென்பொருளை உதாரணமாக க�ொண்டு
பார்ப்போம்.

வாகனங்கள் செல்லும் சாலை லைவ் ஆக்சன் புட்டேஜை After Effects


மென் ப�ொருளுக்குள் க�ொண்டு வந்தப் பிறகு Effects & Presets-ல்
இருக்கும் 3D Camera Tracking என்கிற எபெக்டை இந்த காட்சிக்குள்
செலுத்த வேண்டும்.

படம் 11 பார்க்கவும்.

51
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

3D Camera Tracking-ன் முடிவில் வாகனங்கள் செல்லும் சாலை லைவ்


ஆக்சன் புட்டேஜில் டிராக்கிங் புள்ளிகளை உருவாக்கியிருக்கும்
After Effects மென்பொருள்.

படம் 12 பார்க்கவும்.

இந்த டிராக்கிங் புள்ளிகள் மிக முக்கியம். இவையே இராட்சத


3D உருவத்தை இந்த காட்சிக்குள் க�ொண்டு வர உதவி செய்யக்
கூடியது. இதை ஏன் செய்ய வேண்டும்? நல்ல கேள்வி. இந்த
லைவ் ஆக்சன் புட்டேஜில் சாலையில் ஒரு கார் முன்னால் செல்ல
பின்னால் வரும் காரிலிருந்து இதை படம் பிடித்திருக்கிறார்கள்.
இங்கே கேமிரா ஓரிடத்தில் லாக் ஆகாமல் வேகமாக நகர்ந்தபடி
இருக்கிறது. வேகமாக நகர்ந்துக�ொண்டிருக்கும் இந்த காட்சிக்குள்
இராட்சத 3D உருவத்தை அப்படியே க�ொண்டு வரும் பட்சத்தில்
அது சாலையில் முன்னால் செல்லும் காருடன் சேர்ந்து சாலையில்
ஓடுவதற்கு பதிலாக அந்தரத்தில் தனியாக ஓடிக்கொண்டிருப்பதைப்
ப�ோல த�ோன்றும். அதிலும் நின்ற இடத்திலேயே நின்றுக�ொண்டு
ஓடிக்கொண்டிருப்பதைப் ப�ோல. காட்சியுடன் ஒட்டாமல்.

இது நிச்சயமாக பார்ப்பதற்கு அபத்தமாக இருக்கும் என்பது


ச�ொல்லாமலேயே புரிகிறதுதானே. ஆக இராட்சத 3D உருவம்
முன்னால் செல்லும் காருடன் சேர்ந்து ஓடியாக வேண்டும்.
அதற்குத்தான் இந்த டிராக்கிங் புள்ளிகள். After Effects உருவாக்கி
க�ொடுத்திருக்கும் இந்த டிராக்கிங் புள்ளிகளில் சிலவற்றை தேர்வு
செய்து அதனுடன் இராட்சத 3D உருவத்தை இணைத்துவிட்டு
விட்டால் முடிந்தது. இப்போது இராட்சத 3D உருவம் லைவ் ஆக்சன்
புட்டேஜில் சாலையில் முன்னால் செல்லும் காருடன் இணைந்து
சாலையில் ஓடுவதைப்போல காட்சியளிக்கும். இதற்கு பெயர்தான்
மேட்ச்-மூவிங்.

படம் 13 பார்க்கவும்.

நகரின் சாலையில் இராட்ச உருவம் ஓடுவதைப்போன்ற காட்சி


ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் இயக்குனர் இந்த
காட்சியை எடுத்திருப்பார். இந்த காட்சிக்கு நகரின் சாலையே
ப�ோதுமானதாக இருந்ததால் இந்த சாலையில் வைத்து காட்சியை
52
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

படம் பிடித்துவிட்டார். சாலையில் இருக்கும் ப�ொருட்கள் After


Effects மென்பொருளுக்கு டிராக்கிங் புள்ளிகளை உருவாக்க
ப�ோதுமானதாக இருந்ததால் (ப�ொதுவாக இப்படி ல�ோக்கேஷனில்
படம் பிடிக்கப்படும் காட்சிகள் டிராக்கிங் மென்பொருட்களுக்கு
டிராக்கிங் புள்ளிகளை உருவாக்க ப�ோதுமானதாக இருக்கும்)
அந்த மென்பொருளும் எளிதாக டிராக்கிங் புள்ளிகளை அதுவே
உருவாக்கிவிட்டது.

இராட்ச 3D உருவத்தைக் கண்டு மக்கள் சாலையில் பயந்து


ஓடுவதைப் ப�ோலவும் அவர்களை இந்த இராட்சத 3D உருவம்
துரத்திக்கொண்டு வருவதைப்போன்றும் எடுக்க முடிவு செய்து
மக்கள் பயந்து ஓடுவதை மாத்திரம் ஸ்டெட்கேம் வைத்து கிரீன்
ஸ்கிரீன் பின்னணியில் எடுத்துக்கொண்டு (எதற்கு கிரீன் ஸ்கிரீன்
என்றால் இந்த காட்சியின் பின்னணியில் வேறு ஒரு ல�ோக்கேஷனின்
புகைப்படத்தை மேட் பெயிண்டிங்கின் மூலம் கம்போசிட்
செய்துக�ொள்ளலாம் என்பது இந்த இடத்தில் இயக்குனரின் முடிவு)
காட்சியாக எடுத்துக்கொள்கிறார் இயக்குனர்.

படம் 14 பார்க்கவும்.

கிரீன் ஸ்கிரீன் பின்னணியில் மக்கள் பயந்து ஓடும் காட்சியை


ஸ்டெட்கேம் வைத்து எடுத்த இந்த காட்சியை மேட்ச்-மூவிங் செய்ய
நிச்சயமாக பயன்படுத்த முடியாது. காரணம் நகரும் காட்சியான
இதை டிராக் செய்வதற்கான எப்படியான தரவுகளும் After Effects
மென்பொருளுக்கு கிடைக்காது. கேமிராவை ஓரிடத்தில் லாக்
செய்து எடுக்கப்பட்ட காட்சியாக இருந்தால் அப்போது எப்படியான
பிரச்சனையும் வரப்போவதில்லை. அந்த காட்சியை டிராக்
செய்வதற்கான அவசியமும் இல்லை. மேட்ச்-மூவிங் என்பது லைவ்
புட்டேஜ் ஆக்சனை நகரும் கேமிராவைக் க�ொண்டு படம் பிடிக்கும்
ப�ோதே பயன்படுத்தவேண்டியிருக்கும். பயன்படுத்தவேண்டும்.

ஆக கிரீன் ஸ்கிரீனுக்கு முன்பாக பயந்து ஓடும் மக்களை நகரும்


கேமிராவைக்கொண்டு எடுத்த இந்த காட்சியை மேட்ச்-மூவிங்கிற்கு
என்று டிராக் செய்ய நிச்சயம் கிரீன் ஸ்கிரீனில் டிராக்கர்ஸ் புள்ளிகள்
இருந்தாகவேண்டும்.

53
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

படம் 15 பார்க்கவும்.

கிரீன் ஸ்கிரீனில் இருக்கும் டிராக்கிங் புள்ளிகளை அடிப்படையாக


க�ொண்டு After Effects மென்பொருள், இராட்சத 3D உருவத்தை
இந்த காட்சியுடன் மேட்ச்-மூவ் செய்வதற்கான கேமிரா டிராக்கிங்
புள்ளிகளை உருவாக்கித் தரும்.

படம் 16 பார்க்கவும்.

இந்த கேமிரா டிராக்கிங் புள்ளிகளை அடிப்படையாக வைத்து


இராட்ச 3D உருவத்தை இந்த காட்சிக்குள் க�ொண்டு வந்து, அது
மக்களை துரத்துவதைப் ப�ோலவும், மக்கள் அதை கண்டு பயந்து
ஓடுவதையும் ப�ோன்ற இயக்குனர் எதிர்பார்த்த இறுதிக் காட்சியை
உருவாக்க முடியும்.

படம் 17 பார்க்கவும்.

படம் 18 பார்க்கவும்.

இனி இண்டி படைப்பாளி எப்படி மேட்ச்-மூவிங் த�ொழில்


நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வது என்பதைப் பார்ப்போம்.
திரைக்கதைக்கு தேவைப்பட்டால் மாத்திரமே இந்த த�ொழில்
நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை இண்டி இயக்குனர்
மிக தெளிவாக மனதில் இருத்திக்கொள்வது அவசியம். மேட்ச்-
மூவிங் என்பது பெரும்பாலும் நகரும் கேமிராவைக் க�ொண்டு
படம் பிடிக்கப்பட்ட லைவ் ஆக்சன் புட்டேஜில் (அது கிரீன் ஸ்கிரீன்
பின்னணியிலும் எடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது உண்மையான
ல�ோக்கேஷனிலும் படம் படிக்கப்பட்டிருக்கலாம்) நகரும்
3D கணினி உருவங்களை (இவை இராட்ச மிருகங்கள், நகரும்
ப�ொருட்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்)
வைப்பதற்கு பயன்படுத்தப்படுவது.

3D கணினி உருவங்கள் எப்படியான நகர்வை செய்தாலும் படம்


பிடிக்கப்பட்டிருக்கும் லைவ் ஆக்சன் புட்டேஜ் லாக் செய்யப்பட்ட
கேமிராவில் (அதாவது ட்ரோபாயிட் க�ொண்டு ஓரிடத்தில் வைத்து
படம் பிடிக்கப்பட்ட இது கிரீன் ஸ்கிரீன் பின்னணி க�ொண்ட
54
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

55
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

56
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

காட்சியாகவும் இருக்கலாம் அல்லது உண்மையான ல�ோக்கேஷனில்


எடுத்த காட்சியாகவும் இருக்கலாம்) எடுக்கப்பட்டிருந்தால் அங்கே
மேட்ச்-மூவிங்கிற்கு அவசியம் கிடையாது. திரைக்கதையில்
இப்படியான காட்சிகளை திட்டமிட்டு அமைப்பது நல்லது.

அப்படியே நகரும் லைவ் ஆக்சன் காட்சிகளில் கண்டிப்பாக நகரும்


3D கணினி உருவங்களை ப�ொருத்தித்தான் ஆக வேண்டுமென்றால்
அந்த காட்சியை முடிந்தவரை மிக எளிமையான ஒன்றாக
இருக்கும்படி அமைத்துக்கொண்டால் ல�ோ பட்ஜெட்டில் தரமான
VFX எபெக்ட் க�ொண்ட காட்சிகளை உருவாக்க முடியும். மிக
எளிமை என்று நாம் ச�ொல்வது அந்த காட்சியை படம் பிடிக்கும்
செயல்பாட்டை. மிக சிக்கலான கேமிரா நகர்வுகள் இல்லாமல்
எளிதான கேமிரா நகர்வுகளை, அதிலும் மிகவும் அதிர்வுகள்
இல்லாத கேமிரா நகர்வுகளை திட்டமிட்டு அந்த காட்சிக்கு என்று
அமைக்கும்போது அது மிக சிறப்பான மேட்ச்-மூவிங் காட்சிகளை
கம்போசிட்டிங்கில் உருவாக்க உதவும்.

அதேப�ோல மற்றொரு விசயத்திலும் மேட்ச்-மூவிங் இண்டி


படைப்பாளிகளுக்கு பெரும் அளவில் உதவக் கூடியது. அது
ல�ோக்கேஷன் உருவாக்கம். ல�ோ பட்ஜெட்டில் இயங்கும் இண்டி
இயக்குனர்களால் காட்சிகளுக்கு பிரம்மாண்ட தன்மையை தரும்
பல உண்மையான ல�ோக்கேஷன்களுக்கு சென்று அனுமதி வாங்கி,

57
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

அதற்கென்று கட்டணங்கள் செலுத்தி திரைப்படத்தை எடுக்க


முடியாது. உதாரணமாக திரைக்கதையில் வெளிநாடு த�ொடர்பான
சம்பவம் வரும்போது ல�ோ பட்ஜெட்டை வைத்துக்கொண்டு
வெளிநாட்டிற்கெல்லாம் சென்று நிச்சயமாக படம் பிடிப்பது
என்பது இயலாத காரியம்.

இம்மாதிரி தருணங்களில் மேட் பெயிண்டிங்கின் மூலமும், 3D


மாடலிங் மூலமும் தேவைப்படும் ல�ோக்கேஷன் புகைப்படங்கள்
மற்றும் 3D ப�ொருட்களை வைத்துக்கொண்டு, செட்டில்
கிரீன் ஸ்கிரீனுக்கு முன்பாக எடுக்கப்பட்ட லைவ் ஆக்சன்
புட்டேஜ்களை மேட்ச்-மூவ் செய்து கற்பனை செய்த காட்சிகளை
உருவாக்கிக்கொள்ள முடியும்.

58
கம்போசிட்டிங் – (Compositing) VFX த�ொழில்
நுட்பம்

V FX எபெக்ட்ஸ் தயாரிப்பு நிலையின் (VFX Production Pipeline)


இறுதி மற்றும் மிக முக்கிய கட்டம் கம்போசிட்டிங் (Compositing).
ர�ோட்டோஸ்கோப் (Rotoscope), ம�ோஷன் கேப்சர் (Motion Capture),
மேட் பெயிண்டிங் (Matte Painting), ஸ்டாப் ம�ோஷன் (Stop Motion),
மினியேச்சர் (Miniature Effect) மற்றும் மேட்ச் மூவிங் (Matchmoving)
என்று பல நிலைகளை கடந்து வரும் லைவ் ஆக்சன் புட்டேஜ் மற்றும்
3D கணினி உருவங்கள் கம்போசிட்டிங்கில்தான் ஒரே காட்சியாக
ஒன்றிணைக்கப்பட்டு இயக்குனர் கற்பனை செய்த முழுமையான
காட்சியாக வெளிவரும். கம்போசிட் செய்து வெளிவரும் (கம்போசிட்
அவுட்புட்) VFX எபெக்ட்ஸ் க�ொண்ட காட்சி திரைப்படத்தின்
முதன்மையான எடிட்டிங்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.

படம் 1 பார்க்கவும்.

After Effects, Combustion, Nuke, Avid, Fusion, Smoke ப�ோன்ற


மென்பொருட்கள் கம்போசிட்டிங்கிற்கு என்றே பயன்படுத்தப்பட
கூடியவைகள். இதில் இண்டி பிளிம் மேக்கர்களின் பட்ஜெட்டிற்குள்
வரக் கூடியவைகள் After Effects, HitFilm Pro மற்றும் Nuke. Blender
மென்பொருளும் கம்போசிட்டிங்கிற்கு பயன்படக் கூடியதுதான்.
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் என்பது கூடுதல் சிறப்பு
இண்டி படைப்பாளிகளைப் ப�ொறுத்தவரையில்.

மேட் பெயிண்டிங் (Matte Painting)


கம்போசிட்டிங்கை குறித்து மேலும் தெரிந்துக�ொள்வதற்கு
முன்பாக மேட் பெயிண்டிங் (Matte Painting) குறித்து விரிவாக
தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். VFX த�ொழில் நுட்பத்தின்
அடுத்த மிக முக்கிய துறை மேட் பெயிண்டிங். மேட் பெயிண்டிங்
பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு எவ்வளவிற்கு
59
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

60
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

61
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

உதவக் கூடியத�ோ அதே அளவிற்கு சற்றும் குறையாமல் இண்டி


படைப்பாளிகளுக்கும் உதவக் கூடியது. ச�ொல்லப்போனால் மேட்
பெயிண்டிங் க�ொண்டு ஹாலிவுட் திரைப்படங்கள் சாதிக்க கூடிய
VFX காட்சிகளை இண்டி படைப்பாளிகளாலும் செய்ய முடியும்.
அதுவும் ல�ோ பட்ஜெட்டில்.

மேட் பெயிண்டிங் உத்தி சினிமா கலையின் த�ொடக்க


காலங்களிலேயே த�ோன்றிவிட்ட ஒரு ஸ்பெஷல் எபெக்ட் (Special
Effects – கேமிராவை க�ொண்டு சூட்டிங்கின் ப�ோதே நிகழ்த்தப்படும்
எபெக்ட்களுக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என்று பெயர்) உத்தி.
இருபதாம் நூற்றாண்டின் த�ொடக்க ஆண்டுகளில் ந�ோர்மன் டான்
என்பவர் மேட் பெயிண்டிங் உத்தியை அறிமுகப்படுத்தினார். படம்
பிடிக்கும் இடத்தை (அல்லது ல�ோக்கேஷன்) முற்றிலும் வேறு
ஒன்றாக மாற்றிக்காட்டுவது மேட் பெயிண்டிங் உத்தி.

உதாரணமாக பெரும் க�ோட்டை ஒன்றின் வாயிலுக்கு முன்பு


இரண்டு வீரர்கள் ம�ோதிக்கொள்வது ப�ோன்று காட்சி என்று
வைத்துக்கொள்வோம். இயக்குனர் பெரும் க�ோட்டையை தேடி
அலைந்துக�ொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி
தேடி அலைந்து அந்த இடத்திற்கு சென்று அந்த ஒரு காட்சியை
மாத்திரம் படம் பிடிப்பது என்பது மிகவும் செலவு பிடிக்க கூடிய
காரியம். அந்த ஒரு காட்சிக்கே பட்ஜெட்டில் கணிசமான பகுதி
செலவிடும்படியாகிவிடும். செலவையும் இல்லாமல் செய்து
இருந்த இடத்திலேயே இயக்குனர் கற்பனை செய்த காட்சியையும்
உருவாக்க துணை செய்வது மேட் பெயிண்டிங்.

படம் 2 பார்க்கவும்.

கேமிராவிற்கு முன்பாக பெரும் கிளாஸ் சட்டகம் (இதை கிளாஸ்


பிளேட் அல்லது கிளாஸ் மேட் என்பார்கள்) வைக்கப்பட்டு
அந்த கிளாசில் எந்த பகுதியில் க�ோட்டையின் சுவர் பகுதி
வரவேண்டும�ோ அந்த பகுதியில் க�ோட்டையின் சுவரை ஓவியமாக
வரைந்துவிடுவார்கள் (சில சமயங்களில் புகைப்படங்களும்
அந்த இடத்தில் ஒட்டப்படும்). கேமிராவிற்கும் அதற்கு முன்பாக
இருக்கும் கிளாஸ் மேட்டுக்கும் சற்று த�ொலைவில் நின்று
நடிகர்கள் தேவையான காட்சியை நடிப்பார்கள் இது கேமிராவில்
62
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

படம் பிடிக்கப்படும். படம் பிடிக்கப்பட்ட இறுதி காட்சியில்


க�ோட்டையின் வாசலுக்கு முன்பாக நின்று இரண்டு வீரர்களும்
ம�ோதிக்கொள்வதைப் ப�ோன்று பதிவாகியிருக்கும்.

கேமிராவிலிருந்து எவ்வளவு த�ொலைவில் கிளாஸ் மேட்


வைக்கப்பட வேண்டும், எவ்வளவு த�ொலைவில் நின்று
நடிகர்கள் நடிக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த காட்சியின்
பெர்ஸ்பெக்டிவை (Perspective) ப�ொறுத்திருக்கும். இன்றைய
டிஜிட்டல் த�ொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மேட்
பெயிண்டிங் என்பது சர்வ சாதாரணமான அதே சமயத்தில்
மிகவும் வலிமையான ஒரு திரைப்படமாக்கல் உத்தியாக
மாறிவிட்டது. Photoshop ப�ோன்ற ப்ரோபஷனலான இமேஜ்
எடிட்டிங் (Professional Image Editing) மென்பொருளும், தேவையான
ஹை ரெஸ் (High Resolution) புகைப்படங்களும், கிரீன் ஸ்கிரீனும்
இருந்தால் ப�ோதுமானது. காட்சிக்கு தேவைப்படும் எந்தவிதமான
ல�ோக்கேஷனையும் செலவே இல்லாமல் காட்சிக்குள் க�ொண்டு
வந்துவிட முடியும்.

எப்படியான பாண்டசி திரைக்கதைக்கான ல�ோக்கேஷனையும்


மேட் பெயிண்டிங்கின் மூலம் உருவாக்கிவிட முடியும்.
கற்பனையின் எல்லையே இந்த உத்திக்கான எல்லை. மேட்
பெயிண்டிங்கிற்கு தேவைப்படும் இறுதியான புகைப்படத்தையும்
கூட பல வழிகளில் உருவாக்க முடியும். ஒரே புகைப்படமாகவும்
அது இருக்கலாம் அல்லது வெவ்வேறு புகைப்படங்களில் இருந்து
பிரித்து எடுக்கப்பட்ட சுவாரசியமான விசயங்களை க�ொண்டு
உருவாக்கப்பட்ட க�ோலாஜ் புகைப்படமாகவும் இருக்கலாம்
அல்லது டிஜிட்டலாக வரையப்பட்ட டிஜிட்டல் பெயிண்டிங்
புகைப்படமாகவும் இருக்கலாம்.

படம் 3 பார்க்கவும்.

படம் 4 பார்க்கவும்.

இனி மேட் பெயிண்டிங் உத்தியைக் க�ொண்டு எப்படி ல�ோக்கேஷன்


காட்சிகளை உருவாக்குகிறார்கள் என்பதை பார்ப்போம். மேட்
பெயிண்டிங் க�ொண்டு முழுமையான ல�ோக்கேஷனையும்
63
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

உருவாக்க முடியும் பகுதி (partial) ல�ோக்கேஷனையும் உருவாக்க


முடியும். முதலில் முழுமையான ல�ோக்கேஷன் உருவாக்கத்தை
ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். டெக்சாஸ் மாகாணத்தின்
(ஏன் நாம் அமெரிக்க திரைப்படம் ப�ோன்ற ஒரு உதாரணத்தை
எடுத்துக்கொள்கிற�ோம் என்றால் எப்படியும் நம்மூர் திரைப்படங்கள்
இன்ஸ்பிரேஷன் என்கிற பெயரில் அங்கிருந்துதான் திருடி
எடுக்கப்படுகிறது. திருட்டு ப�ொருளை உதாரணம் காட்டுவதைவிட
ஒரிஜினலை உதாரணம் காட்டுவது நல்லதுதானே) ஷெரீப்
உயர்ந்த மலையில் இருந்து பணம் க�ொண்டு செல்லும் இரயிலை
கண்காணிப்பதுப் ப�ோன்ற காட்சியை கற்பனை செய்து எடுக்க
நினைக்கிறார் இயக்குனர்.

படம் 5 பார்க்கவும்.

இது பாண்டசி கலந்த திரைக்கதை என்பதால் இயக்குனர்


எடுக்க நினைக்கும் இந்த குறிப்பிட்ட காட்சியில் டெக்சாஸ்
மலை முகடுகளில் பாண்டசி முகத்தின் அமைப்பு இருக்க
வேண்டும் என்று நினைக்கிறார். இப்படியான காட்சியை
உண்மை ல�ோக்கேஷனில் சென்று படம் பிடிப்பது முடியாத
காரியம். இயக்குனர் விரும்புவதைப் ப�ோன்று டெக்சாஸ் மலை
முகடுகளில் நூறு அடி பாண்டசி உருவத்தை சிலையாக வடிப்பது
என்றால் அப்படியெல்லாம் நினைத்தும் பார்க்க முடியாது. இந்த
இடத்தில்தான் மேட் பெயிண்டிங் துணைக்கு வருகிறது. இது
பாண்டசி காட்சி என்பதால் இதை முழு மேட் பெயிண்டிங்
ல�ோக்கேஷனாக மாற்றிவிடலாம் என்று ய�ோசனை தருகிறார் VFX
சூப்ரவைசர்.

அதன்படி முதலில் இயக்குனரின் கற்பனைக்கு ஏற்ப மேட்


பெயிண்டிங்கில் க�ோலாஜ் (க�ோலாஜ் என்பது பல புகைப்படங்களை
தேவைக்கு ஏற்ப ஒன்றிணைப்பது) மற்றும் டிஜிட்டல் ஓவியத்தின்
துணைக�ொண்டு ல�ோக்கேஷன் காட்சி Photoshop மென்பொருளில்
உருவாக்கப்படுகிறது.

படம் 6 பார்க்கவும்.

64
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

65
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

66
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

67
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

68
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

அடுத்த அந்த காட்சியில் ஷெரிப்பாக நடிக்க வேண்டிய நடிகரை


காட்சிக்கு ஏற்ப தயார் செய்து கிரீன் ஸ்கிரீன் பின்னணியில் தனியாக
கிரீன் ஸ்கிரீன் செட்டில் வைத்து படம் பிடித்துக்கொள்கிறார்கள்.

படம் 7 பார்க்கவும்.

பிறகு கம்போசிட்டிங் மென்பொருளில், Photoshop மூலம்


உருவாக்கப்பட்ட பாண்டிசி புகைப்படம் முதலில்
க�ொண்டுவரப்படும். பிறகு கிரீன் ஸ்கிரீன் பின்னணியில் ஷெரிப்பாக
குதிரையின் மீது அமர்ந்து நடிகர் நடித்திருந்த லைவ் ஆக்சன்
புட்டேஜ் க�ொண்டுவரப்படும். அடுத்து லைவ் ஆக்சன் புட்டேஜில்
இருக்கும் கிரீன் ஸ்கிரீன் கீயிங் (Keying) மூலம் அகற்றப்படும்.
இப்போது குதிரையின் மீது அமர்ந்திருக்கும் நடிகரின் லைவ்
ஆக்சன் புட்டேஜ் பின்னால் இருக்கும் பாண்டசி புகைப்படத்துடன்
ஒன்றிணைந்திருக்கும் (After Effects மென்பொருளில் இவை ஒன்றின்
கீழ் ஒன்றாக தனித் தனி லெயர்களில் இருக்கும்). காட்சியில் நடிகர்
எந்த இடத்தில் ப�ொருத்தப்பட வேண்டும�ோ அந்த இடத்திற்கு
நகர்த்தியப் பிறகு மேட் பெயிண்டிங் ல�ோக்கேஷன் புகைப்படமும்
நடிகரின் லைவ் ஆக்சன் காட்சியும் ஒன்றாக ப�ொருந்திப்போகும்படி
கலர் கரக்சன் செய்யப்படும். ஒய்லா….இயக்குனர் விரும்பிய
பாண்டிசி காட்சி தயார்.

படம் 8 பார்க்கவும்.

அடுத்து பகுதியாக மேட் பெயிண்டிங் உத்தியை பயன்படுத்துவது.


இந்த முறையில் காட்சிக்கு முக்கிய தேவையாக இருக்கும்
பகுதிகளை மாத்திரம் (உதாரணமாக காடு, ஆறு, கடல்) செலவு
குறைவாக பிடிக்கும் அதேப�ோன்ற ஒரு பகுதியில் எடுத்துக்கொண்டு
அதே காட்சியின் மற்ற பகுதிகளை மேட் பெயிண்டிங் க�ொண்டு
தேவைக்கு ஏற்ப பிரம்மாண்டமானதாக மாற்றிக்கொள்வார்கள்.

படம் 9 பார்க்கவும்.

படம் 10 பார்க்கவும்.

படம் 11 பார்க்கவும்.
69
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

படம் 12 பார்க்கவும்.

ர�ோட்டோஸ்கோப் (Rotoscope) என்பது லைவ் ஆக்சன்


புட்டேஜிலிருந்து குறிப்பிட்ட ப�ொருளைய�ோ அல்லது
கதாபாத்திரத்தைய�ோ தனியாக பிரித்து எடுத்து மற்றொரு
காட்சியுடன�ோ அல்லது ல�ோக்கேஷனில�ோ ப�ொருத்துவதற்கு
பயன்படுத்தப்படுவது. ஏறக் குறைய கிரீன் ஸ்கிரீன் செய்யும்
வேலைத்தான் இதுவும் செய்யும் ஆனால் கிரீன் ஸ்கிரீன் இல்லாமல்.
இது மிகவும் கடினமான காரியம். ஒரு காட்சியில் VFX எபெக்ட்சை
உருவாக்க ர�ோட்டோஸ்கோப் உத்தியை பயன்படுத்துவது என்பது
இறுதியான வாய்ப்பாகவே கருதப்பட வேண்டும். வேறு எதற்கும்
வாய்ப்பில்லை என்கிற ப�ோதே இந்த உத்தியை கையில் எடுக்க
வேண்டும். காரணம் இது அவ்வளவு கடினமான காரியம்.

ஒரு புகைப்படத்தில் இருந்து நமக்கு தேவையான எந்த ஒரு


ப�ொருளையும், மனிதர்களையும் மிக எளிதாக பிரித்து எடுத்துவிட
முடியும். காரணம் புகைப்படம் நகரும் தன்மை க�ொண்டது
கிடையாது. ஆனால் ஒரு திரைப்பட காட்சி என்பது அப்படியானது
கிடையாது. திரைப்பட காட்சியில் கேமிரா நகர்தல�ோ அல்லது
கதாபாத்திரங்களின் நகர்தல�ோ நிகழும். நகரும் காட்சியில் இருந்து
ஒரு கதாபாத்திரத்தை (ப�ொருளை) பிரித்து எடுப்பது என்பது
ஒவ்வொரு பிரேமாக நிகழ்த்தப்பட வேண்டும். அந்த காட்சி பல
பிரேம்களை க�ொண்டதாக இருக்குமானால் ர�ோட்டோஸ்கோப்
என்பது மிக மிக கடினமான காரியமாகிவிடும்.

ர�ோட்டோஸ்கோப் மூலம் செய்யும் ஒரு காரியத்தை மிக


எளிதாக கிரீன் ஸ்கிரீன் மூலம் செய்துவிட்டு ப�ோக முடியும்.
கிரீன் ஸ்கிரீன் பயன்படுத்த முடியாத சமயத்தில் அல்லது கிரீன்
ஸ்கிரீன் பயன்படுத்தி எடுத்த காட்சி சரியாக வராத பட்சத்தில்
ர�ோட்டோஸ்கோப்பை பயன்படுத்துவார்கள். அதிலும் வேறு
வழியே இல்லை என்கிற நிலையில்தான்.

ஸ்டாப் ம�ோஷன் (Stop Motion)


அனிமேஷன் மற்றும் புகைப்பட கலையின் கலவை ஸ்டாப் ம�ோஷன்
எபெக்ட். சிறிய ப�ொம்மை உருவங்களின் செயல்பாடுகளை
அடிக்கு ஒரு தடவை மாற்றியமைத்து அந்த செயல்பாடுகளை ஒரு
70
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

நகர்விற்கு ஒரு பிரேம் என்று ஒவ்வொரு பிரேமாக (frame-by-frame)


படம் பிடிப்பது ஸ்டாப் ம�ோஷன்.

படம் 13 பார்க்கவும்.

முழுக்க ப�ொம்மை திரைப்படங்களை எடுப்பதையும் தாண்டி


ஸ்டாப் ம�ோஷன் எபெக்ட் லைவ் ஆக்சன் ஷாட்களிலும் கூட
பயன்படுத்தப்படுவதுண்டு. அது இயக்குனரின் முடிவை
ப�ொறுத்தது. லைவ் ஆக்சனில் செயல்படுத்த முடியாத
கேமிரா நகர்வுகளை ஸ்டாப் ம�ோஷன் உத்தியை பயன்படுத்தி
சாத்தியப்படுத்த முடியும். ஸ்டாப் ம�ோஷன் மிகவும் கடினமான
உத்தி. ப�ொம்மை கதாபாத்திரங்களின் ஒவ்வொரு நகர்வையும்
அனிமேட்டர்தான் கைகளால் நிகழ்த்த வேண்டியிருக்கும். இதற்கு
அதிக ப�ொறுமையும், உழைப்பும் தேவைப்படும்.

ப�ொம்மை கதாபாத்திரங்களின் ஒவ்வொரு நகர்வையும் நிகழ்த்த


அனிமேட்டர் சர்பேஸ் காஜ் (surface gauge) என்கிற கருவியை
பயன்படுத்துவார். ப�ொம்மை கதாபாத்திரத்தின் முந்தைய நகர்வை
தெரிந்துக்கொள்ள அதன் மூக்கு பகுதியில் சர்பேஸ் காஜின் பின்
(pin) முனை ப�ொருத்தப்படும். இந்த பின்னுக்கும் (pin) ப�ொம்மை
கதாபாத்திரத்தின் மூக்கிற்கும் இருக்கும் த�ொலைவைக் க�ொண்டு
அதன் நகர்வுகளை அனிமேட்டர் கணித்துக்கொண்டு அதன் அடுத்த
நகர்வை நிகழ்த்துவார்.

படம் 14 பார்க்கவும்.

ஒரு நாளைக்கு 2 - 3 செகண்ட் காட்சிகளையே ஸ்டாப் ம�ோஷனில்


படம் பிடிக்க முடியும். ஒரு வாரத்திற்கு ஒரு நிமிட காட்சிகள்
மாத்திரமே கிடைக்கும். இதுவும் அனிமேட்டரின் கற்பனை மற்றும்
த�ொழில் நுட்ப திறனை ப�ொறுத்தது. ஸ்டாப் ம�ோஷன் இண்டி
படைப்பாளிகளுக்கு மிகவும் உதவக் கூடியது. லைவ் ஆக்சனில்
மிக அதிக பட்ஜெட் பிடிக்கும் சில ஸ்டன்ட் காட்சிகளை ஸ்டாப்
ம�ோஷன் மற்றும் மினியேச்சர் எபெக்ட்களை கலந்து மிக குறைந்த
செலவில் படம் பிடித்துவிட முடியும். ஸ்டாப் ம�ோஷன் உத்தியை
கற்றுக்கொண்டுவிட்டால் மிக மிக குறைந்த செலவில் முழு
திரைப்படத்தையும் கூட எடுத்துவிடலாம். ப�ொம்மை
71
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

72
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

கதாபாத்திரங்களை வைத்து.

முழுக்க ப�ொம்மை கதாபாத்திரங்களை வைத்து மட்டுமே ஸ்டாப்


ம�ோஷனில் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று கட்டாயம்
கிடையாது. நடிகர்களையும் கூட ப�ொம்மை கதாபாத்திரங்களுடன்
நடிக்க வைத்து ஸ்டாப் ம�ோஷனில் முழு திரைப்படங்களை
உருவாக்க முடியும். ப�ோதா குறைக்கு கிரீன் ஸ்கிரீனும் இருக்கிறது.
கிரீன் ஸ்கிரீனில் ஸ்டாப் ம�ோஷன் காட்சிகளை படம் படித்து பிறகு
மேட் பெயிண்டிங் உத்தியின் மூலம் அற்புத காட்சிகளை உருவாக்க
முடியும். நம் கற்பனையே எல்லை இதற்கு.

ஸ்டாப் ம�ோஷன் உத்தியின் மூலம் ஒரு திரைப்படத்தை உருவாக்க


ஒரு கணினி, டிஜிட்டல் கேமிரா மற்றும் ஸ்டாப் ம�ோஷன்
மென்பொருள் ப�ோதுமானது. ப�ொம்மை கதாபாத்திரங்களை
களி மண் க�ொண்டும் உருவாக்கிக் க�ொள்ளலாம் அல்லது கார்டூன்
கட்அவுட்களை வைத்தும் உருவாக்கி க�ொள்ளலாம். நிறைய
த�ொழில் முறை சார்ந்த ஸ்டாப் ம�ோஷன் மென்பொருட்களை
இணையத்தின் வழி எளிதாக வாங்கிக்கொள்ளலாம். இலவச
ஸ்டாப் ம�ோஷன் மென்பொருட்களும் கூட கிடைக்கிறது.

த�ொழில் முறை ஸ்டாப் ம�ோஷன் மென்பொருட்கள்


73
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

Stop Motion Pro


Stop Motion Pro Eclipse

த�ொடக்க நிலை பயனாளிகளுக்கு ஏற்ற ஸ்டாப் ம�ோஷன்


மென்பொருட்கள்
iKITMovie
Zu3D
Stop Motion Animator

இலவச ஸ்டாப் ம�ோஷன் மென்பொருட்கள்


qStopMotion

மினியேச்சர் (Miniature)
மினியேச்சர் என்பது உலகில் உள்ள அனைத்து ப�ொருட்களின்
சுருங்கிய வடிவம். இதை மினியேச்சர் மாடல்ஸ் என்று ச�ொல்வார்கள்.
மினியேச்சர் மாடல்களை க�ொண்டு உருவாக்கப்படும் ஸ்பெஷல்
எபெக்ட்கள் சினிமாவின் மெளன திரைப்பட காலக்கட்டம் முதல்
வழக்கில் இருக்கிறது.

படம் 15 பார்க்கவும்.

அதிக பட்ஜெட் செலவழித்து தேவைப்படும் ல�ோக்கேஷன்களுக்கு


நேரில் சென்று காட்சிகளை எடுக்க முடியாத ப�ோதும், உண்மையில்
சாத்தியப்படாத பாண்டசி உலகை மீட்டுருவாக்கம் செய்து எடுக்க
வேண்டிய காட்சிகளிலும் மினியேச்சர் மாடல்கள் உதவிக்கு வரக்
கூடியவைகள். மினியேச்சர் மாடலாக இந்த ப�ொருளைத்தான்
உருவாக்க முடியும், முடியாது என்கிற கதையெல்லாம் கிடையாது.
எந்த ஒரு ப�ொருளையும், கற்பனை உலக சூழ்நிலைகளையும்
(imaginary environment) உருவாக்க முடியும். இதுதான்
மினியேச்சர்களின் பலம்.

மினியேச்சர்கள் இண்டி படைப்பாளிகளுக்கும் உதவியாக


இருக்க கூடியவைகள் அவர்களின் பட்ஜெட்டிற்குள்.
ப�ோர்ஸ்டு பெர்ஸ்பெக்டிவ் (Forced Perspective) மற்றும்
மினியேச்சர்களைக்கொண்டு பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு
நிகரான காட்சிகளை மிக குறைந்த செலவில் உருவாக்க முடியும்.
74
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

75
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

zப�ோர்ஸ்டு பெர்ஸ்பெக்டிவ், மினியேச்சர்கள் மற்றும் கிரீன் ஸ்கிரீன்


மூன்றையும் மிகுந்த திட்டமிடலுடனும் கற்பனை திறனுடனும்
பயன்படுத்தும்போது பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு
நிகரான காட்சிகளை ல�ோ பட்ஜெட் திரைப்படத்திலும் க�ொண்டு
வர முடியும்.

கம்போசிட்டிங் (Compositing)
முன்பே பார்த்ததை ப�ோல கம்போசிட்டிங் என்பது நாம் இதுவரை
பார்த்த அனைத்து VFX உத்திகளின் மூலம் உருவாக்கப்பட்ட கணினி
உறுப்புகளை (CGI Elements) இறுதி காட்சியாக ஒன்றிணைப்பது.

76
மிக்ஸ்ட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி,
ஆர்டிஃஷியல் இன்டலிஜன்ஸ் – VFX த�ொழில்
நுட்பத்தின் அடுத்தகட்டம்

பெ
ரிய திரையில் இருந்து த�ொலைக்காட்சிக்கு வந்த
சினிமா இப்போது த�ொலைக்காட்சியில் இருந்து
கைப்பேசிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நாளை
கைப்பேசியில் இருந்து நம்முடைய தலைக்கு செல்ல இருக்கிறது.
அதற்கான த�ொடக்கம் நிகழ்ந்தும் விட்டது. அது விர்ச்சுவல் ரியாலிட்டி
(Virtual Reality) சினிமா. விர்ச்சுவல் ரியாலிட்டியின் அடுத்தகட்ட
வளர்ச்சியாக வந்திருப்பது மிக்ஸ்ட் ரியாலிட்டி (Mixed Reality). மிக்ஸ்ட்
ரியாலிட்டி சினிமா என்பது பார்வையாளனை திரைக்கு வெளியே
நிறுத்தி காட்சிகளை திரையில் காட்டிவிட்டு அவனையே அப்படியே
வழியனுப்பிவைத்துவிடக் கூடியது அல்ல. ச�ொல்லப்போனால்
மிக்ஸ்ட் ரியாலிட்டி சினிமாவில் திரை என்கிற ஒரு ப�ொருளே
இருக்காது.

சினிமாவை பார்த்துக்கொண்டிருக்காமல், சினிமாவிற்குள்


பார்வையாளனை க�ொண்டு ப�ோய் நிறுத்துவது மிக்ஸ்ட்
ரியாலிட்டி சினிமா. அதாவது சினிமாவின் கற்பனை உலகிற்குள்
பார்வையாளனை கடத்தி கதாபாத்திரங்கள் அலைந்து
திரியும் உலகிற்குள் பார்வையாளனும் அலைந்து திரிவதும்,
கதாபாத்திரங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவைகளுக்கு
பின்னால் நடந்து, ஓடி செல்வதும், கதாபாத்திரங்கள் செய்யும்
செயல்களை அருகில் நின்று பார்ப்பதுமாக சினிமா நிஜ உலக
க�ொண்டாட்டமாக மாற்றிப்போடுவது.

இதை புரிந்துக�ொள்ள நமக்கு சில அடிப்படை அறிவியல்


சங்கதிகள் தெரிந்தாக வேண்டும். மிக்ஸ்ட் ரியாலிட்டி குறித்து
தெரிந்துக்கொள்ள நமக்கு முதலில் தெரிய வேண்டியது விர்ச்சுவல்
77
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

ரியாலிட்டி. விர்ச்சுவல் ரியாலிட்டி இன்று நேற்று முளைத்த சங்கதி


அல்ல. கேமிரா த�ொழில் நுட்பம் கண்டுபிடிக்க நடைபெற்ற
முயற்ச்சிகளின் காலம் த�ொட்டே விர்ச்சுவல் ரியாலிட்டி த�ொழில்
நுட்பம் குறித்த கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் நடந்தபடியேதான்
இருந்தது. அது குறித்த வரலாற்றுக்குள் செல்லாமல் விர்ச்சுவல்
ரியாலிட்டி எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

நம் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் ப�ோலவே மற்றொரு


கற்பனையான உலகை நம் கண்களுக்கு முன்னால் காண்பித்து,
நம் மூளையை ஏமாற்றுவதே விர்ச்சுவல் ரியாலிட்டி. விர்ச்சுவல்
ரியாலிட்டி மூலம் நம் கண்களுக்கு முன்பாக காட்டப்படும்
கற்பனை உலகில் நாம் நடக்க முடியும், ஓட முடியும், த�ொட
முடியும், ஏன் ப�ொருட்களின் மணத்தைக் கூட நுகர முடியும். இதை
சாத்தியப்படுத்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட் (VR Headset)
அவசியம். VR ஹெட் செட், நிஜ உலகை நம் கண்கள் அப்படி பார்த்து
ப�ொருள்களை உள்வாங்குகிறத�ோ அதேப�ோன்று அது ப்ரோஜக்ட்
(Project) செய்யும் கற்பனை உலக காட்சிகளையும் அதில் த�ோன்றும்
ப�ொருள்களையும் நம் கண்கள் உள்வாங்கிக்கொள்ளும்படி
செய்யும்.

இதற்கு அது பயன்படுத்துவது, இரு கருவிழிகளுக்கு இடையிலான


த�ொலைவு Interpupillary Distance (IPD) மற்றும் டிகிரிஸ் ஆப் பிரிடம்
(Degrees of Freedom) க�ோட்பாடுகளை. இவை மிக அடிப்படை இதற்கு
மேலும் சில விசயங்கள் இருக்கின்றன. முதலில் இது இரண்டை
குறித்தும் பார்த்துவிடுவ�ோம். நிஜ உலகில் ஒரு ப�ொருளை அதன்
இட, கண, பரிமாணங்களுடன் பார்க்க உதவி செய்வது நம்முடைய
கண்களில் அமைந்திருக்கும் இரு கருவிழிகளுக்கு இடையிலான
த�ொலைவே. இதற்கு பெயர் Interpupillary Distance (IPD). ஆக கற்பனை
உலகில் இருக்கும் ப�ொருட்கள் நிஜ உலகில் தெரிவதைப்போன்றே
தெரிய இரு கரு விழிகளுக்கு இடையில் இருக்கும் த�ொலைவை
கணக்கில் க�ொண்டு கேமிராக்களை ப�ொருத்தி காட்சிகளை
படம் பிடிக்கும்போது அது நிஜ உலகில் ப�ொருட்கள் இட, கண,
பரிமாணத்துடன் தெரிவதைப்போன்றே திரையிலும் காட்சிகளை
உருவாக்கும்.

படம் 1 பார்க்கவும்.
78
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

79
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

80
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

டிகிரிஸ் ஆப் பிரிடம் (Degrees of Freedom) என்பது நிஜ உலகில்


நம்முடைய தலையானது நகரும் மற்றும் சுழலும் தன்மையை
குறிப்பது. நகர்தல் மற்றும் சுழல்தல் ஆகிய இரண்டு நிலைகளில்
நம்முடைய தலையானது செயல்பட்டு நம்மை சுற்றியிருக்கும்
ப�ொருட்களை உள்வாங்கும். இந்த செயல்பாட்டை கற்பனை
உலக காட்சிகளில் உருவாக்க ஹெட் டிராக்கிங் (Head Tracking) உத்தி
விர்ச்சுவல் ரியாலிட்டியில் பயன்படுத்தப்படுகிறது. விர்ச்சுவல்
ரியாலிட்டி கருவியில் இருக்கும் ஹெட் டிராக்கிங் த�ொழில் நுட்பம்
கைர�ோஸ்கோப் (gyroscope), ஆக்சிலர�ோமீட்டர் (accelerometer)
மற்றும் மேக்னட்டோமீட்டர் (magnetometer) ப�ோன்ற கருவிகளை
பயன்படுத்தி நிஜ உலகில் மனித தலை நகரும் ப�ோது கண்கள் எப்படி
செயல்பட்டு காட்சிகளை உள் வாங்குகிறத�ோ அதேப�ோல கற்பனை
உலகில் செயல்பட ப�ோலி த�ோற்றங்களை உருவாக்குகிறது.

படம் 2 பார்க்கவும்.

மேலேப் பார்த்த இரண்டு அடிப்படைகளுக்கு அடுத்து விர்ச்சுவல்


ரியாலிட்டியின் அடுத்த முக்கிய த�ொழில் நுட்பம் ம�ோஷன்
டிராக்கிங் (Motion Tracking) மற்றும் ஹை டிராக்கிங் (Eye Tracking).
விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை அணிந்துக�ொண்டப் பிறகு
கற்பனை உலகிற்கு கடத்தப்பட்டுவிடும் நபர் அவருடைய உடல்
அசைவுகளை உதாரணமாக இரு கைகளின் அசைவுகளை உணர
பார்க்க ம�ோஷன் டிராக்கிங் த�ொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு என்று தனியே சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதேப�ோல கண்களின் அசைவுகளை உணர்ந்து அதற்கு ஏற்ப
கற்பனை உலகில் காட்சிகளை வெளிப்படுத்தவும் சென்சார்கள்
பயன்படுத்தப்படுகின்றன.

படம் 3 பார்க்கவும்.

இனி விர்ச்சுவல் ரியாலிட்டி எப்படி வேலை செய்கிறது என்பதை


பார்ப்போம். இன்புட் (Input), அப்ளிக்கேஷன் (Application), ரெண்டரிங்
(Rendering) மற்றும் அவுட்புட் (Output) என்று நான்கு முக்கிய நிலைகள்
இதில் இருக்கிறது. இன்புட் (Input) நிலையில் விர்ச்சுவல் ரியாலிட்டி
ஹெட் செட் அணிந்திருக்கும் பார்வையாளனின் செயல்பாடுகள்
உள்வாங்கப்பட்டு அது கணினிக்கு அனுப்பி வைக்கப்படும்.
81
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

உதாரணமாக பார்வையாளனின் கை அசைவுகள், நகர்வுகள், தலை


மற்றும் கண்களின் அசைவுகள் ப�ோன்ற தரவுகள்.

படம் 4 பார்க்கவும்.

அப்ளிக்கேஷன் (Application) நிலை விர்ச்சுவல் ரியாலிட்டியின்


இதயம் ப�ோன்றது. இங்கேதான் பார்வையாளனிடமிருந்து பெற்ற
தரவுகளுக்கு ஏற்ப டைனமிக் வடிவக்கணிதம் (dynamic geometry)
மற்றும் கற்பனை உலக காட்சிகள் (virtual world physics simulation)
உருவாக்கப்படும். இவை வெறும் தரவுகளாகவே இருக்கும். இந்த
தரவுகளை அப்படியே பார்வையாளனுக்கு கடத்த முடியாது. இந்த
தரவுகளின் அடிப்படையில் கற்பனை உலக கிராபிக்ஸ் காட்சிகளை
உருவாக்க வேண்டும். அந்த வேலையை செய்வது ரெண்டரிங்
(Rendering) நிலை. ரெண்டரிங் (Rendering)-ல் உருவாக்கப்பட்ட
கிராபிக்ஸ் காட்சிகள் பார்வையாளன் அணிந்திருக்கும் ஹெட்
செட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.

விர்ச்சுவல் ரியாலிட்டியில் கற்பனை உலகம் இரண்டு முறைகளில்


உருவாக்கப்படும். முதலாவது நிஜ உலகை விர்ச்சுவல் கேமிரா
மூலம் படம் பிடித்து பிறகு அது கணினியில் விர்ச்சுவல்
ரியாலிட்டி த�ொழில் நுட்பத்திற்கு ஏற்ப ரெண்டர் செய்யப்பட்டு
பார்வையாளனுக்கு காட்டப்படும். மற்றொரு முறையில் கற்பனை
உலகம் முழுக்க கணினி உருவங்களாக (CGI) உருவாக்கப்பட்டு அது
பார்வையாளனுக்கு காண்பிக்கப்படும்.

படம் 5 பார்க்கவும்.

இரண்டு முறைகளிலும் பார்வையாளன் நிஜ உலகில் இருந்து


முற்றிலும் துண்டிக்கப்பட்டு தலையில் அணிந்திருக்கும் விர்ச்சுவல்
ரியாலிட்டி ஹெட் செட்டின் வழியாக கற்பனை உலகிற்கு அழைத்து
செல்லப்பட்டுவிடுவான். மேலும் இரண்டு வகையான ரியாலிட்டி
த�ொழில் நுட்பங்கள் இருக்கின்றன. அவை அகுமெண்டட்
ரியாலிட்டி (Augumented Reality) மற்றும் மிக்ஸ்ட்ரியாலிட்டி (Mixed
Reality). அகுமெண்டட் ரியாலிட்டி என்பது நிஜ உலகில், கற்பனை
உலக (அதாவது டிஜிட்டல் மற்றும் கணினி உருவாக்கிய CGI
உருவங்கள்) ப�ொருட்களை மெல்லிய வெண் திரைப�ோல படர
82
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

விட்டு காண்பிப்பது.

படம் 6 பார்க்கவும்.

மிக்ஸ்ட் ரியாலிட்டி கணினி உருவங்களை அல்லது ப�ொருட்களை


நிஜ உலக�ோடு கலந்துக் காட்டுவது. அதாவது கணினி உருவாக்கும்
ப�ொருட்கள் நிஜ உலக ப�ொருட்களுடன் கலந்திருக்கும். நிஜ
உலக ப�ொருட்களை எப்படி நம்முடைய கண்கள் காண்கிறத�ோ
அதேப�ோன்று கணினி உருவாக்கும் ப�ொருட்களையும் நம்முடைய
கண்கள் நிஜ உலகில் நிஜ உலக ப�ொருள் ப�ோலவே பார்க்கும்.

படம் 7 பார்க்கவும்.

படம் 8 பார்க்கவும்.

விர்ச்சுவல் ரியாலிட்டி த�ொழில் நுட்பத்தை அடிப்படையாக


க�ொண்ட பல கேம்கள் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்டன.
Facebook, Google, Apple, Amazon, Microsoft, Sony, Samsung உலகின் பெரும்
தகவல் மற்றும் த�ொலைத் த�ொடர்பு த�ொழில் நுட்ப நிறுவனங்கள்
அனைத்தும் விர்ச்சுவல் ரியாலிட்டி த�ொழில் நுட்பத்தில் அடுத்தக்
கட்ட ஆராய்ச்சிகளை செய்து வருகின்றன. இது ஒரு புறம்
என்றால் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு தேவைப்படும் ஹெட் செட்
ப�ோன்ற கணினி பாகங்களின் அடுத்தக் கட்ட வளர்ச்சியில் Meta,
Void, Atheer, Lytro, மற்றும் 8i ப�ோன்ற நிறுவனங்கள் தங்களை
ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

விர்ச்சுவல் ரியாலிட்டி த�ொழில் நுட்பத்தை அடிப்படையாக


க�ொண்ட அனிமேஷன் மற்றும் திரைப்பட முயற்ச்சிகள்
த�ொடங்கப்பட்டு அதற்கான வெள்ளோட்ட முயற்ச்சிகள்
நடந்துக�ொண்டிருக்கின்றன. கூகுள் நிறுவனம் ஸ்பாட் லைட்
ஸ்டோரிஸ் (Spotlight Stories) என்கிற பெயரில் Special Delivery, Help,
On Ice, Buggy Night, The Simpsons, Rain or Shine, மற்றும் Pearl ப�ோன்ற
அனிமேஷன் குறும்படங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த
அனிமேஷன் திரைப்படங்கள் 360° பார்வை க�ோணத்தை க�ொண்டது.
வழமையான அனிமேஷன் திரைப்படங்களில் இருந்து முற்றிலும்
வேறு விதமான திரை அனுபவத்தை தரக் கூடியவைகள். விர்ச்சுவல்
83
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

ரியாலிட்டி ஹெட் செட்டில் பார்க்கும்போது பார்வையாளன்


அனிமேஷன் உலகத்திற்குள் அவனும் ஒரு உறுப்பாக இருக்கும்
அனுபவம். இந்த குறும்படங்களை வழமையான கணினி
மற்றும் ஸ்மார்ட்போன் திரைகளிலும் காண முடியும். திரையில்
360° சுற்றி பார்க்க கீ-ப�ோர்டின் ஏர�ோ கீயை (keyboard arrow keys)
பயன்படுத்தவேண்டும்.

சினிமா கலை கண்டுபிடிக்கப்பட்ட த�ொடக்க ஆண்டுகளில்


திரைப்படங்கள் என்பது குறும்படங்களாகவே இருந்தன.
சுமார் பத்து முதல் இருபது நிமிடங்கள் ஓடக் கூடிய புற உலக
செயல்பாடுகளை ஆவணப்படுத்தக் கூடிய குறும்படங்கள்.
அன்றைய காலக்கட்டத்தில் இந்த குறும்படங்கள் மக்களிடையே
பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்களின் அன்றாட
செயல்பாடுகளை திரையில் பெரிது படுத்தப்பட்ட காட்சிகளாக
ஓடக் கண்ட மக்களுக்கு அது தீரா வியப்பு கலந்த ஆச்சரிய அனுபவம்.
மிக சரியாக ஒரு நூற்றாண்டு கழித்து சினிமா கலை மீண்டும்
மக்களை ஆச்சரிய வியப்பில் ஆழ்த்த த�ொடங்கியிருக்கிறது.

இதற்கான முழு முதற் காரணம் விர்ச்சுவல் ரியாலிட்டி


திரைப்படங்கள். த�ொடக்க கால திரைப்படங்கள் எப்படி
குறும்படங்களாக வெளிவந்தனவ�ோ அதேப�ோன்று விர்ச்சுவல்
ரியாலிட்டி திரைப்படங்களும் குறும்படங்களாக இப்போது
வெளிவரத் த�ொடங்கியிருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு
சினிமா கலை மக்களிடையே ஏற்படுத்திய ஆச்சரிய வியப்பிற்கு
சற்றும் குறைவில்லாத ஆச்சரிய வியப்பை விர்ச்சுவல் ரியாலிட்டி
குறுந்திரைப்படங்கள் ஏற்படுத்தி வருகின்றன. ஒரு படி மேலே
ப�ோய் ஆச்சரிய வியப்பை ஏற்படுத்துகிறது என்று கூட ச�ொல்லலாம்.
வழமையான சினிமா அனுபவம் அனைத்தையும் அடித்து ந�ொறுக்க
கூடியது விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்பட அனுபவம்.

திரையின் கற்பனை உலகிற்குள் கதாபாத்திரங்களுடன் நாமும்


உலவி திரிவது ஆச்சரிய திரை அனுபவம்தானே. My Brother’s Keeper,
Bear71, Bashir’s Dream, Lincoln in the Bardo, Notes on Blindness ப�ோன்ற
விர்ச்சுவல் ரியாலிட்டி குறுந் திரைப்படங்களை இப்போதைக்கு
இலவசமாக பார்க்கலாம். இதற்கு தேவை விர்ச்சுவல் ரியாலிட்டி
ஹெட் செட். VFX காட்சிகள் நிரப்பப்பட்ட பெரும் பட்ஜெட்
84
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

85
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

86
நவீனா அலெக்சாண்டர் & வர்ஷினி

ஆலிவுட் திரைப்படங்கள் இனி வேறு விதமான திரை அனுபவத்தை


தர இருக்கின்றன. விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிராக்கள் 360°
க�ோணத்தில் படப்பிடிப்பு நிகழ்த்துவதால் இப்போதைக்கு முழ நீள
திரைப்படங்கள் என்பது ச�ோதனை முயற்ச்சியிலேயே இருக்கிறது.

விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிராக்களை க�ொண்ட முழு நீள


திரைப்படங்கள் சாத்தியப்படும்போது இதுவரை ச�ொல்லப்பட்டு
பின்பற்றப்பட்டு வந்த அனைத்து சினிமா கலை சார்ந்த
க�ோட்பாடுகளும், விதிகளும் தவிடு ப�ொடியாகிவிடும்.
விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படங்கள் திரை அனுபவமாக
இருக்கப்போவதில்லை அவை நிகழ்வுகளாக இருக்கப்போகின்றன.
இதுவரை பின்பற்றப்பட்டு வரும் அனைத்து சினிமா கலை சார்ந்த
த�ொழில் நுட்பங்களும் (அனைத்தும் என்றால் அனைத்துமே –
திரைக்கதை த�ொடங்கி இயக்கம், நடிப்பு, கேமிரா த�ொழில் நுட்பம்,
எடிட்டிங், இசை என்று அனைத்துமே) மாற்றியமைக்கப்பட
இருக்கிறது.

இண்டி இயக்குனர்கள் இதற்கு அவர்களை தயார்படுத்திக்


க�ொள்வது மிக அவசியம். சினிமா என்பது இனியும் இன்ஷ்பிரேசன்
என்கிற பெயரில் உலக சினிமாக்களில் இருந்து கதை த�ொடங்கி
காட்சிகள் வரை திருடும் சங்கதியாக இருக்கப்போவதில்லை. அது
பெரிதும் த�ொழில் நுட்பம் சார்ந்து இருக்கப்போகிறது. த�ொழில்
நுட்பம் சார்ந்து இருந்தாலும் சினிமா ஏற்படுத்த இருக்கும் திரை
அனுபவம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கப்போகிறது.
விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிராக்கள் 360° மற்றும் 180° க�ோணங்களில்
காட்சிகளை படம் பிடிக்கும் என்பதால் அதன் பார்வையிலிருந்து
எதுவும் தப்ப முடியாது.

இங்கே எதுவும் தப்ப முடியாது என்று நாம் ச�ொல்வது


படப்பிடிப்பு செய்யும் குழுவை. விர்ச்சுவல் ரியாலிட்டி முழு
நீளத் திரைப்படங்களில் இருக்கும் சவால்களில் இதுவும் ஒன்று.
படப்பிடிப்பு குழு காட்சிகளில் இருந்து மறைந்து நிற்க முடியாத
காரணத்தால் திரைக்கதையானது அதை மனதில் க�ொண்டு
உருவாக்கப்பட வேண்டியிருக்கும். விர்ச்சுவல் ரியாலிட்டி
கேமிராவில் காட்சி அமைப்பு என்பதற்கே இடம் கிடையாது. அதில்
புற உலகம் இருப்பது இருப்பது படி படம் பிடிக்கப்படும். அதாவது
87
VFX Mo-Cap, Matchmoving, Compositing: உலக சினிமா உத்திகள்

நம் கண்கள் புற உலகத்தையும் அதிலுள்ள ப�ொருட்களையும்


காண்பதைப்போல. இது கற்பனை வளத்தையும் தாண்டி த�ொழில்
நுட்ப புரிதலையும் அறிவையும் க�ோரி நிற்பது.

இண்டி இயக்குனர்கள் வர இருக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி சினிமா


த�ொழில் நுட்பத்திற்கு இப்போதிலிருந்தே அதன் த�ொழில் நுட்பம்
சார்ந்து அவர்களை தயார் செய்து க�ொள்வது மிக அவசியம். அந்த
த�ொழில் நுட்பத்தை நன்கு உள்வாங்கி ல�ோ பட்ஜெட்டில் இயங்கும்
அவர்களுக்கு அந்த த�ொழில் நுட்பம் எப்படியான வாய்ப்புகளை
உருவாக்குகிறது என்பதை இப்போதிலிருந்தே அவர்கள் ச�ோதனை
முயற்ச்சிகளின் மூலம் செய்துப் பார்க்க த�ொடங்கிவிடுவது சிறப்பு.

88
Reference Books

The VES Handbook of Visual Effects: Industry Standard VFX


Practices and Procedures Edited by Jeffrey A. Okun & Susan
Zwerman
Human Motion: Understanding, Modelling, Capture, and An-
imation Edited by Bodo Rosenhahn, Reinhard Klette, Dimitris
Metaxas
Filming the Fantastic: A Guide to Visual Effect Cinematogra-
phy by Mark Sawicki
Matchmoving: The Invisible Art of Camera Tracking by Tim
Dobbert

89

You might also like