Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

எருவிடல்

பயிரின் வளர்ச்சிக்கு பதினாறுக்கும் மேற்பட்ட தனிமங்கள்


தேவைப்படுவதாக அறிவியலார் அறிந்துள்ளனர். பண்டைக் காலத்தில்,
அனைத்து சத்துக்களையும் தரவல்ல இயற்கை எருவினை நமது முன்னோர்
பயன்படுத்தியுள்ளனர்.

தொழுவின் நீரே பழுதிலா உரமாம்.

மாட்டுத் தொழுவத்தில் இருந்து வரும் கோமியம் போன்றவை சிறந்த


ஊட்டச்சத்து உரமாகும்.

முன்போகத்துக்கு ஆட்டெரு! பின் போகத்துக்கு தழைஎரு!

முன்போக விளைச்சலுக்கு ஆட்டுச்சாணமும், பின்போக விளைச்சலுக்கு


பசுந்தாள் உரமும் பயன்தரும்.

குப்பையில் கோடி தனம். எயுந்தனையும் எருவை, காயுந்தனையும்


களைபறி.

குப்பையில் சத்துமிகுந்த உரங்களைப் பெறலாம். மரம் காய்களை ஈனும்


வரை எருவிட வேண்டும். செடிகள் காய்க்கின்ற வரைகளை பறிக்க
வேண்டும்.

குப்பையில்லா வெள்ளாமை சப்பை. எருபோட்ட பயிருதான் எகிறிவளரும்.

தொழு உரம் இடாத பயிர் வளமாக இராது. இயற்கை உரம் இட்ட பயிர்
நன்கு வளரும்.

ஆடுகளை நிலத்தில் கிடைபோட்டு உழவினை செய்ததால் மண்வளமாக


இருந்தது. வேதியியல் உரங்களை இடுவதால் மண்ணின் உயிர்ச்சூழல்
சிதைக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவதாக வேளாண்மை அறிஞர்கள்
அறிவித்துள்ள நிலையில் இயற்கை உரங்களைக் குறிக்கும் பழமொழிகள்
முதலிடம் பெறுகின்றன.

You might also like