Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) தொழில்நுட்பமோ 100

ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஒரு பெரும் மாற்றம். கணினி


விஞ்ஞானியான ஆண்ட்ரூ ந.ஜி (Andrew Ng) செயற்கை அறிவாற்றலை  புதிய
மின்சாரம் என்று கூறுகிறார். இத்தகைய மிக சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்தை
வல்லுநர்கள் ஆக்கவும் பயன்படுத்த முடியும், அழிக்கவும் பயன்படுத்த முடியும்.
 
செயற்கை அறிவாற்றல் (AI) வல்லுநராக ஆக ஒருவர் மிக சிறந்த மென்பொருள்
வல்லுநராக, கணித மேதையாக, விடா முயற்சி கொண்டவராக இருக்க வேண்டும்.
இவ்வளவு விஷயத்தில் வல்லமை பெற்ற ஒருவர் அதி புத்திசாலியாக இருக்க வாய்ப்பு
உண்டு.
 
அதி புத்திசாலிகளுக்கு உரிய அகந்தையும் கர்வமும், எதையும் செய்யலாம், எந்த
விதிகளும் நமக்கு பொருந்தாது என்ற பண்பு இருக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
இத்தகைய பண்பை தான் ஒரு அறிஞர் ஒருவர் “எண்கள் பொய் சொல்லாது ஆனால்
நன்றாக பொய் பேசுபவர்கள் எண்களை உபயோகிப்பர்” (Numbers don’t lie
but liars use numbers) என்று கூறி இருக்கிறார்.
 

செயற்கை அறிவாற்றலை (Artificial Intelligence) சுருக்கமாக


சொல்ல வேண்டுமானால் கடந்த கால நிகழ்வுகளை வைத்து
எதிர்காலத்தில் நடப்பதை கணிக்கக்கூடிய வல்லமை பெற்றது.
 
 
இது ஒரு கேள்வியை எழுப்புகிறது, கடந்த கால நிகழ்வு ஒன்று இல்லை என்றால்
செயற்கை அறிவாற்றல் அதை எப்படி சரியாக கணிக்க முடியும்?

 
உதாரணத்திற்கு நாம் செயற்கை அறிவாற்றலை, வங்கியில் தொழில்முனைவோருக்கு
(entrepreneur) கடன்கொடுப்பதா இல்லையா என்று முடிவு எடுக்க
பயன்படுத்துகிறோம் என்றால். ஒரு சமூகம் தொழில்முனைவதில் பெயர் பெற்றவர்கள்,
அவர்கள் பற்றிய தகவல்கள் செயற்கை அறிவாற்றலுக்கு தெரியும், அது கடன்
கொடுப்பதை பற்றி சாதகமான முடிவு எடுக்க வாய்ப்பு மிகவும் அதிகம்.

 
அதே சமயம் இன்னொரு சமூகம் காலம் காலமாக அடிமை பெற்ற சமூகம், அதில்
இருந்து தொழில் முனைவோர் வந்தது இல்லை, இந்த சமூகத்தை பற்றி தவகல்கள்
செயற்கை அறிவாற்றலுக்கு தெரியாது, அது கடன் கொடுப்பதை பற்றி பாதகமான
முடிவு எடுக்க வாய்ப்பு மிகவும் அதிகம்.
 
 

அமெரிக்காவில் சிறையில் இருக்கும் மக்கள் தொகையில் 34%


விழுக்காடு கறுப்பினத்தவர் ஆனால் அமெரிக்காவின் மொத்த
மக்கள் தொகையில் 12.2% விழுக்காடு தான் கறுப்பினத்தவர்.
தவறு செய்த ஒருவரை சிறையில் இருந்து சீக்கிரம் விடுவிக்கலாமா
இல்லையா என்று முடிவு செய்ய செயற்கை அறிவாற்றலை
பயன்படுத்தினால் கறுப்பினத்தவருளுக்கு பாதகமான முடிவு வர
சாத்தியம் அதிகம். இதை பற்றி நியூயார்க் டைம்ஸ் ஒரு அருமையான
கருத்து வெளியிட்டுயிருந்தது.
 
செயற்கை அறிவாற்றலில் இரண்டு வகைப்பாடுகள் உண்டு. முதல் வகை அது ஒரு
முடிவை ஏன் எடுக்கின்றது என்று வல்லுநர்களுக்கு தெரியும். இரண்டாம் வகை அது
ஏன் ஒரு முடிவை எடுக்கின்றது என்று தெரியாத வகை.

 
Deep Learning இரண்டாவது வகையறாவை சாறும். பேராசிரியர் பீன் கிம் (Prof
Been Kim ) அனைத்து செயற்கை ஆறிவாற்றலும் ஏன் ஒரு முடிவை எடுத்தது
என்பது மனிதர்களுக்கு புரிய வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து
வருகிறார். வங்கியில் கடன் கொடுப்பதா, இல்லையா போன்ற காரியங்களுக்கு
இரண்டாம் வகை செயற்கை ஆறிவுஆற்றலை பயன்படுத்தக் கூடாது.

செயற்கை அறிவாற்றல் ஒரு குழந்தை மாதிரி நல்ல தகவல்களை


சொல்லி கொடுத்தால் நல்ல முடிவு எடுக்கும், தவறான தகவல்களை
சொல்லி கொடுத்தால் தவறான முடிவு எடுக்கும்.
 
செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) வல்லுநர்கள் கண்மூடித்தனமாக
சரித்திரம் மற்றும் சமூக கட்டமைப்பு புரியாமல் தகவல்களை செயற்கை
ஆறிவாற்றலுக்கு சொல்லி கொடுத்தால் அது பாரபட்சமான முடிவு எடுக்கும் வாய்ப்பு
மிகவும் அதிகம்.இதற்கு முன்பு வந்த தொழில்நுட்பங்களை போல செயற்கை
அறிவாற்றல் அதன் படைப்பாளிகள் அறநெறிகளை பிரதிபலிக்கும். செயற்கை
அறிவாற்றல் வல்லுனர்களுக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது.

கவிஞர் புலமைப்பித்தனின் வரிகள் “எந்தக்குழந்தையும் நல்ல


குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…பின் நல்லவராவதும்
தீயவராவதும் அன்னை வளர்பப ் திலே” செயற்கை அறிவாற்றல்
வல்லுநர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.

செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) என்று சொன்னால் நமக்கு


நினைவு வருவது ரஜினியின் எந்திரன் திரைப்படம் அதில் சிட்டி அடிக்கும்
லூட்டிகளைக்கண்டு இதெல்லாம் சாத்தியமா என்று வியந்தது உண்டு. சிட்டி
செயற்கை  அறிவாற்றலின் ஒரு பரிமாணம். எல்லா செயற்கை அறிவாற்றல்
பரிமாணங்களும் சிட்டி மாதிரி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
 
 

Img Credit : alchetron.com


 
 
நமக்கு தெரியாமலே அதிகமான செயற்கை அறிவாற்றல் சாதனங்களை நாம்
பயன்படுத்தி வருகிறோம். நம்மில் பலபேர் முகநூலில் (facebook) ஒரு கணக்கு
வைத்திருக்கிறோம். செய்திகளை அறியக்கூட நாம் முகநூலுக்கு செல்ல
தொடங்குகிறோம்.

 
உங்களுக்கு ஒரு செய்தியோ அல்லது தகவலோ பிடித்து இருந்தால் அதற்கான
விருப்பத்தை லைக் (Like) என்று நீஙக ் ள் முகநூலில் பதிவு செய்துயிருந்தால்
உங்களுக்கு அதற்கு சம்பந்தப்பட்ட செய்திகளோ தகவல்களோ முகநூலில் அதிகம்
வரத் தொடங்கும் இது ஒரு வகையில் நல்லது. நமக்கு விருப்பமான விவரங்களை
மட்டும் நாம் கற்றுக்கொள்கிறோம் விரும்பாத விவரங்களை தவிர்கக ் ிறோம்.

 
ஆனால் இது நம்மை கிணற்றுத் தவளையாக மாற்றிவிடுகிறது. இந்த கிணறு தான்
நம் உலகம். முகநூலின் செயற்கை அறிவாற்றல் அதிகம் கற்றுக்கொள்ள
கற்றுக்கொள்ள அவர்களை சுற்றி ஒரு கிணறு வெட்டத் தொடங்குகிறது.

அட, உங்களின் விருப்பத்தை அது எப்படி கற்றுக் கொள்கிறது?


 
உங்களின் விருப்பத்தினை நீங்கள் பதிவு செய்யும் லைக் (Like) மற்றும் கருத்து
தெரிவிப்பதின் (Comment) மூலமும் செயற்கை அறிவு ஆற்றலுக்கு கற்றுக்
கொடுக்கிறீர்கள் செயற்கை அறிவாற்றல் உங்களது விருப்பத்திற்கு இணங்க உரிய
விவரங்களை மட்டும் திரும்ப திரும்ப காட்டுகிறது.
 

உதாரணத்திற்கு நீங்கள் ஜெயகாந்தன் கட்டுரைகளுக்கு விருப்பம்


தெரிவித்திருந்தால் அசோகமித்திரன் கட்டுரைகளும் முகநூலின்
தகவல் பலகைகளில் வர தொடங்கும். கவிஞர் கண்ணதாசன்
கவிதைகள் விருப்பம் தெரிவுத்துஇருந்தால் கவிஞர் வாலியின்
கவிதைகளும் வரத் தொடங்கும்.
 

அமெரிக்க தேர்தல்
 
2016-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் போலியான செய்திகளின் மூலம் செய்த
பிரச்சாரம் முகநூலின் எதிரொலி அறை (Echo Chamber) விளைவாக அதிக
தாக்கத்தை ஏற்படுத்தி தேர்தலில் ஒரு மாறுதலை உண்டாக்கியது என்பது
வல்லுனர்களின் கருத்து.
 

மென்பொருளுக்கும் (software) செயற்கை அறிவாற்றலுக்கும்


(Artificial Intelligence) என்ன வித்தியாசம் ?
 
Img Credit : LinkedIn
 
உதாரணத்துக்கு மைதானத்தில் உடற்பயிற்சி செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
மென்பொருள் பொறியாளரான எனக்கு எந்தவித பிரச்னை இருந்தாலும் அதற்கான
தீர்வு செய்ய ஒரு மென்பொருளை நான் வடிவுவமைப்பேன். உடல் பயிற்சி செய்யலாமா
் ண்ட காரணங்கள்.
என்ற என் முடிவை பாதிக்கும் கீழக
 
1.   மழை பெய்கிறதா ?
 மழை பெய்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.
 
2.  மணி என்ன ?
 இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை : கும்மிருட்டில் உடற்பயிற்சி
செய்யாதே.
 காலை 5 மணி முதல் 7 மணி வரை : உடற்பயிற்சி செய்யலாம்.
 காலை 8 மணி முதல் 9 மணி வரை : வீட்டிலிருந்து அலுவலக வேலை
செய்தால் உடற்பயிற்சி செய்யலாம்
 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை : அலுவலக பணி உடற்பயிற்சி
செய்யலாம்.
 
3.  நான் மகனை பள்ளியில் விட வேண்டுமா?
 காலை 8 மணி முதல் 9 மணி வரை : உடற்பயிற்சி செய்ய முடியாது
 மாலை 4 மணி முதல் 5 மணி வரை : உடற்பயிற்சி செய்ய முடியாது
4.  சீதோஷண நிலை
 22 முதல் 32 டிகிரி செல்சியஸ் : உடற்பயிற்சி செய்யலாம்
 32 முதல் 44 டிகிரி செல்சியஸ் : உடற்பயிற்சி செய்ய முடியாது
 
பாரம்பரிய மென்பொருள் முறைப்படி தீர்வு செய்ய முயன்றால் வரிசை மாற்றம் மற்றும்
சேர்கை காரணங்கள் (Permutation and Combination) எண்ணிக்கைகள் மிக
அதிகமாக இருக்கும்.
 

பள்ளி சென்று
மணி மழை பெய்கிறதா விடும் நேரமா வெயிலின் தாக்கம் ஆமாம்/இல்லை
காலை 5- 22-32 டிகிரி
7 ஆமாம் இல்லை செல்சியஸ் இல்லை
22-32 டிகிரி
இரவு 9-5 இல்லை இல்லை செல்சியஸ் இல்லை
காலை 5- 22-32 டிகிரி
7 இல்லை இல்லை செல்சியஸ் ஆமாம்
….. …. …. …. …

 
நான்கு காரணங்குளுக்கே 20 க்கு மேற்பட்ட வரிசை மாற்றம் சேர்க்கை காரணங்கள்
(Permutation and Combination) 20 க்கு மேல் வருகிறது. இதில் தனிப்பட்ட
காரணங்கள் 100 க்கு மேல் இருந்தால் வரிசை மாற்றம் சேர்க்கை
காரணங்கள்(Permutation and Combination) 1000 க்கு மேல் வரும். இது
பாரம்பரிய மென்பொருள் வடிவமைப்பின் (software developing) மூலம் எளிதில்
தீர்வு செய்ய முடியாது.

 
இது மாதிரியான பிரச்சனைகளுக்கு செயற்கை அறிவாற்றல்தான் (Artificial
Intelligence) சரியான தீர்வாக அமையும். நமது நவீன தொலைபேசியில்
உடற்பயிற்சியை கண்காணிக்க நிறைய செயலிகள் உள்ளன. Run keeper,
Mapmyrun இந்த மாறி செயலிகளை ஒரு வருடம் உபயோகித்து இருந்தால் அதன்
தகவல்களை செயற்கை அறிவு ஆற்றலுக்கு ஒரு குழந்தைக்கு எது சரி எது தவறு
என்று சொல்லி கொடுப்பதுபோல் நாம் எப்போது எல்லாம் உடற்பயிற்சி செய்யலாம்
/செய்யக்கூடாது என்பதை சொல்லி கொடுக்க முடியும்.
 

செயற்கை அறிவாற்லை (Artificial Intelligence) சுருக்கமாக


சொல்ல வேண்டுமானால் கடந்த கால நிகழ்வுகளை வைத்து
எதிர்காலத்தில் நடப்பதை கணிக்கக்கூடிய வல்லமை பெற்றது.
 
மேலே பார்த்த உதாரணம் ஒரு சிறிய நடைமுறைப் பயன்பாடு. செயற்கை அறிவு
ஆற்றல் பல இடங்களில் பயன்படுத்த முடியும்.
 
உதாரணம் – வானிலை அறிக்கை, செயற்கோள் மூலமாக பூமியின் அடியில் உள்ள
கனிம வளத்தினை அறியலாம். மலைப் பகுதியில் உள்ள வளங்களை அறியலாம். ஒரு
புகைப்படத்தினை பயன்படுத்தி தோல் புற்று நோயை அறியலாம்.

 
செயற்கை அறிவாற்றல் என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவி அதை சரியாக
பயன்படுத்தினால் மனித குலத்திற்கு அநேக நன்மைகளை உண்டாக்கலாம். இதன்
மூலம் புதிய வேலை வாய்ப்புகள் பல உருவாகும்.

 
அதே நேரத்தில் பழைய தொழில் நுட்பங்கள் (Technology) மறைவதற்கான
வாய்ப்புகள் உண்டு. சான்றோர்களும், வல்லுனர்களும், அரசு ஆட்சியாளர்களும்
அமர்ந்து விவாதித்து வழிகாட்டுதலை வெளியிட வேண்டும்.

 
இது எனது முதல் செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) பற்றிய வலை
பதிவு (malaikannan.io). நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேலும் எனது
கருத்தினை எழுத எனது மனது தூண்டுகிறது.

You might also like