Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

தொடக்க கல்வியில், மொழியின் முக்கியத்துவத்துடன் குழந்தையின் மொழித்

திறமையும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். பரவலான பலரும்


ஒப்புக்கொள்ளப்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து தெரிவது என்பது மிகவும்
கடினம். குழந்தைகளுக்கு மட்டுமின்றி, நம் ஒவ்வொருக்கும், தொடர்பு கொள்ள மொழி
மிகவும் அவசியம் என்பது கண்கூடு. ஆகையால், எல்லாப் பாடங்களையும் புரிந்து
தெளிவதற்கு மொழி அறிவு அவசியமாகிறது. கணிதம், அறிவியல், அல்லது வேறு
எந்த அறிவுத் துறையினைப் புரிந்து தெளிவதற்கும் மொழியின் முக்கியத்துவம்
உணரப்படும். உண்மையில், மொழியின் துணைகொண்டுந்தான் குழந்தை  சிந்திக்க,
முடிவெடுக்க, செயல்பட முடிகிறது. கல்வியின் அனைத்துத் தன்மைகளையும்
தொடர்ப்பு படுத்திப் பார்க்கிறது. நினைப்பது, முடிவெடுப்பது, செயல்படுவது – ஆகிய
அனைத்தையும் மொழி மூலமாகவும், மொழியின் உதவியாலுமே குழந்தை
செய்கிறது. சமூகத்தின் ஓர் அங்கமாக குழந்தை இருப்பதற்கு, மொழிதான் முதன்மை
இடத்தை வகிக்கிறது. இது குழந்தைக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பொருந்தும்.

மேலே விவரிக்கப்பட்ட கருத்துப்பார்வை மிகவும் அவசியமாகும். உண்மையில்


இதனை முக்கிய விதியாகவே கொள்ள வேண்டும். ஆகையால், ஒருவர்  குழந்தையின்
கல்வியிலும்,  அதன் வளர்ச்சியிலும் மொழியின் சிறப்பினை உணரந்து ஆதரிக்க
வேண்டும். எனினும், இது ஒரு எல்லைக்கு உட்பட்ட கருத்தாகும். மொழி என்பது ஒரு
“கருவி” என்று பார்க்கும் போதுதான்  அது ஒரு எல்லைக்குட்பட்ட்து என்பது
விளங்குகிறது. கணிதத்தைப் புரிவதற்கும் அல்லது முடிவுகளை எடுப்பதற்கும் மொழி
கருவியாகத்தான் செயல்படுகிறது. மொழி  கருவியாகச் செயல்பட்டாலும், அது
அதற்கும் மேலே பல பயன்களைக் கொண்டது.. “பல பயன்கள்” என்று சொல்லும்
பொழுது, அது மொழியையே மையமாக்க் குறிக்கிறது. அந்த மொழிதான் பொதுவாக
குழந்தையின் கல்வி, அதன் அன்றாட வாழ்வு ஆகியவைகளுக்கு ஆதாரமான
ஒன்றாக உள்ளது. .

மனிதர்களாகிய நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்ப்பது மாத்திரமின்றி அந்த


உலகத்தை உணரவும் செய்கிறோம். அத்துடன், பார்த்தனவற்றிற்கும்
உணர்ந்தனவற்றிற்கும்  ஒர் அர்த்தத்தினையும் அளிக்கிறோம். இதனால்தான்,
மழைக்கால கருமேகங்களை நான் பார்க்கும் பொழுது, அது ஏதோ சில உருவங்கள்
சிலவற்றை மட்டும் பார்ப்பதால் என்னிடம் உண்டாகும் தாக்கம் மட்டும்  இல்லை.
அதில் ஒட்டு மொத்த  கடினமானதும், சிக்கலானதுமான தாக்கம் ஏற்படுகிறது. அந்தத்
தாக்கத்தால் கருமேகங்களைப் பார்க்கும்போது, அவைகளை மழையுடனும்,
நடனமாடும் மயில்கள்களுடனும், ஏன், நனையும் என் ஈரமான உடைகளை
அணிவதால் ஏற்படுகின்ற வேதனை ஆகிய ஒருங்கிணைந்த நிலை அது. அதில்
எனக்கு ஏற்படும் அசெளகரியத்தையும் இணத்துத் தொடர்புபடுத்தக் கூடும். இப்படி
நான் தொடர்பு படுத்திப் பார்க்காவிடில், கருமேகம் என்பது  ஒன்றுமில்லாமல், என்னில்
எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், அது  கருத்த உருவம் என்ற உணர்வை மட்டும்
ஏற்படுத்தும் நிலைதான் இருக்கும்.

இந்த “இணைப்பு” தான் உலகத்தில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தத்தைக்


கொடுக்கிறது. இந்த அர்த்த்த்தின் தாக்கம்தான் பொருள்களின் தன்மைகளை மாற்றி
அமைக்கிறது. அதாவது ஒரு “ஜடமான” வஸ்துவை, “பொருள் பொதிந்த” வஸ்துவாக
மாற்றுகிறது. முக்கியமாக நமது நினைவில்  இந்த மாற்றம் பதிகிறது.

இந்த மாதிரியான  அர்த்தமுள்ள நினைப்புகள்,  கருத்துக் கோர்வைகள் மூலம் அந்தப்


பொருட் பொதிவினை உள்வாங்கிக் கொளகிறோம். இந்தப்  கருத்துக்கோர்வைகளை
உருவாக்கவும், சிதைக்கவும், நம் மனத்தில் குறியீடுகள் பலவற்றை
உருவாக்கி, அவற்றிற்கிடையே தொடர்பினை ஏற்படுத்துகிறோம். இந்தக்
குறியீடுகளால் மனத்தளவில் உண்டாகும் செயலான குறியீட்டு மாற்றம்,  கருத்தாக்கச்
செயற்போக்கு எனப்படும்.

மொழியே இந்தக் குறியீட்டு மாற்றத்திற்கு அடிப்படை. அந்த மொழி


உண்மையிலேயே பிரிக்கமுடியாத ஒன்றிணைந்த முழுமையான கூறாகிய
வழிமுறையாகும். அது தான் எந்த மனிதனுக்கும் ஒரு கருத்துப் படிவ அமைப்பை
உருவாக்க  வழிகாட்டுகிறது.

கருத்துக் கோர்வைகளுக்கு “பெயரிடாதபோது எந்தக் கருத்துருவாக்கமும் நிகழாது.”


பெயரிடாமல், இது நடைமுறைச் சாத்தியமாகாது. இந்தப் பெயரிடுதல் என்பது,
மொழியில் சொற்கள் எனப்படுகின்றன. இந்தக் கருத்து நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.
இது நமது புரிதலை மேம்படுத்தும். ஆகையால், மொழியும், புரிதல் திறனும் 
ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது. ஒன்று இல்லாவிட்டால், மற்றதினால் தனித்துச்
செயல்படமுடீயாது.

ஆகையால், மொழியை ஒரு கருவி மட்டுமே என்று கருதுதல் கூடாது. அது புரிதல்
திறனோடு இயற்கையாக இணைந்து பிரிக்க முடியாத அங்கமாகும். மனித மனத்தின்
செயலாற்றலாகவும்  உள்ளுணர்வாகவும்  சக்தியாகவும், ஒருவரின் மனச்
சாட்சியாகவும் மொழி இருக்கிறது. அப்படியென்றால், மொழி மனித மனத்தின் ஒட்டு
மொத்த அறிதல் என்றாகிறது. அறிதல் வளர வளர, மொழியும் வளருகிறது.
அறிதலுக்குத் தடங்கல் ஏற்படும் பொழுது, மொழியின் வளர்ச்சியும் தடைப்படுகிறது.
இந்த முடிவான கருத்து, தொடகக் கல்விக்கு மிக முக்கியமான அம்சமாகும்.

புரிதல் திறன், மொழி ஆகியனவற்றின் வளர்ச்சியில் ஒரு கட்டத்திற்குப் பிறகு,


இரண்டிற்கும் அல்லது ஏதாவது ஒன்றிற்கு, அடித்தளம் பலமாக அமைந்துவிடும்.
அதன் பின்னர், புரிதல் திறன் எவ்வித மொழியின் வளர்ச்சியினையும் சாராமல்,
புரிதல் தொடர்ந்து மேம்படும். அதே போல் மொழியின்றியும் புரிதல் நிகழும். ஆனால்
இந்த – பிரிவு நிலை – தொடக்கக் கல்வி மட்டத்தில் நிச்சயமாக ஏற்பட முடியாது.
இதில் தொடக்க கல்வி மட்ட்த்தில், மொழி வளர்ச்சி – அறிவு வளர்ச்சி ஆகிய
இரண்டும், குழந்தையின் மன வளர்ச்சியில் இணைபிரியாது ஒன்றுக்கொன்று
தொடர்புடைனவாக இருக்கின்றன. மொழியின் குணங்கள் சிலவற்றை இப்பொழுது
பார்ப்போம்.

 பேசப்படும் மொழியின் அடித்தளம் தான் சொல் அல்லது வார்த்தை.  இது ஒலிகளின்


சேர்க்கையாகும். இந்த ஒலிச் சேர்க்கையினை ஒரு கருத்து வடிவத்துடன் தொடர்பு
படுத்தாவிடில், அந்த  ஒலிகள் அர்த்தமற்ற ஒலியாக இருக்குமே அல்லாது, சொல்லாக 
உருவாகாது. குறிப்பிட்ட ஒலிக்  கோர்வையை அதாவது சொல்லை குறிப்பிட்ட
கருத்துடன் தொடர்பு படுத்துவது எந்த விதிகளையோ அல்லது தர்க்கரீதியான
அடிப்படைக் கருத்துக்களையோ வெளிப்படுத்தாது. இந்தத் தொடர்ப்பு தன்னிச்சையான
செயலாகும். இந்தச் தொடர் தன்னிச்சையானதாக இருப்பினும், அந்தத் தொடர்ப்பு
நிரந்தரமானது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட மொழியினைப் பயன்படுத்தும்
வட்டத்திலுள்ள பயனியர்கள் அனைவருக்கும் பொருந்தும். மொழியில் மரம் என்ற
சொல் பல  ஒலிகளின் தொகுப்பாகி, ஒரு குறிப்பிட்ட கருத்து வடிவத்தைக் குறிக்கும்.
இந்தத் தொடர்பு, நிரந்தரமான உறவாக இருக்கிறது. இது ஏதோ, சில மற்ற இணைப்பு
ஒலிகள் சில காலத்திற்குப் பிறகு உருமாறி, வேறு ஒரு கருத்துப் படிவத்துடன்
தொடர்ப்பு கொள்ளத் தொடங்க ஆரம்பிக்கும் என்ற நிலை வராது. உதாரணமாக,
கிரிக்கட் என்ற சொல்லின் ஒலி நாளை மாறுபட்டு, மரம் என்று இன்று வழங்கும்
ஒலிச் சொல்லுடன் தொடர்ப்பு கொண்டு பொருள் மாறி வழக்கத்தில் வராது.
இருப்பினும், மரம் என்ற சொல்லுக்குண்டான உருவத் தொடர்ப்பு, கிரிக்கட் என்னும்
சொல்லின் கருத்து வடிவின் தொடர்பைப் போல் தன்னிச்சையாக ஏற்பட்டதென்று
அறிய வேண்டும்.

பொருள் பொதிந்த மொழியை உருவாக்கச் சொற்கள்  விதிகளின் சட்ட திட்டங்களுக்கு


உட்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சொல்லின்  அமைப்பு ஒரு
குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி பொருத்தமான பொருளை உருவாக்குவதாகும். இந்த
விதிகளும் தன்னிச்சையாக ஏற்படுத்தப் பட்டதாகும். இருப்பினும், அந்த விதிகள்
எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிரந்தரத் தன்மை கொண்டவை. ஆகையால்,
ஒலிக் குறியீட்டின் அடிப்படையில் எழுந்த விதிகளால் உருவான மொழியின்
மூலமாகத் தான் மனிதர்கள் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். இந்தத் விதித்திட்டம்
மிகவும் சிறப்பான முறையில் மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப் பட்டதாகும். எம்
மொழியிலும், ஒலிக் கோர்வைகளின் எண்ணிக்கை குறைவாகும். இருப்பினும்,
அர்த்தங்களை உருவாக்கும் மொழியின் விதிமுறைகளின் திறனோ எல்லையற்றது.

மொழியைத் திறமையாகக் கையாண்டு, பயன்படுத்துவது தான் மொழிக்கற்றல்


என்பதாகும். பொருளை அறிதல், பொருளை உணர்தல், பொருளை வெளிப்படுத்துதல்
ஆகிய அனைத்தும் மொழிக்கற்றலின் பால் படும்.

பேச்சு மொழி என்பது ஒலிக் குறியீடுகளாகும். அதைப் போல், எழுத்து மொழி என்பது
பார்க்கும் அளவில் உள்ள உருவக் குறியீடுகள் அல்லது வரிவடிவங்களாகும். இங்கு
வரிவடிவங்கள் என்றால், எழுத்துக்களைக் குறிக்கும். அகரநிரலில் உள்ள எழுத்துக்கள்
அல்லது கூட்டு எழுத்துக்கள் ஒலிகளைக் குறிக்கின்றன. எழுத்துக்களின்
வரிவடிவங்களை   ஒலிகளுடன் தொடர்ப்பு கொள்ளும் முறையும் தன்னிச்சையான -
ஆனால், உலகெங்கும் ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்றாகும். எழுத்து மொழியை நாம்
எப்பொழுதும் மனத்திற்குள் பேசும் மொழியாக மொழிபெயர்ப்பு செய்து, பிறகு அதன்
மூலம் அர்த்தத்தை அறிந்து கொள்கிறோம். ஆகையால், ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது,
பேச்சு மொழியைக் காட்டிலும், எழுத்து மொழியின் அர்த்த்த்தை அறிய பல வழிகள்
உண்டு.

பேச்சு மொழி உரையாடலில், பேசாமல் முக அறிகுறிகளாலும், சைகைகளாலும்


கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமும், வழிகளும் உண்டு. அத்துடன்
உடனுக்குடன், விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் இந்த
வசதி, எழுதும் மொழியில் பொதுவாக் கிடைப்பதில்லை. இதன் காரணமாகச் எழுத்து
வடிவத்தில் சில கூடுதல் குறியீடுகளைப் பயன்படுத்திக் கடுமையான விதிகளைக்
கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

 இறுதியாக, மொழி என்பது மனிதனாவதற்கு உதவும் மையமான இடத்தை


வகிக்கிறது. இந்தக் கருத்தை இங்கே விளக்கமாக விவரிக்காததற்கு இடப்
பற்றாக்குறை ஒரளவுக்கு ஒரு காரணம் என்றாலும், மொழிக் கல்வியை
வகுப்பறையில் கற்பிக்க உடனே பயன்படும் சில உபயோகமானவற்றை
வலுயுறுத்துவதுவது கட்டுரையின் நோக்கம் என்பதும் இன்னொரு காரணம்,

You might also like