Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

கற்றல் தரம் 4.3.

4 - நான்காம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;


எழுதுவர்.

நான்காம் ஆண்டுக்கான திருக்குறள் –

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை


இகழ்வாரை நோவது எவன் (237)

அதன் பொருளை – விளக்கம், தெரிபொருள், புதைப்பொருள்

அறிந்து - தெளிவுர விளங்கி, புரிந்து

கூறுவர் - வாய்மொழியாக கூறுவர்

எழுதுவர் - எழுத்துக்களின் துணைக்கொண்டும் எழுதுவர்

பாட நோக்கம் :

மாணவர்கள் திருக்குறளின் விளக்கத்தை அறிந்து கூறி விலக்கத்திற்கு ஏற்றவாரு சூழல் அமைத்து


கூறுவர்.

மாணவர்கள் திருக்குறளின் விளக்கத்தை அறிந்து சரியான விளக்கத்துடன் எழுதி களரி நடை


செய்வர்.

1. ஆசிரியர் மாணவர்களுக்குத் திருக்குறளின் விளக்கத்தைச் சார்ந்த கதையைக் கூறுதல்.


மாணவர்கள் கேட்குதல். கதையின் இறுதியில் ஆசிரியர் மாணவர்களிடம் கதையின் நீதியை
வினவுதல். மாணவர்கள் பதிலளித்தல்.
2. மாணவர்களுக்கு கதையின் மூலம் வரும் நீதியைக் கூறி திருக்குறளைக் கூறுதல். பிறகு
ஆசிரியர் அக்குறளின் விளக்கத்தைக் கூறுதல்.
3. ஆசிரியர் மாணவர்களைக் குழுவாக அமர வைத்து திருக்குறளையும் அதன் பொருளையும்
கொண்டு சுழல் அமைத்து கதை உருவாக்க பணித்தல். மாணவர்கள் கதையைக் குழுவாக
உருவாக்குதல். குழுவிலிருந்து ஒருவர் வகுப்பின் முன் கதை கூறு ஆசிரியர் பணித்தல்.
4. ஆசிரியர் மாணவர்களைக் குழுவில் அமர பணித்தல். ஒவ்வொரு குழுவிற்கும் ஆசிரியர் ஒரு
தாளைக் கொடுத்தல். I-think வரைப்படத்தைக்கொண்டு திருக்குறளை எழுதியவர் யார்,
எத்தனை திருக்குறளை இயற்றியுள்ளார், இன்று பயின்ற திருக்குறள் என்ன,
அத்திருக்குறளின் விளக்கம், எழுதிய கதை ஆகியவற்றை செய்து களரி நடையில் படைக்க
பணித்தல்.
5. மாணவர்களுக்கு கஹூட் செயலியில் மதிப்பபீட்டைச் செய்தல்.

மதிப்பீட்டில் கஹூட் செயலியில் கேள்விகள் சூழலாக அமைந்திருக்கும். மாணவர்கள் ஒவ்வொரு


சூழலுக்கும் திருக்குறள் பொருந்தி வருகின்றதா என்பதனை சரி தவறு மூலம் பதிலைத் தெரிவு
செய்ய வேண்டும்.

முதல் : மாணவர்களை தவறு என்று கூறிய பதில்களுக்கும் காரணம் தெரிவித்தல்

இடை : மாணவர்கள் இணையராக கலந்துரையாடி பதிலளித்தல்

கடை : ஆசிரியர் சூழலை அம்மாணவர்களுக்கு மெம்மேலும் விளக்குதல்.

You might also like