Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 16

ஸ்கந்த புராணம் - பகுதி 43

போர்க்களத்தில் சூரபத்மன்
======================

வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவன்


இறங்கிய உடனேயே அசுரர்கள் ஆரவாரம் செய்தனர். ஒட்டுமொத்த
அசுர வம்சத்துக்கே தலைவனான சூரபத்மன் களத்தில் இறங்கியதால்
ஆரவாரத்துடன் முருகனின் படையினர் மீ து அசுரர்கள் பாய்ந்தனர்.

சூரன் ஒரே நேரத்தில் லட்சம் பாணங்களை எய்யும் சக்தி படைத்தவன்.


தன் ஒரு வில்லில் இருந்து லட்சம் பாணங்களை எய்தான். ரத்னகாளி
என்ற சக்தியின் வியர்வையிலிருந்து அந்த பாணங்கள்
செய்யப்பட்டவை. பாய்ந்து சென்ற அந்த பாணங்கள் முருகனின்
படையைச் சேர்ந்த லட்சம் வரர்களை
ீ தாக்கின. அவர்கள்
மயக்கமடைந்து விழுந்தார்கள். இதற்கெல்லாம் கலங்காத நவவரர்களில்

ஒருவரான வரமார்த்தாண்டன்,
ீ சூரபத்மன் மீ து ஏராளமான பாணங்களை
அடித்தான். சூரபத்மன் அவற்றை ஒற்றைக்கையால் நொறுக்கி
தள்ளிவிட்டான். மற்றொரு நவவரனான
ீ வரராட்சஷன்,
ீ பத்மாசுரன் மீ து
அம்புகளை எய்தான். அவனுடைய காலைப்பிடித்து தூக்கிய சூரன்,
விண்ணில் தூக்கி எறிந்தான். அவன் மேலே சென்று வானத்தின் சுவர்
வரையில் சென்று முட்டி அதே வேகத்தில் கீ ழே விழுந்து
மயக்கமடைந்தான். வரகேந்திரன்,
ீ வரதீ
ீ ரன், வரமகேஸ்வரன்,
ீ வரகேசரி,

வரபுரூஹுதன்,
ீ வராந்தகன்
ீ ஆகிய அனைவருமே பத்மாசுரனால்
தோற்கடிக்கப்பட்டனர்.

இந்நேரத்தில் வரபாகு
ீ கலங்காத உள்ளத்துடன் சூரபத்மன் முன்னால்
வந்து நின்றான். வரபாகுவைக்
ீ கண்டதும் பத்மாசுரன் அகோரமாக
சிரித்தான். "அடேய்! நீயா?! அன்று நீ தானே எனது அவைக்கு தூதனாக
வந்தவன்?! அன்றே உன்னைக் கொன்றிருப்பேன். நீயோ மாய வடிவில்
தப்பி விட்டாய். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. அன்று அந்த
சிறுவனுக்கு தூதனாக வந்தாய். இப்போது எனக்கு தூதனாக மாறிவிடு!
அந்த சிறுவனை என்னிடம் சரணடையச் சொல். என் தகுதிக்கு நீ
என்னோடு போட்டியிட லாயக்கில்லாதவன். அப்படியே ஓடிப்போய்
விடடா!" என்றான்.

வரபாகு
ீ எக்காளமாகச் சிரித்தான். "அடேய் அசுரா! நான் நினைத்தால்
இக்கணமே உன் தலையைக் கொய்து விடுவேன். அன்று முருகன்
என்னைத் தூதனாக அனுப்பினார். இன்று உன்னோடு போர்புரிய
அனுப்பியுள்ளார். உம் எடு வில்லை ! முடிந்தால் தோற்கடித்துப் பார்" என
சொல்லி விட்டு வில்லை எடுத்தான். சூரன் வரபாகுவை
ீ மிகச் சாதாரண
கிள்ளுக்கீ ரையாக நினைத்து அலட்சியமாக நின்றான். வரபாகு
ீ பல
அம்புகளை அவன் மீ து எய்தான். அவை சூரனின் இரும்பு உடல்மீ து
பட்டு வளைந்து நொறுங்கியதே தவிர சிறு சிராய்ப்புக் காயத்தைக் கூட
ஏற்படுத்தவில்லை. எனவே யமாஸ்திரம், சூரியாஸ்திரம்,
நாராயணாஸ்திரம் என சக்தி மிக்க அஸ்திரங்களை எய்து பார்த்தான்.
அவற்றை சூரன் தன் கையாலேயே தடுத்து நொறுக்கி விட்டான்.

பத்மாசுரனின் இந்த அபரிமித சக்தியை எண்ணி வரபாகு



வியப்படைந்தான். சிவனின் அருள் பெற்றவனை அழிப்பது என்றால்
சாதாரண காரியமா? அது மட்டுமல்ல ! அவனை அழிக்கும் சக்தியாகவும்
சிவனே முருகனாக அவதாரமெடுத்துள்ள போது, வேறு யாரால்
அவனைச் சாய்க்க முடியும். வரபாகு
ீ மனம் தளரவில்லை.
தன்னிடமிருந்த ஒரே அஸ்திரமான பாசுபத அஸ்திரத்தை எய்தான்.
பாசுபதாஸ்திரம் பல பாம்புகளை உள்ளடக்கியது. அது விஷத்தைக்
கக்கிக் கொண்டு பாய்ந்தது. சூரனும் அதே போன்ற அஸ்திரத்தை
எய்யவே ஒன்றையொன்று கடித்துக் கொண்ட பாம்புகள் மாய்ந்தன.
அந்த அஸ்திரங்கள் அவரவரிடமே திரும்பி வந்தன. இதைப்
பயன்படுத்திக் கொண்ட சூரபத்மன் பல பாணங்களை அனுப்பி
வரபாகுவின்
ீ வில்லை ஒடித்து விட்டான்.

வரபாகு
ீ மீ துபட்ட அம்புகள் அவனை மயக்கமடையச் செய்தன. வரபாகு

களத்தில் விழுந்த பிறகு பூதகணங்கள் அசுரர்களுடன் கடுமையாக
மோதினர். எதற்கும் நேரம் வர வேண்டும். பூவுலகில் பிறந்தவன்
மனிதனாயினும் சரி, அசுரனாயினும் சரி அவனது மரணத்துக்கு எந்த
நேரம் குறிக்கப்பட்டிருக்கிறதோ அதுவரையில் அவனை யாராலும்
வெல்ல இயலாது. இங்கே சிவனின் அம்சமான முருகன். பத்மாசுரனின்
முன் எமனாக வந்து நின்றான்.

தொடரும்...

ஓம் சரவண பவாய நமஹ!

#ஸ்ரீ_அருணகிரிநாதர்_அருளிய
#திருச்செங்கோடு_
திருப்புகழ்

[ #வேண்டுகோள்_
ஏதும்_இல்லாத் #திருப்புகழ்_இது. ]

#தாமா தாமா லாபா லோகா


தாரா தாரத் தரண ீசா

#தானா சாரோ பாவா பாவோ


நாசா பாசத் தபராத

#யாமா யாமா தேசா ரூடா


யாரா யாபத் தெனதாவி

#யாமா காவாய் தீயே ன ீர்வா


யாதே யீமத் துகலாமோ?

#காமா காமா தீனா நீணா


காவாய் காளக் கிரியாய்கங்

#காளா லீலா பாலா நீபா


காமா மோதக் கனமானின்

#தேமார் தேமா காமீ பாகீ


தேசா தேசத் தவரோதுஞ்
#சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே!

#இத்_திருப்புகழின்_பொருள் :

🌸தாமா தாம ஆலாபா லோக ஆதாரா = மாலையை உடையவனே!


இனிமையாக உரையாடுபவனே! உலகுக்கு ஆதாரமாக உள்ளவனே!

🌸தார(ம்) தரணி ஈசா = நீர், மண் முதலிய ஐந்து பூதங்களுக்கும்


ஈசனே!

🌸தான ஆசாரோ பாவா பாவோ நாசா = கொடை அளிக்கும்


ஒழுக்கம் உள்ளவர்களால் தியானிக்கப் படுபவனே! பாவ நாசனே!

🌸பாசத்து அபராத யாமா யாமா தேசார் ஊடு = பாசங்களில்


பற்று வைத்ததின் அபராதமாக தெற்கில் உள்ள யமபுரியைச்
சேர்ந்தவர்களிடையே,

🌺ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா காவாய் = ஆராய்ச்சி


இல்லாமல் ஆபத்தான நிலையை என்னுடைய உயிர் அடைதல்
ஆகுமோ? என்னைக் காத்து அருள்வாய்!

🌺தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ = கெட்டவனாகிய


நான் நற் குணம் வாய்க்காமல் சுடுகாட்டைத் தீயைத் தாவிச் சேர்தல்
நன்றோ?

🌺காமா காம ஆதீனா நீள் நாகா வாய் காள கிரியாய் =


அன்பனே! அடியார்கள் விரும்புவதை அளிப்பவனே! நீண்ட நாக கிரி
என்னும் திருச்செங்கோட்டில் வற்றிருப்பவனே!

🌺கங்காளா லீலா பாலா நீபா = எலும்பு மாலையை விளையாட்டாக


அணியும் சிவனின் குழந்தையே! கடப்ப மாலை அணிந்தவனே!

🌺காம ஆமோதக் கன மானின் = மிகுந்த விருப்பமுள்ள, பெருமை


பொருந்திய மான் போன்ற வள்ளியின்
🌺தேம் ஆர் தே மா காமீ பாகீ = தேன் கலந்த இனிய தினை மாவில்
விருப்பம் உள்ளவனே! தகுதி வாய்ந்தவனே!

🌺தேசா தேசத்தவர் ஓதும் சேயே = ஒளி உள்ளவனே! உலகத்தோர்


போற்றும் குழந்தையே!

🌺வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே =


தலைவனே! பொலிவு உடையவனே! அரசனே! தேவனே!
தேவர்களுடைய பெருமாளே!

ஓம் சங் வங் மங் சரவணா பவாய நம ஓம்


*#முருகனின்_கையில்_இருக்கும்

#வேலின்_மகத்துவம்*

#வேலிருக்க_வினையுமில்லை!!!

#மயிலிருக்க_பயமுமில்லை !!!

#வேல்_வெற்றிக்கும்_அறிவுக்கும்

#அடையாளமாகத்_திகழ்கிறது.

#வேல்_நடுவில்_அகன்றும்,

#உருவில்_நீண்டும்_முனையில்

#கூர்மையாகவும்_இருக்கிறது.

#இதுபோல்_இகபர_வாழ்வில்

#மனிதன்_சிறந்தோங்க

#அகன்ற_ஆழ்ந்த_கூர்மையான

#அறிவுடையவனாக
#இருக்கவேண்டும்.

முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி


வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து
அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்ற கோழி
நாத வடிவானது.

கோழிக் கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய


மயிலின்மிசை வற்றிருக்கின்றான்
ீ முருகன்.மயில் மனத்தின் சின்னம்.

பரிசுத்தமான, அழகான உள்ளம் தான். இறைவனின் உண்மையான


கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீ து
மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான்
என்பதைக் காட்டுகிறது.

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்பற்றி


கூறப்பட்டுள்ளது வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல்
கொண்டன்று பொருதவரன்,துங்கவடிவேலன்,
ீ ப்ரசண்ட வடிவேலன்,
வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என
பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார்.

வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும்


புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக்கூடிய
சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச்
சக்திகளை விளக்கக் கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.

*#வேலின்_பெருமை*

வரீ வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீ ட்ட


தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை

– இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா


!
#வெற்றி_வேல்_முருகனுக்கு

#ஓம்சரவணபவ....
#ஸ்ரீவியாசர் ஸ்கந்த புராணத்தை ஆரம்பிக்கும் போதே, #கந்தனின்
#உன்னதமான_16_பெயர்களைக் கூறி,
அதற்கு பலஸ்ருதியும் கூறுகிறார்.

"ஸுப்ரமண்யம் ப்ரணமாம்யஹம் ஸர்வக்ஞம் ஸர்வகம் ஸதா


அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம் நாம ஷோடஸ ப்ரதமோ ஞான
சக்த்யாத்மா த்விதியோ ஸ்கந்த ஏவச அக்னிபூஸ்ச த்ருதீயஸ்யாத்
பாஹுலேய: சதுர்த்தக: காங்கேய: பஞ்சமோ வித்யாத் ஷஷ்ட:
சரவணோத்பவ: ஸப்தம: கார்த்திகேய: ஸ்யாத் குமாரஸ்யாத் அத
அஷ்டக: நவம: ஷண்முகஸ்சைவ தஸம: குக்குடத்வஜ: ஏகாதச: சக்திதர:
குஹோ த்வாதச ஏவச த்ரயோதஸோ ப்ரம்மசாரி ஷாண்மாதுர: சதுர்தச:
க்ரௌஞ்சபித் பஞ்சதசக: ஷோடஸ: சிகிவாஹன:'

முருகனின் 16 நாமங்களைக் கூறுவதற்கு முன்பும் பின்பும் பலஸ்ருதி


கூறுகிறார். கோரிய பொருட்களை அடைவதற்காக, எல்லாம்
அறிந்தவனும் எங்கும் உள்ளவனுமான சுப்ரமண்யனை நமஸ்கரித்து
முருகனின் 16 நாமங்களைக் கூறுகிறேன்.

1. #ஞானசக்த்யாத்மா- ஞானம், சக்தி ஆகியவற்றின் உருவாக


இருப்பவன்.

2. #ஸ்கந்தன்- சத்ருக்களை அழிப்பவன்; (ஆறு குழந்தைகளையும் பார்வதி


அணைக்க ஒன்றானவன்); ஆதாரமாக- பற்றுக்கோடாக இருப்பவன்;
சிவஜோதியாக வெளிப்பட்டவன்.

3. #அக்னி_பூ- அக்னியில் உண்டானவன்; அக்னியால்


ஏந்தப்பட்டவன்;அக்னி ஜோதியாக எழுந்தவன்.

4. #பாஹுலேயன்- வாயு, அக்னியால் ஏந்தப்பட்டவன்.

5. #காங்கேயன்- கங்கை நதியில் உண்டானவன்.


6. #சரவணோத்பவன்- நாணற்காட்டில் பிறந்தவன். (அம்பிகையின்
மறுவுருவம் சரவண மடுவாம்- அதனில் தோன்றியவன்).

7. #கார்த்திகேயன்- கிருத்திகை நட்சத்திரத்தின் புதல்வன்.

8. #குமாரன்- குழந்தையாக இருப்பவன்; (ஐந்து வயதுக்கு உட்பட்டவன்)


இளைஞன்; யுத்தத்திற்கு அதிபதி; நிந்திப்பவரை அழிப்பவன்;
மன்மதனைப் போல் அழகானவன்; லக்ஷ்மி கடாக்ஷம் அளிப்பவன்;
அஞ்ஞானம் அழித்து ஞானம் ஈபவன்.

9. #ஷண்முகன்- ஆறு முகம் உடைய வன்; கணேச, சிவ, சக்தி, ஸ்கந்த,


விஷ்ணு, சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய
வடிவினன். (அருணகிரியின் திருப்புகழ் பாடல் களைப் படித்தால் இது
உண்மையென்று விளங்கும்).

10. #குக்குடத்வஜன்- கோழியைக் கொடி யாகக் கொண்டவன்;


சூரஸம்ஹாரத்திற்கு அக்னியே கோழிக் கொடியானான். சூர ஸம்ஹாரத்
திற்கு பிறகு ஒரு பாதி கோழிக் கொடியானது.

11. #சக்திதரன்- வேலை உடையவன்; சூரஸம்ஹாரத்திற்கு பராசக்தி


வேலாக மாறிட, அதனை ஏந்தியவன். (11 ருத்ரர்களே முருகனுக்கு
ஆயுதமாயினர்).

12. #குஹன்- பக்தர்களின் இதயக் குகையில் வசிப்பவன்; முருகனுக்கே


உகந்த ரகஸ்ய திருநாமம். இந்த குஹப்ரம்மத்தை லய குஹன், யோக
குஹன், அதிகார குஹன் என்பர். (லய குஹன்- உயிரை ஒழிவில்
ஒடுக்கி "ஒழிவில் ஒடுக்கம்' என்ற பதவி தருபவன். யோக குஹன்-
ஒடுங்கிய உயிரை விரியச் செய்து யோக சக்தியை அளிப்பவன்.
அதிகார குஹன்- பஞ்சக்ருத்யங்கள் நடத்தி, அதிகாரம் அளிப்பவன்.)

13. #ப்ரம்மசாரி- வேதஸ்வரூபன்; பரப்ரம்ம ஸ்வரூபன்; ப்ரம்மத்திலேயே


லயித்திருப்பவன்.
14. #ஷாண்மாதுரன்- ஆறு கிருத்திகா நட்சத்திர தேவிகளைத் தாயாக
உடையவன்.

15. #க்ரௌஞ்சபித்- க்ரௌஞ்ச மலையை வேல்கொண்டு பிளந்தவன்;


அஞ்ஞானம் என்கிற மலையை- இருளை ஞானம் என்கிற வாளால்
தகர்ப்பவன்.

16. #சிகிவாஹனன்- மயிலை வாகனமாக உடையவன், சூரபத்ம


சம்ஹாரத்திற்கு முன்பு இந்திரனே மயில் வாகனமானான். சூரசம்ஹாரம்
முடிந்ததும் மாமரப் பாதி சூரனே மயில் வாகனமானான்.

மேலும் இந்த 16 நாமங்களை உச்சரிப்பதால் வரும் பலன்களை வியாசர்


கூறுகிறார்.

"ஏதத் ஷோடஸ நாமானி ஜபேத் ஸம்யக் ஸதாதரம் விவாஹே


துர்கமே மார்கே துர்ஜயே சததைவ ச கவித்வே ச மஹாஸாஸ்த்ரே
விக்ஞானார்த்தி பலம் லபேத் கன்யார்த்தி லபதே கன்யாம் ஜயார்த்தி
லபதே ஜயம் புத்ரார்த்தி புத்ரலாபம் ச தனார்த்தி லபதே தனம் ஆயு:
ஆரோக்ய வஸ்யம் ச தன தான்ய ஸுகாவஹம்'

அன்புடன் எப்போதும் இந்த 16 நாமங்களை ஜெபித்தால், திருமணத்திலும்,


செல்ல முடியாத வழியில் செல்லும்போதும், வெல்ல முடியாத
கடினமான காரியத்திலும், கவிஞன் ஆவதிலும், மகத்தான உயர்ந்த
சாஸ்திரங்களிலும் வேண்டிய பலனை அடையலாம். கன்னிகை
வேண்டுபவன் கன்னிகையையும்; வெற்றியை வேண்டுபவன்
வெற்றியையும்; பிள்ளைப் பேறு வேண்டுபவன் புத்திரர்களையும்;
பொருள், தனம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், யாவரையும் வசீகரிக்கும்
தன்மை, பொருள், தான்யம், சுகம், யாவும் பெற்று இன்புறுவான்..

பிரம்ம- நாரத சம்வாதமாக சுப்ரமண்ய ஸஹஸ்ர (1,000) நாமங்களுக்கு


பலஸ்ருதி யாது கூறப்படுகிறது?

"இதிதாம்னாம் ஸஹஸ்ராணி ஷண்முகஸ்ய ச நாரத ய: படேத்


ஸ்ருணுயாத் வாபி பக்தி யுக்தேன சேதஸா ஸஸத்யோ முச்யதே
பாபை: மனோ வாக்காய ஸம்பவை: ஆயுர் வ்ருத்திகாம் பும்ஸாம்
ஸ்தைர்ய வர்ய
ீ விவர்தனம் வாக்யேன ஏகேன வக்ஷ்யாமி
வாஞ்சிதார்த்தம் ப்ரயச்சதி தஸ்மாத் ஸர்வ ஆத்மனா ப்ரம்மன்
நியமேன ஜபத் ஸுதி:'

அன்புடன் இந்த 1,000 பேர்களைப் படித் தாலோ கேட்டாலோ மனம்,


வாக்கு இவற்றால் உண்டான பாவங்கள் அழியும். வாழ்நாள்
அதிகரிக்கும். உடல் பலம் அதிகரிக்கும். ஒரு நாமம் சொன்னாலும்
கேட்ட பொருள் அடைய லாம். ஆக, யாவரும் நியமத்துடன் இதனை
ஜெபம் செய்ய வேண்டும்.

16 நாமங்கள் சொல்வதன் பலன், 1,000 நாமங்கள் சொல்வதைவிட


அதிகமாக உள்ளதே! ஆக 16 நாமங்களே மிக
உன்னதம் போலும்!

முருகனின் ஆயுதங்கள்" என்பது முருகப் பெருமானின் படைக்


கலங்கள் என்று பொருளில் விளங்குவதாகும். சூரன் முதலிய
அசுரர்களை வென்று வாகை சூட, கந்தப் பெருமான் கொண்ட பல்வேறு
போர்க் கோலங்களில் அவரது கரங்களில் கொண்ட படைக் கலங்களே
அயுதங்களாக அமைந்து உள்ளன. அப்பெருமானது கரங்களில் திகழும்
அனைத்துமே ஆயுதங்கள் அல்ல. உதாரணமாக ஜபமாலை, கமண்டலம்,
கரும்பு, வில், மலரம்பு, தாமரை, நீலோத்பலம், பூரணகும்பம், சுருவம்
முதலானவற்றை வெவ்வேறு வடிவங்களில் காரணகாரியம் கருதி
அவரது கரங்களில் ஏந்தியுள்ளார். பன்னிரு கரமுடைய பெருமான்
ஆதலால் மற்ற எந்தக் கடவுளருக்கும் இல்லாத வகையில் அதிகமான
எண்ணிக்கையில் ஆயுதங்களை உடையவர் இவரே.

முருகப் பெருமானது பல்வேறு வடிவங்களைப் பற்றி விவரிக்கும்


குமாரதந்திரம், ஸ்ரீதத்வநிதி, தியான ரத்னாவளி முதலான சிற்ப
நூல்களில் அவரது ஆயுதங்களைப் பற்றிய விவரங்களையும் அறிய
முடிகிறது. தணிகைப் புராணத்தில் முருகனது வடிவங்களைப் பற்றியும்,
அகத்தியர் அருள்பெறு படலத்தில் ஆயுதங்களைப் பற்றியும் விவரம்
அறிய முடிகிறது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான
நூல்களில் முருகனது படைக் கலங்களைப் பற்றிய விவரங்கள் காணக்
கிடைக்கின்றன.
வேலாயுதம்:

முருகப் பெருமானிடம் அமைந்துள்ள வேலாயுதமே ஞானசக்தியாகும்.


வெல்லும் தன்மை உடையது, வேல். எல்லாவற்றையும் வெல்வது
அறிவாற்றல்.
அறிவானது ஆழமும், அகலமும், கூர்மையும் உடையது.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே"

... என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசகர். வேலின்


வடிவமும்
இத்தகையதே. முருகனின் ஞானவேலுக்கு 'சக்தி' என்ற பெயரும்
உண்டு.

"சக்திதான் வடிவேதென்னில் தடையிலா ஞானமாகும் என்பது


சிவஞான சித்தியார்வாக்கு".
ஞானமே அஞ்ஞானத்தை வெல்ல வல்லது. ஆதலின் ஆணவம், கன்மம்,
மாயை எனும் மலங்களாகிய சூரபதுமன்,
சிங்கமுகன், தாருகன் என்னும் அசுரர்களை அழித்தொழித்து
"ஞானமயம்" ஆகிய வேலே யாவருக்கும் நலம் புரிந்தது. வேல்
வஞ்சர்க்கு வஞ்சனை செய்யும்; அடியவர்க்கு உதவும்; அது ஐந்தொழில்
செய்யும் என்பதையெல்லாம் திருப்புகழில் காட்டுகிறார்
அருணகிரியார். வேலாயுதத்தை "உடம்பிடித் தெய்வம்" என்று
கந்தபுராணம் போற்றும். சக்தி வேலானது ஊறு கூரிய
பகுதிகளையுடையதாகவும், தகட்டு வடிவிலும் அமைந்ததாகும் என்பர்.
இதனை நடுவில் பிடித்து ஏறிவது வழக்கம்.
கோழிக் கொடி

முருகனுக்குக் கொடியாக விளங்குவது கோழி. கோழிக்கு சேவல்


(குக்குடம்)
என்றும் பெயர். சேவலாகிய கோழி ஒளியை விரும்புவது. எனவே அது
அறியாமை
என்னும் இருளைப் போக்கி மெய்யறிவாகிய ஒளியைப் பரப்பும்
முருகனின் கொடியாக
விளங்குவது பொருத்தமாகும்.

வைகறையில் கோழி கூவுதல் ஓங்கார மந்திரத்தை ஒளிவடிவில்


உலகுக்கு
உணர்த்துவது ஆகும். எனவே, கோழியை நாத தத்துவம் என்பர். நாதம்
இல்லையேல்
நாநிலமே இல்லை. சேவல் நம் உயிர்க்குக் காவல். சிவஞான
வடிவாகவே சேவல்
விளங்குகின்றது.

முருகன் கோழிக் கொடியேந்தி நம்மை எல்லாம் சிவஞானப்


பேரொளியில் துய்க்கச்
செய்து அருளுகின்றார்.

திருச்செங்கோட்டில் முருகப் பெருமான் இடது கரத்தில் சேவலைப்


பிடித்துள்ள அரிய
அழகுக் கோலம் அருணகிரியார் மனத்தில் என்றும் நீங்காமல்
அக்காட்சி வேண்டியே,

"சென்றே இடங்கள் கந்தா எனும் போது செஞ்சேவல் கொண்டு


வரவேணும்"

... என்று செங்கோட்டு வேலவனை வேண்டுவார்.


அங்குசம்.

இது யானையை அடக்கப் பயன்படுவது. இரும்பாற் செய்யப்பெற்ற


வளைந்த
மூக்கும், குத்தி அடக்கக் கூடிய ஒரு கூரிய நேரான பகுதியையும்
உடையது. நீளமாக
கழிகளில் செருகி இருப்பார்கள். திருமுருகாற்றுப்படையில்
முருகப்பிரானது கரங்களில்
ஒன்றில் "அங்குசம் கடாவ ஒருகை" என்று நக்கீ ரர் குறிப்பிடுவார்.

பாசம்.

பாசம் என்பது பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப்


பயன்படும்.
ஒரு கயிறு அல்லது இரண்டு மூன்று கயிறுகள் சேர்ந்து
அமைந்ததாகும். எளிதில்
அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும்.
வில்:

வள்ளிநாயகியை அடைய முருகன் எடுத்த வேடன் கோலத்தில்


வில்லும் அம்பும்
உண்டு. மூங்கில், சிலை என்னும் மரம் முதலான வளையக்கூடிய நார்
மரத்தால்
செய்யப்பெறுவது வில். இந்த வில்லானது இரு தலையிலும் தோல்
அல்லது
நார்க்கயிற்றால் கட்டப்பட்ட நாண் இருக்கும். வில்லை வளைத்து
நாணை இறுகக்கட்டி
அதன் நடுவில் அம்பை வைத்து விடுவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு
வில்லின்
வளையும் நாணின் உறுதியும் இழுத்துவிடுபவன் பலமும்
இருக்கின்றதோ,
அவ்வளவுக்கவ்வளவு அம்பின் வேகமும், அது தைக்கும் வன்மையும்
அதிகரிக்கும்.
நுனியில் விஷம் தொய்த்து வைப்பதும் உண்டு. அம்பு நுனி பிறைமதி
போன்ற
அமைப்பிலும் இருக்கும். இதற்குப் பிறையம்பு என்று பெயர்.
அம்பு

வில்லை வளைத்து எய்யப் பயன்படக் கூடியது அம்பு. நுனி கூரிய முள்


போன்றது.
நுனியை ஒரு கழியில் செருகியிருப்பார்கள். நுனி இரும்பால் ஆகியது.
அதன் வால்
பாகத்தில் கழுகின் இறகுகளையும் மற்ற பறவை இறகுகளையும்
கட்டியிருப்பார்கள்.
பெரும்பாலும் கழுகு இறகே இதற்குப் பயன்படும். இறகு கட்டுவதால்
காற்றை
ஊடுருவி விரைந்து செல்லும்.

கத்தி

பகைவரை அடிக்கவும் குத்தவும் பயன்படும் இந்த ஆயுதம்


கைப்பிடியுடன்
இருக்கும்.

கேடயம்

கத்தியின் வெட்டையும், குத்தையும் தடுப்பதற்காகப் பயன்படுத்துவது


பலகையாலும், வலுவுள்ள காட்டெருமை, கடமா நீர்யானை, காண்டா
மிருகம்
இவற்றின் தோலாலும் தயாரிப்பார்கள். பல வடிவங்களில் சதுரம், நீளச்
சதுரம்,
வட்டம், முக்கோணம் என்ற அமைப்புகளில் காணப்படுவது.

வாள்

இதற்கு கட்டுவாங்கம் என்றும் பெயர். இது நீளமான கத்தியாகும்.


போரில்
பகைவர்களை வெட்டப் பயன்படுவது. இதில் ஒரு முனையுடையதும்
இரு
முனையுடையதும் உண்டு. குத்துக் கத்தியாகக் கூரிய நுனியை
உடையதாக
இருக்கும். பழங்கால மன்னர்கள் இடுப்பில் செருகியிருப்பதை
வழக்கமாகக்
கொண்டிருப்பர்கள்.
கோடாரி

மரம் பிளக்கப் பயன்படும் கருவி போலப் பகைவரின் உடலைப் பிளக்க


இது
பயன்படும். இது இரும்பால் ஆகியது. வாய் கூர்மையாகவும் பின்புறம்
கனமாகவும்
இருக்கும். காம்பில் செருகப்பெற்று இருக்கும். 'பரசு' என்பதும்
இதைப்போன்றே
இருக்கும். ஆனால், வாய் சற்று வளைந்து கூரியதாக இருக்கும். இதுவும்
காம்பில்
செருகப்பெற்றிருக்கும். காங்கேய சுப்பிரமண்யர் என்ற வடிவில் 'பரசு'
ஆயுதம்
உள்ளதாகக் காட்டப்படுகிறது.

சூலம்

சிவபிரானுக்குரிய சிறப்பான படைக் கலம் சூலமாகும். இது மூன்று


நுனிகளை
உடையது. சுரை வரையிலும் எஃகு இரும்பால் செய்யப்பெற்று நீளமான
மரக்கம்பில்
செருகியிருப்பார்கள்.

கதை

'திகிரி' என்ற பெயரை உடைய 'கதை' என்றவுடன் பஞ்சபாண்டவர்களில்


பீமனது
ஞாபகம் வரும். அல்லது ஆஞ்சநேயரின் கரத்திலுள்ள கதையும்
பிரபலமான ஒன்று.
இதற்கு 'குண்டாந்தடி' என்ற பெயரும் உண்டு. பகைவர்களை அடித்து
நொறுக்கப்
பயன்படுத்துவது. கையை விட்டு அகலாதபடி காவலாக இருந்து
உடையவரை
பாதுகாக்கும் அருமையான ஆயுதம்.

You might also like