Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

1.

0 முன்னுரை

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து. 132

கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை


எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும்
கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை என்பது நாலடியார்
14. கல்வியைக் குறித்து கூறும் கருத்தாகும். கற்கும் கல்வியையும் கற்றல் கற்பித்தல்
நடவடிக்கையையும் ஒரு கலையாகப் பார்க்க வேண்டும் என்பது சான்றோர் கூறும் கருத்து.
இருப்பினும் கல்வியில் பல கலைகளை உள்ளடக்கி ஆக்ககரமான கற்றல் கற்பித்தல் திறனை 21-
நூற்றாண்டுக்கு ஏற்ப கற்பிக்கலாம். கல்வியில் கலை திட்டம் பாடதிட்டத்தில் காட்சிக் கலை, இசைக்
கலை மற்றும் அசைவு போன்றவற்றை மாணவர்கள் அக ஒழுங்குக்கும் புற ஒழுங்குக்கும்
வழிவகுக்கவே உட்படுத்தப்பட்டது. இக்கலைகளின் அறிமுகத்தினால் மாணவர்களின் புத்தாக்கச்
சிந்தனையும், படைப்பாற்றலும், ஆய்வியல் திறனும் வளப்படுகின்றது. மாணவர்களும் கல்வியில்
மிகுந்த ஆர்வத்துடம் கற்று பல வகையில் பயனடையலாம். மேலும் மாணவர்கள் பலவகையான
கலையைப் பற்றியும் தெரிந்து கொள்ள இயல்கிறது. ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தல் பணியைச்
சிறந்த முறையில் வழிநடத்துவதோடு மாணவர்களைப் புரிந்துக்கொள்ளவும் கற்றல் கோட்பாடு
பயன்படுகின்றது.

2.0 கருத்துகள்

2.1 இருபக்க மூளை கோட்பாடு

முதலில் இருபக்க மூளை கோட்பாட்டினைப் பார்க்கையில் நேட் ஹேர்மன் அவர்கள் மனித


மூளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது என்றும் இது ஒரு மனிதன் பகுத்தறிவுடனும்
உள்ளுணர்வுடனும் சிந்தித்துச் செயல்பட வழி வகுக்கிறது என்கிறார். வலது பக்க மூளை, இடது
பக்க மூளை என்றிருப்பதால் நமது இடது பக்க மூளை ஜம்புலன்களோடு தொடர்புடையது.
ஆகவே இது குழந்தைகளின் புல்லுணர்வு வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்றால் மிகையில்லை.
சான்றாக, குழந்தைகளின் தொடுதல், கேட்டல், பார்த்தல், சுவைத்தல் மற்றும் மோந்தல் போன்ற
புல்லுணர்வு வளர்ச்சிக்கு இது உதவுகிறது. குழந்தைகளை அரிவாற்றல் வழி மட்டும் செளித்தோங்கச்
செய்யாமல் புலன்களின் நல்ல இயக்கத்தையும் இது மேம்படுத்துகிறது. இதன்மூலம், மாணவர்கள்
சுற்றுச்சூழலில் காணப்படும் பொருளைக் கைகளால் தொட்டும் ஐம்புலன்களின் உதவியின் மூலமும்
அதனை தனது செயலுக்குக் கொண்டு வருகின்றனர். இருபக்க மூளையையும் ஒரே அளவில்
இயக்கச் செய்ய ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தகுந்த பாடம் போதிக்கும் முறையைத்
திட்டமிடுவதால் மாணவர்களுக்கு அது மிகவும் பயனை அழிக்கிறது. உதாரணத்திற்கு அறிவியல்
பாடத்தை போதிக்கும் ஆசிரியர்கள் பாடவேளை துவங்கும் முன் வலது பக்க மூளைக்கு ஏற்றவாறு
பயிற்சிகளைச் செய்து வந்தால் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல் வளமாவதோடு ஏரணமாகச்
சிந்திக்கவும் பகுத்தாய்வதில் வல்லவர்களாகவும் இருப்பர். வலது பக்க மூளை செயற்பாடு அதிகம்
இருப்பவர்கள் இசையை விரும்புவார்கள்; இடது பக்க மூளை அதிகம் செயற்பாடு உள்ளவர்கள்
மொழியை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள் இதனை வைத்தே ஆசிரியர் தங்களின்
மாணவர்களைக் கணடறியலாம். புலன் கலையானது நமது சுற்றுச்சூழலை அறிவதற்கு ஒரு
நெடுந்தொடர் செயல்பாங்காக அமைகிறது. முருகியல், தொடர்பு, அறிவு, ஆன்மிகம், உணர்ச்சி,
உடலியக்கம் போன்றவற்றிற்கு இந்த ஐம்புலன்களே முக்கியப் பங்கு அளிப்பதால் அதனை சிறு
வயதிலே மாணவர்கள் அறிந்து செயல்படுவதற்குக் கல்வியில் கலை உதவுகின்றது.

2.2 ஆக்கக் கோட்பாடு

இ.பவுல் தொரன்ஸ், எட்வின் கொர்டொன், ருடொல்வ் வோன் லாபான் போன்ற


அறிஞர்கள் ஆய்வில் மூலம் ஆக்கக் கோட்பாடு கண்டறிந்தனர். இக்கோட்பாடு ஆசிரியரின்
கற்பித்தல் திறனை வளம்பெறச் செய்துள்ளது. ஆக்கக் கோட்பாடு ஆக்கச் சிந்தனை மற்றும்
படைப்பாற்றல் திறன் மிக்க மாணவர்களையும் உருவாக்குகிறது. ஆசிரியர் தங்கள் மாணவர்களின்
நடத்தையையும், வயதையும் அறிந்து தகுந்த துணைப்பொருளைக்கொண்டு பாடப்பகுதியைத்
தயாரிக்கின்றனர். இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் ஆசிரியர் செய்முறைப் பயிற்சிகளை
அதிகம் தன் வகுப்பில் மேற்கொள்வதற்கு தன் மாணவர்களை முதலில் நன்கு அறிந்திருப்பது
அளப்பரியது. எடுத்துக்காட்டாக, ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு உயிரெழுத்துக்களை அறிமுகம்
செய்ய, களிமணைப் படத்துணைப்பொருளாகக் கொள்ளலாம். களிமணைக்கொண்டு
உயிரெழுத்துக்களின் வடிவங்களை உருவாக்கும்பொழுது மாணவர்கள் மனதில் அவ்வெழுத்துக்கள்
பதிவதோடு அவர்களின் புல்லுணர்வும் வளர்ச்சி காணும். இதுபோன்ற நடவடிக்கைகளை
ஆசிரியர்கள் கையாளுவதால் கற்றல் கற்பித்தல் உயிரோட்டமாக இருப்பதோடு, திறனுக்கேற்றக்
கற்பித்தலினால் மாணவர்களும் எழிதில் நல்ல புரிதலைப் பெருகின்றனர். வைகொட்ஸ்கியின்
கோட்பாட்டிலும் ஆக்கக் கோட்பாட்டின் பயனை பார்க்கலாம். இவர் ஆசிரியர் தங்கள்
மாணவர்கள் சொந்த முயற்சியில் இயங்க வைக்க வேண்டும் என்கிறார். முதலில் ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு துணை நின்று வழிகாட்டி வருவார்கள் பின்பு காலவோட்டத்தில் படிப்படியாகக்
கற்பிக்கப்படும் திறனை மாணவர்கள் அடையும் போது வழிகாட்டுதலைக் குறைத்துக்கொண்டு
அவர்கள் சுய முயற்சியில் செயல்பட ஊக்குவைக்கப்படுவர். இதனால் ஆசிரியர் மற்றும்
மாணவர்களுக்குள் இருக்கும் இரு வழி தொடர்பாடல் மென்மேலும் அதிரிக்கிறது.
2.3 நுண்ணறிவு கோட்பாடு

அதுமட்டுமின்றி, ஹாவார்ட் காடெனெர் என்ற அறிஞர் பல்வகை நுண்ணறிவு கோட்பாடு


என்ற கற்றல் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். “ஒரு புலனாய்வு சிக்களைத் தீர்க்க, அல்லது
ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சமுதாயச் சூழலில் பயனுள்ள பொருட்களை உருவாக்கவே’
என்கிறார் அறிஞர் ஹாவார்ட் காடெனெர். மாணவர்கள் மொழியைச் சரியாகப் பயன்படுதுதல்,
விரைவாகக் கணித பிரச்சனைகளைச் செய்து முடிப்பது, வர்ணம் மற்றும் வெளியைச் சரியாகப்
பயன்படுதுதல், பாடலைத் தயாரித்தல், இசைக்கருவிகளை மீட்டுதல், உடல் உறுப்புகளின்
அசைவுகளை படித்தல், எளிதாக மற்றவர்களோடு உரையாடுதல், தன்னுடைய பலம் பலவீனத்தை
அறிதல், வெளி வேலைகளில் ஈடுப்படுதல், புறநிலைப் பற்றிய அறிவு போன்ற அனைத்திலும் நன்கு
திறன்படைத்தவராக இருப்பதை நுண்ணறிவு கோட்பாடு உருதி செய்கிறது. “நாம் யார், என்ன
செய்ய முடியும் என்பதை அறிவது. இறுதியில், நம்முடைய புரிதல்களை நாமே ஒருங்கிணைக்க
வேண்டும். விஷயங்களை முயற்சிக்கும் புரிதலின் செயல்திறன் ஒரு அபூரண உலகில் மனிதர்களாக
நாம் மேற்கொள்வது நல்லது” என்கிறார் அறிஞர் ஹோவர்ட் கார்ட்னர் 1983. மாணவர்கள் கல்வி
அரிவில் மட்டும் சிறந்து விளங்காமல் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை திறன்களைக் கற்று
சமுதாயத்தில் ஒருவராக வாழ பல்வகை நுண்ணரிவு கோட்பாடு உதவுகிறது. அவர்கள் பலவற்றை
அறிந்துக் கொள்வது மட்டுமல்லாது தனது உணர்வுகளையும் கையாண்டு மனதலவிலும் என்றும்
அமைதி நிலவுவதற்கு இது துணைப்புரியும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அவ்வகையில்
மொழியியல், ஏரணம்-கணிதம், காட்சி இட அமைப்பு, உடல் இயக்கம், இசை, பிறரிடம்
தொடர்புதக்கத் தொடர், இயற்கையை நேசிப்பு, ஆண்மீகம் போன்ற அனைத்தையும்
கையாள்வார்கள். கற்பிக்கும் ஆசிரியர் தங்கள் மாணவர்களுக்குப் பாடப்பகுதியையும் பயிற்றுத்
துணைப்பொருளையும் தயார் செய்வதால் அவர்களை அறியாமலே அவர்களுடைய நுண்னறிவும்
மேம்படும்.

2.4 கட்டுவியக் கோட்பாடு

அதுமட்டுமில்லாமல், கல்வியில் கலையின் துணையோடு கற்றல் கற்பித்தலின் போது


மாணவர்கள் பலவாரு அனுபவம் பெறலாம். காட்சி கலை, இசை, மற்றும் அசைவு
அனுபவங்களைக் கொண்டு பல்வேறு துறைகளில் குழந்தைகளின் கற்றல் உருவாக்க உதவுகின்றன.
இதன்வழி அறிவாற்றல் வளர்ச்சி, குழந்தைகள் தங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை
வெளிப்படுத்த உதவுகின்றது. மொழி கல்வியின் போது ஆசிரியர் பல விளையாட்டு மற்றும்
நடவடிக்கையை மேற்கொள்ளும் போது அவர்கள் பல்வகையில் அனுபவம் பெறுகின்றனர்.
உதாரணத்திற்கு, ஆசிரியர் மாணவரிடன் ஒரு பாடலைத் தயாரித்து அதற்கு ஏற்ப அசைவுகளைச்
செய்யுங்கள் என்று கூறும் போழுது, மாணவர்கள் ஆர்வமாகவும் தனக்கு கொடுக்கப்பட்ட
குழுவுடன் இணைந்து பல்வகையில் சிந்தித்து ஒரு நடவடிக்கையை வெளிப்படுத்துவர். இதனையே
லெவ் வைகொட்ஸ்கி தனது கட்டுவியக் கோட்பாட்டில் ‘வளரும் மாணவர்கள் விளையாடுவது,
அனுபவம் பெற்ற மற்ற மாணவர்களுடன் பழகுவது போன்ற செய்லில் ஈடுப்படும்போழுது அவன்
பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறான்’ என்கிறார். இதுவே அவர்கள் அனுபவம் பெறுவதற்குத்
தக்க வழியாக அமைகிறது. நடிப்பது மற்றும் வாய்மொழி பயிற்சிகளையும் ஆசிரியர்கள் பயன்
படுத்துவதால் அவர்கள் தங்களின் உணர்வுகளையும் வெளிகாட்ட முடியும், மகிழ்ச்சி, சோகம்,
கோபம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளைத் தங்கள் நடிப்பில் வெளிக்காட்டுவதால் கற்றல்
கற்பித்தல் உயிரோட்டமாகவும் மாணவர்களுக்குத் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
சரியான வழைமுறைகளையும் அறிமுகப்படுத்தப்படும்.

2.5 காட்சிக் கலை

தோற்றம், வடிவம், வண்ணம் போன்றவைக் காட்சிக் கலையின் முக்கியக் கூறுகள்


அனைத்தும் மாணவர்களின் சுற்றுச்சுழலில் காணப்படும். இதனைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை
நடத்துவதால் சுலபமாகவும் இயற்கையாகவும் பாட வேளை இருப்பதோடு உற்சாகமாகவும்
பயனுள்ளதாகவும் இருக்கும். கற்றல் கற்பித்தல் மகிழ்வுமிக்கதாகவும் ஒருங்கிணைந்த
முழுமையானதாகவும் அமையும். காட்சிக் கலையைக் கொண்டு கற்றல் கற்பித்தலை
வழிநடத்துவதால் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர்கள் எழிதில் தக்க வைத்துக் கொள்ள
முடியும். உதாரணத்திற்கு, மஞ்சல் வர்ணத்தைப் பயன்படுத்தினால் இந்நிறன் மாணவர்களை
ஒருநிலைபடுத்துவதோடு கற்பிக்கும் கல்வியின் மீது நாட்டத்தை ஏற்படுத்த உதவும். கிளர்ச்சியூட்டும்
படக்காட்சிகளைக் கொண்டு அந்நாளில் பாடப்பகுதியைத் துவங்கினால் மகிழ்ச்சியான இருவழித்
தொடர்பு கற்றல் கற்பித்தல் நடைப்பெறும். பொம்மைகள் கற்பனைக்கு வேலை தருவதாகவும்,
படங்கள் சற்று அதிகமாக வேலைத் தருவதாகவும், உருவங்கள் மேலும் அதிகாமாகக் கற்பனை
திறனுக்கு இட்டுச் செல்கின்றது என்றும் டாக்டர்.ந.சுப்பு ரெட்டியார் தமது ‘தமிழ் பயிற்றும் முறை’
என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மொழியணிகளைக் கற்றுக் கொடுக்கும்பொழுது படங்களைக்
கொண்டும் தகுந்த படக்காட்சிகளைக் கொண்டும் மாணவர்களுக்குப் போதிக்கும் பொழுது அவை
பசுமரத்தாணிப் போல் பதிந்திருக்கும்.

2.6 இசைக்கலை, அசைவு

மேலும் இசை மற்றும் அசைவை கொண்டு கற்றல் கற்பித்தலை ஆழ்வதும் ஒரு முக்கிய
பங்கினை வகிக்கின்றது. அழகுக் கலைகளில் நான்காவதாக இசைக்கலை விளங்குகிறது.
இசைக்கலையை இசைக்கான அடிப்படை திறன்களை அறிமுகப்படுத்த பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு, கிரகங்களின் பெயரை மாணவர்கள் என்றும் மறவாமல் இருக்க அவர்கள் ஒரு
பாடல் அமைக்கலாம். இது அவர்களின் மனதில் ஒன்றை அதிக காலத்துக்குப் பதியவைத்திருக்கும்.
மாணவர்களிடன் ஆசிரியர் தட்டிசைக் கருவிகளை இசைக்க கூறலாம் இது மென்மேலும்
மாணவர்கள் இராகம். மெல்லிசை, மெய்ப்பாட்டின் வழி இசைக் கருவிகளின் பயன்பாட்டையும்
வளமாக்கும். “இசைக்கலை குழந்தைகள் பள்ளியிலிருந்து அவர்களைச் சுற்றியுள்ள உலகிற்குச்
செல்ல உதவும் கதவுகளைத் திறக்கிறது. நம் தேசத்தின் எதிர்காலம் நம் குழந்தைகளுக்கு இசையை
உள்ளடக்கிய முழுமையான கல்வியை வழங்குவதைப் பொறுத்தே அமையும்” என்கிறார் ஜெரால்ட்
ஆர். ஃபோர்ட். அசைவு என்ற கூறு மாணவர்கள் தான் கற்றும் பாடத்துடன் தொடர்பு படுத்தி
பார்க்க உதவுகிறது. இதன்மூலம் மாணவர்கள் அடிப்படை அசைவு திறனைக் கையாளுவார்கள்.
கற்றல் கற்பித்தலின் போது அசைவுகளை மேற்கொள்ளும் போது மாணவர்களுக்கு தசை
வளர்ச்சியும் மேம்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஓரிட இயக்கத் திறன் மற்றும் ஓரிடமற்ற இயக்கத்
திறன் போன்றவை தெரிய வருகிறது. உடலியல் உணர்வு, வெளி உணர்வுகளையும் அவர்கள்
சிறப்பகக் கையாள முடிகிறது. இத்தொழில்நுட்ப காலத்தில் தமிழர்களின் பாரம்பரிய
விளையாட்டுகள் மறக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஆசிரியர்கள் வளர்ந்து வரும் மாணவ
சமுதாயத்தினருக்குத் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் இணைத்து
கற்றல் கற்பித்தலின் மூலம் கற்றுத் த

2.7 இராகம், வண்ணம், வெளி

கல்வியில் கலையில் இராகம், வண்ணம், வெளி போன்றவையும் மிகுந்த பங்கை


ஆற்றுகின்றன. இராகத்தைக் கற்றல் கற்பித்தலில் இனைப்பதின் மாணவர்களுக்கு மன
அமைதியையும் மன மகிழ்வையும் கொடுக்க இயலும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
இதனையே ஹிலாரி கிளிண்டன் அவர்கள் “இராகம் ஒரு குழந்தையின் கற்பனையைத்
தூண்டுவதற்கு உதவலாம் அல்லது வாழ்நாள் முழுவதும் ஆர்வத்தைத் தூண்டலாம், அது
ஒவ்வொரு குழந்தையின் உலகத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்கிறார். வண்ணம்
வலது மூளை மற்றும் இடது மூளையின் செயல்முறை வளர்ச்சியைச் சமநிலைப்படுத்தும். கலை
படைப்புகளில் வண்ணம் பார்வையாளரை ஈர்ப்பது மட்டுமல்லாமல் உணர்ச்சிகள், பாரம்பரியம்,
ஆளுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும். உதாரணத்திற்குக், கதை கூறும் பொழுது ஆசிரியர்
வர்ணம் கொண்ட படங்களைப் பயன்படுத்தினால் மாணவர்கள் மென்மேலும் ஆர்வமாகக் கேட்டு
அதனை மனதில் பதிய வைத்துக்கொள்ளவும் அவர்களுக்கு இது சுலபமாக அமைகிறது. கற்றல்
கற்பித்தலின் போது மாணவர்கள் அசைவுகள் அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ள வெளி
மிகவும் முக்கியமாக அமைகிறது. அவர்கள் வெளியின் உதவியால் செய்யும் நடவடிக்கையின் மூலம்
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர முடியும்.

3.0 முடிவுரை

இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயத்தினர். அதனால், அவர்களையும் அவர்களின்


எதிர்காலத்தையும் செதுக்கும் சிற்பியாக ஆசிரியர்கள் கடமைப்பட்டுள்ளனர். சிறந்த திட்டமிட்ட
கற்றல் கற்பித்தல் மூலம் அனைத்து துறையிலும் திறம் பெற்ற மாணவச் சமுதாயத்தை உருவாக்க
முடியும். ஆழ்ந்து சிந்திக்கத் தேவையான அளவு, இடமறிந்து, காலமறிந்து இக்கலைகளைக்
கையாண்டால்தான் வகுப்பறைப் பயிற்றலை வெற்றிப்பெறச்செய்ய முடியும். கற்றல் கோட்பாடுகளின்
பங்கு மாணவர்களின் அதிவேக வளர்ச்சிக்குக் கைகொடுக்கிறது என்றால் கடுகளவும் ஐயமில்லை.
கல்வியில் கலை மாணவர்களைப் பல திறன் படைத்தவராய் உருவாக்குவது மட்டுமின்றி சமுதாய
வாழ்விலும் சாதனை படைத்தவராய் உருவமெடுக்க உதவுகிறது. ஆகவே இத்தகைய சிறப்புமிக்க
கலையை மாணவரிகளிடம் வைரம் போல் சேர்பதே ஆசானின் நற்பணியாகத் திகழ்கிறது.

ஆசிரியர் என்பவர் ஒர் கலைசிற்பி

அவர் செதுக்கும் ஒவ்வோர் சிலையும்

அக்கல்லை பொருத்தே அமைகின்றன!

You might also like