Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

கைகேயி கேட்ட வரங்கள் என்ன?

1) என்மகன் பரதன் இந்நாட்டை ஆளவேண்டும்


2) சீதாப்பிராட்டியின் கணவன் இராமன் இந்நாட்டை விட்டுச்சென்று காட்டிலே வாசம்செய்ய
வேண்டும்.

கைகேயி இந்த வரங்களை கேட்டதன் காரணம்:

- கைகேயியின் மனதில் மந்தாரை வஞ்சக எண்ணத்தை விதைத்தால்.

கைகேயியிடம் மந்தாரை இவ்வரங்களை கேட்க எடுத்து கூறியா காரணங்கள்;

 சிவந்த வாயினையுடைய சீதையும், கரிய நிறத்தையுடைய இராமபிரானும் உயர்ந்த


அரியாசனத்தில் செம்மாந்து வீற்றிருக்க நின்மகன் பரதன் நாணித்தலை குனிந்தவனாய்
அரியாசனமில்லாதவனாய் நிலத்தில் இருக்க நேரும். (பாடல் 154)
 தன் தாய் தந்தை காரணமாகத் தனக்குக் திருமுடி கிடைக்கவில்லை என்பதை அறிந்தபரதன்
அத்துன்பத்தை எவ்வாறு ஆற்றிக் கொள்வான்? (பாடல் 155)
 அரசசெல்வம் இழந்து, பரதன் வெறுப்புடன் உயிர் வாழ்வதினும் இறத்தலே மேல் என்றால்
கூனி ‘அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ (பாடல் 157)
 இராமனுடைய திருமுடி சூட்டுதலுக்குப் பரதன் தடையாயிருப்பானோ என ஐயுற்றுப்
பரதனைத் தயரதன் கேகய நாட்டிற்கு அனுப்பியதாக மந்தரை கூறுகின்றாள். (பாடல்
158)
 நடுவு நிலையிலிருந்து நீங்கி நாட்டினை இராமனுக்குக் கொடுக்கின்ற தன்மையினால்
தந்தையும் கொடியன்; அதனைக்கேட்டு மனமகிழ்கின்ற இத்தாயும் கொடியாள்; (பாடல்
159)
 இராமபிரான் முடிசூடினால் பெற்றகுலத்தார் இழிநிலை அடைவார் என்றாள் கூனி. (பாடல்
174)
 இதனால் பரதனுக்கும் அவன்வழியில் வருபவர்க்கும் அரச உரிமை எக்காலத்தும்
கிடைக்காது. (பாடல் 175)
ஏன் இராமன் காட்டில் வாசம்செய்ய வேண்டும்?

 இவ்வுலகம் அனைத்தையும் உண்மையாகவே இராமன் தன் தம்பியாகிய இலக்குவனுடன்


ஆள்வானானால், அவன் ஆள்கின்ற அந்தவரம் பெற்ற காலம் வரையிலும் பரதனும்
அவந்தம்பி சத்துருக்கனனும் அயோத்தியில் இருப்பதைவிட, இந்நகரினின்று நீங்கி,
விரதங்களோடு கூடிய தவத்தைச் செய்யக் காட்டிற்குச் சென்று விட அனுப்புதலே நன்று
என்று கூனி கூறினாள். (பாடல் 156)

You might also like