Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 14

ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்,

31150 ஹுலு கிந்தா, பேராக்,

தமிழ் செவ்விலக்கியம்
Kesusasteraan Tamil Klasik
(BTMB 3033)

பெயர் : அமுதவள்ளி த/பெ கதிரசன்


NAMA : AMUTHAVALLI A/P KATHIRASAN
யூனிட்/UNIT : எஸ் 7/ S7
எண்ணுறு/ANGKA GILIRAN : 2017242340140
அடையாள அட்டை எண்/ : 980401075844
NO.KAD PENGENALAN
விரிவுரையாளர் : முனைவர் மோகன் குமார்
NAMA PENSYARAH : DR. MOHAN KUMAR
ஒப்படைக்கும் நாள்/ : 09/03/2018
TARIKH HANTAR

INSTITUT PENDIDIKAN GURU KAMPUS IPOH PERAK


KAMPUS IPOH PERAK
BORANG MAKLUM BALAS KERJA KURSUS

Nama : Amuthavalli a/p Kathirasan Angka Giliran : 2017242340140


Kod : BTMB 3033 Nama Kursus : Kesusasteraan Tamil
Klasik
Pensyarah : Dr. Mohan Kumar
Tarikh Hantar : 09 Mac 2018 Tarikh Terima (Diisi oleh pensyarah)

Pengakuan Pelajar
Saya Mengaku Bahawa kerja kursus ini adalah hasil kerja saya sendiri kecuali
nukilan dan ringkasan yang setiap satunya saya jelaskan sumbernya.

Tandatangan pelajar : ________________________ Tarikh : 09 Mac 2018

Perincian Maklumat Kerja Kursus

Pemeriksa Moderator (Jika Berkaitan)


Kekuatan : Kekuatan :

Aspek Yang boleh diperbaiki : Aspek yang boleh diperbaiki :

Tandatangan : Tarikh : Tandatangan : Tarikh :

Pengesahan Pelajar

Saya mengesahkan bahawa maklum balas yang diberikan oleh pensyarah telah
saya rujuk dan fahami

Catatan (Jika ada)

Tandatangan Pelajar: Tarikh :

உள்ளடக்கம்
நன்றி நவிழ்தல்..............................................................................................................................4
1.0 முன்னுரை.........................................................................................................................5
2.0 கம்பராமயணச் செவ்வியல் சிறப்புகள்................................................................................5
3.0 கைகேயி சூழ்வினைப்படலத்தில் காணும் வாழ்வியல், நன்னெறி, முருகுணர்ச்சி கூறுகளுக்கு
முரணான கருத்துகள் மற்றும் அவற்றின் விளைவுகளும் படிப்பினைகளும் இன்றைய
வாழ்வியலோடு ஓப்பீடு...................................................................................................................8
3.1 தன்னலமாய் வாழும் மனிதர்கள் (கைகேயி)........................................................................8
3.2 சிந்திக்காமல் செயல்படும் மனிதர்கள் (கைகேயி)..............................................................10
3.3 பழிவாங்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள் (கூனி)..........................................................12
முடிவுரை.....................................................................................................................................14
மேற்கோள்...................................................................................................................................15

நன்றி நவிழ்தல்

இந்தச் செய்பணி கொடுக்கப்பட்டக் காலக் கட்டத்திற்குள் இறைவனின் கருணையினால்


நல்வழியில் செய்து முடிக்கப்பட்டது. இந்தச் செய்பணியை முடிப்பதற்கு எனக்கு உதவி கரங்கள்
நழுகிய விரிவுரையாளர் முனைவர் மோகன் குமார் அவர்களுக்கு இவ்வேளையில் நான் நன்றி கூற
கடமைப்பட்டுள்ளேன். எளிதான முறையில் இந்தச் செய்பணியை முடிப்பதற்குச் சில
நுணுக்கங்களையும் கொடுத்து வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தார். அடுத்ததாக என்
தோழிகளுக்கு இவ்வேளையில் நன்றியினைத் தெரிவிக்க நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
இரவு பகல் பாராமல் நான் செய்யும் இந்தச் செய்பணி தவறின்றி இருப்பதற்கு வழித்துணையாக
இருந்தார்கள். என் தாய் தந்தையருக்கும் இந்த வேளையில் நன்றி கூற விரும்புகின்றேன். சிரமம்
பாராமல் இச்செய்பணிக்குத் தகுந்த நூல்களை அத்தருனமே வாங்கிக் கொடுத்தார்கள்.
இருதியாக இந்தச் செய்பணியை நன்று செய்து முடிக்க வழித்துணையாக இருந்த
இறைவனுக்கும் நன்றி நவிழ்கின்றேன். மேலும் கொடுக்கப்படும் செய்பணிகளை எந்த ஒரு
தடையுமின்றி செய்து முடிக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

1.0 முன்னுரை

செவ்விலக்கியம் என்றால் ஒரு மரபின் பண்பாட்டின் அடித்தளத்தை அமைக்கக்கூடியது


அல்லது அம்மரபின் மிகச்சிறந்த படைப்பு என்று பொருள்படும் [ CITATION இரா06 \l 17417 ].
செவ்விலக்கியம் என்பது வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதாகவும்
பண்பாட்டை முழுமையாகப் பேசுவதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்விலக்கிய உலகில் காப்பியம்
ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் அடக்குவர். நூறு வருடம்
முன்பு பக்திக் காலக்கட்டத்தில் புராணங்கள், சிற்றிலக்கியங்கள், துதிப்பாடல்கள் முதலியவை
முறையே முக்கியமான செவ்விலக்கியங்களாகக் கருதப்பட்டன. அடுத்த மறுமலர்ச்சிக்
காலக்கட்டத்தில் பாரதி 'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல்
இளங்கோவைப்போல்,' என்று ஒரு தரவரிசையை உருவாக்கி செவ்விலக்கியம் குறித்த பிரக்ஞையை
மாற்றியமைத்தார். அதன் பிறகு உருவான திராவிட இயக்கம் இம்மூன்று படைப்புகளில்
கம்பராமாயணத்தை வெளியே தள்ள கடுமையாக முயன்றது. கம்பராமாயணம் இலக்கியத்திற்குப்
பல சிறப்புகளைத் தந்துள்ளது.
2.0 கம்பராமயணச் செவ்வியல் சிறப்புகள்

இராமனது வரலாற்றைக் கூறும் நுால் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நுால்


கம்பா் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். கம்பர் வடமொழிக் காவியத்தைத்
தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத் தந்திருக்கிறார்.
இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக்
கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நுாலாகும். இது
வடமொழியில் வால்மீகி என்பவா் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நுால் ஆகும்.
இதுவொரு வழி நுாலாகவே இருந்தாலும் கம்பா் தனக்கே உாித்தான பாணியில் கருப்பொருள்
சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளாா் [ CITATION இரா99 \l 17417 ]. வடமொழி
கலவாதத் துாய தமிழ்ச்சொற்களைத் தனது நுாலில் கையாண்டதால் கம்பா், தொல்காப்பிய நெறி
நின்றவா் என்று புகழப்படுகிறாா்.

கம்பராமயனத்தில் செவ்விலக்கியக் கூறுகள் நான்கு வகைப்படும். அவை உணர்ச்சி, கற்பனை,


அறிவுக்கூறு மற்றும் வடிவமாகும்.

உணர்ச்சி எனப்படுவது இலக்கியத்தின் முதன்மையானக் கூறாகும். கம்பராமயணத்தில்


உணர்ச்சி எனும் கூற்றை இராமன் மற்றும் சீதையின் காதல் கதையில் நான் உணர்ந்தேன்.
அவர்களது காதல் வாழ்க்கையில் இருவரும் கடைப்பிடிக்க வேண்டிய அற நெறிகளோடு
வாழ்ந்தனர்.

‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’

கண் பார்வை என்கிற கயிற்றினால் ஒருவரை ஒருவர் கட்டி ஈர்த்துக்கொள்கிறார்கள் . இராமனின்


மனம் சீதையை இழுக்க, சீதையின் மனம் இராமனைத் தன்னருகே இழுக்க இருவரும் மாறிப் புக்கு
இதயம் எய்தினார் என்று எழுதுகிறார் கம்பர். இராமன் மற்றும் சீதையின் காதல் காவியத்தைப்
படிக்கும் அனைவருக்கும் தானும் காதல் வையப்பட வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கும்
தோன்றும்.

கற்பனை எனப்படுவது அவற்றின் அழகை நம் நுண்ணறிவினால் நுகர்ந்து நம்முடைய


இன்பம் நிறைந்த அனுபவமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு கற்பனை வேண்டும்.
எடுத்துக்காட்டாக

விற்பெருந் தடந்தோள் வீர

வீங்குநீர் இலங்கை வெற்பில்

நற்பெரும் தவத்தள் ஆய

நங்கையைக் கண்டேன் அல்லேன்

இற்பிறப்பு என்பது ஒன்றும்


இரும்பொறை என்பது ஒன்றும்

கற்புஎனும் பெயரது ஒன்றும்

களிநடம் புரியக் கண்டேன்

“வில்லினையும் பெரிய தோளினையும் உடைய வீரனே! நீர் மிக்க, கடல் சூழ்ந்த இலங்கை
மலையில் தவத்தை உடையவள் ஆகிய சீதையை நான் காணவில்லை. மாறாக உயர்ந்த குடிப்பிறப்பு
என்னும் பண்பும், சிறந்த பொறுமை என்னும் பண்பும், கற்பு என்னும் திண்மையும் ஒருங்கு கூடி
மகிழ்ச்சியால் கூத்தாடிக் கொண்டிருந்ததைத்தான் கண்டேன்” என்று அனுமன் கூறுவதாக
இப்பாடல் புனையப்பட்டுள்ளது. சீதையைக் காணவில்லை. ஆனால் மானிதக் குலத்தின் உயர்ந்த
பண்புகளை அவ்விடத்தில் கண்டேன் என்று கூறுவது கம்பரின் உயர்ந்த கற்பனையைக்
காட்டுகின்றது.

அறிவுக்கூறு எனப்படுவது ஓர் இலக்கியத்தில் நன்கு திளைப்பதற்கு அல்லது தரத்தை


மதிப்பிடுவதற்கு அவ்விலக்கியத்தில் அமைந்துள்ள அறிவுக் கூறு வேண்டும். அறிவுக் கூறாவது
வாழ்வியல் உண்மை, சீரிய கருத்து, உயர்ந்த நீதிநெறி போன்றவற்றைக் குறிக்கும்.
கம்பராமயணத்தில் பார்த்தொமேயானால் பரதனின் கதாப்பாத்திரம் அறிவுக்கூற்றை நிலைநாட்டி
காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக:

சூடின மலர்க்கரம் சொல்லின்முன் செவி

கூடின; புருவங்கள் குதித்துக் கூத்து நின்று

ஆடின; உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள்

ஓடின; உமிழ்ந்தன உதிரம் கண்களே.

அண்ணனாகிய இராமனைக் காட்டுக்கு அனுப்பியதால் அன்னையை வெறுத்தொதுங்கிய


அறத்தின் வடிவம் பரதன். நோய் போல பற்றி, கணவன் உயிரை உண்ட நீ தாயல்ல பேய் என்று பரதன்
கூறி, நீதியை நிலைநாட்டி, கைகேயியை இகழ்கிறான்.

வடிவம் எனப்படுவது ஓர் இலக்கியத்தை மதிப்பிடுவதற்கு அதனுடைய வடிவம் ஆய்ந்து


உணரப்படுதல் வேண்டும். உணர்ச்சி, கற்பனை, அறிவுக்கூறு அல்லது கருத்து இவ்வனைத்தும்
வெளியிடுதற்கு மொழி இன்றியமையாத்தாகும். வடிவம் என்பது இவ்வனைத்தும்
வெளியிடுவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற உத்தி எனலாம். எடுத்துக்காட்டாக, கம்பராமாயணத்தை
கம்பர் கவிதை வடிவத்தில் எழுதியிருப்பார். வாழ்மிகி எழுதிய இராமயத்தில் இராவணன் சீதையின்
கரங்களை இழுத்துக்கொண்டு செல்வதாக எழுதியிருப்பார். ஆனால், கம்பர் இதை மொழி
பெயர்ப்பு செய்யும் பொழுது தமிழ் பண்பாட்டு வடிவிற்கு ஏற்ப மொழி பெயர்த்துள்ளார். அதாவது
இராவணன் சீதையின் நிழல் இராவணனின் மேல் படாமல் இருத்தவாறு நிலத்தோடு அப்படியே
அவளைத் தூக்கிச் சென்றான் என்று எழுதியுள்ளார்.
3.0 கைகேயி சூழ்வினைப்படலத்தில் காணும் வாழ்வியல், நன்னெறி,
முருகுணர்ச்சி கூறுகளுக்கு முரணான கருத்துகள் மற்றும்
அவற்றின் விளைவுகளும் படிப்பினைகளும் இன்றைய
வாழ்வியலோடு ஓப்பீடு.

கைகேயி சூழ்வினைப் படலம் இராமனின் திருமுடி விழாவிற்கு இடையூறு செய்ய எண்ணி,


கைகேயி செய்த செயலைக் கூறும் பகுதியாகும். இராமனின் அகவை நன்நாள் மற்ற
சகோதரர்களைக் காட்டிலும் முன்னே இருப்பதன் கரணியமாகத் தயரதன் இராமபிரானை
அயோத்திக்கு மன்னனாக்க எண்ணி அதற்கான பணியில் இறங்கினார். ஆனால், கூனியின்
சூழ்ச்சியான சொல் கேட்டுக் கைகேயி, தொடக்கத்தில் மகிழ்ச்சியடைந்தாலும் பிறகு தன்
எண்ணத்தை மாற்றுகிறாள். இச்சூழ்வினைப்படலத்தில் சில கதாப்பாத்திரங்கள் வாழ்வியல்,
நன்னெறி, முருகுணர்ச்சி கூறுகளுக்கு முரணான செயல்களைச் செய்துள்ளனர்.

3.1 தன்னலமாய் வாழும் மனிதர்கள் (கைகேயி)

கைகேயியின் தன்னலத்தன்மை கைகேயி சூழ்வினைப்படலத்தில் காணும் வாழ்வியல்,


நன்னெறி, முருகுணர்ச்சி கூறுகளுக்கு முரணான முதல் கருத்தாகும்.

‘ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்.’ (குறல் 484)

என்பதற்கோப்ப கைகேயியின் செயலானது இக்குறலைப் பொருந்தி வரும். அதாவது, தக்கக்


காலத்தைக் கருதி இடத்தோடு பொருந்தும்படிச் செயலைச் செய்தால், உலகம் முழுவதையும் ஆள
நினைத்தாலும் கைகூடும். கைகேயி தக்கச் சமயம் பார்த்துத் தயரதன் கொடுத்த இரண்டு
வரங்களைப் பயன்படுத்தி முதல் வரமாக இராமனின் திருமுடி விழாவை நிறுத்தி பரதனுக்குத்
திருமுடி சூட்டுவதற்கும் இரண்டாவது வரமாக இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு
அனுப்பி விட வேண்டும் என்றும் கேட்டாள்.

3.1.1 விளைவு

கைகேயியின் இச்செயலால் மக்கள் அவள் மேல் சினம் கொண்டனர்; தயரதனும் தன் மகனைப்
பிரிய மனமில்லாமல் இறந்துபோனார்; பரதனோ கைகேயி மீது வைத்திருந்த பாசத்தை முற்றிலும்
நீக்கினான். அவளைத் தன்னுடைய தாய் என்று கூறிக்கொள்ள அவன் விரும்பவில்லை.
கிடைத்தற்குரிய காலம் கிடைத்துவிட்டது, அதைப் பயன்படுத்திச் செய்தற்கரிய அறமான நல்ல
பலன்களைத் தர வல்ல உள்ள செயல்களைச் செய்திட வேண்டும்.

3.1.2 படிப்பினை

இதுதான் தக்கச் சமயம், தமக்கு வேண்டியதை இக்காலத்தைவிட்டால் பிறகு நினைத்துக்கூடப்


பார்க்க இயலாது என்று கைகேயியைப் போல் தன்னலமாக இருந்திடக் கூடாது. எவ்விதமான
செயலைப் செய்திட எண்ணினாலும் அதன் நன்மை தீமையினை நன்கு ஆராய்ந்த பிறகு செயல்பட
வேண்டும்.

‘நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.

என்பது போல ஒருவருக்கு நாம் உதவி செய்த வேலையில் அவரிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பையும்
எண்ணி உதவிடக் கூடாது. எடுத்துக்காட்டாகத் தயரதன் தெற்கே சம்பரனோடு போர் புரிந்த போது
இந்திரனைச் சமாளிக்க முடியாமல் உதவியை நாடினான். அப்போது கைகேயி தான் தேரை நடத்திச்
சாமர்த்தியமாகப் போர்களத்திலிருந்து வெளியே கொண்டு வந்து தயரதன் மேல் பாய்நத
் ிருந்த
அம்புகளையெல்லாம் மெதுவாக எடுத்து அவர் உயிரைக் காப்பாற்றினால். அப்போது தயரதன்
அவளிடம் இரண்டு வரங்களைக் கேள். எதைக்கேட்டாலும் தருவதாகக் கூறினார். அவள் செய்த
உதவிக்குப் பலனை வேண்டி தயரதனிடம் இவ்விரண்டு வரங்களையும் தமக்குச் சாதகமாக
இராமபிரானின் திருமுடி விழாவின் போது கேட்கிறாள்.

3.1.3 இன்றைய வாழ்வியலோடு ஒப்பிடு

கைகேயியைப் போன்று தன்னலத்தோடு வாழ்பவர்கள் இன்றும் பிறந்து கொண்டே தான்


இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாகப் பார்த்தோமேயானால் (பின் இனைப்பு 1) பண ஆசை பிடித்தக்
கரணியமாகச் சொந்த மகளை விபசாரத்திற்கு அணுப்பும் தாய்மார்கள் இருக்கிறார்கள். சனவரி
27 2017 செய்ப்பூரில் ஒரு பெண், தான் பெற்ற மகளை 6.5 லட்சம் ரூபாய்க்கு விற்ற கொடுமையான
சம்பவம் நடந்துள்ளது. இவரது பெயர் ராசராணி. இவர் தனது மகளைத் தாராசந்த், சந்தாரா
ஆகியோருக்கு 6.5 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அதுவும் மகளை விபச்சார கும்பலிடம்
விற்றுள்ளதுதான் கொடுமையிலும் கொடுமையாகும். தான் பெற்ற மகளைப் பாலுட்டி, சீராட்டி,
பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டியது ஒரு நல்ல தாயின் கடமையாகும்.

3.2 சிந்திக்காமல் செயல்படும் மனிதர்கள் (கைகேயி)

அடுத்ததாகப் பார்தத
் ோமேயானால் சிந்திக்கும் ஆற்றல் இல்லாத மனிதர்கள். கைகேயியே
இக்கூற்றுக்கு உதாரணம் எனக் கூறலாம். கூனியின் தந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டு
அந்நேரத்தில் சுய அறிவு இல்லாமல் தன் மகனிற்கு ஏற்படப்போகும் தீமையினை மட்டுமே கருதி
தயரதன் தனக்குக் கொடுத்த அந்த இரண்டு வரங்களையும் பூர்த்திச் செய்கின்றாள்.
அனைவரும் கெளசல்ய இராமன் என்று அழைப்பதைக் காட்டிலும் கைகேயி இராமன் என்று
அழைப்பதே அதிகமாக இருந்த வண்ணம், கூனி எவ்விதமான நஞ்சினை அவளுடைய
சொற்களால் கைகேயியிடம் புகுட்டியிருந்தாலும், தன்னுடைய சுய அறிவைக் கொண்டு, என்
புதல்வன் இராமன் அப்படி செய்யமாட்டான் என்பதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும் . ஆனால்,
கைகேயியோ உள்ளத்தில் பாபத்தை நிறைத்து அடைத்துக்கொண்டிருந்தாள்.
3.2.1 விளைவு

அவள் கேட்ட இரண்டு வரங்களால் சோகக் கடலில் மூழ்கித் தவித்துக் கொண்டு கரையேற
வழி தெரியாமல், அடிக்கடி நினைவு இழந்தும் கண்ணீர் விட்டு அலறியும், வேதனைப் பட்டுக்
கொடுமிருந்த தயரதனின் நிலையைப் பற்றி சிறிதும் ஏறேடுத்துப் பார்க்கவில்லை . அவளின் இந்தக்
கொடுரமான செயலே தயரதனின் மறைவுக்குக் கரணியமாக அமைந்திருந்தது.

3.2.2 படிப்பினை

ஆகையால், நாம் யார் என்னென்ன கூறினாலும் அதன் விளைவுகளை நன்கு ஆராய்நத


் பிறகே
முடிவு செய்ய வேண்டும். அதைத்தான் திருவள்ளுவர்

‘எப்பொருள் யார்யார்வய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு’ (குறல் 423)

என்று கூறியுள்ளார்.

3.2.3 இன்றைய வாழ்வியலோடு ஒப்பிடு

இன்றைய சூழலோடு ஒப்பீடு செய்து பார்க்கும் தருணம் ஒரு தனி மனிதனானவன்


அவனுடைய அன்றாட வாழ்க்கையில் நடப்பதை மற்றொருவருடைய அறிவுரைகளைக் கேட்டுக்
கொண்டே முடிவுகளை எடுக்கிறான். எடுத்துக்காட்டாகப் (பின் இனைப்பு 2) சென்ற வருடம் காட்டு
தீ போல பரவி வந்த செல்வன் நவினின் மறைவு சம்பவத்தை எடுத்துக்கொண்டால் அந்தக்
குற்றவாளிகள் சிறிது நேரம் சிந்தித்து செயல்பட்டிருந்தால் ஒரு கொடுரச் செயலில்
ஈடுபட்டிருக்கமாட்டார்கள். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பதற்கிணங்க பகடிவதையில்
ஆரம்பமாகிய இச்சம்பவமானது வாய் சண்டையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டார்கள்.
சினத்தில் மூழ்கிய குற்றவாளிகள் சிந்திக்காமல் சுய அறிவினை இழந்து அவனைக் கொலை செய்
என்று ஒரு நண்பன் கூற மற்றவர்களும் கொலை செய்யும் அளவிற்குக் கொடியவனாக
மாறிவிட்டார்கள். ஆகையால், நாம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் அதன் நன்மை
தீமைகளை ஆராய்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

3.3 பழிவாங்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள் (கூனி)

அடுத்ததாகப் பார்த்தோமேயானால் கூனியின் தந்திரமான சுழ்ச்சியும் கைகேயி


சூழ்வினைப்படலத்தில் காணும் வாழ்வியல், நன்னெறி, முருகுணர்ச்சி கூறுகளுக்கு முரணான
செயலாகும். கைகேயிக்குத் தோழியும் அந்தரங்க வேலைகாரியுமாகக் கூனியம்மை எனும்
மந்தரைச் சேர்ந்திருந்தாள். கைகேயிக்கு இவள் கொஞ்சம் சொந்தம் கூட. ஆகையால்,
கைகேயியுடன் நெருங்கிப் பழகும் உரிமையைக் கொண்டாடி வந்தாள். இராமனின் திருமுடி
விழாவின் போது ஒரு திருப்பத்தை உருவாக்கியது இவளது சொற்களே என்பதில் எந்த ஒரு
ஐயமுமில்லை. தலைக்கு மேல் வெள்ளம் வருகிறது என்று அன்பு மகன் இராமன் மீது கைகேயிக்கு
வஞ்சக எண்ணத்தைப் புகுட்டி, இராமன் பரத நாட்டைக் கரங்கொண்டால் தயரதன் அனைத்தையும்
கெளசல்யைக்குக் கொடுத்துவிடுவான். அதுமட்டுமின்றி, பரதனை மாமன் வீட்டுக்குப் போ என்று
சொல்லி வெகு தூர தேசத்திற்கு அனுப்பிடுவான். உன்னைத் தெருவில் திண்டாட விட்டு விடுவான்
என்று கூறி ஒன்றும் அறியாத மலராட்டம் இருந்த கைகேயியை மக்கள் வெறுத்து ஒதுக்கும்
வண்ணம் செய்ததே கூணிதான். இவள் இப்படி செய்ததற்குக் கரணியமாக இருந்தது
இராமபிரானின் சிறு வயது காலம். பரதன் ஒரு சிரு கல்லைக் கூனியின் மீது விசுவான். ஆனால்,
பரதனுக்குப் பதிலாக இராமன் சென்று கூனியினிடம் மன்னிப்புக் கேட்பார். ஆகையால், இராமனே
தன் மீது கல்லை எய்ததாக எண்ணிக்கொல்வாள் கூனி. அன்று முதல் இராமனைப் பழி வாங்க
வேண்டும் என்ற எண்ணத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்.

3.3.1 விளைவு

கூனியின் செய்கையினால் அப்பாவி இராமன் எந்த ஒரு தவரும் செய்யாமல் காட்டிற்குச்


செல்லும் நிலமை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி இராமன் இரண்டாம் சகோதரரான இலக்குமன்னன்
தன் அண்ணன் பரதன் மூத்த சகோதரர் இராமபிரானின் பதவிக்கு ஆசை படுகிறான் என்று
எண்ணி அவன் மீது சினம் கொள்கிறான்.

3.3.2 படிப்பினை

ஒரு மனிதன் நமக்குத் தூரோகம் செய்கையில் அவனை மன்னித்து ஏற்துக்கொள்ள


வேண்டும். பழிவாங்கும் தீய எண்ணத்தை மனதில் ஆணித்தரமாகப் பதிய வைத்திடக் கூடாது.
இறைவன் இருக்கிறார். நாம் செய்யும் அனைத்துத் தீய செயல்களையும் கண்காணித்துக்
கொண்டிருக்கிறார். விதை விதைத்தவன் கண்டிப்பாக வினை அறுப்பான். இதைத்தான்
நாலடியாரில்

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

அதாவது ஒருவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பெரிதுபடுத்தக்கூடாது.


இவ்வுலகிலுள்ள உயர்தினையாகட்டும் அஃறினையாகட்டும் அனைத்திற்கும் குறையுண்டு.
ஆகையால், ஒருவருக்குத் தீங்கு நினைத்தால் அதை அவருடைய குறையாக நினைத்து ‘இறைவா
இவனுக்கு நல்ல சிந்தையைக் கொடுப்பாயாக,’ என்று வேண்ட வேண்டும். கூனியைப் போன்று
பழிவாங்கும் எண்ணத்தோடு இருந்திடக்கூடாது.

3.3.3 இன்றைய வாழ்வியலோடு ஓப்பிடு

பழிவாங்கும் எண்ணம் மனிதர்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதில்


கிஞ்சிற்றும் ஐயமில்லை. எடுத்துக் காட்டாகப் பார்த்தொமேயானால் (பின் இனைப்பு 3) 17 சனவரி
2018, சென்னையில் பெண் மாணவி தனது நணபனுக்கு அனுப்பிய ஆபாசப் புகைப்படங்களைத்
அவளின் அனுமதியின்றி தனது தோழன் அவனது தோழர்களிடம் காண்பித்து இணையத்
தளங்களிலும் பதிவு செய்துள்ளான். ஆகையால் அப்பெண் பழிவாங்கும் எண்ணத்தில் அந்த
தோழனிடம் பேசிய ஆபாசமான பேச்சுகளை அவன் பேசியதாக மட்டும் தொகுத்து அவனைச் சிக்க
வைத்தாள். ஆபாசப் படங்களைப் பறிமாறிக் கொள்வது இன்றைய கால இளைஞர்களுக்குக்
கிள்ளுக் கீரையாகிவிட்டது. இப்படி ஆபாசமான படங்களைப் பிறருக்கு அனுப்பியது மட்டுமல்லாமல்
அந்தத் தோழன் பிறருக்கு அனுப்பிவிட்டான் என்று பழிவாங்க எண்ணும் அந்தப் பெண், பெண்
குலத்திற்கே ஒரு அவமானத்தை ஏற்படுத்தி தருகிறாள். நம்முடைய சிந்திக்கும் ஆற்றலும் செய்யும்
செயலும் சரியாக இருந்தால் யாரையும் பழிவாங்கும் சூழல் ஏற்படாது என்பது தின்னம்.

முடிவுரை

கம்பராமாயணம், ஒரு மனிதன் தன்னுடைய வாழ்கையில் எப்படி வாழ்வியல் , நன்னெறி,


முருகுணர்ச்சி போன்ற கூறுகளோடு வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உத்தியாக அமைந்துள்ளது.
ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கம்பராமயணத்தோடு ஒப்பிடு செய்து பாடங்களைப்
போதிக்கலாம். அவ்வாறு போதிக்கையில் மாணவர்களுக்குக் கம்பராமயணத்தைப் பற்றிய
அடிப்படை கருத்துக்களைத் தெரிந்துக் கொள்ள இயலும். அதோடுமட்டுமின்றி, கைகேயி
சூழ்வினைப்படலத்தில் காண படும் முறனான கூறுகளை மாணவர்களிடம் சமர்ப்பிக்கும் பொழுது
அவர்களுக்கு அவ்வாறு செய்யக் கூடாது என்று ஒரு படிப்பினையைப் பெற்று கொள்வார்கள்.
இறுதியாகக் கம்பராமாயணம் என்றும் அழியாமல் மக்களிடையே பரவி வரும்.

மேற்கோள் மூலங்கள்
இராசகோபாலாச்சாரி. (2006). இராமாயணம். சென்னை: வானதி பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம். (1999). கம்பராமாயணம். சென்னை: திருமகள் நிலையம்.
இராமாயணப் பாடல்கள். (n.d.). Retrieved from Ayodhya Kandam 10 பள்ளிபடைப் படலம் |
calendarcraft: https://www.calendarcraft.com/ayodhya-kandam-10-பள்ளிபடைப்-படலம்/
செந்துறைமுத்து. (2014). திருக்குறள் தெளிவான உரை. சென்னை: கங்கை புத்தக நிலையம்.
தமிழ், ச. (17 சன்வரி, 2018). பழிவாங்கும் செய்திகள். Retrieved from
https://m.tamil.samayam.com/social/revenge-porn-goes-to-school-sexting-and-
cyberbullying-notorious-trends-in-schools-most-institutions-hush-up-
cases/articleshow/62541688.cms
நவின் கொல்லை சம்பவம். (19 ஜூன், 2017). Retrieved from நவீன் மரணம்: 4 பேர் மீது கொலை ...
- Posts: https://mybhaaratham.blogspot.my/2017/06/4.html
முத்தையா, ம. (2017). என்றுமுள்ள தெந்தமிழ். கோலாலும்பூர்: நாம் அறவாரியம்.
விபச்சாரம் செய்திகள். (n.d.). Retrieved from
http://www.thinaboomi.com/news/2014/05/25/17632.html?page=7 விபச்சாரம் செய்தி
பின் இணைப்பு 1
(தன்னலமாய் வாழும் மக்கள்)

பின் இணைப்பு 2
(சிந்திக்காமல் செயல்படும் மனிதர்கள்)
பின் இணைப்பு 3
(பழிவாங்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள்)

You might also like