Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 13

சிற்பி

என்னுடைய வேர்கள் இந்த மண்ணில்தான்,என்னுடைய வேர்கள் இந்த

சிவந்த பூமியின் ஆழங்களில்தான் ....அந்த செம்பனை மரங்கள் என்

காதோரமாய் நிமிர்ந்து பேசி உணர்த்திக் கொண்டே வந்தன... என் மனம் கால

ஓட்டத்தில் முன்னும் பின்னுமாய் எனது பருவ வளர்ச்சிகளை அழகாக

அசைபோட்டுப் வின்னளாவ பறந்தது. “நெத்தி வேர்வ மண்ணுல

விலும்போதெல்லம் நாம நாலு காசு சம்பாதிக்கிறோம் பா..இந்த மண்ணப்பாரு

வெதைய போட்டா மரமாக்கி பழத்தை காட்டுது... அந்த மண்ணப் போல

நாமலும் நமக்குல்ல திறமைய வெளிக்காட்டணும்,மரம் தன் திறமைய பழமா

காட்டுர மாதிரி,என் புள்ள நீ படிச்சு காட்டனும் “..,மனசுல பெரிய

ஆதங்கத்தோடும், கண்ணில் அதிகம் எதிர்ப்பார்ப்போடும், கொஞ்சம் அதிகாரத்

தொணிமிகுந்த குரலில் அன்று அப்பா குலை அடுக்கும் முட்டில் நின்று பேசியது

நிழலாடியது.

“அங்க பாரு படிக்கிற பிள்ளைங்கனு வீட்டுல விட்டாரா இராமசாமி

அண்ணன்?, தோட்டத்திலையும், பள்ளியிலேயும் அவங்க வயசுல அவங்க

ரெண்டுபேரும் நம்பர் ஒன்னு தெரியுமில்ல...சோம்பேரி பயல அந்த மூஞ்சிய

மாத்தி கொஞ்சம் சுறுசுறுப்பா வேளைய பாரு,” அப்பா என்னைப் பார்த்து


புன்னகைத்தவாரே கூறிக்கொண்டிருந்தார், நானோ செல்வாவையும், மணி

அண்ணனையும் எங்கள் நிரையில் இருந்தவாரே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வயதான தன் தந்தையின் நிரையில் அண்ணன் தம்பி இருவரும் போட்டி

போட்டுக் கொண்டு குலைகளை வெட்டியும்,மட்டைகளை ஒதுக்கியும் பம்பரமாய்

சுழன்றுக் கொண்டிருந்தார்கள். என்னுள்ளும் ஒரு வேகம் பிறந்தது. இத்தனைக்கும்

படிவம் ஒன்றில் படிக்கும் எனக்கு,அப்போ கொட்டுப்பழம் பொருக்குகின்ற

வேலைதான்.காற்று மாதிரி வேலைய செய்து அம்மாவ பார்த்தா மின்னல் மாதிரி

வேலை செய்யுறது எப்படினு சொல்லித்தருவாங்க.

இதுவும் இறைவன் நம்ம காலத்துல நமக்கு அளித்த வரமாகத்தான்

இருக்கனும்.பத்தொன்பதாம் நூற்றாண்டென்பது எத்தனைஅழகான ஒன்று,அதுவும்

அதன் கடைசி காலாண்டு அடடா அன்பு,பண்பு,ஆன்மீகம்,அரசியல்,அறிவியல்

என்று அனைத்தும் அபரிதமான வளைச்சியில் உழன்றுக்கொண்டிருந்தது.இந்த

காலத்தில் நாமும் பிறந்தோம்,வளர்ந்தோம்,என்பது கொடுப்பனையன்றி யாதக

இருக்க முடியும் ?வாழ்க்கையை வகுத்துக்காட்டிய

வெள்ளித்திறைகள்,வார்த்தையை மீராத தேன் இசைகள்,உடலையும்,மூலையையும்

வலுப்படுத்திய நல்ல விலையாட்டுகள்,அமைதியான அந்த தோட்டப்புர

வாழ்க்கைதான் நமக்கு எல்லாமே கற்றுத் தந்தது.இங்கு இருக்கும்போதுதான்

கல்வி,சமூகம்,அரசியல்,பொருளாதாரம் என்று அனைத்திலும் முன்னேற


வேண்டும் என்ற வேட்கை எல்லாரிடமும் வெகுண்டெழுந்தது.இதே

வெந்தனலைத் தொட்டு தீப்பந்தமாக்கி வெளிச்சத்தில் முன்னேரியவர்கள் பலர்.

“தம்பீ எங்கப்பா?”,அம்மா கொடுத்த தேநீரை பருகிய அதே வேகத்தில்

கையில் ‘பூட்ஸை’ எடுத்துக் கொண்டு கிளம்பும் நேரத்தில் அப்பாவின் அந்த

கேள்வி என் புருவங்களை உயர்த்தியது. சுதாரித்துக் கொண்டு ,சற்று உற்றுப்

பார்த்தேன், ஆருமுகம்பிள்ளை சுருட்டை பற்றவைத்தவாறு என்னைப்

பார்த்தார்,நான் அவர் அருகே இருந்த பூ வாளியையும், மண் வெட்டியையும்

பார்த்தேன்.மறந்தே போயிருந்தேன்,அன்று வெட்டு முடியும் தருவாயில் முட்டில்

உட்காந்து குலைகளை எண்ணி அதன் காம்பில் செந்நிறக் கல்லைக் கொண்டு

நிறைகாரரின் எண் அதன் கீழ் முட்டில் உள்ள குலைகள் அதற்கும் கீழ்

அன்றைய மொத்த குளைகளின் எண்னிக்கையை எழுதும் போது “சாயங்காலம்

கொள்ளையில கொஞ்சம் வேலை இருக்குப்பா மொலகா,கத்தரிக் கன்னுக்கு மண்

அனைச்சிட்டு, அவரைக்குப் பந்தல் போடனும்,கொள்ளைக்கு வாப்பா”அப்பாவின்

அந்த வார்த்தைக்கு மறுப்பேதும் பேசாமல் இடுப்பில் சுற்றி இருந்த சும்மாட்டுத்

துணியை அவில்த்தவாரே அம்மாவைப் பார்த்தேன்.”அந்த வக்குலை எடுத்து

மோட்டர்ல வச்சிட்டு இந்த பெரிய சடக்குலேயே நடந்துவா அய்யா,அப்பா

என்னை விட்டுட்டு வந்து உன்னை ஏத்திக்குவாரு”, வண்டியை நகர்த்திக்

கொண்டு நான்நடக்கலானேன்,அப்பாவின் வண்டி புள்ளியாய் வெகு தூரத்தில்

மறைந்தது.
“பரவாலப்பா,பந்து விளையாட போவரதா இருந்தா போ,தோட்டத்த நான்

பாத்துக்கிறேன்” அப்பா கூறி முடிப்பதற்குள் “இல்லப்பா நானும் வரேன்” என்று

கையிலிருந்த ‘பூட்ஸை’ கீழே வைத்து விட்டு, “ அம்மா நான் அப்பாகூட

கொள்ளைக்குப் போறேன்” ... மறுகனமே பூ வாளி என்னோடு பயனித்தது, மண்

வெட்டி அப்பாவின் தோல் மீது ஒய்யாரமாய் அமர்ந்துக் கொண்டது.

நமக்கு வேண்டியதை நாமே பயிர் செய்வதென்பது ஒரு தனி அனுபவம்.

பெரும்பாலான தோட்டத்து மக்கள் இதைத்தான் செய்தார்கள்.எந்த

காய்கறிகளையும் வாங்குவதற்க்கில்லை வீட்டைச் சுத்தியும், கொள்ளையிலும்

பயிர் செய்து,தமக்கு எஞ்சியதை சுற்றத்தார்க்கும் ,அக்கம் பக்கத்தார்க்கும்

கொடுக்கும் பண்பு, இன்று அது வாய்க்குமா?” பொழுது சாய்ஞ்சிடுச்சி, அந்த

வாழை இலையில உள்ளத தனியா எடுதுக்கோ கூடைய நான்

எடுத்துக்கிறேன்,அதை ஜானகி அக்காவீட்டுல கொடுத்துட்டு வாப்பா”

என்றவாரே கொள்ளைக் கதவை இழுத்துக் கட்டினார் அப்பா.அவரைப்

பார்த்தேன் என் மனக்குரலை உணர்ந்தவராய்” அது அப்படி இல்லைப்பா,நம்ம

கொள்ள பக்கத்திலேயே இருக்காங்கில்லையா...” அந்த உணர்த்துதலை

புரிந்தவனாய் புன்னகையை அப்பாவிற்கு பதிலாய் கொடுத்தேன்.


“அப்பா இன்றைக்கு நம்மலோடு யாரெல்லாம் பூசைக்கு வராங்க?”,பவனின்

அந்த கேள்வி என் நினைவலைகள நிருத்தியது.”என்னது?” “அண்ண

யாரெல்லாம் வராங்கென்னு கேட்டாரு”,யுவன் பின் இருக்கையிலிருந்து என்னை

எட்டிப் பார்த்தான்.”தாத்தாபாட்டியோட ,சித்தப்பாங்களும் ,அத்தையும் வராங்க.

நம்மோட சேர்ந்து,ஏற்கனவே இங்க இருந்தவங்களும் பூசையில

கலந்துக்குவாங்க”.வண்டி அந்த மண் சாலையில் நுலைந்தது.எத்தனை முறை

‘யோவ் ஹோ’ பேருந்திலிருந்து இரங்கி இந்த மண் சாலையில் நடர்திருப்பேன்.

அப்பாஅம்மா தம்பிகளும் தங்கையும் தோட்ட கோவிலில் எங்களுக்காகக்

காத்திருந்தனர்.”வேலை முடிய கொஞ்சம் நேரமாச்சு பா அதான்..”,அப்பா என்

பிள்ளைகளப் பார்த்து புன்னகைத்தவாரே கைகளை நீட்டி அழைத்தார்.இன்று

குடும்பமாய் தோட்டத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூசை.அடுத்த இரண்டு

நளில் திருவிழா.எங்களோடு சேர்ந்து இராமசாமி குடும்பத்தாரும்,பத்துமலை

குடும்பத்தாரும் பூசையில் கலந்துக் கொண்டனர்.பூசை

சிறப்பாகவும்,திருப்தியாகவும் முடிந்தது. கோவிலுக்கு வெளியில் இன்னும் சிலர்

கூடி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.இந்த குரல் எனக்கு நன்கு பழகிய

ஒன்று.வெளியே சென்ற நான் பேருவகையோடு “அண்ணே எங்க இவ்வளவு

தூரம் “என்று மோசஸ் அண்ணனை பார்த்து கை குலுக்கினேன்”. “அடேய்


யப்பா வளர்ந்துட்ட,.சவுரியமா?இதை விட்டா உங்களை எல்லாம் எப்ப

பாக்குறது,அதான் கேள்விப்பட்டதும் லீவு போட்டுட்டு வந்தாச்சி”.

மோசஸ் அண்ணன் எங்க தோட்டத்து ‘சிக்கோ’.”பந்து விளையாடுரையா?

எங்க கொரியாகாரன்” என்று தம்பி விஜீயைக் கேட்டார்.” உங்க அப்ப

விளையாட்டு அவனுக்குத்தான்”. அப்பா நல்ல காற்பந்து

விளையாட்டாளர்.அதானால தான் என்னவோ எங்களை அதில் அதிகம் கவனம்

செலுத்த விடாமல்,எங்களின் படிப்பிலேயே குறியாக இருந்தார். அப்பளசாமியும்,

அப்பாவும் அந்தக் காலக்கட்டத்திலேயே செண்டு மணியம் கூட காடியில

தம்பீன் வரை சென்று பரதன் கிண்ணத்துக்காக விளையாடியதை மோசஸ்

அண்ணன் அடிக்கடி தோட்டத் திடலில் விளையாடும் போதெல்லாம் சொல்லக்

கேட்டிருக்கிரேன்.நானும் அப்பாவோட விளையாட்ட சா’ஆ திடலில்

பார்த்திருக்கிறேன்,ஆனாலும் பெரிசா எதுவும் ஞாபகத்தில் இல்ல.நான்

விளையாட ஆரம்பிக்கும் போதெல்லாம் அப்பா கால் அடிபட்டதால

விளையாட்ட நிருத்தி இருந்தாரு.

தோட்டப்புரத்திலிருந்து காற்ப்பந்து விளையாடி வாழ்வை வேறுதிசைக்கு

மாத்திக்கிட்டவங்களை பத்தி கொள்ளையில வேலை செய்யும்போது அப்பா

நிறையவே பேசியிருக்காரு.தனக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஜெ.கே.ஆர்.ல

கிடைச்சும் தவற விட்டதை எண்ணி பலமுறை வருந்தியும் இருக்காரு.அன்று


திறமையான விளையாட்டுக்காரர்களாய் இருந்தும் சரியாக வாய்ப்பை

பயன்படுத்திகத் தெரியாத எத்தனையோபேர் குடத்திலிட்ட விளக்காகவே இருந்து

இறந்து போனார்கள்.நல்ல வழிகாட்டல்களும்,கொஞ்சம் ஏட்டறிவும்

கொடுத்திருந்தால் இன்னும் எத்தனையோ கோலி ஆறுமுகங்களையும், கிந்தா

கருத்துக்களையும் நாம் சந்தித்திருக்கலாம். இதை

உணர்ந்ததாலும்,அனுபவித்ததாலும் தான்,வாழ்வின் முன்னேற்றத்திற்கு கல்வியே

பிரதானம் என்ற முடிவிற்கு வந்தவராய் இருந்தார் அப்பா.

தீபாவளி விடுப்பு முடிந்து மீண்டும் வெட்டுக்கு போவதென்பதில்

எப்பொழுதும் ஒரு சிக்கலிருக்கும். மழைக்காலமும் சேர்ந்து

செம்பனைக்குலைகளை வெகுவாகப் பழுக்கச் செய்து உதிரிப்பழங்களைச் சிதறச்

செய்துவிடும். ஆண்டிருதி விடுமுறையில் யாரும் தப்பிக்கவும்

முடியாது.பெற்றோர்கள் அனைவரும் உதிரிச் சிதரி கொட்டும் பழங்களைப்

பொறுக்கும் வேலைக்குப் பிள்ளைகளை அழத்து வந்துவிடுவது வழக்கமாய்

இருக்கும். பள்ளி நீண்ட விடுமுறையாதலால் பிள்ளைகள் கண்ணெதிரே

இருப்பதை இது உறுதிசெய்தது. ஆனால் பெற்றோர்களுக்கு உதவியாய் வந்த

எத்தனையோ பிள்ளைகள் தம் அப்பாவும், அம்மாவும் படும் பாட்டினைப்

பார்த்து, விடா முயற்சியுடன் படித்து பட்டதாரிகளாய் உருவெடுத்ததது

மறக்கவோ,மறுக்கவோ முடியாத ஒன்று. அப்பா அப்படி பட்டவர்களை பள்ளி


விடுமுறைக் காலங்களில் வேலைக்குப் போகும்போது எங்களுக்குச் சொல்லத்

தவரியது இல்லை.

“நல்லமாரியா படிச்சிகிட்டா சின்ன பேனா புடிக்கலாம்.. இல்லைனா

என்னமாரி பெரிய பேனாதான் புடிக்கனும்”.அப்பாவின் அந்த வார்த்தை

இன்னமும் என் காதுகளையும் கருத்தையும் துரத்திக்கொண்டுதான்

இருக்கின்றது.பெரிய பேனா என்று அப்பா சொன்னது அந்த மூங்கில்

களியைத்தான்.ஆமாம்,இரத்தம் சிந்தாமல் வீட்டிற்கு வரவே முடியாது. மட்டையில்

இருக்கும் முள்ளாகட்டும்,குலையில் உள்ள முள்ளாகட்டும் துளி அளவேனும்

இரத்தத்தை சிந்தச்செய்துவிடும் ஆற்றல் படைத்தவையாகத்தான் இருக்கும். இந்த

அவஸ்தை தன்னோடு முடிந்துவிட வேண்டும் என்பதே அப்பாவின் தவமாய்

இருந்தது.வேலைக் காட்டில் இளைப்பார உட்காரும் போதெல்லாம் தோட்டத்தில்

பிறந்து பட்டதாரியானவர்களைப் பற்றி அப்பா நிறைய பேசுவார்.பாலு

அண்னன்,எட்வர்ட் அண்ணன்,இராஜா அண்ணன்,டேவிட் அண்ணன்

போன்றவர்களின் பெயர்கள் அப்பாவின் பேச்சில் விடுபடாதவை. பாலு

அண்ணன் வீட்டு வராண்டாவுல காலையிலேயே உட்காந்து படிக்கிறத நானே

பார்த்திருக்கிறேன்.ஆமா நாம்பலும் அப்படிதான் படிக்கனும்.


ஆண்டு முழுவதும் தோட்டங்களில் ஏதாவது நிகழ்வுகள் இருந்துக்

கொண்டேதான் இருக்கும்.தமிழர் திருநாள், பொங்கல் கொண்டாட்டம், தை,

வைகாசியில் திருமணங்கள், கபடி போட்டி, ‘எஸ்டேட் லீக்’, தேசிய தின போட்டி

விளையாட்டு, தீபாவளி கலை நிகழ்ச்சி, கிருஸ்துமஸ் இரவு இப்படி

அடுக்கிக்கிட்டே போகலாம். இதில் இன்னோரு சிறப்பு என்னன்னா சா’ஆவை

சுற்றியுள்ள எட்டு தோட்டத்திலேயும் வாசகசாலை என்ற படிப்பகங்களின் வழி

இளைஞர்கள் செயல்பட்டதுதான்.அவ்வை படிப்பகம்,திருவள்ளுவர்

படிப்பகம்,பாரதி படிப்பகம் என்று எட்டுத் தோட்டமும் போட்டிப் போட்டுக்

கொண்டு தமிழோடு தமிழர்களையும் வளர்த்தது.

அன்று திருவள்ளுவர் படிப்பகத்தின் கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்த

அப்பா,கையில் வைத்திருந்த குறிப்புகளை பார்த்துவிட்டு,”உன் வயசு

பசங்களுக்கெல்லாம் ரெண்டு போட்டி,அப்பா பேச்சுப்போட்டிக்கு மட்டும் பேரை

எழுதிட்டேன்”. இதில் அப்பாவிற்குத்தான் சிரமம். எனக்கு பயமும் ஆர்வமும்

கலந்தே இருந்தது. நான் மனனம் செய்ததை அப்பாவிடம் ஒப்புவித்தேன்,இங்கும்

அங்குமாய் மாற்றங்கள் செய்து எனது பேசும் தொணியையும் சரி செய்தார்.

அவருக்கு அன்றைய தமிழர் திருநாள் மேடை பேச்சுகள் நல்ல பயிற்சி

அளித்திருந்ததை என்னால் காண முடிந்தது.


திருவள்ளுவர் படிப்பகத்தின் புதிய தலைவராக கிருஸ்ணன் அண்ணன்

பொருப்பேற்றிருந்ததை தோட்ட மக்கள் வரவேற்றார்கள்.அவரோடு எங்கள்

தோட்டத்து பல்கலைக்கழக மாணவர்களும்,வேண்டோ கல்லூரி மாணவர்களும்

சேர்ந்தே தேசிய தின கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தாங்க.

இன்றுவரையிலும் அப்படி ஒரு நிகழ்ச்சியை எங்கள் தோட்டம் சந்திக்கவில்லை.

எங்கள் தோட்டத்தின் இன்னொரு பலம் செந்தமிழ் ஆர்ட்ஸ் இசைக்குழுவினர்.

குப்பன் மண்டோர் என்ற இயற்பெயரைவிட இளையராஜா என்ற

பட்டப்பெயர்தான் அவரை ஊர் அரியச் செய்தது.

நினைத்துப் பார்த்தால் அன்றைய இளஞர்கள் பலர் நல்ல

மேடைப்பாடகர்களாகத் திகழ்ந்தமைக்குத் தோட்டப்புரம் வகுத்த

இசைக்குழுக்களும் மேடை நாடகங்களுமே காரணம் என்பது எத்தனை

உண்மையாக இருக்கின்றது. இன்று இந்த கலை மக்கி,மறந்து,மண்ணோடு

மண்னாய் புதைந்து போய்க் கொண்டிருப்பதை எண்ணினால் வருத்தம்தான்

மேலோங்குகிறது. இப்படி பல சிறப்புகளோடு நடந்தேரிய அந்த விழாவில்

பேச்சுப்போட்டியில் நான் பெற்ற முதல் பரிசையும்,தெனாலிராமனாக நான் ஏற்ற

பாத்திரத்தையும் பார்த்து தோட்டமே பாராட்டியது என்னை

மட்டுமல்ல,அப்பாவையும் தான்.
திருவிழா இம்முறை என்னவோ கொஞ்சம் அதிகமாகவே கலை

கட்டியிருந்தது.என்னவோ மீண்டும் நாங்கள் தோட்டத்திலேயே குடி வந்துவிட்டது

போல் ஒரு இன்ப உணர்வு என்னுள் மீண்டும் மீண்டும் பரவசம்

கொண்டது.தெரிஞ்சவங்க,அக்கம் பக்கம் வசிச்சவங்க,பள்ளியில படிச்சவங்கன்ணு

பலர் இம்முறை வந்திருந்தது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.பலரும் அப்பாவிடம்

சிரித்துப் பேசுவதைப் பார்த்தேன், எதுவும் நிறந்தரம் அல்ல என்பது

படிப்பினையானது.

ஆம் தோட்டத்து ‘யூனியன்’ காரியதரிசியாய் அப்பா தேர்வானபோது

எத்தனைப் போராட்டம்?.அப்பா எப்பவுமே போராட்ட குணத்தைக் காட்டாம

பொருமையா இரண்டு தரப்புக்கும் சாதகமாதான் முடிவு செய்வாரு.நானே கூட

பல முறை அவரின் சாதூரியத்தை எண்ணி வியந்திருக்கிறேன்.தோட்டத்து

மேலாளர்களும் அப்பா காரியதரிசியா தேர்வானதுக்கு அப்புறம் தங்களின்

போக்கில் கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை

கொண்டிருந்தாங்கன்னுதான் சொல்லனும். “ அய்யா,அவங்க

படிச்சவங்க மேலிடம் சொல்லுரத தொழிலாளியான நம்பகிட்ட கொஞ்சம்

அதிகாரத்தோட திணிக்கப் பாப்பாங்க. நாம நிதானமா நம்ம தேவையையும்,

நெலமையையும், பொருமையாவும், உண்மையாகவும், சரியான காரணத்தோடும்

எடுத்துச்சொல்ற விதத்துலதான் நம்முடைய வெற்றி இருக்கு”.அப்பாவின்


இத்தகைய பண்புதான் தோட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு பிறச்சனைகளுக்குத் தீர்வு

காண்பதில் பின்புலமாய் இருந்தது,தோட்ட மேலாளர்களையும் கவர்ந்தது.

குப்புசாமி பெரிய ‘கிராணியும்’,அப்பாவும் கோயிலுக்குள் ஒன்றாக

நின்று,திருவிழா பூசைகளில் கலந்துச் சிறப்பித்துக் கொண்டிருந்தனர். ”இதுதான்

காலங்கிறது, முதலாளியையும் தொழிலாளியையும் ஒன்னா சேர்த்துவச்சி

வேடிக்கைப் பாக்குதுபாரு”,திருவிழாக் கூட்டத்தில்,அவ்வளவு சத்தத்தினூடே

யாரோ கூறியதைக் கேட்டு புண்ணகைத்தவாரே எங்களோடு சேர்ந்து பலரும்

திருப்பிப்பார்க்கையில்,கோயில் பூசாரி கருவரை திரை நீக்கி தீபாராதணை காட்ட

சிவ சிவ என்று இரு கரம் கூப்பி மேலெழுந்தது.

“அப்போ நாங்க போயிட்டு வர்ரோம்,வேரேதும் நிகழ்வுனா தகல்

சொன்னாபோதும் நிச்சயம் வந்து கலந்துப்போம்”,கோயில் தலைவர்

சுப்ரமணியிடம் அப்பாவோடு நாங்களும் விடைபெற்றுக் கொண்டோம். வண்டி

தோட்டப்புறச் சாலையில் மெதுவாகச் சென்றது,முன்பு போல் எங்கள் தோட்டம்

காட்சியளிக்காவிட்டாலும்,நினைவுகள் அப்படியே இருந்தது.நரைத்த

முடி,குழிவிழுந்த கண்ணம்,மூக்குக் கண்ணாடி,அனுபவத்தைக் காட்டும்

முகச்சுறுக்கம் என அப்பா முழுவதுமாய் மாரியிருந்தார்.

You might also like