Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

பெருந்தலைவர் காமராசர்

தன்னலமற்ற தலைவர், கர்மா வீரர், கல்விக்கண் திறந்த முதல்வர், யழைப்பங்காளன் - காமராசர்

பிறந்த இடம் - விருது நகர்

பெற்றோர் - குமாரசாமி - சிவகாமி

காலம் - 15.07.1903 - 02.10.1975

மெய்கண்டான் புத்தக சாலைக்குச் சென்று லெனின்,கரிபால்டி, நெப்போலியன் ஆகியோரின் வாழ்ககை


வரலாறுகளை ப் படித்துத் திறமையாக பேசவும் வாதம் புரியவும் தொடங்கினார்.

இளமையில் தேசிய இயக்கமான காங்கிரஸில் சேர்ந்து சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாகிரகம்,

வெள்ளையனே வெளியேறு முதலிய போராட்டங்களில் கலந்து கொண்டார்.

சத்யமூர்தத
் ி காமராசரை காங்கிரஸ் கட்சியின் செயலாளராக நியமித்தார். காமராசரின் அரசியல் குரு

சத்யமூர்தத
் ி.

காமராசர் 1937-ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்நதெ


் டுக்கப்பட்டார். 1939 ல் தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ்

கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

12 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தார்.

1945 ல் பிரகாசம், 1947 ல் ஓமந்தூர் இராமசாமி மற்றும் 1949 ல் குமாரசாமி ஆகியோர் முதலமைச்சராகப்

பதவியேற்பதற்குக் காரணமாக இருந்தார்.


நேருவின் மறைவுக்குப்பின் லால் பகதூர் சாஸ்திரியையும், சாஸ்திரியின் மறைவிற்குப் பின் இந்திரா

காந்தியையும் நட்டான் பிரதமராக ஆக்கியத்தில் பெரும் பங்கு வகித்தார். அதனால், தலைவர்களை

உருவாக்குபவர் என் இவர் அழைக்கப்பட்டார்.

1954 ல் காமராசர் முதல்வர் பதவியிலிருந்து விலகியதும், காமராசர் முதல்வர் பதவிக்கு

தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963 ல் தாமாகப் பதவி விலகும் வரை அப்பதவியில் செயல்பட்டார்.

காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னர் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழில்

அமைச்சராகவும், சி. சுப்ரமணியம் கல்வி அமைச்சராகவும் இருந்தனர்.

காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் 2-வது, 3 வது ஐந்தாண்டுத் திட்டங்கள்

நிறைவேற்றப்பட்டன.

அப்போது, தமிழகத்தில் பொருளியல் தொழில்துறை திட்டங்கள் பல தொடங்கப்பட்டன. மின் திட்டங்கள்

மிகுந்தன. சாலைகள் போடப்பட்டன.

கிண்டி, அம்பத்தூர், இராணிப்பேட்டை முதலிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன.

வேளாண்மைக்கென பாசன வசதிகள் செய்யப்பட்டன. அணைகள் கட்டப்பட்டன.

கூட்டுறவு சங்கங்கள் திறக்கப்பட்டன.

நெசவுத் தொழில் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் தீடட


் ப்பட்டன.

தொழிற்சாலைகள் பல தொடங்கப்பட்டன. காமராசர் காலத்தில் கட்டாயக்கல்வி முறை

அமல்படுத்தப்பட்டது.தெரு தோறும் தொடக்கப்பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி என்பதே

காமராசரின் நோக்கமாக இருந்தது.பள்ளி வேலை நாள்களை 180 லிருந்து 200 ஆக உயர்த்தினார்.

தொடக்கப் பள்ளிகளில்mathiya உணவுத் திட்டம் காமராசரால் தொடங்கப்பட்டது.


இவர் 2 ஆண்டுகளில் 133 மாநாடுகள் கூட்டினார். இவ்வாறு கூட்டப்பட்ட மாநாடுகள் மூலம் பல கோடி

ரூபாய் நிதி கிடைத்தது. இந்த நிதி மூலம் பல கல்லூரிகள் திறக்கப் பட்டன.

தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு 60%

பங்கு கிடைக்க வழி வகை செய்தார். நாளாகி சீரத


் ிருத்த சட்டம் இவரால் கொண்டு வரப்பட்டது.நிலா

முதலாளிகளிடம் உபரி நிலங்கள் பெறப்பட்டு நிலமில்லாதோர்க்கு பிரித்தளிக்கப்பட்டன.

1962 ம் ஆண்டு சீன படையெடுப்புக்குப் பின் , காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குச் ஷரியத்

தொடங்கியது. எனவே,கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகி

கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராசர் வலியுறுத்தினார். இதற்காக முதலில் தாமே

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப் பணிக்குத் திரும்பினார்.

மொராஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி முதலியோரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கட்சிப்

பணியில் ஈடுபட்டனர். அத்திட்டத்தைக் காமராசர் திட்டம் என அழைத்தனர்.

1963 ல் புவனேஸ்வர் நகரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின்

தலைவராகப் பொறுப்பேற்றார்.

1964 ம் ஆண்டு நேரு இறந்தவுடன், லால் பகதூர் சாஸ்திரியை போட்டியின்றி பிராமராக தேர்ந்தெடுக்க

வழிவகை செய்தார். பின்னர் சாஸ்திரி 1966 ம் ஆண்டு தாஷ்கண்டில் இறந்தார். இச்சமயம் இந்திரா

காந்தியை பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று கருதி பிரதமர் பதவியில் அமர்த்தினார்.

காமராசருக்கு நடுவண் அரசு பாரத ரத்னா விருது அளித்தது. நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர

வெண்கலச்சிலையை நிறுவி சிறப்பித்தது. தமிழக அரசு மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை

காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டியது.


கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபமும், மெரினா கடற்கரைச் சாலையில் சிலையமைத்துச்

சிறப்பித்தது.

காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருது நகர் இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.

தேனாம்பேட்டையில் காமராசர் அரங்கம் நிறுவப்பட்டது. தமிழக அரசு காமராசர் பிறந்த நாளான ஜூலை

15 ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது. இவரை கல்விக்கண் திறந்தவர் எனத் தமிழகம்

போற்றுகிறது.

மு.வரதராசனார் கடிதம் (தம்பிக்கு)

ஆக்க வேலைமுறைகள் இன்ன இன்ன என்று வகுத்து அனுப்புமாறு எழுதியிருக்கிறாய், எழுதுவேன்.

அதற்குள் ஒன்று சொல்ல விரும்புகின்றேன்.

தமிழர்கள் கூடிக்கூடி இன்னது செய்து உயந்தார்கள் என்று சொல்லும் நற்சொல்லே இனி வேண்டும்

சேர்ந்து செயல் செய்து உயரும் வல்லமை தமிழர்க்கு உண்டு என்பதை இனி உலகுக்கு உணர்த்த வேண்டும்.

தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒருமைப்படுத்தவல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி

மொழியாகவுமானால் தவிர்த்த தமிழுக்கு எதிர்காலம் இல்லை. கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை,

விற்பனைசீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக.

தமிழ் தெரியாதவர்களிடத்தில் மட்டும் தமிழில் பேசு.மற்றவர்களிடத்தில் தமிழில் பேசு என்று

கூறியவர்.திருமணம், வழிபாடு முதலியவற்றைத் தமிழிலில் நடத்துக என்றார்.

சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்க கற்றுக்கொள்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற செம்மொழியைப் போற்று என்று கூறியவர்.

ஒற்றுமையான பகுதிகளை மட்டும் எடுத்துக் பேசுக.வேற்றுமைப்பகுதிகளை வற்புறுத்திப் பேசினால்

பொது வேலை நடக்காது.


வெளிநாட்டுத் துணிகளை மறப்பது போலத் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத

செய்தித் தாள்களை விலக்கு. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உடையவர் நடத்தும் உணவு விடுதி,

மருந்துக்கடை, துணிக்கடையில் வாங்குக. தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளிகளால் செய்யப்பட்ட

பொருள்களையே வாங்கு.

உன் மொழியையும் நாட்டையையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே;

பழிக்காதே, வெறுக்காதே.

தமிழர்களிடையே உள்ள பகை. பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களைச் செய்யாதே; அத்தகைய

சொற்களைச் சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே.

தமிழர்களிடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தை, சொல், செயல்களையே போற்று. சுவையாக இருந்தாலும்

முன்னாவையை நாடாதே. சுவையற்றிருந்தாலும் பின்னவையைப் போற்று.

கொள்கைகள், காட்சிகள், இயக்கங்களை விட நாட்டு மக்களின் நன்மையே பெரிது என்று உணர்க

என்றார்.

வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், பிட்சை எடுத்தல் முதலிய கொடுமைகள் ஒழிய வேண்டும். ஏழை

என்றும் அடிமை என்றும் இல்லை என்று பாரதியார் கண்ட கனவைப் போற்று என்று கூறியவர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நிலை வர வேண்டும் உலகம் ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று

ஆர்வம் கொள் என்றார்.

உலகத்திற்குப் பொதுவான ஒரு சிறந்த ஆட்சிமுறை ஏற்படும்வரை நம் நாட்டை நாம் தவறாமல் காத்துக்

கொள்ள வேண்டும். இது இன்றியமையாத கடமை என்று உணர்ந்து கொள் என்று கூறினார்.

உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது


உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது

உன் நலத்தை விட நாட்டின் நலன் சிறந்தது என்று உணர்.

தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும். நீ அதைத் தேடி அலையாதே. தலைமை

தங்குவதும் ஒரு தொண்டுதான்.

தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து என்று கூறினார்

அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால்தான் வீழ்ச்சி நேர்நத


் து என்கிறார் விவேகானந்தர்.

பொது நலத்திற்காகக் கட்டுப்படுத்தல், கீழ்ப்படிதல், தொண்டு செய்தல் இவற்றைப் பெருமையாகக்

கொள் என்கிறார்.

உலகளாவிய தமிழர்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழினத்தின்

தொன்மையைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

235 நாடுகளில் ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது. அவற்றுக்கு 20 நாடுகளில்

இலட்சத்திற்கும் பெறப்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.

வாணிகம், வேலை வாய்ப்பு ஆகிய காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்குச்

சென்றார்கள்.திரைகடலோடியும் திரவியம் தேடு என்கிறார்-ஒளவையார். சாதுவன் வாணிகம் செய்யும்

பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.

தமிழர் சிங்கப்பூர், மலேஷியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும்

திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். பரப்பளவில் சிறியதான ரியூனியன் தீவிலும்

தமிழர்கள் உள்ளனர்.

You might also like