கட்டுரை 4

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

சிறுகதை 4

“அந்த அறைக்குள்ள போய் அடிக்கடி கதவைச்


சாத்திக்குற...அப்படி என்னடா ஆரய்ச்சி செஞ்சிகிட்டு இருக்க?”
என்று அமுதனின் அம்மா இம்முறை சத்தமாகவே
கேட்டுவிட்டார்.அமுதனோ இன்று மாலை நடக்கவிருக்கும்
ஆராய்ச்சியையே நினைத்துக் கொண்டு அறையை விட்டு
வெளியில் வந்தான்.

அமுதன் தினமும் பள்ளி முடிந்து வந்து சாப்பிட்டதும்


அவ்வறைக்குள் நுழைந்து எதையாவது உருட்டிக்
கொண்டிருப்பது அவனுடைய அம்மாவிற்குப் பிடிக்கவே
இல்லை

கோபாலன் த/பெ மணிமாறன்


சிறுகதை 4

நான் செய்யப் போகும் இந்த ஆராய்ச்சி வெற்றியில் முடிந்தால்


இந்த உலகமே வியக்கும், அல்லவா? அப்பொழுது தெரியும்
முரளிக்கும் சிவாவுக்கும்..... என்று அம்மா சொன்னது கூட
காதில் வாங்கிக் கொள்ளாமல் மனதிற்குள் முணுமுணுத்துக்
கொண்டே சிவா உள்ளே சென்றுவிட்டான்.

“உன்னால ஒன்னுமே செய்ய முடியாதுடா... ஹா! ஹா!”

“ஆமாம்... இவனுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தமே இல்ல...


இவரு போய்...”

சிவாவும் முரளியும் நேற்று வகுப்பறையில் உதிர்த்த அந்த


வார்த்தைகள் அமுதனின் மனதிற்குள் அலைமோதிக்
கொண்டிருந்தன.

அன்று மாலை தேசிய வகை பூச்சோங் தமிழ்ப்பள்ளி


மாணவர்கள் தத்தம் திறமைகளைக் காட்டுவதற்காக பள்ளி
மண்டபத்தில் கூடிவிட்டனர்.அமுதன் கொஞ்சம் தயக்கத்துடன்
மேடையில் ஏறி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேசையில்
அறிவியல் பொருட்களை வைத்தான்.முரளியும் சிவாவும்
அவனைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தனர்.

கோபாலன் த/பெ மணிமாறன்


சிறுகதை 4

அமுதனின் முறை வந்ததும் அவனுடைய ஆராய்ச்சியைப்


பற்றி விளக்கினான்.

“இதுவொரு அவசர உயிர்வளி களன்.உயிர்வளியை இதுல


நிறைச்சிட்டா அவசரத்துக்கு உடனே மூக்குல மாட்டிகிட்டு பத்து
நிமிடம் வரை தண்ண ீல இருக்கலாம்.பொதுமக்கள் யாரு
வேணும்னாலும் பயன்படுத்தி உடனுக்குடன் உயிரைக்
காப்பாத்த ஏதுவாக இருக்கும்னு கண்டுபிடிச்சிருக்கேன்,” என்று
அவன் சொல்லி முடித்த்தும் அரங்க்கமே ஆச்சரியத்தில்
மூழ்கியது.

அன்றைய நாள் அறிவியல் விழாவில் அமுதனின்


கண்டுபிடிப்பே முதல் நிலையில் தேர்வாகி அனைவரின்
பாராட்டையும் பெற்றது.

“நண்பா! உனக்கு எங்களோட வாழ்த்துகள்... ஆரம்பத்துல டீச்சர்


கேட்டபோது நீ அறிவியல் விழால கலந்துக்க மாட்டேனு
சொல்லிட்ட... உன் திறமைய பற்றி எங்க்களுக்குத்
தெரியும்.அதான் அறிவியல் ஆசிரியர்கிட்ட கெஞ்சி உன் பேரைச்
சேர்த்துக்கச் சொல்லிட்டு, உன்னையும் கேலி செய்ற மாதிரி
சீண்டினோம்.எங்கள தப்பா நினைச்சிறாதே,” என்று முரளி

கோபாலன் த/பெ மணிமாறன்


சிறுகதை 4
சொல்லி முடித்ததும் கண்ணர்ீ ததும்ப அவர்கள் இருவரையும்
கட்டியணைத்தான் அமுதன்.

கோபாலன் த/பெ மணிமாறன்

You might also like