Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

விருச்சிக லக்னம்:  வலிமையான கால்கள், திரண்ட தோள்கள்,

வேகமான நடை, தோற்றத்தில் முரட்டுத்தனம் இருக்கும். எப்போதும்


உற்சாகமான மனதை கொண்டவர்கள், பேச்சில் வன்மையும், அதே
நேரம் ஒரு அதிகாரமும் இருக்கும்.
குரூர சுபாவம் இருக்கும்.  உறவினர்களுக்கு
விரோதமானவர்கள்.  எடுத்த காரியத்தை தொடர்ந்து செய்ய
முடியாதவர்கள்.  காம இச்சைஅதிகம் உள்ளவர்கள். அதே நேரம் தன்
மனைவியிடம் அதிக ஆசை உள்ளவர்கள்.  சில சமயம் கலகம்
செய்வார்கள். ஆனால் சாஸ்த்திரப்படி நடப்பவர்கள். மிடவும்
ரகசியமாக காரியங்களை செய்பவர்கள்.   வேஷதாரிகள்.  அளவுக்கு
மீ றிய ஆசை உடையவர்கள்.  சமூகத்துக்கு விரோதமான காரியங்கள்
செய்பவர்களுடன் தொடர்புள்ளவர்கள். இவர்களை நம்பி எந்த
காரியத்திலும் இறங்க முடியாது. இரசயான துறை சுரங்க தொழில்,
சித்த வைத்யம், குதிரை பந்தயம், சூதாட்டம், காபரே நடனத்
தொழில் போன்றவை நடத்துவார்கள்.  விவசாயம், ஸ்போர்ட்ஸ்
தொழில் மின்வாரியம் போன்றவையும் அமையலாம்.  மாதவிடாய்
கோளாறுகள், குடலிறக்கம், ஹிரண்யா, மறைவிடம் சம்பந்தமான
மர்ம நோய்கள், போன்றவை இவர்களுக்கு வரலாம்.

விருச்சிகம் லக்னத்திற்குறிய தொழில்கள்:

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நவகிரகங்களில் முதன்மை


கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் 10 ம் அதிபதியாவார். 10 ம்
அதிபதி சூரியனானவர் ஒரு வட்டு
ீ அதிபத்யம் கொண்டவர்.
நவகிரகங்களுக்கெல்லாம் அரசனாகவிளங்கக்கூடிய  சூரிய
பகவானை ஜீவன ஸ்தானாதிபதியாக பெற்ற பெருமை விருச்சிக
லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உண்டு.
சூரியன் ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதி செவ்வாயின்
சேர்க்கையுடன் குரு பார்வை பெற்றிருந்தாலும், தனக்கு நட்பு
கிரகங்களான செவ்வாய், சந்திரன் குரு போன்றவற்றின் வடுகளில்

அமைந்திருந்தாலும் சமுதாயத்தில் கௌரவமான பதவிகளை
வகிக்கக்கூடிய யோகம், அரசு, அரசு சார்ந்த துறைகளில்
அதிகாரமிக்க பதவிகளை வகிக்கக்கூடிய வாய்ப்பு சிறப்பாக
அமையும். சூரிய பகவான் குரு, செவ்வாய்சேர்க்கையுடன் கேந்திர
திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்திருந்தாலும்
மேற்கூறிய நற்பலன்களை அடைய முடியும். 10 ம்  வட்டில்

சுக்கிரன், சந்திரன் இணைந்திருந்தாலும் சூரியன், சுக்கிரன், சந்திரன்
போனற் கிரக சேர்க்கைகள் 9,10,12 ம் வடுகளில்

அமையப்பெற்றிருந்தாலும் கடல் கடந்து அந்நியநாடுகளுக்குச்
சென்று சம்பாதிக்கக்கூடிய  வாய்ப்பு அமையும்.

சூரியன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10 ல் அமைந்து குரு பார்வை


பெற்றால் கூட்டுத் தொழில் முலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும்.
சுக்கிரன் 10 ல் அமையப் பெற்றால் ஆடை, ஆபரணம்,கலைத்துறை,
பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள்போன்றவற்றால் சம்பாதிக்கும்
வாய்ப்பு உண்டாகும்.

சூரியன் , புதன் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்று 10 ல் அமையப்


பெற்றால் கணக்கு வழக்கு தொடர்புடைய தொழில்,வணிக
தொழிலில் ஏற்றம் ஏற்படும். சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று
பலம் பெற்றால் நிர்வாகத் தொடர்புடைய தொழில், அதிகார பதவி,
பூமி,மனை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஏற்றம்
உண்டாகும். சூரியன்,செவ்வாய் பலமாக சேர்க்கை பெறுவதுடன் சனி
பகவானும்ஆட்சி உச்சம் பெறுவாரேயானால் மக்களால்
தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவி தேடி வரும். சூரியன்,
சந்திரன்,செவ்வாய், கேது போன்ற நட்பு கிரக சேர்க்கை
பெற்றிருந்தால் மருத்துவத்துறையில் பல சாதனைகள்
செய்யக்கூடிய அமைப்புஏற்ஙபடும்.
குரு, புதன் இணைந்து 10 ம் வட்டில்
ீ அமையப் பெறுமேயானால்
வாக்கால், பேச்சால் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். 10 ம்
வட்டில்
ீ சந்திரன், ராகு அல்லது சந்திரன் கேது சேர்க்கை
பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் போன்ற துறைகளில்
சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். விருச்சிக லக்னத்திற்கு
ஜீவனாதிபதியாகிய சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமைந்து
சுபர் பார்வையுடனிருந்ஙதால் சமுதாயத்தில் கௌரவமான நிலை,
கை நிறையசம்பாதிக்கக்கூடிய யோகம்  உண்டாகும். அதுவே 10 ம்
அதிபதி சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி,ராகு சேர்க்கைப்
பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் அமைப்பு,
அதிலும் சுபர் பார்வையின்றி இருந்து விட்டால் சட்டத்திற்கு
விரோதமான வகையில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
சனி, ராகு சேர்க்கையுடன் சூரியன் 8,12 ஆகிய மறைவு
ஸ்தானங்களில் அமைந்தாலும் ஜாதகருக்கு நிலையான
வருமானமில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய சூழ்நிலை
உண்டாகும். 

விருச்சிகம்:

1. விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி


பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய பரணி, கார்த்திகை, அஸ்தம்,
உத்திரம் நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.

2. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று


பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும்
விலைமதிப்புள்ள இரத்தினக்கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள்
மற்றும் உலோகபாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு
செய்யவும் பத்திரங்கள் வாங்கவும், அவற்றை தமது பெயரில் ரிஜிஸ்டர்
செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், பூரம், பூராடம்,
உத்திராடம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து
வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.

3. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு


கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ,
தொலைக்காட்சிப்பெட்டி, செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு
இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள
விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட,
நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய
ஆரம்பிக்க, வடு,
ீ நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய,
வட்டுக்கு
ீ மின் இணைப்பு குறித்துவிண்ணப்பம்செய்ய திருவோணம்,
அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால்
மேன்மையான பலன்கள் உண்டாகும்.

4. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க


தொடங்க, வடு
ீ கட்ட ஆரம்பிக்க, கட்டிய வட்டை
ீ வாங்க, கலைப்பொருட்கள்
வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி
அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய,
பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை
தன் பெயருக்கு மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள்,
கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய,
பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி
துவங்க, சுவாதி, சதயம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.

5. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - வேதங்கள், மந்திரங்கள் படிக்க


தொடங்க,சமயம் சார்ந்த பணிகளை துவங்க, உல்லாச சுற்றுலா செல்ல,
காதல் விசயங்களை ஆரம்பிக்க நோயிலிருந்து விடுபட மருத்துவரைச்
சந்தித்து சிகிச்சை பெற, சங்கீ தம் - வாய்ப்பாட்டு இசைக்கருவிகள்
இவைகளை கற்க ஆரம்பிக்க, சினிமா மற்றும் சீரியல் எடுக்க ஆரம்பம்
செய்ய, விருந்து விழாக்கள் நடத்த, கிளப்புகள் ஆரம்பிக்க, குழந்தை செல்வம்
கிடைக்க வேண்டி முயற்சிகள் செய்ய, கோயில்களில் வேண்டுதல்கள்
செய்ய, புத்திரப்பேறு வேண்டி யாகங்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி
மருத்து சிகிச்சைகள் செய்ய, அனுசம், உத்திரட்டாதி, கேட்டை, ரேவதி ஆகிய
நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வர மேன்மையான பலன்கள்
உண்டாகும்.

6. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள்


வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக
வேலைக்கு சேருதல் வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வட்டு

பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வட்டை

வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில்
வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, அசுவனி,பரணி
ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
7. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக
புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம், மதிப்பு வேண்டி செய்யும்
காரியங்களை துவங்க, திருமணத்திற்க்கு வரன் தேட துவங்க, பெண்
மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம்
வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை
மீ ட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார
விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த உத்திரட்டாதி, ரேவதி, அஸ்தம்
ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான
பலன்கள் கிடைக்கும்.

8. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி


போட ஆரம்பிக்க மேன்மை தரக் கூடிய நட்சத்திரம் திருவாதிரை,
புனர்பூசம்.

9. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள்,


மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக,
தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத்துவங்கவும், புண்ணிய ஸ்தல
யாத்திரைகள் செல்ல துவங்கவும், ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான
முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீ ல்
மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீ க நூல்கள் வெளியிட
துவங்கவும் உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும்,
நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல
ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் செய்ய தொடங்கவும்,
தர்மகாரியங்கள் செய்ய துவங்கவும், பூசம், அனுசம், ஆயில்யம், கேட்டை
ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான
பலன்கள் உண்டாகும்.

10. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை


துவங்கவும் தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள்
செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப்
பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவியிலிருப்பவர்களைச்
சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று
சந்திக்கவும் தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள்
பெறவும். அசுவனி, பரணி, பூரம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

11. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய நண்பர்களின் நட்பை


வலுப்படுத்த, அவர்களைச் சென்று சந்திக்கவும், தனக்கு ஆலோசகர்களை
நியமித்து கொள்ளுவதற்கும், தன்னுடைய ஆதரவாளர்களைச் சென்று
சந்தித்து தனக்கு அதரவு பெறவும்,தான் எடுத்த காரியங்களில் குறைந்த
முயற்சியில் வெற்றி பெறவும், முன்னேற்றம் பெறவும், லாபம் பெறவும்,
தனக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து சாப்பிட துவங்கவும், ஆபரேசன்
சுகமாய் நடந்து மகிழ்ச்சி பெறவும், தனக்கு ஏற்பட்ட பொருட்சேதத்தை
புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கவும், கம்பெனிகள், சபைகள்சங்கங்கள்
ஆரம்பிக்க, முன் காரியங்கள் செய்ய தொடங்க மிகவும் உகந்த
நட்சத்திரங்கள் - திருவோணம், அவிட்டம், அஸ்தம், சித்திரை ஆகியவை.
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில், மேல் கூறிய காரியங்கள் செய்ய
துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

12. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு


வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு
செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய
ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல் ஆகிய காரியங்கள் செய்ய துவங்க
வேண்டிய நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, புனர்பூசம், விசாகம்
ஆகியவை, மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம் வரும்
நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள்
கிடைக்கும்.

You might also like