Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

ஶ்ரீ-ஶங்கரப4க3வத்பாதா3சார்ய-பரம்பராக3த-மூலாம்நாய-
ஸர்வஜ்ஞபீட2-
ஶ்ரீ-காஞ்சீ-காமகோடி-பீட2-ஶ்ரீமட2-ஸம்ஸ்தா2நம்

॥அயோத் 4யா-பூ4மி-பூஜா-ப்ரார்த2நா॥

அயோத்தி ஶ்ரீ ராம ஜந்ம பூமி — பூமி பூஜை

5-8-2020 அன்று நமது பாரத பூமியில் அயோத்தி மாநகரில்


ஶ்ரீ ராம ஜந்ம பூமியில் ப்ரம்மாண்டமான ஶ்ரீராமர் ஆலயம்
அமைக்க பூமிபூஜை செய்யப்படவுள்ளது.

ஶ்ரீ வேத வ்யாஸ மஹர்ஷிகளால் அருளிச்செய்யப்பட்ட


ப்ரஹ்மாண்ட மஹாபுராணத்தில் உத்தரபாகத்தில் ‘காஞ்சீ

1
காமாக்ஷீ தேவீ வர்ணனம்’ எனப்படும் 39ம் அத்யாயமும்
‘காஞ்சீபுர மாஹாத்ம்யம்’ எனப்படும் 40ம் அத்யாயமும்
உள்ளன. இதில் 40ம் அத்யாயத்தில் ஶ்ரீ தசரத மஹாராஜா,
காஞ்சீ க்ஷேத்ரத்தில் ஶ்ரீ காமாக்ஷி அம்பாளை ஸ்தோத்ரம்
செய்த ச்லோகங்கள் உள்ளன (124–129).

அன்றைய புண்யதினத்தில் அனைவரும் இந்த ஸ்தோத்ரத்தை


பாராயணம் செய்ய வேண்டும் என்றும் “ஶ்ரீராம ஜய ராம ஜய
ஜய ராம” என்ற மஹாமந்த்ரத்தை 108 முறையாவது ஜபம்
செய்யவேண்டும் என்றும் ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய
ஸர்வஜ்ஞ பீடாதிபதிகள் ஶ்ரீ ஶங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ
ஶங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளியுள்ளார்கள்.

அன்றைய தினம், அயோத்தியில் ஶ்ரீராமர் கோவில் கட்ட


வேண்டும் என்று முழுமுயற்சி மேற்கொண்ட ஶ்ரீ காஞ்சீ
காமகோடி பீடத்தின் 69வது ஆசார்யர் ஶ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ
ஶங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்களின் வார்ஷிக ஜயந்தி
(ஆடி அவிட்டம்) இயற்கையாகவே அமைந்துள்ளது ஶ்ரீராம
பிரானின் திருவுள்ளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2
॥த3ஶரத2மஹாராஜக்ரு’தா காமாக்ஷீஸ்துதி:॥
பாதா3க் 3ர-லம்பி3-பரமாப4ரணாபி4ராமே
மஞ்ஜீர-ரத்ந-ருசி-மஞ்ஜுல-பாத3-பத் 3மே |
பீதாம்ப3ர-ஸ்பு2ரித-பேஶல-ஹேம-காஞ்சி
கேயூர-கங்கண-பரிஷ்க்ரு’த-பா3ஹு-வல்லி||124||
திருவடியின் முன்பகுதியில் பொருந்தியிருக்கும் உத்தம
ஆபரணமாகிய (மெட்டியால்) அழகுற இருப்பவளே! கொலுசில்
பொருந்தியிருக்கும் ரத்னங்களின் ப்ரகாசம் கூடி மிளிரும்
திருவடித் தாமரையினளே! மஞ்சள் நிற ஆடையில் மினுக்கும்
அழகிய தங்க ஒட்டியாணம் கொண்டவளே! கொடியனைய
(கீழ்) கைகளில் தோள்வளை மற்றும் கங்கணங்களால்
அலங்கரிக்கப்பட்டவளே!
புண்ட் 3ரேக்ஷு-சாப-விலஸந்-ம்ரு’து3-வாம-பாணே
ரத்நோர்மிகா-ஸும-ஶராஞ்சித-த3க்ஷ-ஹஸ்தே |
வக்ஷோஜ-மண்ட3ல-விலாஸி-வலக்ஷ-ஹாரே
பாஶாங்குஶாங்க3த3-லஸத் 3-பு4ஜ-ஶோபி4தாங்கி3||125||
செங்கரும்பு வில் துலங்கும் மிருதுவான இடது (கீழ்)
கையினளே! ரத்ன மோதிரமும் மலர் அம்புகளும் விளங்கும்
வலது (கீழ்) கையினளே! மார்பின் மேல் தவழும் வெண்ணிற
(முத்து) மாலையினளே! பாசம், அங்குசம், தோள்வளைகள்
ஆகியவற்றை தரித்த (மேல்) கைகளால் ப்ரகாசிக்கும்
வடிவினளே!

3
வக்த்ர-ஶ்ரியா விஜித-ஶாரத3-சந்த் 3ர-பி3ம்பே3
தாடங்க-ரத்ந-கர-மண்டி3த-க3ண்ட3-பா4கே3|
வாமே கரே ஸரஸிஜம் ஸுபி3ஸம் த3தா4நே
காருண்ய-நிர்ஜ2ரத3பாங்க3-யுதே மஹேஶி||126||
முகத்தின் அழகால் சரத்காலத்தின் சந்த்ர மண்டலத்தை
வென்றவளே! காதணிகளின் ரத்னங்களின் கிரணங்களால்
அலங்கரிக்கப்பட்ட கன்னத்தை உடையவளே! மென்மையான
தண்டுடைய தாமரையை இடது கையில் தரித்தவளே!
கருணை பொங்கும் கடாக்ஷத்தையுடையவளே! மஹேச்வரி!
மாணிக்ய-ஸூத்ர-மணி-பா4ஸுர-கம்பு3-கண்டி2
பா4ல-ஸ்த2-சந்த் 3ர-ஶகலோஜ்ஜ்வலிதாலகாட் 4யே|
மந்த3-ஸ்மித-ஸ்பு2ரண-ஶாலிநி மஞ்ஜு-நாஸே
நேத்ர-ஶ்ரியா விஜித-நீல-ஸரோஜ-பத்ரே||127||
மாணிக்க மாலை மற்றும் (பல) மணிகளால் ஒளிரும் சங்கைப்
போன்ற கழுத்தினளே! நெற்றி மீதுள்ள பிறைச் சந்திரனால்
ப்ரகாசிக்கப்பட்ட நிறைந்த கூந்தல்கள் பெற்றவளே! மினுக்கும்
புன்முறுவலும் நேர்த்தியாக நாசிகையும் கொண்டவளே!
நீலத்தாமரையின் இதழை வென்ற கண்ணழகினளே!
ஸுப் 4ரூலதே ஸுவத3நே ஸுலலாட-சித்ரே
யோகீ3ந்த் 3ர-மாநஸ-ஸரோஜ-நிவாஸ-ஹம்ஸி |
ரத்நாநுப3த் 3த4-தபநீய-மஹா-கிரீடே
ஸர்வாங்க3-ஸுந்த3ரி ஸமஸ்த-ஸுரேந்த் 3ர-வந்த் 3யே||128||
கொடிபோன்ற அழகிய புருவத்தையும் அழகிய முகமும்
(திலகம் முதலியவற்றால்) நன்கு சித்திரிக்கப்பட்ட நெற்றியையும்
உடையவளே! சிறந்த யோகிகளின் மனத்தாமரைகளிடையே

4
வசிக்கும் பெண் அன்னம் ஆனவளே! ரத்னங்கள்
பதித்த தங்கத்தாலான உயர்ந்த மகுடம் அணிந்தவளே!
அனைத்துறுப்புகளிலும் அழகே அமைந்தவளே! அனைத்து
உயர்ந்த தேவர்களாலும் வணங்கத்தக்கவளே!
காங்க்ஷாநுரூப-வரதே3 கருணார்த் 3ர-சித்தே
ஸாம்ராஜ்ய-ஸம்பத3பி4மாநிநி சக்ர-நாதே2|
இந்த் 3ராதி3-தே3வ-பரிஸேவித-பாத3-பத் 3மே
ஸிம்ஹாஸநேஶ்வரி பரே மயி ஸந்நித3த் 4யா:||129||
ஆசைக்கேற்ப வரமளிப்பவளே! கருணையால் நனைந்த
சிந்தையினளே! ஸாம்ராஜ்ய செல்வத்திற்கும் அதிபதியானவளே!
ஶ்ரீசக்ரத்தின் நாயகியே! இந்த்ரன் முதலிய தேவர்களால் நன்கு
வணங்கப்பட்ட திருவடித் தாமரையினளே! (உலகையாளும்)
ஸிம்ஹாஸனத்தின் ஈச்வரியே! அனைத்திற்பெரியவளே!
என்னிடம் நீ ஆவிர்பவிக்க வேண்டும்!
॥இதி ப் 3ரஹ்மாண்ட3மஹாபுராணே உத்தரபா4கே3
சத்வாரிம்ஶே அத் 4யாயே
லலிதோபாக் 2யாநே த3ஶரத2மஹாராஜக்ரு’தா
காமாக்ஷீஸ்துதி:॥

॥த்ரயோத3ஶாக்ஷரீ-மஹாமந்த்ர:॥
ஶ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம॥

SSS
Translators (Message)
English: Brahmashri Shriramana Sharma
Telugu: Brahmashri Tanjavur Venkatesan

5
Hindi: Smt. Abhilasha Choudhary
Malayalam: Smt. Kala Nathan
Kannada: Shri K. V. Ramaprasad

Translators (Kamakshi Stuti)


Kannada: Vidvan Hittilahalli Mahabaleshvara Bhat
Malayalam: Vidvan Maheshvaran Nambudiri
Tamil: Brahmashri Shriramana Sharma
Telugu: Smt. Kameshvari Jyosyula
Hindi: Shri A Shrinivasan
English: Smt. Vidya Jayaraman

You might also like