Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 53

சூரிய நமஸ்காரம்

செய்வதால் கிடைக்கும்
பலன்கள்!
உங்களுடைய சக்திகள் ஒளிவசும்
ீ அளவிற்கு சூரிய
நமஸ்காரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள்
தொடர்ந்து பயிற்சி செய்து வருகையில், உங்கள் இருப்பு
மட்டுமே கூட, அழகாகவும் மற்றவர்களுக்கு
பயனுள்ளதாகவும் இருக்கும்.

சத்குரு:
அந்த ஒளியில், வெப்பத்தில் நாம் அனைவரும் பலன்
பெறுகிறோம். பிரபஞ்சத்தின் இயல்பே அதுதான். மனிதனும்
இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த வழியில்
இருக்க அவன் விரும்பவில்லை. அப்படியிருக்க
வேண்டுமென்று மனதில் நினைக்க மட்டுமே செய்கிறான்.
மற்றவர் முன்னிலையில் உயர்வாகத் தெரிவது எப்படி
என்று தனக்குத்தானே சில எண்ணங்களை வகுத்துக்
கொண்டு அதன்படி மட்டுமே வாழ்கிறான். இதனால் அவன்
சிறிது மனநிறைவு அடைகிறான். இது ஒரு மிகச்
சாதாரணமான வாழ்க்கை முறை.
உங்களுடைய சக்திகள் ஒளிவசும்
ீ அளவிற்கு சூரிய
நமஸ்காரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள்
தொடர்ந்து பயிற்சி செய்து வருகையில், உங்கள் இருப்பு
மட்டுமே கூட, அழகாகவும் மற்றவர்களுக்கு
பயனுள்ளதாகவும் இருக்கும்.

உங்களுடைய சக்திகள் ஒளிவசும்


ீ அளவிற்கு சூரிய
நமஸ்காரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள்
தொடர்ந்து பயிற்சி செய்து வருகையில், உங்கள் இருப்பு
மட்டுமே கூட, அழகாகவும் மற்றவர்களுக்கு
பயனுள்ளதாகவும் இருக்கும். சூரியன் எப்படி மற்றவர்கள்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்களுக்கு
எப்போதும் பயனுள்ளவனாக இருக்கிறானோ அதேபோல்
நீங்களும் மற்றவர்கள் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும், எதிர்பார்த்தாலும்
எதிர்பார்க்காவிட்டாலும், உங்கள் இருப்பு மற்றவர்களுக்கு
பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் எந்தளவிற்கு நீங்கள்
பிரகாசிப்பீர்கள், ஒளிர்வர்கள்
ீ என்பது நீங்கள் சூரியனை
எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா அல்லது
கட்டிடத்திற்குள் முடங்கிக்கிடக்க விரும்புகிறீர்களா
என்பதைப் பொறுத்தது.
ஒளிர்வது என்றால் என்ன? ஒளிர்வதென்பது நீங்கள் யார்
என்னும் தன்மை சூட்சும நிலையில் வெளிப்படுவதாகும்.
நீங்கள் ஒரு குளிர்ந்த கறி பிண்டமாக இங்கே
அமர்ந்திருந்தால், இங்கே மட்டும்தான் இருப்பீர்கள். சூட்சும
நிலையில் ஒளிர்வதாக இருந்தால், எல்லா இடங்களிலும்
இருப்பீர்கள். இப்போது, நான் ஒளிர்வதாக இருந்தால்,
என்னுடைய இருப்பு, பெரிய அளவில் ஒளிவசும்.
ீ அது ஒரு
பெரிய குடையைப் போல இருக்கும்.

எனவே சூரியனைப் போல ஆகவேண்டும் என்பதற்காக


நீங்கள் சூரியநமஸ்காரம் செய்கிறீர்கள். சூரியனைப் போல்
ஆகிறீர்கள் என்றால், நாளைக் காலையில் எரிந்து
விடுவர்கள்
ீ என்பதல்ல. நீங்கள் ஆகாயத்தில் (ஆகாஷ்)
இருப்பீர்கள் என்பதுதான் பொருள். தற்போது இந்த
பூமியுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால்
சூரியனைப் போல் மாறினால், நீங்களும் ஆகாயத்தில்
இருப்பீர்கள்; அதாவது படைப்பின் பரந்த எல்லையில்
இருப்பீர்கள், குறுகிய எல்லைக்குள் ஒட்டிக் கொண்டிருக்க
மாட்டீர்கள்.

மல்லாடிஹல்லி ஸ்வாமிகள் தினமும் 4008 சூரிய


நமஸ்காரம் செய்து வந்தார். யோகா மூலம் அவர் உடல்
வேதனைகளைக் கடந்து சென்றது மட்டுமல்ல, மிகப்
பலசாலியாகவும் மாறினார், திடகாத்திரகமாக 100 வயதிற்கு
மேல் வாழ்ந்து இறந்தார்.

ஆகாயத்தின் தன்மை உங்களுக்குத் தெரியுமா? சூரிய


குடும்பம் எதனால் விழாமல் இருக்கிறது? முழுச் சூரியக்
குடும்பத்தையும் பிடித்து வைத்திருப்பது எது? அது ஆகாயம்
தான். எனவே நீங்களும் சூரியனின் தன்மையாக
மாறும்போது, ஆகாயத்தின் பிடியில் இருப்பீர்கள்.
அப்படியிருக்கும்போது, உங்கள் வாழ்க்கை அனுபவம்
முழுமையானதாக இருக்கும். அது இனிமேலும்
பொருள்தன்மையைச் சார்ந்ததாக இருக்காது.
எனக்கு முதன்முதலில் யோகா கற்றுக்கொடுத்த
மல்லாடிஹல்லி ஸ்வாமிகள், குழந்தைப் பருவத்தில் ஒரு
ஆஸ்துமா நோயாளியாக இருந்தார். இரவும், பகலும்
அவருக்கு மூச்சுத் திணறல் இருந்துகொண்டே இருக்கும்.
அந்தக் காலகட்டத்தில் அதற்குத் தேவையான
மருத்துவமோ, சிகிச்சையோ கிடையாது.

அவருக்கு 12 வயதிருக்கும்போது, அவர் பெற்றோர்கள்


அவரை ஒரு யோகியிடம் கொண்டு சென்று, அவருக்குக்
குணமளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அந்த
யோகி, “எப்படியானாலும் உங்களுக்கு இந்தப் பையனால்
எந்தப் பிரயோஜனமும் இல்லை. நீங்கள் அவனை
வைத்திருந்தால், அவன் இறந்துவிடுவான். என்னிடம்
கொடுத்துவிடுங்கள். நான் அவனை என்னோடு அழைத்துச்
செல்கிறேன்” என்றார். தனக்கு சீடர் வேண்டு மென்பதற்காக
அவர் அப்படிக் கூற வில்லை. ஆனால் இந்த பையன் மேல்
அக்கறை கொண்டார். அவர் அந்தப் பையனை எடுத்துச்
சென்று யோகப் பயிற்சி அளித்தார். அந்தப் பையன்,
அதாவது மல்லாடிஹல்லி ஸ்வாமிகள் தினமும் 4008 சூரிய
நமஸ்காரம் செய்து வந்தார். யோகா மூலம் அவர் உடல்
வேதனைகளைக் கடந்து சென்றது மட்டுமல்ல, மிகப்
பலசாலியாகவும் மாறினார், திடகாத்திரகமாக 100 வயதிற்கு
மேல் வாழ்ந்து இறந்தார்.
நான் தினமும் ஒரே ஒரு சூர்ய நமஸ்காரம் மட்டும்தான்
செய்கிறேன் (சிரிக்கிறார்). நான் எங்கே இருந்தாலும் ஒன்று
மட்டும்தான் செய்வேன் அல்லது அதுவும்கூட செய்யாமல்
என்னால் இருக்க முடியும். அமர்ந்த நிலையிலேயே
என்னால் மனதளவில் கூட இந்த சூரிய நமஸ்காரம் செய்ய
முடியும். அப்போதும்கூட சூரிய நமஸ்காரம் எனக்கு
வேலைசெய்யும். அதாவது, இந்த முழு பிரபஞ்சத்தையுமே
தாங்கியுள்ள ஆகாயத்துடன் நீங்கள் தொடர்பு
கொண்டிருந்தால், உங்களையும் அது தாங்கி உயர்த்தும்.

வாழ்க்கை உங்களுக்கு எல்லாவற்றையும் திறந்தே


வைத்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் உங்களுக்கு எதையுமே
தடைசெய்யவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால்
இந்த முழு பிரபஞ்சத்தையுமே உங்களால் அணுகமுடியும்.
யாரோ சொன்னார்கள், “தட்டுங்கள் திறக்கப்படும்" என்று.
நீங்கள் தட்டக்கூடத் தேவையில்லை ஏனென்றால் அங்கே
கதவுகளே இல்லை. அது திறந்தே இருக்கிறது. நீங்கள்
அதனுள்ளே நடந்து செல்லவேண்டும். அவ்வளவே. ஆனால்
தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற
உள்ளுணர்வின் காரணமாக உங்களைச் சுற்றி நீங்களே ஒரு
காங்கிரீட் சுவர் எழுப்பி அதனுடன் போராடிக்
கொண்டிருக்கிறீர்கள். எனவேதான் இந்த யோகா
அமைப்புகள் கடவுளைப் பற்றி பேசுவதில்லை, கர்மாவைப்
பற்றி மட்டுமே பேசுகின்றன. எனவே கர்மா என்னும் அந்த
சுவரை உடைப்பதற்கு உதவியாக இருப்பவைதான் நீங்கள்
செய்யும் யோகப் பயிற்சிகள், சூரிய நமஸ்காரம் எல்லாமே!
 MYSTICAL WISDOM : Sadhguru | Surya
Namaskar, Surya Kriya and Surya Shakti
https://www.youtube.com/watch?v=RdCf_6Izsxo

https://www.youtube.com/watch?v=ZLv3-YrvyuY

சூரிய நமஸ்காரம்
செய்யும் அற்புதங்கள்
காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய
வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக்
கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய
நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 24
யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய
வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை
விளக்குகிறது இக்கட்டுரை...

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று


பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம்.
தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம்.
இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை
விளக்குகிறது இக்கட்டுரை...

சத்குரு:
யோகா என்ற வார்த்தைக்கு "உங்களை உயர்ந்த நிலைக்கு
எடுத்துச் செல்லும்" என்று அர்த்தம். யோகா என்ற வார்த்தை
அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை. அது எந்த
ஒரு குறிப்பிட்ட பயிற்சியையும் குறிப்பிட்டுச்
சொல்லவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் அது
யோகாவாக இருக்கலாம். உங்கள் வளர்ச்சிக்கான
செயல்முறையாக அதைப் பயன்படுத்தினால், அதுதான்
யோகா.

நீங்கள் கோபமாக இருந்தால், ஒரு வகையில்


உட்காருவர்கள்;
ீ அமைதியாக இருந்தால், இன்னொரு
விதமாக உட்காருவர்கள்.

ஆசனம் என்றால் உடலை வைத்திருக்கக் கூடிய ஒரு


நிலை. உடலை வைத்து எண்ணிலடங்கா ஆசனங்களை
உருவாக்க முடியும். அதில் குறிப்பிட்ட சில
ஆசனங்கள்தான் யோகாசனங்கள் என்று
அறியப்படுகின்றன. நீங்கள் உயர்ந்த நிலையை அடைய
உதவும் ஆசனம்தான் யோகாசனம்.
உங்கள் தினசரி வாழ்வில் கவனித்தால், நீங்கள் சந்திக்கும்
பலவிதமான மனநிலைகள் மற்றும் உணர்ச்சி
நிலைகளுக்கு ஏற்ப, உங்கள் உடல் பலவிதமான
நிலைகளை எடுக்கிறது. நீங்கள் கோபமாக இருந்தால், ஒரு
வகையில் உட்காருவர்கள்;
ீ அமைதியாக இருந்தால்,
இன்னொரு விதமாக உட்காருவர்கள்.
ீ இப்படி உங்கள்
உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருந்தால், அது
உங்கள் விழிப்புணர்வை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு
உயர்த்தி, உங்கள் சக்திகளை அதிர்வடையச் செய்கிறது.
இதுதான் யோகாசனங்களுக்குப் பின்னால் இருக்கும் நியதி.

சூரிய நமஸ்காரம் என்றால் என்ன?

தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான்


சூரியநமஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது. அதை
சூரியநமஸ்காரம் என்று அழைப்பதிலேயே பல அர்த்தங்கள்
இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சக்திப் பகுதி. சூரிய
நமஸ்காரம் உங்கள் நாடிகளைத் திறந்து, உங்களுக்குள்
இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது, இதன் மூலம்
நீங்கள் மிகவும் துடிப்பாக, உயிர்ப்புடன் இருக்க முடியும்.
மெதுவாக 100 சூரியநமஸ்காரங்கள் செய்யும் நிலைக்கு
வந்துவிட்டால், நீங்கள் ஒரு தடகள வரரைப்
ீ போல
ஆகிவிடுவர்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், உங்களை பேணிப்


பாதுகாக்கின்ற சூரியனுக்கு தினமும் காலையில் செய்யும்
ஒரு வழிபாடாகவும் அது இருக்கிறது. உங்களுக்கு இந்த
உடல் இருப்பதன் காரணமே சூரியன்தான், இல்லையா?
இந்தக் கலாசாரத்தில் வழிபாடு செய்வதென்றால் சில
சடங்குகளைச் செய்வதோ அல்லது சில மந்திரங்களை
முணுமுணுப்பதோ அல்ல. உங்கள் முழு உடலையுமே
வழிபாடாக ஆக்குவதுதான் இங்கு வழிபடும் முறை.

சூரிய நமஸ்காரத்தின் பலன்கள்:


போதுமான அளவு சூரியநமஸ்காரம் செய்தால்,
உங்களுடைய தூங்கும் நேரம் மிகவும் குறைந்து,
எப்போதும் ஒரு உயர்ந்த நிலையிலேயே இருப்பீர்கள்.
நீங்களாக எந்த முயற்சியும் செய்யாமலேயே உங்கள்
தூக்கம் 4 அல்லது 41/2 மணி நேரமாக மிகச் சுலபத்தில்
குறைந்துவிடும். சில வாரப் பயிற்சியிலேயே உங்கள்
உற்பத்தித் திறனும், செயல்திறனும் மேம்பட்டுவிடும்.

யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட


நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி
போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும்.

அது தன்னளவில் ஒரு முழுமையான பயிற்சியாகும்.


அதற்கு எந்தவிதமான கருவிகளும் தேவையில்லை. அது
ஒரு வரம், ஏனென்றால் நீங்கள் பயணம் செய்து
கொண்டிருந்தாலும், உங்களது பயிற்சிகளைத் தொடர
முடியும். சூரியநமஸ்காரத்தைத் சரியாக செய்து பாருங்கள்;
உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பகுதிகளும் நீண்டு,
மடங்கி, அவற்றுக்குத் தேவையான உடற்பயிற்சி
கிடைத்துவிடும். இதைத் தவிரவும், உங்கள் சக்தி
நிலைகளும் உயர்ந்த நிலையை அடைவதால்,
வாழ்க்கையின் மேடு, பள்ளங்களை பெரிய சிரமங்கள்
இல்லாமல் எதிர்கொள்ள முடியும். அதை ஒரு குறிப்பிட்ட
விழிப்புணர்வோடு செய்பவருக்கு சூரியநமஸ்காரம்
அற்புதங்களை நிகழ்த்தும். தியானத் தன்மைக்குள்
நுழைவதற்கு இது மிக எளிமையான ஒரு வழி.
யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட
நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி
போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும். ஆனால்
யோகா என்பது ஒரு சிகிச்சை முறை அல்ல. நீங்கள்
யோகாசனங்களை பயிற்சி செய்து வந்தால், அதற்கு
நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பது வேறு
விஷயம். ஆனால் இதை ஒரு சிகிச்சை முறையாகப்
பயன்படுத்தக் கூடாது. ஒரு சிகிச்சை முறை என்றால்,
உங்களுக்கு ஒரு உடல் கோளாறு ஏற்பட்டால், நீங்கள்
மருத்துவரிடம் செல்கிறீர்கள், அவர் உங்களுக்கு மருந்து
கொடுக்கிறார். நீங்கள் எத்தனை காலம் அந்த மருந்தை
சாப்பிடுவர்கள்?
ீ உங்களுடைய பிரச்சனை நீடிக்கும் வரை
அந்த மருந்தை உட்கொள்வர்கள்.
ீ பிரச்சனை முடிந்தவுடன்,
மருந்துக்கு எந்த அவசியமும் இல்லை.
யோகாசனத்தையும் இப்படி எண்ணக் கூடாது. நீங்கள்
யோகாசனங்கள் செய்ய ஆரம்பித்தவுடன், அவற்றை
உங்கள் வாழ்க்கையின் ஒரு ஒழுக்கநெறியாகவே
கடைபிடிக்க வேண்டும். அதை தொடர்ந்து செய்து
கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் அது
உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறது.
அதிலிருந்து உங்களுக்கு கணக்கிலடங்காத பலன்களைப்
பெற முடியும். யோகாசனங்களை அணுக இதுதான் சரியான
வழி. ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட பலனுக்காகவும்
யோகாசனங்களைச் செய்யாதீர்கள். அது அப்படி வேலை
செய்யாது.
ஈஷா யோகா மையத்தில் நடக்கும் 3 1/2 நாள் ஹடயோகா
வகுப்பில் சூரிய நமஸ்காரம் மற்றும் 15 வகையான
யோகாசனப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
இதைப் பற்றிய விபரங்களுக்கு கீ ழ்க்கண்ட தொலைபேசி
எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 0422-2515300

………………………………………………….

யோகா (Yoga in Tamil) -


முழுமையான
தகவல்களும்,
பயிற்சிகளும்
நீங்கள் விரும்பும்படி உங்கள் மனம் நடக்க வேண்டும் என்று
நினைக்கிறீர்களா - உங்கள் உடலையும், மனதையும்
எப்போதுமே துடிதுடிப்புடன், உற்சாகமாக, ஆரோக்கியமாக
வைத்திருக்க வழி தேடுகிறீர்களா? யோகா, தியானம் செய்ய
துவங்கலாம்னு நினைக்கிறேன், ஆனா எப்படி
ஆரம்பிக்கறதுனு யோசிக்கறீங்களா? நீங்கள் வந்திருப்பது
சரியான இடம். இந்த உடலையும் மனதையும் நமக்கு
தேவையானபடி பயன்படுத்தும் இந்த யோக விஞ்ஞானம்
எப்படி துவங்கியது, நமக்கு என்னென்ன பலன்கள்
கிடைக்கும் என்பதை பற்றிய முழுமையான தொகுப்புதான்‌
இந்த பதிவு.

யோகா - ஒரு பார்வை


 யோகா என்றால் என்ன?
 புதிதாக யோகா செய்பவர்களுக்கு எளிமையான ஆரம்ப யோகப் பயிற்சிகள்
 யோகா நன்மைகள்
 யோகா செய்தால் எடை குறையுமா?
 யோகாவின் வரலாறு
 யோகாவின் வகைகள்
 யோகா பற்றி அதிகம் கேட்கப்படும் கேள்வி பதில்கள்
 எது யோகா இல்லை? (கட்டுக்கதைகளும் உண்மையும்)
 யோகா பயிற்சிகள் - இவற்றை கவனிப்பது முக்கியம்
 ஈஷா கிரியா

"உங்கள் விதியை நீ ங்களே நிர்ணயிக்கும் ஆற்றலை, சுதந்திரத்தை உங்களுக்கு


வழங்கும் உள்நிலை விஞ்ஞானமான யோக விஞ்ஞானத்தின் வல்லமையை
நீ ங்கள் உணர வேண்டும் என விரும்புகிறேன்.-சத்குரு"

யோகா என்றால் என்ன? (Yoga


in tamil)
சத்குரு: யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். எல்லாமே
உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது முழுப்பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு
பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும்போது நீங்கள் யோகத்தில் இருக்கீ றர்
ீ கள்.
யோகா என்பது பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக்கொள்வது,
மூச்சைப்பிடித்துக் கொள்வது, தலையில் நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல.
எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது உங்களுடைய இயல்பான
தன்மையை நீங்கள் உணரும்போது யோகா என்று சொல்கிறோம். அதை அந்த
நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அது எப்படிப்பட்ட
வழிமுறையாக இருந்தாலும் சரி, அந்த நிலையை அடைவதற்கு ஒரு வழிமுறை
பயன்படுமானால் அதை யோகா என்று சொல்ல முடியும்.

புதிதாக யோகா செய்பவர்களுக்கு எளிமையான ஆரம்ப யோகப்


பயிற்சிகள்

உப-யோகா (Upa-Yoga)

சத்குரு:

உபயோகா என்பது, ஒருவரின் ஆன்மீ க பரிமாணத்தில் அதிகம் சார்ந்திராமல்,


உடல்நிலை, மனநிலை மற்றும் சக்திநிலையில் சார்ந்துள்ளது. ஒருவர்
முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வழிமுறையாகும். உடல்நிலை என்று
நான் குறிப்பிடும்போது, அதில் மனநிலையும், உணர்ச்சிநிலையும் சேர்த்துதான்
குறிப்பிடுகிறேன். சிலர் யோகாவை வெறுமனே கடுமையான உடற்பயிற்சி போல
செய்வதற்கு பதிலாக, உபயோகா செய்யலாம். ஏனென்றால் அது ஒரு சக்திவாய்ந்த
வழிமுறை. அதனால் ஈர்க்கப்பட்ட பிறகு வேண்டுமானால், அவர்கள் யோகாவில்
ஈடுபடலாம்.

நீங்கள் இரவு உறங்கும் போது, தட்டையான நிலையில் படுத்து அசைவில்லாமல்


இருக்கிறீர்கள். அப்போது உங்கள் சக்திநிலையிலும், மூட்டு இணைப்புகளிலும் ஒரு
செயலின்மை உருவாகிறது. அதனால் இயல்பான நிலையைவிட, உங்கள்
மூட்டுக்களில் உயவுத்தன்மை (lubrication) இல்லாமல் போகிறது. அப்படி அந்த
உயவுத்தன்மை இல்லாமல் உங்கள் மூட்டுக்களை நீங்கள் நகர்த்தினால், அது அதிக
நாட்களுக்கு தாங்காது. ஒருவர், எந்த மாதிரியான மூட்டு இணைப்புகளைக்
கொண்டுள்ளார் என்பதைப் பொறுத்தே உடல்நிலையில் விடுதலை என்பதற்கு
வாய்ப்புள்ளது.

உடலின் நாடிகள், இந்த மூட்டுப் பகுதிகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட விதமாக


இயங்குவதால், அனைத்து மூட்டுக்களும் சக்தியின் சேகரிப்பு மையங்கள் போன்று
உள்ளன. இந்த உபயோகாவின் குறிப்பிட்ட அம்சம் மூட்டு இணைப்புகளில் உயவுத்
தன்மையை (lubrication) வழங்குவதோடு சக்தி முனைகளையும் இயக்கச் செய்வதால்
உடலின் மற்ற சக்தி மண்டலங்களும் செயல்படத் துவங்குகின்றன.

வழிகாட்டுதலுடன் கூடிய எளிமையான 5 நிமிட இலவச யோகப்


பயிற்சிகள்:

யோக நமஸ்காரம் (Yoga to relieve back pain in tamil, Yoga for overall well-being in tamil)

கையசைவுப் பயிற்சி (Yoga to relieve joint pain in tamil)

நாடிசுத்தி (Yoga to relieve stress in tamil)

கழுத்துப் பயிற்சி (Yoga to relieve neck pain in tamil)

நாத யோகா (Yoga for happiness in tamil)

நமஸ்காரம் செயல்முறை (Yoga for better relationships in tamil)

ஷாம்பவி முத்ரா (Yoga to receive grace in tamil)

யோகா நன்மைகள் (Benefits of Yoga in Tamil):

"ஆனந்தமாக இருக்க தேவையான இரசாயனத்தை உங்களுக்குளேயே


உருவாக்க யோகா ஒரு வழி. இயல்பிலேயே நீ ங்கள் ஆனந்தமாக இருக்க
முடிந்தால், வெளி சூழ்நிலையை கையாள்வது என்பது மிகச் சாதாரணமானது.-
சத்குரு"
உப-யோகா நன்மைகள்:

உடல் ரீதியான பலன்கள் (Physical Benefits):

 மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு பயிற்சி


 ஓய்வு நிலையில் இருந்து திரும்பும் உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறது.
 நாட்பட்ட நோய்களில் இருந்து விடுவித்து, ஆரோக்கியத்தை
மேம்படுத்துகிறது.
 முதுகுத்தண்டை (Spine) வலுவூட்டி உறுதியாக்குகிறது. முதுகுவலி (Back pain),
உடல் சோர்விலிருந்து விடுவிக்கிறது.

 மன ரீதியான பலன் கள் (Mental Benefits):

 ஞாபக சக்தி (Memory), மனக்குவிப்புத் திறன் (Focus / Concentration) மற்றும்


செயற்திறனை அதிகரிக்கிறது. உடல், மனம் மற்றும் உணர்வுகளை
நிலைப்படுத்துகிறது.
 மன அழுத்தம் (Depression) , படபடப்பு, மனத்தவிப்பு (Anxiety) ஆகியவற்றிலிருந்து
விடுவிக்கிறது.
 பலருடன் சேர்ந்து ( அனைவருடனும் இணைந்து  ) செயல்படும் திறனையும்,
பழகும் முறையையும் மேம்படுத்துகிறது.
 ஆழ்ந்து உணரும் ஆனந்தம், அமைதி, நிறைவை வழங்கிடும்.

ஷாம்பவி மஹாமுத்ரா (ISHA YOGA / Shambavi Mahamudra):

" வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும், சமநிலையையும் ஆற்றலையும்


புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வதே யோகா"-சத்குரு

அறிமுகம்:

சத்குரு:

ஷாம்பவி மஹாமுத்ரா என்பது உயிரோடு இருக்கின்ற ஒரு தொழில்நுட்பம். இது


வெறும் பயிற்சி அல்ல. இது உயிரோடு இருக்கின்ற ஒரு தன்மை. தினசரி பயிற்சி
செய்து வந்தால் கற்பனை செய்ய இயலாத அளவிற்கு உள்ளேயிருந்து ஆனந்த நிலை
பொங்கிப் பிரவாகிக்கும். அது மட்டுமல்ல. வாழ்க்கையை நாம் உருவாக்கிக்
கொள்வதற்குத் தேவையான திறமை, புத்திசாலித்தனம், சக்தி என்று நமக்குத்
தேவையான அனைத்தையும் பிரமாதமாக நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.
 எல்லாவற்றிற்கும் முக்கியமாக, நம்முடைய வாழ்க்கையை இலகுவாக நடத்திக்
கொள்கின்ற அளவுக்குத் தேவையான சூழ்நிலை உங்களுக்குள்ளே வரும். சிறிது
கவனம் செலுத்தி பயிற்சி செய்பவர்களுக்கு உயிர்த்தன்மை பிரமாதமாக செயல்படும்.
உங்களுக்குள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டால், பிறகு நீங்கள் வாழ்க்கையில்
இதுவரைக்கும் கற்பனை செய்தேயிராத ஒரு மனிதராக வாழ முடியும்.

பயன்கள்:

 நாள் முழுவதும் ஆற்றல் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க உதவுகிறது


 தகவல் பரிமாற்றம் மற்றும் பிறருடன் பழகுவதில் மேம்பட்ட நிலை
 மனத்தெளிவு, உணர்ச்சிகளில் சமநிலை மற்றும் உற்பத்தி திறன் மேம்படுகிறது
 மன அழுத்தம், பயம் மற்றும் படபடப்பிலிருந்து விடுவிக்கிறது
 நாட்பட்ட நோய்களான ஒவ்வாமை, தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம்,
உடற்பருமன், சர்க்கரை நோய் முதுகுவலி போன்றவற்றிற்கு சிறந்த
பலனளிக்கிறது.
 உள்நிலையில் அமைதி, ஆனந்தம் மற்றும் நிறைவை வழங்குகிறது
 மனம் குவிப்பு திறன் அதிகரிக்கிறது
 தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது

 ஆஸ்த்துமா,
 தலைவலி / ஒற்றைத் தலைவலி,
 முதுகு / கழுத்து வலி,
 அஜீரண கோளாறுகள் சீரடைகிறது.
 தூங்கும் முறை - ஷாம்பவி பயிற்சி செய்யும் வழக்கம் இருந்தவர்களிடம்,
தூக்கத்தில் மூளையின் ஓய்வு நிலை படிவம் மிகச்சிறப்பாக அதிகரித்திருந்தது.
சாதாரணமாக ஆழமான தூக்க நிலையில் கிடைக்கக்கூடிய ஓய்வு, ஓய்வின்
தரம் மற்றும் புத்துணர்வை ஷாம்பவி பயிற்சி வழங்குவதை காண முடிந்தது. 

மாதவிடாய் கோளாறுகள்

 ஒழுங்கற்ற சுழற்சி குறைகிறது


 மருத்துவ உதவி எடுத்துக்கொள்வது குறைகிறது.
 வேலை தடைபடுவது குறைகிறது
 Dysmenorrhea எனப்படும் அதீத தசைப்பிடிப்பு குறைகிறது.
 PMS எனப்படும் மனநலம் சார்ந்த அறிகுறிகள் குறைகிறது.
 சினைப்பை நோய்
 மனச்சோர்வு அகல்கிறது.

ஆராய்ச்சி முடிவுகள்: https://www.innerengineering.com/research

தமிழ்நாட்டில் அடுத்து வரும் ஈஷா யோகா வகுப்புகள்

ஹடயோகா (Hatha yoga in tamil)

ஹடயோகா என்பது உடலை திருகிக்கொள்ள அல்ல. உங்கள் எண்ணம்,


உணர்வு மற்றும் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் தன்மையை உங்கள்
பொறுப்பில் எடுத்துக் கொள்வதைப் பற்றியது இது.-சத்குரு

சத்குரு:

பாரம்பரிய ஹட யோகா என்பது உங்கள் உடல் மற்றும் மனதை தயார் செய்யும்


வழிமுறை. அனைத்திற்கும் மேலாக உங்கள் சக்தி நிலையை பலப்படுத்தி,
எப்பேர்ப்பட்ட அனுபவத்தையும் தாங்கிக் கொள்ளும் திறத்தை வழங்குகிறது. நீங்கள்
வாழ்க்கை என்று எதை அழைக்கிறீர்களோ அதை கையாளும் திறன் படைத்ததாக
உங்கள் சக்தி உடல் இருக்கும்.

இனிமையானதோ இனிமையற்றதோ, எது நிகழ்ந்தாலும் அதை உங்கள்


நலனுக்காகவே மாற்றும் திறன் கொண்ட உடல் கட்டமைப்பை உருவாக்குவதே ஹட
யோகா. வாழ்க்கை உங்கள் மீ து எதை வசப்
ீ போகிறது என்று உங்களுக்கு தெரியாது.
ஆனால் அதிலிருந்து நீங்கள் எதை உருவாக்கலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க
முடியும். இது நிகழ, உங்களுக்கு சரியான உடல், மனம், மற்றும் சக்தி நிலை தேவை.
இவை இல்லாதபட்சத்தில், வாழ்வின் முறைகள் உங்களை முழுவதுமாக
அழித்துவிட முடியும். மிகவும் நல்லவராக, இனிமையானவராக உங்களை நீங்களே
நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் யாராவது ஏதாவது ஒன்று உங்களுக்கு
செய்துவிட்டால், நீங்கள் நொறுங்கிப் போவர்கள்.

ஹட என்பதன் இன்னொரு அர்த்தம் பிடிவாதம். நீங்கள் பிடிவாதமாய் இருக்கிறீர்கள்,


எதையும் சுலபமாய் விட்டுவிடும் ரகம் அல்ல. ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள்,
அவர்கள் பாதையில் மலர்களை வசினால்
ீ மட்டுமே தொடர்ந்து செல்வார்கள்,
அசிங்கத்தை வசினால்
ீ ஓடி விடுவார்கள். ஆனால் நீங்கள் பிடிவாதமானவர் என்றால்
வாழ்க்கையில் பூ, புழுதி என்று எதை வசினாலும்
ீ பொருட்படுத்தாது எங்கு செல்ல
வேண்டுமோ அங்கு செல்வர்கள்.
ீ இந்த உலகம் உங்கள் மேல் எதை வசினாலும்
ீ அது
உங்களை பாதிக்காது. நீங்கள் அதுபோன்ற மனிதராய் உருவாக வேண்டுமென்றால்
ஹட யோகா ஒரு நல்ல முறை. உங்கள் விதியை தீர்மானித்து, அதை
செயல்படுத்த ஹட யோகா ஒரு சக்தி வாய்ந்த கருவி.

யோகாசனம் (yogasana in tamil)

வெளி சூழ்நிலையில் நல்வாழ்வை ஏற்படுத்த ஒரு விஞ்ஞானம், தொழில்நுட்பம்


இருப்பதை போலவே, உள் நிலையில் நல்வாழ்வை அமைத்துக் கொள்ள ஒரு
முழுமையான விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் இருக்கிறது.-சத்குரு

ஒரு ஆசனம் (Asana) என்பது உடல் இருக்கும் ஒரு நிலை. உங்களது உடல் எண்ணற்ற
நிலைகளை எடுக்க முடியும். அவற்றுள், சில குறிப்பிட்ட நிலைகள், ‘யோகாசனங்கள்’
என்று அழைக்கப்படுகின்றன. “யோகா” என்றால், உயர்நிலைப் பரிமாணங்களுக்கோ
அல்லது வாழ்வின் உச்சபட்ச புரிதலை நோக்கியோ உங்களை அழைத்துச் செல்வது.
எனவே ஒரு உயர்ந்த சாத்தியத்தை நோக்கி உங்களை வழி நடத்தக்கூடிய உடல்
இருப்பு நிலை “யோகாசனம்” என்று அழைக்கப்படுகிறது.

உடல் மற்றும் மனரீதியான பலன்கள் 

 முதுகு வலியில் இருந்து நிவாரணம்


 மூட்டு வலி குறைகிறது
 தன்னியக்க நரம்பு மண்டலத்தில் சமநிலையை ஏற்படுத்துகிறது
 இதயத்தின் திறன் மேம்படுகிறது
 சுவாசிக்கும் திறன் மேம்படுகிறது
 இரைப்பையின் செயல்பாடு இயல்பாகிறது
 நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு இயல்பாகிறது
 உடலின் கழிவு வெளியேற்றும் செயல் மேம்படுகிறது
 தசைக்கூடுகள் வளைந்து கொடுக்கும் தன்மை பெறுகிறது
 உடல் எடை சீராகிறது
 தூக்கம் மேம்படுகிறது
 நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது
 பலம், மீ ண்டு வருதல், தாங்கும் ஆற்றல், சக்திநிலை, தளரா உறுதி
அதிகரிக்கிறது
 உடல் பாகங்களிடையே ஒருமித்த செயல்பாடு, கண்-கை கூட்டு செயல்,
சமநிலை அதிகரிக்கிறது
 பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைகிறது
 கவனம், மனம் குவிப்பு திறன் மேம்படுகிறது
 நினைவாற்றல் அதிகரிக்கிறது
 கற்றல் திறன் அதிகரிக்கிறது.

சூரிய நமஸ்காரம் (Surya Namaskar in Tamil)

தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம் என்று


அழைக்கப்படுகிறது. அதை சூரியநமஸ்காரம் என்று அழைப்பதிலேயே பல
அர்த்தங்கள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரம் உங்கள் நாடிகளைத் திறந்து,
உங்களுக்குள் இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது, இதன் மூலம் நீங்கள் மிகவும்
துடிப்பாக, உயிர்ப்புடன் இருக்க முடியும். உங்களை பேணிப் பாதுகாக்கின்ற
சூரியனுக்கு தினமும் காலையில் செய்யும் ஒரு வழிபாடாகவும் அது இருக்கிறது.
உங்களுக்கு இந்த உடல் இருப்பதன் காரணமே சூரியன்தான், இல்லையா? இந்தக்
கலாசாரத்தில் வழிபாடு செய்வதென்றால் சில சடங்குகளைச் செய்வதோ அல்லது
சில மந்திரங்களை முணுமுணுப்பதோ அல்ல. உங்கள் முழு உடலையுமே
வழிபாடாக ஆக்குவதுதான் இங்கு வழிபடும் முறை.

சூரிய நமஸ்காரத்தின் பலன்கள் இங்கே.(Surya Namaskar Benefits in Tamil)

யோகா செய்தால் எடை குறையுமா? (yoga for weight loss in tamil)

சத்குரு:

நீங்கள் யோகா செய்யும்போது, அதிகப்படியான எடை கண்டிப்பாகக் குறைந்துவிடும்.


யோகா ஓர் உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை. அது உங்கள்
அமைப்புகளுக்கு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடாமல் இருக்கும் ஒரு
விழிப்பினை உங்களுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு
விழிப்புத்தன்மை வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும்தான் உடல்
உண்ணும். அதற்கு மேல் எதையும் அது உண்ணாது. மற்ற உடற்பயிற்சிகளையோ
அல்லது உணவுத் திட்டங்களையோ கடைப்பிடித்தால், எப்போதும் உங்களைக்
கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகப் பயிற்சிகள் செய்து
வரும்போது, உங்களை நீங்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம்
இருக்காது. நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும். நீங்கள் அதிகமாக
உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக் கொள்கிறது. இதுதான்
யோகாவில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமும் நன்மையும்.
யோகாவின் வரலாறு (History of yoga in Tamil)

யோகா எல்லா மதங்களுக்கும் முற்பட்டது. மனித மனதில் மதம் என்ற


சிந்தனையே துவங்கியிருக்காத போதிலிருந்தே யோகா இருக்கிறது.- சத்குரு

சத்குரு:

யோக கலாச்சாரத்தில் சிவன் கடவுளாக பார்ககப்படுவதில்லை. முதல் யோகி - ஆதி


யோகியாகவே பார்க்கப்படுகிறார். சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்
இமாலய பர்வதத்தில் ஒரு யோகி தோன்றினான். அவன் யார், எங்கிருந்து வந்தான்
என்பது யாருக்கும் தெரியவில்லை. பரவசத்துடன் அசைவின்றி அமர்ந்திருப்பவன்
நடனமாட துவங்கி, பரவசத்தின் உச்சமடைந்து மீ ண்டும் அசைவின்றி
அமர்ந்திடுவான். ஏதோ அதிசயம் எதிர்பார்த்து கூடிய கூட்டம் நாட்கணக்கில்
அசைவின்றி அமர்ந்திருந்த யோகியை விட்டு விலகியது. உணவு, ஓய்வு, கழிவு என
உடலின் கட்டுப்பாடுகளை தாண்டி அசைவற்றிருப்பதே ஒரு அதிசயம் என்பதை
அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் எழுவர் மட்டும் யோகியை
தொடர்ந்தார்கள், தங்களுக்கும் ஏதாவது கற்றுத்தர வேண்டினார்கள். பல
நாட்களுக்குப்பின் மனமிரங்கிய ஆதியோகி, தயார் செய்யும் ஆசனங்களை
வழங்கிவிட்டு பரவசநிலையை தொடர்ந்தான்.

சூரியனின் கதிர் பூமியின் வடபாகத்திலிருந்து தென்பாகம் (உத்தராயணத்திலிருந்து


தக்ஷிணாயணத்திற்கு) திரும்பிய முதல் பௌர்ணமியன்று ஆதியோகியின்
அருட்பார்வை எழுவரின் மீ தும் பதிந்தது. 84 ஆண்டு சாதனாவில் கனிந்து, ஞானத்தை
பெற முழு தகுதியுள்ளவர்களாக, ஆதியோகியால் மேலும் புறக்கணிக்க
முடியாதவர்களாக எழுவரும் அமர்ந்திருந்தார்கள். 28 நாட்கள் கூர்ந்து கவனித்தவர்,
அடுத்த பௌர்ணமியன்று குருவாக அருள் பாலிக்க முடிவெடுத்தார்.
அந்நன்னாள்தான் குரு பௌர்ணமி.

முதல் யோகி -ஆதியோகி - முதல் குருவாக - ஆதிகுருவாக தென்திசை நோக்கி


அமர்ந்ததால் தக்ஷிணாமூர்த்தி என்றும் அழைக்கிறோம். ஆதியோகியின் ஞானத்தை
யோக விஞ்ஞானமாக உலகெங்கும் சேர்த்த ஏழு தீவிர சாதகர்களையும் சப்தரிஷிகள்
என்று வழங்குகிறோம்.
அகத்தியர் (Agathiyar)

ஆதியோகியான சிவனே யோகாவிற்கு மூலமானவர் என்பதை இந்த உலகம்


அறிய வேண்டும் எனபதே நம் விருப்பம்.-சத்குரு

Image courtesy: WikiMapia (https://wikimapia.org/32184065/Gandhi-Sarovar-Chorabari-Lake-Kanti-


Sarovar#/photo/5402904)

யோக விஞ்ஞான பரிமாற்றம் நிறைவுற்றதும், உலகமக்கள் அனைவருக்கும் இதை


வழங்க சப்தரிஷிகளை பணித்தார் ஆதியோகி. கலைகளிலும் அறிவியலிலும்
வல்லவர்களாக விளங்கிய சப்தரிஷிகள் அந்த யுகத்தின் நாகரீகங்களையும்
அறிவியல் மேம்பாட்டையும், சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தார்கள்.

 சித்த வைத்தியம், ரசவைத்தியம் ஆகியவற்றின் தந்தையென்று கருதப்படுபவரும்,


இந்திய தீபகற்பத்தின் தென்பகுதிக்கு வந்துசேர்ந்தவருமான அகஸ்த்திய முனிவர்
நமக்கு மிகமிக முக்கியமானவர். அன்றைய மனித குடியிருப்பு அனைத்தையும்
தொட்ட இவரது செயல், ஒரு கோட்பாடாகவோ, தத்துவமாகவோ, பயிற்சியாகவோ
இல்லாமல் ஒருவர் அமரும் விதம், உண்ணும் விதம், என அன்றாட
வாழ்க்கைமுறையோடு ஒரு அங்கமாக ஆன்மீ கத்தை இரண்டறக் கலந்துவிட்டது.

அகஸ்தியர் வழங்கிய முறைகளை பின்பற்றித்தான் நெருப்புக் குழம்புகள் போல்


நூற்றுக்கணக்கான யோகிகள் இந்தியாவில் தோன்றினர்.

பதஞ்சலி (Patanjali) - நவன


ீ யோகாவின் தந்தை

சத்குரு:

பெரும்பாலானோர் நினைப்பதைப் போல யோகாவின் மூலம் பதஞ்சலி அல்ல. அவர்


வருவதற்கு முன்பே 1800 விதமான பள்ளிகள் உருவாகி, வளர்ந்து இருந்தன. அந்த
நேரத்தில் 1800 விதமான யோகா, இந்தியாவில் இருந்தது.

1800 யோக வகைகள் தவறானது அல்ல, ஆனால், நடைமுறை சாத்தியம் இல்லாதது.


ஏனென்றால் ஒவ்வொன்றும் தனித்தனியாக நிபுணத்துவமான பிரிவுகளாக
வளர்ந்திருந்தது. பதஞ்சலி வந்தபோது இந்த அளவிட முடியாத அறிவை கண்டார்.
அவர் இதனை சில சூத்திரங்களாக்கி, எட்டு அங்க யோகமாக, எல்லோரும் உணரும்
விதமாக மாற்றினார்.

பதஞ்சலி ஒரு சந்நியாசி என்பதை விட ஒரு விஞ்ஞானியாய் இருந்தார். 1800 யோக


வகைகளை 200 யோக சூத்திரங்களாக அவர் வழங்கிய வழியே இன்று
நடைமுறையில் உள்ளது. 'சூத்ரா' என்ற‌பதம் இங்கே கயிறு அல்லது நூல் என்ற
பொருளில் வழங்கப்படுகிறது. 200 சூத்திரங்களில் 1800 யோக வகைகளும்
அடங்கும்படி ஒரு மாலையாக பதஞ்சலி தொடுத்தார். இதனால், ஒவ்வொரு
நோக்கத்திற்காகவும் ஒவ்வொரு யோகாசனங்களை ஒருவர் செய்ய வேண்டிய
நிலையிலிருந்து, ஏதாவது ஒரேயொரு யோகாசனம் மட்டுமே பயிற்சி செய்தாலே
முழுமையான பலன் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்.

யோகாவின் வகைகள் (how many types of yoga in tamil)

சத்குரு:

உடல், மனம், உணர்வு, சக்தி என உங்கள் வாழ்க்கையில் நான்கு உண்மைகள்தான்


உள்ளன. எனவே உங்களுக்கு நீங்கள் என்ன செய்துகொள்ள வேண்டும் என்று
கருதுகிறீர்களோ அவை இந்த நான்கு தளங்களில் மட்டுமே நிகழமுடியும். நீங்கள்
செய்ய விரும்புவதையெல்லாம் உங்கள் உடல் மூலமாகவும், உங்கள் மனம்
மூலமாகவும், உங்கள் உணர்வுகள் மூலமாகவும், உங்கள் சக்திகள் மூலமாகத்தான்
செய்ய முடியும்.

உணர்வுகளைப் பயன்படுத்தி உச்சநிலையை எட்டிவிட முடிந்தால் அதற்கு பக்தி


யோகம் என்று பெயர். இது அன்பின் பாதை.

உங்கள் அறிவைப் பயன்படுத்தி இறைநிலையை எட்டமுயன்றால்


அதற்கு ஞானயோகம் என்று பெயர். இது அறிவின் பாதை.

உங்கள் உடலைப் பயன்படுத்தி, செயல்களின் மூலமாக இறைநிலையை எட்ட


முயன்றால் அதற்கு கர்மயோகம் என்று பெயர். அது செயல்களின் பாதை.

உங்கள் சக்திநிலைகளை மேம்படுத்தி இறைநிலைகளை எட்ட முயன்றால்


அதற்கு கிரியா யோகம் என்று பெயர். அதற்கு உள்நிலை செயல் என்று பொருள்.
யோகா பற்றி அதிகம் கேட்கப்படும் கேள்வி பதில்கள் (Questions and
Answers about Yoga in Tamil)
"உண்மையான நல்வாழ்வை உணர உள்நோக்கி திரும்புவதே ஒரே வழி. யோகா
என்றால் மேலேயோ, வெளியேயோ பார்ப்பது அல்ல, உள்முகமாய் பார்ப்பது.
விடுதலைக்கான ஒரே வழி உள்ளே இருக்கிறது" - சத்குரு

யோகா - உடற்பயிற்சி என்ன வித்தியாசம்?

யோகா என்பது உங்கள் உடலின் எடையையே உபயோகித்து பயிற்சி செய்வது. 6'×6'


இடம் இருந்தால் நீங்கள் எங்கே இருந்தாலும் பயிற்சி செய்ய முடியும். பளுதூக்கி
செய்யும் எந்த பயிற்சிகளுக்கும் இது நிகரானதே. அதே நேரத்தில் இது உங்கள்
உள்ளுறுப்புகளுக்கு எந்த விதமான அழுத்தத்தையும் உண்டாக்காது. யோகாசனங்கள்
செய்வதன் மூலம் தசைகள் உறுதியாவதுடன், உடலின் நெகிழும், வளைந்து
கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. யோகாசனங்கள் உங்கள் தசைகளுக்கு
வலுவூட்டி உங்களை வலிமையுள்ளவராக மாற்றும் அதே நேரத்தில், நீங்கள்
விவேகமுள்ளவராகவும் மாறுவர்கள்.

யோகா செய்ய நேரமில்லையே, என்ன செய்வது?

கேள்வி: காலையில் சீக்கிரமாக எழுந்து சமைக்கவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச்


செல்ல தயார்படுத்த வேண்டும். அலுவலகம் செல்ல நானும் தயாராக வேண்டும்.
மாலையில் திரும்பி வந்தவுடன் குழந்தைகளை படிப்பதற்கு தயார்படுத்த வேண்டும்.
நாள் முழுவதும் இப்படி ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கு யோகா
எப்படி பொருந்தும்?

சத்குரு:

உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய வேலைகள், இதர வேலைகள்


கையாள்வதற்கான திறமை உங்களுக்கு இல்லாவிட்டால் உங்கள் செயல்களை
நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது உங்களுடைய திறமையை
அதிகரித்துக் கொள்ள முடியுமானால் அதை நீங்கள் செய்ய வேண்டும். நான் கற்றுத்
தரும் யோகப் பயிற்சியை தினம் 25 நிமிடங்கள் நீங்கள் செய்தால் போதும். ஒருநாளில்
பெருமளவு நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்துவர்கள்.

ஈஷா யோகா பயிற்சியை மேற்கொண்ட பலரது அனுபவம் இது. இந்த பயிற்சியை


6 லிருந்து 8 வாரங்கள் தொடர்ந்து செய்த ஒருசிலர் தங்களது அனுபவங்களைப்
பகிர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அலுவலகத்தில் அல்லது வேறு பணியில்
இருக்கும்போது 8 மணி நேரத்தில் மற்றவர்கள் செய்யக்கூடிய செயலை மிக
சாதாரணமாக 3 லிருந்து 4 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார்கள்.

 5 நிமிட இலவச யோகப் பயிற்சிகள் 

அசைவ உணவு சாப்பிடுகிறேன். மது அருந்துகிறேன். நான்


யோகா செய்யலாமா?

சத்குரு:

யோகா எதையும் தடை செய்வது கிடையாது. வாழ்வு பற்றிய ஆழமான புரிதல்தான்


யோகா. போதைக்காகத்தானே குடிக்கிறீர்கள்? நீங்கள் உங்களுக்குள்ளேயே இயல்பாக
ஒரு பரவசத்தை உருவாக்கிக்கொள்ள தெரிந்தால், புகை, மது போன்றவற்றை
தேடமாட்டீர்கள் இல்லையா? நான் இதுவரை எந்த போதைப் பொருளையும்
தொட்டது இல்லை. ஆனால், என் கண்களைப் பாருங்கள், நான் ஒரு நிரந்தர
போதையிலேயே இருக்கிறேன். யோகிகளுக்கு மது, போதைப் பொருட்கள் என்பவை
எல்லாம் சொற்பமானவை. காரணம், உயிர்சக்தியின் தீவிரத்தாலேயே அதைவிட
ஆயிரம் மடங்கு போதையை உங்களுக்குள்ளேயே உருவாக்கிட எங்களால் முடியும்.
அதனால், வெறும் குடி எதற்கு? தெய்வகத்தை
ீ பருகிட வாருங்கள்!

புத்தகம் பார்த்து யோகா செய்யலாமா?

சத்குரு:

ஒரு பெரும் புத்தகக் கடையினுள் நுழைந்தால், அங்கு நிச்சயம் 15 - 20 வகையான


யோகப் புத்தகங்கள் இருக்கும். 7 நாளில் யோகா கற்பது எப்படி? 21 நாளில்
யோகியாவது எப்படி?... புத்தகம் வழியாக யோகா கற்று, தனக்குத்தானே
பெருமளவில் பாதிப்பு விளைவித்துக் கொண்டவர்கள் பலர். இப்பயிற்சிகள் மிக
எளிமையாகத் தோன்றலாம். ஆனால், அது மிக நுட்பமான முறையில் செயல்படும்
என்பதால், சரியான புரிதலோடு, முறையான வழிநடத்துதலோடு தான் அவற்றை
பயிற்சி செய்யவேண்டும். இல்லையெனில், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.
புத்தகத்தின் வாயிலாக ஊக்கம் பெறலாம், ஆனால், அவற்றைக் கொண்டு கற்பதோ,
பயிற்சி செய்வதோ கூடாது.

மேலும் கேள்வி பதில்கள் இந்தப் பதிவில்.


எது யோகா இல்லை?(கட்டுக்கதைகளும் உண்மையும்)

கட்டுக்கதை 1: யோகா இந்து மதம் சார்ந்தது, தெரியுமா?

கட்டுக்கதை 2: உடலை கடினமாக வளைப்பதுதான் யோகா

கட்டுக்கதை 3: சிக்ஸ்-பேக் உடற்கட்டு வேண்டுமா? யோகா பெஸ்ட் வழி

கட்டுக்கதை 4: கடந்த 100 ஆண்டுகளில் மட்டுமே யோகா உலகெங்கும்


பரவியிருக்கிறது.

கட்டுக்கதை 5: இசையுடன் யோகா - செம்ம காம்பினேஷன்!

யோகா பற்றிய இந்த கட்டுக்கதைகளுக்கு விடைகள் இங்கே. (yoga myths and facts)

யோகா பயிற்சிகள் - இவற்றை கவனிப்பது முக்கியம் (Yogasanas -


Things to remember)

Question: யோகா செய்ய உணவுப் பழக்கவழக்கங்களில் ஏதேனும் மாற்றம்


கொண்டு வரவேண்டுமா? (Food for Yoga in Tamil)

சத்குரு:

தேவையில்லை. ஆனால் சில உணவுக்குறிப்புகளைத் தருகிறோம். எப்படிப்பட்ட


உணவை உட்கொள்வது சிறந்தது என்ற உணவுக்குறிப்புகளைத் தருகிறோம். இது
யோகாவிற்காக மட்டுமல்ல. நன்றாக வாழ்வதற்காக. மிகவும்
கடினமான உணவுப்பழக்கம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனால் தங்கள்
உடலைப்பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு அதிகரிப்பதற்காக சில குறிப்புகளைத்
தருகிறோம்.

உணவு என்பது உடலைப் பற்றியது. உடல் எப்படி விரும்புகிறதோ அப்படிபட்ட


உணவை நீங்கள் உட்கொள்ளவேண்டும். உங்கள் சமூகம் எப்படி விரும்புகிறதோ,
உங்கள் மனம் எப்படி விரும்புகிறதோ, உங்கள் மருத்துவர் எப்படி விரும்புகிறாரோ
அப்படிப்பட்ட உணவை நீங்கள் உண்ணக்கூடாது. உடல் விரும்பும் உணவைத்தான்
நீங்கள் உண்ண வேண்டும். மிகவும் கடினமான குறிப்புகளோ அல்லது நீங்கள்
இதைத்தான் உண்ண வேண்டும் என்ற உத்தரவுகளோ இங்கு கிடையாது.
தினமும் யோகா செய்ய சரியான நேரம் எது?

சத்குரு:

இந்தியாவின் வெப்ப மண்டல பகுதிகளில் யோகா பரிணமித்ததால் நாம் எப்போதுமே


காலை 8.30 மணிக்கு முன் அல்லது மாலை 4, 4.30 க்கு பிறகு யோகப் பயிற்சிகள் நிகழ
வேண்டும் என்றோம்.

யோகா செய்யும்போது எப்படிப்பட்ட உடைகளை அணிவது?

சத்குரு:

துணியைத் தைக்கும்போது, சக்தியின் ஓட்டம் சற்று தடைபடுகிறது. ஆன்மீ கப்


பயிற்சிகள் செய்யும்போது இதை நாம் குறைக்க விரும்புகிறோம். அப்படியானால்
நீங்களும் கோவணம் அணியத் துவங்கவேண்டும் என்று அர்த்தமில்லை, ஆனால்
யோகப் பயிற்சிகள் செய்பவர்கள் விளையாட்டு வரர்கள்
ீ அணிவதுபோல
செயற்கையான (synthetic) துணி வகைகளை அணியக்கூடாது. உங்கள் துணிகள்
இயற்கையாக இருப்பதே சிறந்தது. அதாவது பருத்தி அல்லது மூலப்பட்டுத் துணியாக
இருக்கவேண்டும். இயற்கையான மூலப்பட்டு விலைமதிப்பானதாகவும்,
கிடைப்பதற்கு அரிதாகவும் இருப்பதால், இயற்கையான பருத்தித்துணியே சிறந்ததாக
இருக்கும். கம்பளித் துணியையும் பயன்படுத்தலாம்.

யோகாவுக்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்?

சத்குரு:

பொதுவாக கண்களை மூடி உட்கார்ந்தாலே தியானம் என்று சொல்கிறார்கள். ஆனால்,


கண்களை மூடி நீங்கள் செய்யக்கூடியவை பல - ஜபம், தவம், தாரணை, தியானம்,
சமாதி, சூன்யா என்பவை போக சிலர் முதுகை நேராக வைத்து உட்கார்ந்தபடியே
தூங்குவதில்கூட வல்லவர்களாக இருக்கலாம். இதில் தியானம் என்பது யோகாவின்
ஒரு அம்சம் மட்டுமே.

தியானம் என்பது நீங்கள் செய்யக்கூடிய ஒரு செயல் என்பதில்லை. அது ஒரு


குறிப்பிட்ட தன்மைதானே தவிர, ஒரு செயல் அல்ல. நீங்கள் தியான நிலையில்
அல்லது தியான தன்மையில் இருக்க முடியும், தியானம் செய்ய முடியாது.
ஈஷா கிரியா:

ஈஷா கிரியா என்பது பொய்மையில் இருந்து உண்மைக்கு இட்டுச்செல்லும் ஒரு


எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த கருவி.-சத்குரு

ஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும்.


ஈஷா கிரியாவின் நோக்கமே, ஒவ்வொருவரையும், தன் உயிரின் மூலத்துடன்
தொடர்பு கொள்ளச் செய்வதுதான். அதன் மூலம் ஒவ்வொருவரும் தன்
விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும்.
தினமும் ஈஷா கிரியா பயிற்சி செய்வதன் மூலம் உடல்நலம், உற்சாகம், அமைதி,
நல்வாழ்வு போன்றவற்றைப் பெறமுடியும். இது, இன்றைய அவசர யுகத்தின்
வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கருவி.

ஈஷா கிரியா - பாகம் 1

ஈஷா கிரியா - பாகம் 2

…………………………………………………………………………………………………………………………………………………

யோகா ஓர் அறிமுகம் -


யோகா பற்றி நீ ங்கள்
அறிய வேண்டியவை!
இதுவரை நாம் வெளியிட்டுள்ள யோகா சம்பந்தமான பல
கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த
கட்டுரையில், சத்குரு அவர்கள் எது யோகா, எது யோகா
இல்லை, யோகா செய்வது எதற்காக, அதன் வரலாறு என்ன,
போன்ற பல அம்சங்களோடு, நம்மை சுண்டியிழுக்கும்
மகத்தான பல யோகிகளின் வாழ்க்கையை பற்றியும்
நறுக்கென்று விவரிக்கிறார்.

இதுவரை நாம் வெளியிட்டுள்ள யோகா சம்பந்தமான


பல கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த
கட்டுரையில், சத்குரு அவர்கள் எது யோகா, எது யோகா
இல்லை, யோகா செய்வது எதற்காக, அதன் வரலாறு
என்ன, போன்ற பல அம்சங்களோடு, நம்மை
சுண்டியிழுக்கும் மகத்தான பல யோகிகளின்
வாழ்க்கையை பற்றியும் நறுக்கென்று விவரிக்கிறார்.

எது யோகா, எது யோகா இல்லை

யோகா என்றால் என்ன?

யோகா என்றால் என்னவென்று புரியாமல் பலரும் பல


தவறான புரிதலைக் கொண்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.
யோகா என்றால் என்னவென்று எளிமையாகவும்
தெளிவாகவும் சத்குரு விளக்குகிறார்.

எது யோகா இல்லை?

யோகா என்ற பெயரில் இன்று உலகில் பல கூத்துக்கள்


நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இதைச் சுற்றி
பல கட்டுக்கதைகளும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘எது
யோகா? எது யோகா இல்லை’ என்ற தெளிவுரை, சர்வதேச
யோகா தினத்தை முன்னிட்டு, இதோ சத்குருவின்
வார்த்தைகளில், உங்களுக்காக…

யோகாவின் சுருக்கமான வரலாறு

ஆதியோகி பாகம் I

இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க


ஆன்மீ கப்பணியின் விளைவாக இருந்தவர் ஒருவர்.
இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர்
ஒருவர் – மனிதகுலத்தின் உள்நிலை, வளம்பட
செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் –
அவர்தான் ஷிவா. பின்வரும் கதையில் சத்குரு அவர்கள்
ஆதியோகி – முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும்,
அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய
விதத்தையும் கூறுகிறார்…

ஆதியோகி பாகம் 2

பண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக


இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு
மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ
மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை.
இருப்பினும் அந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள்
தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான ஆன்மீ க
நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது.
இந்த அடிப்படையான ஆன்மீ க உணர்வு எந்த அளவுக்கு
இருந்தது என்றால், இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும்
அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக
இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு
“முக்தி” என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில்
நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க
ஆன்மீ கப்பணியின் விளைவாகவே உருவானது.
இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர்
ஒருவர் - மனித குலத்தின் உள்நிலை, வளம்பட
செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் -
அவர்தான் ஷிவா.

பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி -


முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர்
சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய
விதத்தையும் கூறுகிறார்…

பதஞ்சலி – நவன
ீ யோகாவின் தந்தை

பதஞ்சலி முனியின் மகத்தான திறமைகளையும் அவர்


இந்த உலகிற்கு யோகாவை எளிமைப்படுத்திக்
கொடுத்ததை பற்றியும் விளக்குகிறார் சத்குரு…

நீ ங்களும் புத்தராகலாம்

புத்தரைப் போல மலர்வதற்கு என்ன தேவைப்படுகிறது


என்று சத்குரு சொல்கிறார்.
அல்லம மஹாபிரபுவின் ஆற்றல்

வேர்கள் மண்ணை பலமாகப் பற்றிக்கொள்ள நிமிர்ந்து


நிற்கும் மரங்கள்தான் கம்பீரம் என்று நினைப்பவர்களால்,
மரம் வேரோடு விழுந்துவிடும் அபாயம் இருப்பதை உடனே
உணரமுடியாது. ஒருவர் பக்தியில் புல்போல்
பணிந்திருந்தால் எந்தப் புயலும் அசைக்கமுடியாத ஆற்றல்
பெறுவார் என்பதை, தீவிர சிவபக்தரான அல்லம
மஹாபிரபுவின் கதை மூலம் சத்குரு விளக்கியுள்ளார்.

பக்தியின் இலக்கணம், அக்கா


மஹாதேவி!

அதிகாரத்தின் உச்சமான அரசன் தனக்கு கணவனாக


அமைந்தால் எந்த பெண்தான் விரும்பாமல் இருப்பாள்?!
ஆனால், சிவன் மீ து அளப்பரிய பக்திகொண்ட அக்கா
மஹாதேவி, அரசனுக்கு இசைந்தாரா? சித்திரக்கதையாக
இங்கே அக்கா மஹாதேவியின் சரிதம்!

மனதில் ஒரு கோயில்! – பூசலார் செய்த


அற்புதம்!

மனதில் கற்பனை செய்வதெல்லாம் உண்மையாகாதுதான்!


ஆனால், பக்தியும் விழிப்புணர்வும் கொண்டு மனதில் ஒரு
செயலை செய்யும்போது அது சாத்தியமாகிறது! தான் கட்ட
நினைத்த கோயிலை தன் மனதிலேயே அணுவணுவாய்
உருவாக்கிய பூசாலரைப் பற்றி அறிந்துகொண்டால்,
பூசலாரின் மனக்கோயில் கற்பனையல்ல என்பது புரியும்!

ஆடையின்றி சென்ற யோகி…


கோபமடைந்த மன்னன்!

மன்னரின் அந்தப்புறம் வழியாக ஆடையின்றி ஒரு யோகி


செல்கிறார்; மன்னருக்கு கோபம் வருகிறது! உடல்கடந்த
நிலையை எய்திய அந்த யோகியின் உன்னத வரலாறு
இரத்தின சுருக்கமாய் உங்களுக்காக!

மெய்ப்பொருள் நாயனார் – உயிரைத்


துச்சமாக்கி பக்தியின் உச்சம் தொட்ட
கதை

நம் கலாச்சாரத்தில் என்றுமே துறவிகளை கடவுளுக்கு


இணையாகப் போற்றினார்கள். நெற்றியில் திருநீற்றுப்
பட்டையும் கையில் திருவோடுமாக ஆன்மீ கத்
தேடுதலிலுள்ள ஒருவர் தங்கள் வட்டு
ீ வாசலுக்கு
வந்துவிட்டால், தங்கள் பிள்ளைகளுக்கு
உணவில்லாவிட்டாலும், அவருக்கு உணவளித்து
மகிழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மேன்மையும் பக்தியும் பரவிக்
கிடந்த காலத்தில் நடந்த கதையிது.
கண்ணப்ப நாயனார் – சிவனுக்காக
இருவிழியைக் கொடுத்த கதை!

பக்தி என்பது எந்தவொரு செயலையும் சார்ந்ததன்று,


கைகட்டி வாய்பொத்தி சிரம்தாழ்த்தி சொந்தக்
கோரிக்கைகளைப் பதிவு செய்வதும், பலன் கிடைக்கப்
பணிவிடைகள் செய்வதும் பக்தியன்று. மெய்யான
பக்தியில் தன்னையே மறந்து தன் கண்ணையே
விருப்பத்துடன் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதை...

யோகங்கள் பல வகை -
புரிந்துகொள்வோம்

நான் எந்த யோகாவ choose பண்றது?

உலகில் பலவிதமான யோக வழிமுறைகள் வந்துவிட்டன.


BP க்கு யோகா, டயாபெடிசுக்கு யோகா என அதைப் பற்றின
செய்திகள், விளம்பரங்கள் வந்த வண்ணமே உள்ளன. இதில்
எதை நான் தேர்ந்தெடுப்பது? சத்குரு தரும் விளக்கம்
இங்கே…

கிரியா யோகா – ஒரு விளக்கம்

யோகத்தில் நான்கு பாதைகள் உள்ளன. அவை கர்ம யோகா,


ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா. இந்நான்கில்,
சக்தியைப் பயன்படுத்தி ஒரு நிலையை அடையும் கிரியா
யோகாவின் சூட்சுமங்களை சத்குரு இந்தக் கட்டுரையில்
விளக்குகிறார்.

பக்தி யோகா உங்களுக்கு பொருந்துமா?

கடவுளை வழிபடுவதும் அவரிடம் கோரிக்கைகள்


வைப்பதும் உண்மையான பக்தியில்லை. அப்படியென்றால்,
“பக்தியின் தன்மை என்ன? யாரெல்லாம் பக்தி யோகா
பயிற்சி செய்ய முடியும்?” என்ற கேள்விகள் எழும். இங்கே
பக்தி குறித்து சத்குரு விளக்குகிறார்.

ஞானயோகா – புத்திசாலிகளுக்கு
மட்டும்!

பக்தி சரி, கிரியா சரி, ஞான யோகா என்றால் என்ன?


என்கிறீர்களா விளக்கம் கட்டுரையில் …

கர்ம யோகம் என்றால் என்ன?

கர்ம யோகம் என்றால் என்ன? கர்மாவிற்கும் கர்ம


யோகாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவற்றை
தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை…

குண்டலினி யோகா என்றால் என்ன?

குண்டலினி என்றால் என்ன? குண்டலினி யோகா என்றால்


என்ன? இந்த சக்திவாய்ந்த ஆன்மீ கச் செயல்முறையை
பக்தியோடும், முழுமையான பொறுப்புணர்வோடும் எப்படி
அணுகுவது...

‘தந்த்ரா’ என்றால் காமம் என்று


எடுத்துக்கொள்ளலாமா?

‘தாந்த்ரீகம்’ என்றாலே பலர் இன்று காமம் என்று புரிந்து


வைத்துள்ளனர். தாந்த்ரீகம் என்பது உண்மையில் என்ன?
தாந்த்ரீகம் எப்போது சாத்தியமாகிறது? இங்கே, அந்த அற்புத
தொழில்நுட்பத்தை பற்றி விளக்குகிறார் சத்குரு.

ஹடயோகம் - தெய்வகத்துடன்

இசைவில் இருங்கள்

சூரிய நமஸ்காரம் செய்யும்


அற்புதங்கள்

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய


வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.
தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான்
சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை
செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது
இக்கட்டுரை…

தடைகளை தகர்க்கும் சூரிய கிரியா…!


ஹட யோகா பள்ளியில் பயில்பவர்களிடம் சூரிய கிரியா
பற்றி பேசுகையில் அதன் மகத்துவத்தை முழுமையாக
விளக்கும் சத்குரு, சூரிய கிரியா போன்றதொரு பயிற்சி நம்
வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல் பூர்வமாக
விவரிக்கிறார்.

பாரம்பரிய ஹடயோகா – ஓர் அறிமுகம்!

ஈஷாவின் முதல்நிலை வகுப்புகள் முதல் மேல்நிலை


யோகப் பயிற்சிகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு
நிலையில் ஒவ்வொரு தன்மையில் இருக்கும் படியாக
வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் சத்குரு
வழங்கியுள்ள 21 நாள் பாரம்பரிய ஹடயோகப் பயிற்சியின்
தனித்தன்மைகளும் முக்கியத்துவமும் என்ன என்பதை
இங்கே பார்க்கலாம்!

யோகாசனம் இவ்வளவு ஈசியா?!

ஆசனம்’ அல்லது ‘யோகாசனம்’ என்ற சொல் பொதுவாக


உடலை முறுக்கிக் கொள்வதாகவோ, தலைகீ ழாக
நிற்பதாகவோதான் மக்களால் கருதப்படுகிறது. ஆனால்,
யோக சூத்திரங்களை வகுத்த பதஞ்சலி முனியோ ‘ஆசனம்’
என்றால் ease-firm என்கிறார்; அதாவது சுகமாகவும்
ஸ்திரமாகவும் இருப்பது. ஆசனம் குறித்த இதுபோன்ற
இன்னும் சில உண்மைகளை சத்குருவின் மூலம் அறிய
தொடர்ந்து படியுங்கள்!
யோகப் பயிற்சிகள் - இவற்றை
கவனிப்பது அவசியம்

யோகா செய்யும்போது எப்படிப்பட்ட


உடைகளை அணிவது?

ஆன்மீ க சாதனா செய்யும்போது அணிவதற்குப்


பொருத்தமான துணிகளைப் பற்றியும், அப்போது உடலில்
உலோகங்களைத் தவிர்ப்பது பற்றியும் இப்பதிவில் சத்குரு
விளக்குகிறார்.

நாம் சாப்பிட வேண்டிய சரியான உணவு


எது?

ஈஷா யோகா வகுப்பின் போது எங்களுக்கு இயற்கை


உணவுகளின் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.
நான் இயற்கை உணவுமுறைக்கு மாறிவிடுவதற்கு
ஆவலாய் இருக்கிறேன். எது சரியான காலை உணவு, மதிய
உணவு, இரவு உணவு என்று நான் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்...

நமக்கு ஏற்ற உணவு எது?

உலகெங்கும் “உணவுப் பாதுகாப்பு” என்ற கோஷத்தை


முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது உலக
சுகாதார நிறுவனம். ஆரோக்கியமாக இருக்க நாம்
என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது
இக்கட்டுரை…

…………………………………………………………………………………………………………………………………………

தடைகளை தகர்க்கும்
சூரிய கிரியா...!
ஹட யோகா பள்ளியில் பயில்பவர்களிடம் சூரிய கிரியா
பற்றி பேசுகையில் அதன் மகத்துவத்தை முழுமையாக
விளக்கும் சத்குரு, சூரிய கிரியா போன்றதொரு பயிற்சி நம்
வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல் பூர்வமாக
விவரிக்கிறார். இந்த வார சத்குரு ஸ்பாட், தடைகளை
தகர்க்கும் சூரிய கிரியா. படித்து மகிழுங்கள்!

ஹட யோகா பள்ளியில் பயில்பவர்களிடம் சூரிய கிரியா


பற்றி பேசுகையில் அதன் மகத்துவத்தை முழுமையாக
விளக்கும் சத்குரு, சூரிய கிரியா போன்றதொரு பயிற்சி
நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல்
பூர்வமாக விவரிக்கிறார். இந்த வார சத்குரு ஸ்பாட்,
தடைகளை தகர்க்கும் சூரிய கிரியா. படித்து மகிழுங்கள்!

 
Question:அன்பிற்குரிய சத்குரு, சூரிய கிரியா தீட்சை
பெறுவதில் உள்ள சிறப்பென்ன, அதைச் செய்வதால் நம்
உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

சத்குரு:

யோகா என்பதே உங்கள் உடலை ஒரு சாத்தியமாய்


மாற்றுவதற்குத்தான், தடைக்கல்லாய் ஆக்குவதற்கு அல்ல.
இது நிகழ வேண்டுமென்றால், உங்கள் உடலமைப்பில்
உள்ள ஒவ்வொன்றும் குறைந்தபட்ச உராய்வுடன்
செயல்பட வேண்டும். குறைந்தபட்ச எதிர்ப்புடன் செயல்பட
வேண்டும். நமக்கிருக்கும் mechanical அறிவுப்படி பார்த்தால்,
குறைந்தபட்ச உராய்வுடன் செயல்படும் எந்திரத்தைத்தான்
சிறந்த எந்திரமாகப் பார்க்கிறோம். எத்தனை அதிகமாக
உராய்வு அதனிடம் இருக்கிறதோ அத்தனை சிறப்பில்லாத
எந்திரமாக அதனைப் பார்க்கிறோம். எந்த எந்திரத்தில்
உராய்வில்லையோ, அதனை நாம் தலைசிறந்த எந்திரம்
என அழைக்கிறோம். உராய்வைக் குறைத்தாலே,
உடைதலும் கிழிதலும் சற்றே குறைந்து போகும். இந்த
உடலின் உடைதல் மற்றும் கிழதல் குணம் குறைய
வேண்டுமென்றால், நம்முடைய வெவ்வேறு
பரிமாணங்களுக்கிடையே உராய்வில்லாமல் பார்த்துக்
கொள்வது அவசியம்.

உங்களுக்கு ஒரு பொருள்நிலை பரிமாணம் உள்ளது, இது


சேகரிக்கப்பட்டது. உங்களுக்கு ஒரு மனநிலையிலான
பரிமாணம் உள்ளது, பெருமளவில் பார்த்தால் இதுவும்
சேகரிக்கப்பட்டதே. பொருள்நிலையிலான பரிமாணம்
பரிபூரணமாக இந்தப் பிறப்பில் சேகரிக்கப்பட்டதே.
மனநிலையிலான பரிமாணம் பல ஜென்மங்களிலிருந்து
திரட்டப்பட்டது. கர்மத்து நிலையிலான பரிமாணம்,
மென்மேலும் பல பகுதிகளை உள்ளடக்கியது, சற்றே
சிக்கலானது. அப்புறம் சக்திநிலை உள்ளது. இது
உள்ளிருந்து வளர்ந்தாலும், உயிர்ச் செயல்முறை நமக்கு
கொடுத்தது. அண்டத்து நிலையிலான இயல்பைக் கொண்ட
வேறு சில பரிமாணங்களும் உள்ளன, இவை பொருள்நிலை
சார்ந்தவை அல்ல.

இவை அத்தனையும் ஒருங்கே கொண்ட 'இந்த உயிரை'


அல்லது இந்த இயக்கமுறையில், உராய்வில்லாமல்
இருக்க வேண்டுமென்றால் பல நிலைகளில் உள்ள இந்த
அமைப்பை நாம் மசகிட (lubricate) வேண்டும். ஒன்று,
அடிப்படையில் எல்லா இடத்திலும் மக்கள் உணரும்
உராய்வு, அதுதான் மன அழுத்தம். இந்த மன அழுத்தம்
அடிப்படையானது. ஒரு எந்திரத்தை மசகிடும் எண்ணெய்
(lubrication oil ) இல்லாமல் அதனை இயக்க முயற்சி
செய்துவிட்டு 'என் வாகனம் ஓடவில்லை' என்று குறை
கூறுவதைப் போன்று உள்ளது நீங்கள் புலம்புவது.
வாகனங்களைப் பழுதுபார்பவரிடம் சென்று 'என்
வண்டியில் பிரச்சனை' என்று சொல்லுங்கள், நீங்கள்
மசகெண்ணெய் இல்லாமல் வண்டி ஓட்டுவதை அவர்
பார்த்தால், 'ஏ! முட்டாளே, நீ வண்டி ஓட்ட லாயக்கு
இல்லை' என்று உங்களை ஏசுவார்.

'நான் மன அழுத்தத்துடன் உள்ளேன்' என்று நீங்கள்


சொல்வதும் இதுபோலத்தான். அப்படியென்றால், உங்கள்
மனமும் உங்கள் மன அமைப்பும் ஒருவிதமான உராய்வு
நிலையிலேயே உள்ளது என்று அர்த்தம். இது மிக
அடிப்படையான உராய்வு நிலை, பல சிக்கலான
நிலைகளில், ஆழமான நிலைகளில் இந்த உராய்வு நிலை
நமக்குள் ஏற்படுகிறது. உங்கள் கர்ம உடலும் உங்கள்
ஸ்தூல உடலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை
என்றால், அதில் ஒருவித உராய்வு ஏற்படும். சரி, எதனால்
இவ்வாறு நேர்கிறது? உங்களுக்கு ஒருவிதமான கர்ம உடல்
இருக்கலாம், ஆனால் நீங்கள் பொருத்தமான கருவை
அடைய முடியாமல் போனால், உங்கள் கர்ம உடல், உங்கள்
ஸ்தூல உடலுடன் ஒருவித உராய்விலேயே இருக்கும். இது
கையாள்வதற்கு சுலபமான விஷயமல்ல. இதைக்
கையாள்வதற்கு பல சூட்சுமங்கள் தேவை. இது சிக்கலான
விஷயம்.

இரண்டாவது வாய்ப்பு, உங்கள் சக்தி உடல் உங்கள் ஸ்தூல


உடலுடன் பொருந்திப் போகாவிட்டாலும் இந்த நிலை
ஏற்படும். ஒரு சில மனிதர்கள் இந்த பாதிப்பிற்கு
உள்ளாகிறார்கள். இதற்கும் கலாச்சாரத்திற்கும்
தொடர்புண்டு. இதற்கும் சுற்றுச்சூழலிற்கும், சுற்றுச்சூழல்
சீர்கேட்டிற்கும், நிலத்திற்கும் கூட சம்பந்தமுண்டு. அந்த
நிலம் எவ்வாறான தகவல்களை தன் நினைவில் பதித்து
வைத்துள்ளது என்பதும் ஒரு காரணி. பல நிலைகளிலான
தொடர்பு இதற்கு உண்டு.

பல்வேறு வகையான உராய்வுகளும் உண்டு. உங்கள் மன


அமைப்பும், உங்கள் உடல் அமைப்பும் ஒன்றோடு ஒன்று
ஒத்துப் போகாமல் இருக்கும். இதுபோல், உங்கள்
ஒவ்வொரு பரிமாணமும், உங்கள் ஒவ்வொரு பகுதியும்
உராய்வில்லாமல் சுமுகமாகப் போகலாம் அல்லது
உராய்வுடன் செயல்படலாம். ஹட யோகா செய்வதே
உங்கள் அமைப்பை பதப்படுத்தத்தான். ஹட
யோகாவினால், உங்கள் மொத்த அமைப்புமுமே
உராய்வில்லாமல் மழமழவென செயல்படும். கொஞ்ச
காலத்தில் நீங்கள் இங்கு அமர்ந்தால், உங்களுக்குள்
உராய்வில்லாமல் இருக்கும். நீங்கள் போராட
வெளிசூழ்நிலை மட்டுமே இருக்கும், வேறெதுவும்
இருக்காது. உங்கள் நிலை இப்படி இருந்தால் மட்டுமே,
வெளிசூழ்நிலையை உங்களால் இலகுவாக, செயல்
வல்லமையுடன் கையாள முடியும்.

பயிற்சிகளின் மூலம் உங்களுக்குள் நீங்கள் திறந்து


வைத்திருக்கும் சில சாத்தியங்கள் மௌனமாய் உறங்கிப்
போய்விடாமல் இருப்பதற்காக நாம் தீட்சை அளிக்கிறோம்.

இதை நோக்கிய படியில் சூரிய கிரியா ஓர் அபாரமான


செயல்முறை. உங்கள் உடல் அமைப்பை வழவழப்பாக,
நன்றாக எண்ணெயிடப்பட்ட உணர்வுடன் செயல் செய்யும்
ஆற்றலைக் கொடுக்கக் கூடியது சூரிய கிரியா. அகண்ட
அந்த சூரிய மண்டலத்துடன் நீங்கள் தொடர்பில்
இல்லாதபோது இப்படியொரு நிலை ஏற்படாது.
உங்களுடைய உடலே அந்த சூரிய மண்டலம்தான்.

சூரிய கிரியா, உங்களின் சுழற்சியை விரிவு படுத்துகிறது.


இப்படி விரிவாக்குவதன் மூலம் உங்கள் சக்தி உடல் அந்த
சூரிய மண்டலத்துடன் இயைந்து செயல்படும். இந்தச்
சுழற்சி நிகழ்ந்து முடிய, 12 வருடங்களும், 3 மாதங்களும்
சில நாட்களும் தேவைப்படும். உங்கள் சக்தி உடலிற்கும்
இதே கால அளவு தேவை. நீங்களும், உங்கள் சுழற்சியும்
சூரியனும் இணங்கியிருந்தால், உங்கள் உடல் அமைப்பும்
எவ்வித உராய்வுகளும் இன்றி செயல்படுவதை நீங்கள்
பார்க்க முடியும். பிறப்பிலேயே ஏற்படும் கோளாறுகள்,
அல்லது வாழ்வின் போக்கில் நாம் தொற்றிக் கொண்ட
கோளாறுகளை நாம் சீர் செய்துவிட முடியும். இந்நிலையை
அடைய பல்வேறு முறைகள் உள்ளன. இத்திசையில், சூரிய
கிரியா ஒரு சக்திவாய்ந்த செயல்முறை.

உங்கள் சுழற்சியின் ஒரு பகுதிக்குள் நுழைவதற்கே இந்த


சூரிய கிரியா. நீங்கள் தீட்சை பெறும் முன்பு, உங்களுக்குள்
ஒரு பாகமாக இது உருவாகிவிட வேண்டும். சூரிய
கிரியாவிற்கு நாம் அளிக்கும் தீட்சை எளிமையானது.
உங்களுக்குள் ஒருவித வடிவவியலை நீங்கள்
சாதித்திருந்தால், இந்தத் தீட்சைக்கு
தேவைப்படுவதெல்லாம் நீங்கள் உருவாக்கிய அந்த
வடிவவியல் மட்டுமே. உடலில் இருக்கும் 114 சக்கரங்களில்
21 சக்கரங்கள் செயல்திறனுடன் இருந்தால் நீங்கள்
முழுமையான வாழ்க்கை வாழ முடியும். புதிதாக
திறந்துள்ள அந்த சாத்தியத்திற்குள் சக்தியை நிரப்புவதே
இந்த தீட்சையின் நோக்கம். உங்கள் நாடிகளில், 21 நாடிகள்
முழுவதுமாக திறந்திருந்தால் நீங்கள் முழுமையான
வாழ்க்கை வாழ முடியும். பெரும்பாலானவர்களுக்கு
இத்தனை நாடிகள் திறந்திருப்பதில்லை. ஒருவருக்குள் 21
நாடிகள் முழுத் திறனுடன், பரிபூரண செயல்பாட்டில், முழு
துடிப்புடன், தனக்குள் முழு ஆற்றலுடன் செயல்பட்டால்
அவர் நிறைவான வாழ்க்கை வாழ்வார்.

ஆனால் நிறைய பேர் முறையான ஹட யோகப்


பயிற்சிகளினாலோ அல்லது சூரிய கிரியா செய்வதாலோ
திறந்த நிலைக்கு வந்திருந்தாலும், அவர்கள் தங்களை
சக்தியூட்டி இருக்க மாட்டார்கள். அந்தப் பயிற்சிகளின்
மூலம் தன்னை ஒரு சீராக திறந்து கொள்ளாமல்
இருக்கலாம். வெவ்வேறு இடங்களில் திறந்த நிலையை
உருவாக்கி, அமைப்பின் இதர பகுதிகள் அந்தச் சக்தியின்
தொகுதியை ஒரு சீராக செலுத்த முடியாமல் போகலாம்.

நீங்கள் பயிற்சி செய்து ஏற்படுத்திய அந்த புதிய


சாத்தியங்கள் உறங்கிவிடாதபடி தீட்சை பார்த்துக்
கொள்ளும். அந்தச் சாத்தியம் நீண்ட நேரம்
உறங்கிவிட்டால், அந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யும்
உந்துதல் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். பயிற்சிகள்
செய்வதினால் பலன்கள் ஏற்பட்டாலும், பிரதிபலன்
பாராமல் உங்கள் பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து
செய்தால், நீங்கள் ஓரு திறந்த நிலைக்கு வருகிறீர்கள்,
பிற்பாடு நாம் பயிற்சிகளால் திறக்கப்பட்ட மையங்களை
சக்தியூட்டலாம். இதுவே தீட்சையின் நோக்கம். உடலின்
புரிதலின்படி இது எளிமையான ஒரு செயல்முறை, ஆனால்
தீட்சை அளிக்கும் அந்நாளில் நாம் சப்தம் எழுப்பி, சற்றே
ஆர்ப்பாட்டம் செய்து, நிறைய உணவு உண்டு, அதனை
கோலாகலமாக்கி விடலாம்.

………………………………………………………………………………………………………………………………….

பாரம்பரிய ஹடயோகா -
ஓர் அறிமுகம்!
ஈஷாவின் முதல்நிலை வகுப்புகள் முதல் மேல்நிலை
யோகப் பயிற்சிகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு
நிலையில் ஒவ்வொரு தன்மையில் இருக்கும் படியாக
வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் சத்குரு
வழங்கியுள்ள 21 நாள் பாரம்பரிய ஹடயோகப் பயிற்சியின்
தனித்தன்மைகளும் முக்கியத்துவமும் என்ன என்பதை
இங்கே பார்க்கலாம்!

ஈஷாவின் முதல்நிலை வகுப்புகள் முதல் மேல்நிலை யோகப்


பயிற்சிகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில்
ஒவ்வொரு தன்மையில் இருக்கும் படியாக
வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் சத்குரு
வழங்கியுள்ள 21 நாள் பாரம்பரிய ஹடயோகப் பயிற்சியின்
தனித்தன்மைகளும் முக்கியத்துவமும் என்ன என்பதை
இங்கே பார்க்கலாம்!

ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி ஆலயத்தில் 21


நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஹடயோகா நிகழ்ச்சியில்
உபயோகா, அங்கமர்தனா, சூரியகிரியா, யோகாசனங்கள், பூதசுத்தி
ஆகிய 5 சக்திவாய்ந்த பயிற்சிகள் ஆழமாகவும் நுட்பமாகவும்
கற்றுத்தரப்படுகின்றன.

உபயோகா என்பது 19 நிலைகள் கொண்ட பயிற்சி. இதைச்


செய்வதன் மூலம் உடலிலுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகளை
இயக்குவதோடு சக்திநிலை மண்டலத்தை தூண்டுகிறது.

அங்கமர்தனா என்பது 30 வகையான பயிற்சி முறைகளைக்


கொண்டது. இதைச் செய்வதன் மூலம் உடல் மற்றும் மனநலனின்
உச்சத்தை அடைய முடியும்.

சூரியகிரியா என்பது 21 படிகளைக் கொண்ட யோகப்பயிற்சி.


மனிதனின் நன்மைக்காக, பழங்கால நடைமுறையில்
வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான யோகமுறை.

யோகாசனங்கள் என்பது, ஒருவரின் விழிப்புணர்வு


நிலையையும், சக்திநிலையயும் உச்சத்திற்கு கொண்டு
செல்வதற்கான சக்திவாய்ந்த உடல்நிலைகள்.

பூதசுத்தி என்பது உடலில் உள்ள பஞ்சபூதங்களை சுத்தப்படுத்தும்


செயல்முறையாகும்.
ஹடயோகா பற்றி சத்குரு...

ஹடயோகா என்றால், நீங்கள் இந்த உயிர் செயலுடன்


இணங்கியிருக்க வேண்டும் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கை
முழுமையாக மலர வேண்டுமென்றால், அத்துடன் நீங்கள்
இணங்கியிருக்க வேண்டும், வேறுவழியே இல்லை. ஹடயோகா
என்பது இந்த பிரபஞ்சத்துடன் மனித உடலை இணங்கச் செய்யும்
ஒரு அளப்பறிய நிகழ்வு.

நீங்கள் ஹடயோகா செய்யும் போது, உடலின் கட்டுப்பாடுகள் தான்


மிகப் பெரிய தடையாக இருக்கும். எதைச் செய்ய நினைத்தாலும்
மனிதர்களுக்கு தடையாக இருப்பது அவர்களின் உடலும் மனமும்
மட்டும்தான். நாம் அவற்றிற்கு உரியகவனம் கொடுக்காததால் எது
நமக்கு ஏணிப்படிகளாக இருக்க வேண்டுமோ அவைகளே நமக்கு
தடைகளாக இருக்கின்றன. நம் யோகக் கலாச்சாரத்தில், மனித
அமைப்பை முழுமையாகவும் ஆழமாகவும் ஆராய்ந்தபிறகு,
அவைகளை எப்படி ஒரு பெரும் வாய்ப்புகளாக மாற்றுவது என்ற
வழிமுறைகளை உருவாக்கியுள்ளோம். ஹடயோகா என்பது,
உங்கள் உடலை ஒரு தடையாக அல்லாமல், ஒரு உட்சபட்ச
வாய்ப்புக்கான ஒரு ஏணிப்படியாக மாற்றும் ஒரு வழிமுறை.
அதன்பின் ஆரோக்கியம், ஆனந்தம், பேரானந்தம் அதைவிட
மேலாக ஒரு சமநிலை உங்களுக்கு இயற்கையாகவே
வந்துசேரும்.

ஆதியோகிஆலயத்தில்...

ஆதியோகி ஆலயம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, பாரம்பரிய


யோகாவை அதன் தூய்மையான வடிவில் திரும்ப கொண்டு
வருவதற்காகத்தான். உலகில் இன்று பயிற்றுவிக்கப்படும் புத்தக
யோகாவைப் போலவோ, ஸ்டுடியோ யோகாவைப் போலவோ
அல்லாமல் ஒரு சக்திவாய்ந்த விஞ்ஞானமாகத் திகழும்
முறையான பாரம்பரிய யோகாவை மக்களுக்கு வழங்குவதுதான்
நம் நோக்கம்.

இது ஏதோ தலைகீ ழாக நின்று கொண்டு, தாங்கள் யோகா


செய்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் மக்களை நாம்
உருவாக்கப் போவதில்லை, இந்த யோகாவில் தங்கள்
வாழ்க்கையை ஆழமாக முதலீடு செய்ய விரும்புபவர்களையே
நாம் உருவாக்க போகிறோம். இதை உருவாக்குவது என்பது,
வெறும் குறிப்புகள் கொடுப்பதில் மட்டும் நடக்கப் போவதில்லை;
இதற்கு ஒரு அளப்பறிய சக்தி தேவை, இல்லையென்றால் இதை
பயிற்றுவிக்க முடியாது. ஒரு சக்தி கூடு உருவாக்காமல், யோகா
கற்றுத் தந்தால், அது உண்மையில் யோகா இல்லை. அது வெறும்
கேலிக்கூத்தாகிவிடும். அந்த கேலிக்கூத்துதான் தற்போது உலகில்
நடந்துகொண்டிருக்கிறது.

ஆதியோகி ஆலயம், ஒரு சக்திவாய்ந்த ஸ்தானம் உருவாக்க


வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது
போன்ற ஒரு அதிர்வுமிக்க இடம் நமக்குத் தேவை, இங்கே
வெறுமனே உட்கார்ந்து, இங்கே நடப்பவற்றுடன் நீங்கள்
இணங்கியிருந்தால், அனைத்து யோக சூத்திரங்களும்
உங்களுக்குத் தெரியவரும். ஒரு புத்தகத்தை திறந்தோ அல்லது
யாரிடமாவது கேட்டோ அதை அறிய வேண்டும் என்பதில்லை,
வெறுமனே இங்கே அமர்ந்தால், அது உங்களுக்கு இங்கேயே
இருக்கும். யாராவது ஒருவர் உங்களுக்கு கொஞ்சம்
உதவுவார்தான், ஆனால் நான் ஒரு வார்த்தை சொல்லும்போது,
அதனுடன் சேர்ந்து உங்கள் சக்தி துடிக்கவில்லையென்றால்,
அதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாமல் போய்விடும்.
வெறும் வார்த்தைகள் மட்டும்தான் உங்களுக்குப் புரியும், ஆனால்
வார்த்தைகள் மட்டும் யோகா இல்லை. ஏதாவது ஒன்றை நீங்கள்
கூர்ந்து கவனித்தால், அது உங்கள் உடலிலும் நடக்க வேண்டும்,
இல்லையென்றால் அது யோகா இல்லை. இது நடக்க
வேண்டுமென்றால் அதற்கு ஒரு சக்திவாய்ந்தஇடம் தேவை.

…………………………………………………………………………………………………………………………………….

பிராணாயாமம்
என்னவெல்லாம்
செய்யும்?!
"மூச்ச சும்மா இழுத்து விட்டுட்டா பெருசா என்ன
நடந்திரும்?" இப்படிப் பிராணாயாமத்தை சாதாரணமாகப்
பார்க்கும் நிலை பரவலாக உள்ளது. பிராணாயாமம்
பற்றியும், 6 மாதங்கள் தொடர்ந்து அதனைப் பயிற்சி
செய்தால், நிகழக் கூடிய அற்புதங்களைப் பற்றியும்
விளக்குகிறார் சத்குரு.

"மூச்ச சும்மா இழுத்து விட்டுட்டா பெருசா என்ன


நடந்திரும்?" இப்படிப் பிராணாயாமத்தை சாதாரணமாகப்
பார்க்கும் நிலை பரவலாக உள்ளது. பிராணாயாமம்
பற்றியும், 6 மாதங்கள் தொடர்ந்து அதனைப் பயிற்சி
செய்தால், நிகழக் கூடிய அற்புதங்களைப் பற்றியும்
விளக்குகிறார் சத்குரு.
Question:யோகா ஒரு கடல் போல பரந்திருக்கிறது.
யோகாவின் பல்வேறு பயிற்சிமுறைகளை, குறிப்பாக ஈஷா
யோகா வகுப்பில் கற்றுத் தரப்படும் பிராணாயாமா
சுவாசத்தைப்பற்றி எங்களுக்கு விளக்கிச் சொல்வர்களா?

சத்குரு:

நீங்கள் இப்போதிருக்கும் நிலைக்கு அடுத்த உயர்வான


விழிப்புணர்வு நிலையை, புரிதலை, அடையவேண்டும்
என்ற விருப்பம் இருந்தால், அதற்கு உங்கள் உடல், மனம்
மற்றும் சக்தி நிலையை தயார்படுத்த வேண்டும்.
யோகாவின் அடிப்படைக் கொள்கைகள் உங்களது மனதை
ஒரு குறிப்பிட்ட வகையில் தயார்படுத்தி, முதிர்ச்சியடைய
வைக்கும். யோக ஆசனங்கள், உங்கள் உடல் உயர்ந்தநிலை
சக்திகளை பெறுவதற்கு உதவி
செய்யும். பிராணாயாமா உங்கள் சுவாசத்தோடு
தொடர்புடைய முக்கியமான சக்தியான பிராணசக்தியைத்
தீவிரப்படுத்தி, நெறிப்படுத்துகிறது. பிராணாயாமா
உங்களை ஆரோக்கியமாக, துடிப்பாக, விழிப்புடையவராக
ஆக்குகிறது. ஆனால் அத்துடன் அதன் பயன்கள்
முடிந்துவிடவில்லை.

பிராணாயாமா ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி. அது உங்களை


ஒரு உயர்ந்த நிலை அனுபவத்துக்கு மெதுவாகவும்
இயல்பாகவும் நகர்த்திச் செல்கிறது.
பிராணாயாமா ஒரு சக்தி வாய்ந்த பயிற்சி. அது உங்களை
ஒரு உயர்ந்த நிலை அனுபவத்துக்கு மெதுவாகவும்
இயல்பாகவும் நகர்த்திச் செல்கிறது. அது உங்கள் வாழ்க்கை
அனுபவத்தையே மாற்றிவிடும் ஒரு கருவியாகும்.
பிராணாயாமா உங்களை உங்களது உடலின்
கட்டுப்பாடுகளைத் தாண்டி, உங்கள் உள்ளே அடியாழத்தில்
இருக்கும் உள்பரிமாணத்தை உணரச் செய்கிறது.
பிராணாயாமா சுய விழிப்புணர்வை அடைவதற்கான ஒரு
முழுமையான பாதை. யோகாவின் எட்டு பிரிவுகளான
யாமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரதியஹாரா,
தாரணா, தியானா, சமாதி ஆகியவற்றில் பிராணாயாமா
என்பதும் ஒரு பிரிவு.

முதல் இரண்டு பிரிவுகளும், ஒரு தொடக்க நிலை சாதகர்


என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை
போதிக்கின்றன. அவை பெரும்பாலும் ஒருவரின்
வளர்ச்சிக்கு உதவும் ஒழுக்க விதிகளைப் போன்றவை.
நிறைய பேருக்கு யோகா என்றாலே ஆசனங்கள்தான் என்ற
எண்ணம் இருக்கிறது. ஆசனா என்பது உடலுக்கானது. உடல்
என்பது மக்களிடம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அது அவர்களை பல விதங்களில் ஆட்சி செய்கின்றது.
உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும்
வைத்துக் கொள்ளவில்லை என்றால், உங்களால் உங்கள்
உடலைத் தாண்டி சிந்திக்க முடியாது. இப்போது உங்கள்
காலில் வலி இருக்கிறதென்றால், நான்
உங்களிடம் ஞானமடைவதைப் பற்றியோ அல்லது
கடவுளைப் பற்றியோ பேசினாலும், நீங்கள் என்னிடம்
உங்கள் கால் வலிக்கான நிவாரணத்தைப் பற்றித்தான்
கேட்பீர்கள். உங்கள் உடலுக்கு உங்கள் மேல் அத்தனை
ஆதிக்கம் இருக்கிறது. அப்படியென்றால் ஆசனா என்பது
வெறும் உடல் வலிமை பெறுவதற்கு மட்டும்தானா?
இல்லை. அது உங்கள் உடலை இப்போதிருக்கும்
நிலையிலிருந்து இன்னும் சூட்சுமமான நிலைக்கு நகர்த்திச்
செல்வதற்கு உதவுகிறது.

யோகாவின் முழுச் செயல்பாடுமே உங்களுக்குள் இருக்கும்


அந்த சக்தியை மிகவும் சூட்சுமகாக ஆக்கி, இப்போது
மனிதராக இருக்கும் நீங்கள், தெய்வக
ீ நிலையை
அடைவதற்கு உதவுவதுதான்.

அதேபோல, ஒரு மனிதனின் சக்திநிலை மந்தமாகவோ


அல்லது சூட்சுமமாகவோ இருக்கலாம். உங்களைச்
சுற்றியிருக்கும் படைப்புகளைப் பார்த்தால், இன்றைய
நவன
ீ விஞ்ஞானம் ஒப்புக் கொள்வதைப் போல, இந்த
பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்திதான் நிரம்பியுள்ளது. அந்த
சக்திதான் இங்கே மண்ணாகவும், கீ ழே ஊர்ந்து
கொண்டிருக்கும் எறும்பாகவும், அங்கு நிற்கும் மரமாகவும்,
எங்கும் இருக்கும் மனிதர்களாகவும் மாறியிருக்கிறது. அதே
சக்தியைத்தான் நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்கள். அந்த
ஒரே சக்தி தன்னை பல விதங்களில் வெளிப்படுத்திக்
கொள்கிறது. அந்த சக்தி மிகவும் மந்தமான
நிலையிலிருந்து, உச்சநிலை வரை பரந்துள்ளது. அதில்
மிகவும் மந்தமான சக்தியை, நீங்கள் உயிரற்ற அஃறிணை
பொருட்கள் என்றும், உச்சநிலை சக்தியை கடவுள் என்றும்
அழைக்கிறீர்கள்.

ஈஷா யோகாவின் முழுச் செயல்பாடுமே உங்களுக்குள்


இருக்கும் அந்த சக்தியை மிகவும் சூட்சுமகாக ஆக்கி,
இப்போது மனிதராக இருக்கும் நீங்கள், தெய்வக
ீ நிலையை
அடைவதற்கு உதவுவதுதான். உங்களுடைய சக்தியை
உங்களுக்குள்ளாகவே இன்னும் சூட்சுமமான நிலைக்குக்
கொண்டு செல்வதற்கு, உங்கள் உடலும், மனமும்,
சக்திகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது
சாத்தியமில்லை. இதைத்தான் நாம் ஈஷா யோகா
பிராணாயாமா பயிற்சியில் செய்கிறோம். ஆறு மாதங்கள்
பிராணாயாமா பயிற்சி செய்த பின் பார்த்தால், நீங்கள்
முன்பிருந்ததை விட அனைத்து விதங்களிலும் இன்னும்
சூட்சுமமான மனிதராக ஆகியிருப்பீர்கள். வாழ்க்கையை
இன்னும் அதிக புத்திசாலித்தனத்துடன் உணர்ந்து,
அனுபவிப்பீர்கள்.

You might also like