Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

விரிவுரை வாரம் 6

1. ஏடலாக்கம் என்றால் என்ன?

ஏடல் + ஆக்கம் என்பதே ஏடலாக்கம் ஆகும். ஏடல் என்பது ஆங்கிலத்தில் idea என்பர்.
ஏடலாக்கம் ஒரு தனிமனிதரின் சிந்தனையில் உதிக்கின்ற ஏடலை ஒரு பொருளாக
உருவாக்குவதாகும். கற்பனையில் திட்டமிட்ட வடிவத்தில் ஓர் ஏடலாக்கம் அமைய தனிமனிதரின்
முயற்சி அவசியமாகிறது.

2. ஏடலாக்கத்தின் அவசியத்தையும் தேவையையும் விளக்குக.


ஏடலாக்கம் மனிதர்களுக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்குவதற்குப் பெரும்
பங்காற்றுகிறது. அதோடு, ஒரு புதிய ஏடலைச் சிந்திப்பதற்கும் அவர்களின் கற்பனைத் திறனை
ஊக்குவிக்கிறது. மேலும், ஆக்கம் புத்தக்கமான கற்றல் கற்பித்தலை உருவாக்க ஏடலாக்கம்
பெரும் பங்காற்றுகிறது. பெரும்பாலும் ஆசிரியர்களுக்கு மிகவும் உதவி புரியும் எனலாம்.
அதுமட்டுமல்லாமல், நம் நாடு 21 ஆம் நூற்றாண்டை முன்நோக்கி செல்ல ஏடலாக்கம் பெரிதும்
துணைப்புரிகிறது.

3. ஏடலாக்கக் கருவியை எத்தகைய சூழல்களில் பயன்படுத்தலாம் என்பதனை விளக்குக.


 ஏடலாக்கக் கருவியை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தலாம். இன்றைய காலக்கட்டத்தில்
ஆசிரியர்கள் 21 ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலை மாணவர்களிடம் உட்புகுத்த
முயற்சி செய்கின்றனர். அவ்வகையில் i-THINK வரைப்படம் மாணவர்களின்
சிந்தனையில் உதிக்கும் ஏடல்களை வெளிகொணர உதவும்.
 கற்றல் கற்பித்தலில் மட்டுமல்லாமல், வணிகத்துறையிலும் ஏடலாக்க கருவியைப்
பயன்படுத்தலாம். பொதுவாக வணிகர்கள் தங்களின் வியாபாரத்தை வளர்ப்பதற்கு
ஏடாலாக்கக் கருவியைப் பயன்ப்டுத்துகின்றனர். மற்ற வணிகத்தைவிட தம்முடை
வணிகத்தை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது சிந்திக்க உதவுகிறது.

You might also like