ஆழக்கற்றல்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

21-ஆம் நூற்றாண்டில் ஆழக்கற்றல்

முன்னுரை

கற்றல் கற்பித்தல் கால மற்றத்தோடு இணைந்து வளரும் கல்வியியல் நடவடிக்கையாகும்.


இது பழையனவற்றைக் களைந்து புதியனவற்றை உள்வாங்கி கொண்டு உருமாற்ற பரினாமத்தில்
துரித வளர்ச்சி கண்டு வருகிறது. இன்றைய 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் முறையில்
மாணவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் சிந்தனை மற்றும் ஆக்கத்திறன் போன்றவற்றை
உருவாக்க வேண்டிய கடப்பாட்டை நம் கல்வி கொள்கைக் கொண்டுள்ளது. ஆகவே, ஆசிரியர்கள்
ஆழக்கற்றலை வகுப்பில் நடத்துவதன் மூலம் மாணவர்களின் சிந்தனையும் ஆக்கத்திறனையும்
வளர்ச்சி அடைய செய்ய முடியும். இவ்வாறு மாணவர்களின் சிந்தனையும் ஆக்கத்திறனையும்
வளர்ப்பதோடு மட்டும் அல்லாமல் ஆழக்கற்றல் அவர்களுக்குப் பல வகையில் பயனுள்ளதாக
அமையும். கல்வியியல் அறிஞர்கள் எதையும் மேலோட்டமாகப் படித்தால், அது நிலைக்காது என்று
கூறியுள்ளனர். அதனால் தான் அறிஞர்கள் ஆழக்கற்றலை முன்னெடுத்து, அதன் நுன்மைகளை
அருமையாக வெள்ளோட்டமிட்டுள்ளனர். ஆழக்கற்றல் என்றால் மாணவர்கள் அவர்களின்
முன்னறிவைக் கொண்டு புதிய அறிவினையைச் சுயமாகத் தேடி கைவரப்பேற்று அதனை
வாழ்க்கையில் பயன்படுத்துவதாகும். மாணவர்கள் தன் விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும்
பொறுப்புணர்வுடனும் தன்னம்பிக்கையுடனும் அறிவற்றலுடனும் கல்வி கற்பதோடு புதிய ஒரு
சூழலில் அறிவு பெற ஆழக்கற்றல் முறை வழிபேணுகிறது.

ஆழக்கற்றலை வகுப்பில் மாணவர்களுக்குப் பயனுள்ள வழியில் நடத்த பல முறைகள்


உள்ளன. காட்டாக, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் அறிஞர்கள் பற்றிய விவரங்களை
அறியாமல் உள்ளனர். அதே சமயம் மாணவர்களிடையே ஒற்றுமையைப் புகுட்டுவதில் ஆசிரியர்
சிரமத்தை எதிர்நோக்குகிறார். இச்சிக்கலைக் களைய ஆசிரியர் மாணவர்களிடம் மூவர் கொண்ட
குழுவில் தமிழ் அறிஞர்கள் பற்றிய விவரங்களைப் பல்வேறு மூலங்களிலிருந்து ஆராய்ந்து
திரட்டேடு ஒன்றைத் தயாரிக்க பணிக்கிறார். இத்திரட்டேடைத் தயாரிக்க மாணவர்கள் ஒன்றாக
இணைந்து செயல்படுவதோடு தமிழ் அறிஞர்கள் பற்றிய விவரங்களையும் ஆழமாக
அறிந்துகொள்கின்றனர். தமிழ்மொழி பாடம் மட்டுமில்லாமல் நன்னெறிகள்வியையும் இந்த இடுபணி
உட்புகுத்துகிறது. பொதுவாக, ஆழக்கற்றலில் மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது.

ஆழக்கற்றலில் ஆசிரியரின் பங்கு

ஆசிரியர்கள் ஆழக்கற்றலை முறையாகப் பயன்படுத்தினால்தான் அதன் பயனை


மாணவர்கள் அனுபவிக்க முடியும். ஆகவே, வகுப்பில் ஆழக்கற்றலைக் கற்றுத் தரும் முறையை
ஆசிரியர்கள் தெரிந்து கொள்வது அவசியம். அவ்வகையில் முதலாவதாக ஆசிரியர் அவர்களுக்கும்
மாணவர்களுக்கும் சவால் மிக்க இடுபணி தலைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் தலைப்பு மாணவர்களின் சிந்தனையாற்றலைத் தூண்டும் அளவிற்கு இருப்பதை
ஆசிரியர் உறுதி செய்வது சிறப்பாகும். அதுமட்டுமில்லாமல், ஆசிரியர் கொடுக்கும் இடுபணி
மாணவர்களின் தரத்திற்கு ஏற்றவாறும் அமைய வேண்டும். அறிவாளியான மாணவர்களுக்கு
எளிமையான இடுபணியைக் கொடுத்து விட்டு இடைநிலை மாணவர்களுக்கு மிகவும் கடிமையான
இடுபணியைக் கொடுத்தல் கூடாது. ஆகவே, ஆசிரியர்கள் முதலில் மாணவர்களின் தரத்தைத்
தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், ஆசிரியர் ஒரே மாதிரியான இடுபணியை
மாணவர்களுக்குத் திரும்ப திரும்ப கொடுக்கக் கூடாது என்று ஆழக்கற்றல் வழியுறுத்துகிறது.
இதற்கு மாறாக அவ்விடுபணியைத் திரும்ப திரும்ப கொடுத்தால், அது மாணவர்களை மனனம்
செய்ய தூண்டும். ஆக, ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் குறிப்பிட்ட தலைப்பைக் கொண்ட
இடுபணியைத் தருவது நல்லது. இதன் மூலம் மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பை ஆழமாக
ஆராய்ந்து தரமான இடுபணியைத் தர இயலும். எனவே, ஆசிரியர் ஒரே மாதிரியான இடுபணியைத்
திரும்ப திரும்ப கொடுக்காமலும் மாணவர்களின் சிந்தனையாற்றலைச் சோதிக்கும் வகையிலும்
இடுபணியைத் தந்தால் அவர்கள் மனனம் செய்யாமல் தங்களது புரிதலை மேம்படுத்த முயற்சிப்பர்.

அடுத்ததாக, கற்றல் கற்பித்தலில் ஆசிரியர் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க


வேண்டும். மாணவர்கள் கேள்வி கேற்பதற்கும், மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும்
பிரச்சனைக்கான தீர்வைச் சொல்லவும் ஆழமாகச் சிந்திக்கவும் ஆசிரியர் வாய்ப்பளிக்க வேண்டும்.
ஆசிரியர் மாணவர்களுக்கு இது போன்ற பல வாய்ப்புகளை வழங்கினால்தான் மாணவர்கள்
ஆழக்கற்றலில் முழுமையாக ஈடுபடுவர். ஆழக்கற்றலில் மாணவர்களின் கற்றலுக்கு அவர்களே
முழு பொறுப்பு. ஆழக்கற்றல் பயனுள்ளதாக அமைவதும் பயனற்று போவதும் மாணவர்கள்
கைகளில்தான் உள்ளது. ஆழக்கற்றலில் மாணவர்கள் சுயமாகக் கற்றுக் கொள்வர்.
அதுமட்டுமில்லாமல், மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து ஒன்றாகச் செயல்படலாம்.
இதன்மூலம், மாணவர்கள் நன்றி கூறுதல், பிறருக்கு உதவி செய்தல், ஊக்கம் அளித்தல், பாராட்டுதல்
போன்ற நற்பண்புகளை வளர்த்து கொள்ள முடிகிறது. ஆசிரியர் ஆழக்கற்றலில் வழிநடத்துபவராக
மட்டுமே செயல்பட வேண்டும். தேவைப்படும் நேரத்தில் ஆசிரியர் அவர்களுக்கு வழிகாட்டியாக
இருக்கலாம். மாணவர்கள் தேடும் தகவல்கள் அனைத்தும் பாடத்தோடு தொடர்பாக உள்ளதா
என்பதை உறுதிப்படுத்துவது ஆசிரியரின் கடமையாகும். பாடத்தோடு தொடர்பாக இல்லையென்றால்
மாணவர்களிடம் கூறி அதனைச் சீர்படுத்த வேண்டும். இதையடுத்து, ஆழக்கற்றலில் மாணவர்கள்
ஒரு சிறந்த முடிவைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் உதவி புரியலாம். இதன்மூலம், கற்றலை மேலும்
மேம்படுத்த முடியும்.

மேலும், ஆழக்கற்றலில் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுவதற்கு ஆசிரியர்


மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். பாடத்தின் மீது ஆசிரியர் கொண்டிருக்கும்
ஆர்வத்தை மாணவர்களிடம் காட்ட வேண்டும். ஆசிரியர் எடுக்கும் முயற்சிகளில்தான் அவர்
பாடத்தின் மீது வைத்திருக்கும் ஆர்வம் தென்படுகிறது. உதாரணமாக, பாடத்தில் மாணவர்களின்
அடைவுநிலையை உயர்த்துவதற்காக ஆசிரியர் மிக சிறந்த அணுகுமுறையையும் உத்திமுறையையும்
வகுப்பில் பயன்படுத்துகிறார். ஆசிரியரின் ஈடுபாட்டின் மூலம்தான் அவர் பாடத்தின் மீது
வைத்திருக்கும் ஆர்வம் மாணவர்களுக்கு புலப்படும். ஆசிரியர் பாடத்தின் மீது ஆதிக ஆர்வம்
கொண்டிருந்தால் மாணவர்களும் அவர்களை அறியாமலே பாடத்தின் மீது அதிக ஆர்வம் செலுத்த
ஆரம்பிப்பர். ஆசிரியர் ஆர்வம் இல்லாமல் சலிப்புடன் பாடத்தை நடத்தினால் மாணவர்களும்
அன்றைய பாடத்தைக் கற்பதற்கு ஆர்வமில்லாமல் காணப்படுவர். கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்
மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். இம்முறை
பழையதாக இருந்தாலும் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமில்லாமல்,
ஆசிரியர் மாணவர்களின் திறனையும் புரிதலையும் வளர்க்க அதற்கான முயற்சிகளில் ஈடுபட
வேண்டும். ஆசிரியரின் முயற்சி மாணவர்களின் ஆய்வுச்சிந்தனை, ஆக்கத்திறன், ஆற்றல்
போன்றவற்றை வளர்க்கும் வகையில் இருப்பது சிறப்பாகும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
என்ற பழமொழிக்குகேற்ப ஆசிரியர் முயற்சியோடு ஈடுபாட்டால் கண்டிப்பாக வெற்றி கிட்டுவது
உறுதி.

You might also like