Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

ஒலியனியல்

ஒரு மொழியின் அடித்தளம் ஒலியன் ஆகும்.

மனிதர்கள் பேசும் மொழியில் ஒலியன் என்பது, கோட்பாட்டு அடிப்படையில்


குறிப்பிட்ட ஒரு ஒலியைக் குறிக்கும் ஒன்றாகும்.

சொற்களும், உருபன்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்குக்


காரணமாயிருப்பன ஒலியன்களே ஆகும்.

ஒரு சொல்லிலுள்ள ஒரு ஒலியனை இன்னொரு ஒலியனாக மாற்றினால்


அச்சொல்லின் பொருள் மாறிவிடும் அல்லது, அது பொருளற்ற
ஒன்றாகிவிடும்.

ஒரு மொழியில் வழங்கும் அடிப்படை ஒலிகளை ஒலியன் என்கிறோம்.

பல்வேறு நுட்பங்களைக்கொண்ட பேச்சு மொழியில் ஒலி வேறுபாடுகளுக்கு


இடையில் மாறாகவும், அடிப்படையானதுமான ஒலியை ஒலியன்
என்கின்றனர்.

இவ்வொலியன் என்பது பேச்சொலியின் சிறு பகுதியாக அமைகிறது. அதே


நேரத்தில் பொருள் மாற்றம் செய்யக்கூடிய தனி ஒலியாகவும் விளங்குவதை
ஒலியன் என்கிறோம்.

புளுஃமின் என்னும் அறிஞர் மொழிக்கான பொருள் தொடர்பு ஏற்படுத்தும்


தகுதிப்பாடு உடைய மிகச்சிறிய கூறு ஒலியன் என்கிறார்.

ஒலியன்களைக் கண்டறியும் விதம்


ஒலியன்களைத் தொகுக்க மொழியியலாளர்கள் ஐந்து கொள்கைகளை
வரையறுக்கின்றனர்.

1. வேற்று நிலைக் கொள்கை


2. துணை நிலைக் கொள்கை
3. உறழ்ச்சி (அ) ஊசலாட்டம்
4. அழகமைப்புக்கொள்கை
5. சிக்கனக் கொள்கை
வேற்று நிலைக்கொள்கை:
(வ)ீ கடம், உடம், மடம், படம், இவை மூன்றும் வெவ்வேறு பொருள் தரும்
சொற்கள்.

முற்றிலும் ‘டம்’ என்ற ஒலி அமைப்பு உள்ளது. இவற்றின் இடையே உள்ள


முதலொலி க, உ, ம, ப, வேறுபட்டு பொருள் மாற்றம் செய்கிறது. இவ்வாறு
பொருள் மாற்றம் பெறத்துணைபுரியும் ஒலிகளை குறையொலி என்பர்.
வேறுபட்ட நிலையால் பொருள் வேறுபடும் நிலையை, வேற்று
நிலைக்கொள்கை என்பர்.

துணை நிலைக் கொள்கை


இது வேற்று நிலைக் கொள்கையிலிருந்து வேறுபட்டது. கடல், தங்கம், அகம்,
இச்செசற்களில் ஒரே ககர ஒலி இல்லாமல் மூன்று ககர ஒலிகளை ரி. நி. பி
காணமுடிகிறது. மொழி முதலில் ரி ஒலி வடிவமும் மெல்லினத்தை அடுத்து
நி என்ற ஒலி வடிவமும், இரண்டு உயிர் ஒலிக்கிடையில் ‘பி’ என்ற ஒலி
வடிவத்தையும் காண்கிறோம் இவைகளும் ஒன்று ஒலியனகவும் மற்றவை
மாற்று ஒலியாகவும் இருக்கின்றன.

உறழ்ச்சி ஊசலாட்டம்
சிலச்சொற்கள் பொருள் மாறுபாடு தோற்றுவிக்காமல் அதே நேரத்தில் குறை
ஒலி இணைகளாக அமைவதை காண்கிறோம். இவ்வியல்பை உறழ்ச்சி
அல்லது ஊசலாட்டம் என்கிறோம். எ.கா.பழம் - பளம் இரண்டும் குறைஒலி
இணையாகஅமைந்திருக்கின்றன ழ ள வெவ்வேறு ஒலிகளாக இருந்தாலும்
பொருள் வேறுபடு தரவில்லை. இவ்வாறு உறழ்ந்து வருவதனை உறழ்ச்சி
அல்லது ஊசலாட்டம் எனலாம்.

அழகமைப்பு கொள்கை
க, ச், ட், த், ப், ற் - வல்லினம் ங், ஞ், ந், ம், ன் - மெல்லினம் ஏதோ ஒன்று
குறைவதாக உள்ளது அந்த குறைவு ‘ண’ வாகும் மெல்லின எழுத்தில் ‘ண’
இருந்தால் தான் அது அழகமைப்பு கொள்கையாக அமையும் மன்-
நிலைபெற்றுஇருத்தல்.

சிக்கனக்கொள்கை
ஒரு மொழியில் ஒரு வகையில் ஒலியன்களை தொகுக்கின்றபோது ஒரு
எண்ணிக்கையும் மற்றொரு வகையில் தொகுக்கின்றபோது அதைவிடக்
குறைவாக வருகின்றது. இவ்வாறு குறைவாக வருகின்றதையே
எடுத்துக்கொண்டால் அதுவே சிக்கனக் கொள்கை என்கிறோம்.

You might also like