Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 03

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
********************************************
மனமும் அதன் இரட்டை மனைவியரும்
*****************************
ஹே மனமே, காளியிடம்
உலாச்சென்று வருவோம் வாராய்!
அவள் கற்பகதருவன்றோ!
அவள் அடியில் நாற்புருடார்த்தம் வாய்ககு
் மல்லோ!
வைராக்கியம், உலக இன்பம் இருவரும் உனது மனைவியரல்லோ!
காளியாகிய கற்பகதருவிடம் உனது வைராக்கியம் என்ற மனைவியை மாத்திரம் அழைத்துவா!
வைராக்கிய மனைவியுடன் கூடி பகுத்தறியும் பேருண்மையை எனும் மகனைப் பெற காளி எனும்
கற்பகதருவிடம் வரம் கேள்!
ஹே மனமே!
உனது இருமருங்கிலும் புனிதமும் தீட்டும் என்ற இருமனைவியரும் இருக்க,
(காளியின்) ஆசீர்வாதத்தின் வாழிடத்தில் இருக்க
எப்போது கற்றுக்கொள்வாய்?
இந்த இரு மனைவியரையும் திருப்தியாக ஒரு கூரையின் கீழ் வைத்திருக்கும் போது மாத்திரமே
அன்னை சியாமளையின் ஒப்பற்ற உருவத்தை நீ காண்பாய்!
ஆணவமும், அறியாமையுமல்லோ உனது பெற்றோர்!
உன்னிடமிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டியவர்கள்!
மயக்கம் உன்னை தனது குழியில் வீழ்த்த முயன்றதென்றால்,
ஆண்மையுடன் பொறுமை என்ற தூணைப் பற்றிக்கொள்!
தர்மம், அதர்மம் என்ற ஆடுகள் இரண்டையும் கவலையின்மை என்ற தூணில் கட்டிவை!
அவை அடங்காமல் திமிறினால் அறிவு என்ற வாளால் பலிகொடு!
உனது உலக இன்பம் என்ற மனைவியின் பிள்ளைகளை தூரத்தில் இருத்து!
அவர்கள் பேச்சுக் கேளாதவர்கள் என்றால்
ஞானக்கடலில் மூழ்கடி!
ராம்பிரசாத் கூறுகிறேன்!
நான் கூறுவதுபோல் செய்வாயானால்
ஹே மனமே,
யமதர்மனிடன் நீ நல்ல கணக்குக் காட்டுவாய்!
நானும் திருப்தியுற்று உன்னை அன்பென்பேன்!

ராம் பிரசாத் ஸென் கவிதைகள் –

Sri Shakthi Sumanan

You might also like