Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

DO4143- மெய் ஒலிகள்.

அ. விளக்கம்.
நெஞ்சினின்று எழும் காற்றானது வாய் அறையின் (oral cavity) உள் புகும்போது அங்குள்ள நா, இதழ்
முதலான உறுப்புகள் அதிர்ந்து, அக்காற்றை அடைத்தோ, அதிரச்செய்தோ வெளிவிடுவதால் பிறக்கும்
ஒலிகள் மெய் ஒலிகள் எனப்படும்.
ஆ. தமிழ் இலக்கண நூலார் பாகுபாடு.
தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை மூன்று வகையாகப் பிரித்துக் கையாளுகின்றனர். அவை:
1. வல்லினம்- க, ச, ட, த, ப, ற
2. மெல்லினம்.- ங, ஞ, ண, ந, ம, ன
3. இடையினம்- ய, ர, ல, வ, ழ, ள
வல்லின ஒலிகள் மார்பினை இடமாகக் கொண்டும், மெல்லின ஒலிகள் மூக்கை இடமாகக் கொண்டும்,
இடையின ஒலிகள் மிடற்றினை (கழுத்து) இடமாகக் கொண்டும் பிறக்கின்றன என்றகிறார் நன்னூலார்.
இ. ஒலிப்புமுறைப் பாகுபாடு.
1. வெடிப்பொலிகள்: வாய் அறையின் (oral cavity) ஓர் இடத்தில் மூச்சுக்காற்று, குரல்வளை
மடலால் முழுவதும் தடை செய்யப்பட்டுத் திடீரென்று வெடிப்போடு வெளியேறினால் அதனை
வெடிப்பொலி அல்லது தடையொலி (Plosive or stop sound) என்பர் மொழியியலார். க், ச், ட், த்,
ப் என்பவை வெடிப்பொலிகள் ஆகும்.
வெடிப்பொலிகள் (Plosive sounds): க, ச, ட, த, ப

2. மூக்கொலிகள்: வெடிப்பொலிகள் போலவே அமைந்து அண்ணக்கடை திறந்து மூக்கறை (nasal


cavity) வழியே மூச்சுக்காற்று சென்று ஒலியை எழுப்பிய பின் வாயின் வழியே
வெளிவருகிறது. இவ்வகையான ஒலிகளை மூக்கொலிகள் என்பர். மூக்கொலிகள்
தோன்றும்போது குரல்வளை மடல்கள் சற்று அதிர்கின்றன.
மூக்கொலிகள் (Nasal sounds): ங, ஞ, ண, ந, ம, ன

3. மங்கொலிகள்: வாய் அறையின் உள்ளே மூச்சுக்காற்று வரும்போது குரல் வளை மடல்


அதிர்ந்தும், அதிராமலும் இருக்கும். அப்போது அண்ணக்கடை அடைப்புகளும் உண்டு. வாய்
அறையினுள் அக்காற்று ஓர் இடத்தை அடைந்து நாக்கின் இரண்டு பக்கத்திலும் (இரு
மருங்கிலும்) வெளிவருகின்றது. இவ்வாறு வெளிவருவதால் ஏற்படும் ஒலிகள் மருங்கொலிகள்
எனப்படும்.
மருங்கொலிகள் (Lateral sounds): ல, ள

4. வருடொலிகள்: நாக்கின் நுனி (Apex) மேலே எழுந்து உள்நோக்கி வளைந்து பின் வேகமாகக்
கீழே வரும்போது அண்ணத்தில் மோதுவதால் எழுகின்ற ஒலிகளே வருடோலிகள் (Flap
sounds) ஆகும்.
வருடொலிகள் (Flap sounds): ர, ழ, ற

5. உரசொலிகள்: மூச்சுக்காற்றானது வாய் அறையின் உள் புகுந்து வரும்போது அதனை


முழுவதும் தடுக்காமல் அது வெளியேறும் பாதையைக் குரல் ஒலிப்பினால் குறுக்கி அந்த
இடுக்கின் வழியே அதனைச் செலுத்தினால் உராய்வுத்தன்மை ஏற்படுகிறது. இந்த உராய்வுத்
தன்மையோடு கூடிப் பிறக்கும் ஒலிகளே உரசொலிகள் (Fricative Sounds) ஆகும்.
உரசொலிகள் (Fricative sounds): ஸ, ஷ

6. அரை உயிர்கள்: நாவின் அடிப்பகுதியானது முன் அண்ணத்தைப் பொருந்திய நிலையில்,


உள்ளிருந்து வரும் காற்று வாயில் சிறிது தடைப்படுத்தப்பட்டு வெளியே வருவதால் “ய்”
என்னும் அரை உயிர் பிறக்கிறது. உள்ளிருந்து வரும் காற்று, மேற்பல்லும் கீழ் இதழும்
இயைந்து தடை ஏற்படுத்தும் நிலையில் வெளிவருவதால் “வ்” என்னும் அரை உயிர்
பிறக்கிறது.

அரை உயிர்கள் (Semi vowels): ய, வ


ஈ. ஒலிக்கருவிப் பாகுபாடு.

ங, க- அடிநாக்கு, பின் அண்ணத்தைத் தொடுதலால் பிறக்கிறது.


ஞ, ச, ய, ற- முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கிறது.
ண, ட, ள, ஷ- வளைநா இடத்தில் பிறக்கிறது.
ந்- மேல்வாய்ப் பல்லில் பிறக்கிறது.
ம, ப- ஈரிதழ் உதவியுடன் பிறக்கிறது.
ன, ர, ல, ழ, ஸ- அண்பல்லில் பிறக்கிறது.
வ- பல் இதழ்.
த, ந- பல்.

கூட்டொலிகள்

-கூட்டொலிகள் என்பன, இரண்டு உயிர் ஒலிகள் ஒரே சமயதில் ஒலிக்கும் பொழுது


உருவாகின்றது.

-ஆங்கில மொழி அறிஞரான நோயல் ஆர்ம்பீல்ட் (Noel Armfield) என்பவர், இதை டிப்தோங்
(dipthong) என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ் எழுத்துகளில் ‘ஐ’-யும் ‘ஔ’-உம் கூட்டொலிகளாக கருத்தப்படுகிறன.

-காரணம் ‘ஐ’ என்னும் எழுத்து ‘அ’ மற்றும் ‘இ’ என்னும் இரண்டு உயிரொலிகள் இணையும்
பொழுது உருவகின்றது.

-‘ஔ’ என்னும் எழுத்து, ‘அ’ மற்றும் ‘உ’ என்னும் இரு உயிரொலிகள் இணையும் பொழுது
உருவகின்றது.

-ஆக, இரண்டு உயிர் ஒலிகள் இணைந்து ஒரே சமயதில் ஒலிக்கும் பொழுது உருவாகியதால்
‘ஐ’-யும் ‘ஔ’-உம் கூட்டொலிகளாக கருத்தப்படுகிறன.

உயிரொலி
இரண்டு உயிர் ஒலிகளை ஒன்று சேர்த்து ஒர் அசையில்/ஒரு முயற்சியில் ஒலிக்கும்போது
உருவாகின்ற ஒலி கூட்டொலி ஆகும். இரண்டு கூட்டொலிகள் உள்ளன. அதவது ஐ மற்றும் ஔ. இதை
2 வகையாக பிரித்துள்ளனர்.
முதல் வகை (உயிர் ஒலி + உயிர் ஒலி)
1. அ+இ=ஐ (அகரம்+இகரம்=ஐ)
2. அ+உ=ஔ (அகரம்+உகரம்=ஔ)
இரண்டாம் வகை (உயிர் ஒலி + மெய் ஒலி)
1. அ+ய்=அய் (அகர உயிர் ஒலி + யகர மெய் ஒலி = அய்)
2. அ+வ்=அவ் (அகர உயிர் ஒலி + வகர மெய் ஒலி = அவ்)

You might also like