தலைமையாசிரியர் வாழ்த்துரை

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தலைமையாசிரியர் உரை

தமிழ்ப்பள்ளியே எனது தேர்வு என்பதைக் காட்டிலும் ‘’ தமிழ்ப்பள்ளிதான் எனது தேர்வு ‘’


இன்னும் தமிழ் சுவையுடன் அழுத்தமாகக் கூறுவதில் பெருமை கொள்கிறேன்.
இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை
என்றால் அது மிகையாகாது. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில்தான் நம் இனத்தின்
சரணாலயங்களாக விளங்கி வருகின்றன. அந்த வகையில், நம் பூச்சோங் தமிழ்ப்பள்ளி
மாணவர்கள் அனைத்துலக ரீதியில் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர்.
அவற்றிற்கான காரணங்களுள் சில. அவை கற்றலுக்கு உகந்த பள்ளிச் சூழல்; திறன் பெற்ற
ஆசிரியர்கள், நவன
ீ வசதிகள்,ஆசிரியர்களின் அக்கறை மற்றும் அரவணைப்பு, பெற்றோர்
ஆசிரியர் சங்கம்,பள்ளி மேலாளர் வாரியம்,சமூகச் சேவையாளர்கள் மற்றும் பெற்றோர்
போன்றோரின் ஆதரவு ஆகும். நம் பள்ளி மாணவர்களின் சாதனைச் சான்றுகளை உங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் நம் பள்ளியின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் நல்ல ஒரு
வளர்ச்சியினையும் உயர்வையும் கண்டு வருகிறது.நம் பள்ளியின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு
முடிவுகளில் எல்லா பாடங்களும் 90% தேர்ச்சியினைக் காட்டுகிறது.

நம் பள்ளியில் கட்டட மற்றும் இட வசதி மேம்பாட்டில் பெரிய வளர்ச்சியினைக் கண்டு


வருகிறது. இதற்குச் சான்றாகத் தகவல் தெரிநுட்ப அறை,குளிர்சாதன வசதி நிறைந்த நூல்
நிலையம்,மாணவர் அரங்கம் மற்றும் இரண்டு அரசாங்க பாலர் பள்ளிகள் ஆகும்.

நம் பள்ளியில் இன்று 100% பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

நம் பள்ளி மாணவர்கள் மாநிலம்,தேசிய அளவிலும் மற்றும் அனைத்துலக நிலையில் பல


புத்தாக்க அறிவியல் போட்டிகளிலும் பங்கெடுத்து தங்கம்,வெள்ளி பதக்கங்களைப்
பெற்றுள்ளனர். அவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமல்லாது மலேசியத் தமிழர்களுக்கே
பெரும் புகழையும் பெருமையையும் சேர்ந்துள்ளனர்.

மேலும், நம் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பப் புதிர்
போட்டி, சிகரம் புதிர்ப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது
பெருமைப்படக்கூடிய சாதனையாகும்.

நம் பள்ளி மாணவர்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற


சதுரங்கம்,காற்பந்து,பூப்பந்து, மற்றும் கபடி போட்டிகளிலும்  வெற்றி வாகை சூடியுள்ளனர்.நம்
பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்குகின்றனர்.

நம் பள்ளியின் சாரணியர் இயக்க மாணவிகள் மாநிலம், தேசிய அளவிலும் மற்றும்


அனைத்துலக ரீதியிலும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமையை
வெளிபடுத்தியுள்ளனர்.சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான அனைத்துலக விருதான
( DISNEY AWARD ) விருதினையும் தேசிய அளவில் (BATHKP)விருதினையும் வென்று பள்ளிக்குப்
பெருமை சேர்த்துள்ளனர்.
நம் பள்ளியில் பாரம்பரிய கலை, தற்காப்பு கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு முதன்மை
அளிக்கின்றோம்.அதற்கேற்றவாறு பள்ளியில் சங்கீ தம், பரதம்,தோக்குவாண்டோ, சிலம்பம்
போன்ற வகுப்புகள் நடைபெறுகின்றன.
ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் தரத்தை உயர்த்த இடையிடையே கருத்தரங்குகள்,
சொற்பொழிவுகள், மாணவர்களுக்குப் பயிலரங்குகள் போன்றவையும்
நடைபெறுகின்றன.பொதுவாகச் சொல்ல வேண்டுமெனில், பெற்றோரின் நம்பிகையையும்
வற்றாத ஆதரவையும் இப்பள்ளி பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

நம் பள்ளியில் பயில்கின்ற மாணவர்களின் சாதனை சரித்திரங்கள், இன்றையக்


காலக்கட்டத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளது. நம் பள்ளி ஆசிரியர்களின் அயரா உழைப்பும்,
கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளும், அரவணைப்புகள், தூண்டுதல்கள் அனைத்தும் நமது
மாணவர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன. இளம் வயதிலேயே
மாணவர்களுக்கு உரிய மதிப்பளித்தும் அவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியும்
அவர்களை நாட்டில் சாதனை மொட்டுக்களாக மிளிரச் செய்வதில் நமது பூச்சோங் தமிழ்ப்பள்ளி
பெரும் பங்காற்றுகின்றது என்பது திண்ணம்.
ஆயிரம் சொற்பொழிவைவிட, ஐயாயிரம் வேண்டுகோளைவிட, பெற்றோர்க்கு
நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் நம் பள்ளி சிறப்புறச் செயல்பட்டு, மேம்பாடு அடைந்து
வருகிறது. பூச்சோங் தமிழ்ப் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பள்ளி வாரியமும்,
கொடைநெஞ்சர்களும் சமூக சேவையாளர்களும் பெற்றோர்களும் அளித்துவரும் பேரூக்கத்தால்
பள்ளி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. உங்களின் மனமாற்றத்திற்கும் சமுதாய
உருமாற்றத்திற்கும் பூச்சோங் தமிழ்ப்பள்ளி தயார் ! நீங்கள் தயாரா ?
சிறிய சிந்தனை மாற்றம்
சீரிய வெற்றியின் ஏற்றம்
என்ற சிந்தனையுடன் நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

திருமதி மு.பாக்கியம்
தலைமையாசிரியர்
பூச்சோங் தமிழ்ப்பள்ளி

You might also like