Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

"உங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும் அல்லது முடியாது என்று

நீங்கள் நினைத்தாலும் சரி, நீங்கள் சொல்வது சரிதான்." - ஹென்றி ஃபோர்டு

நாம் பல முறை நம் வாழ்க்கையில் தோற்று விடுவோமோ என்கின்ற


பயத்தினால் நம்முடைய கனவுகளை நோக்கி செல்வதில்லை. அந்த பயத்தினை
முறியடிக்க நமக்கு தன் நம்பிக்கை தேவை. எல்லோர் வாழ்க்கையிலும்
அனுபவிக்கும் ஒரு உணர்வு பயம். தோற்று விடுவோமோ என்கின்ற பயம். அந்த
பயத்தை தோற்கடிக்கும் வரை நாம் நம் வாழ்க்கையில் முன்னேற முடியாது

வாழ்க்கையில் முன்னேற முதல் படி தன் நம்பிக்கை.அதை வளர்த்து


கொள்வதால் ஒரு மனிதன் எதையும் சாதிக்க முடியும். ஒரு மனிதனின் வெற்றி,
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் அனைத்திற்குமே தன்னம்பிக்கை மிக மிக
அவசியம். தன்னம்பிக்கை உள்ளவர்களால், ஏமாற்றங்கள், தோல்வி, நேர்மறை
மற்றும் எதிர்மறையுணர்ச்சிகளை கையாள முடியும்

நாம் பேராற்றல் படைத்தவர்கள் என்பதை உணர்ந்த அனைவரும் வாழ்க்கையில்


சாதித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செல்லும் பாதை கற்களும், முட்களும்
நிறைந்ததாய் இருக்கலாம். வான நிலாவை தொட தாவி எழும் அலை கடலாக
இருக்கலாம். இது தான் பாதை, இது தான் பயணம் என்று சிரமம் பார்க்காமல்
தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள் சாதிக்கிறார்கள். நம்பிக்கை அவர்களை
இயக்கி செல்கிறது

வெற்றியாளர்கள் அனைவரும் பயம் என்னும் இரும்பு சங்கிலியை தகர்த்தெறிந்து


விட்டு கம்பீரமாக முயற்சி செய்வதால் அவர்கள் எப்பொழுதும் நெஞ்சை நிமிர்த்தி
நேர்கொண்ட பார்வையுடன் பயணிக்கிறார்கள். பயம் அவர்களை பார்த்து பயந்து
ஓடிவிடும்.

தன்னம்பிக்கை உள்ள ஒரு மனிதனிடம் சோம்பேறித்தனம் அவர்கள் கால் விரல்


பட்டு நசுங்கி காணாமல் போய்விடும்.புத்துணர்ச்சியும், விடாமுயற்சியும்
அவர்களுடன் கொஞ்சி விளையாடும்
தன்னம்பிக்கை வளர்த்து கொள்வது எப்படி ?

தன்னம்பிக்கையை வளர்க்க சில வழிமுறைகள்

1 உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்.உங்கள் செல்வம், உடைமைகள்,


திறன்கள், சாதனைகள் மற்றும் பண்புகளை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது,
உங்கள் மீ து உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து விடும். மற்றவர்கள்
எப்பொழுதும் நம் கண்களுக்கு சிறந்தவர்களாகவே தெரிவார்கள்.

2 உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் உடல் ரீதியாக


சிறந்து விளங்கும்போது, இயல்பாகவே உங்களைப் பற்றி அதிக நம்பிக்கையுடன்
இருப்பீர்கள்

3 உலகில் உள்ள எல்லா மனிதர்களும் நூறு சதவிகிதம் சரியானவர்கள் இல்லை


என்பதை நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் நல்ல திறமைகளை
கண்டறியுங்கள். அதை நினைத்து பெருமை கொள்ளுங்கள். அந்த நினைப்பே
உங்களுக்கு சிறந்த தன்னம்பிக்கை தரும்

4 சுய சந்தேகத்தை தழுவ பழகுங்கள். அது உங்களை சிறப்பாக செயல் பட உதவும்

5 உங்களை பற்றி குறைவாக பேசுபவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து


ஒதுக்கி விடுங்கள். உங்கள் அருமை உங்களுக்கு தெரிந்தால் போதும்.
எப்பொழுதும் சந்தோஷமாக, உங்களை பற்றி உயர்வாக நினைக்க பழகுங்கள்

6 செய்து முடிக்கப்படும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய


முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப் பட்டவைதாம். அதை
முயன்று பார்ப்பவர்கள் சாதனை யாளர்கள் ஆவார்கள். உங்கள் இலக்கை
மாற்றாதீர்கள், அதை சாதிக்க நினைக்கும் வழியை மாற்றி வெற்றி அடையுங்கள்

7 உறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை உயர்ந்து


விளங்கினார்கள் என்பதற்கு மட்டுமே சான்று உண்டு. லட்சியங்களை உரக்க
சொல்லுங்கள்.தனிமையில் இருக்கும்போது நீங்கள் என்ன ஆக வேண்டும்,
எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என வாய்விட்டு உரக்க சொல்லிப்பாருங்கள்
8 உங்களுக்கு சிரமமாக உள்ள செயலையோ அல்லது முடியாது என நினைக்கும்
செயலையோ தினமும் ஒரு முறையாவது செய்து பாருங்கள். இது நாள்பட
பழகிவிடும். உதாரணமாக உடற்பயிற்சி செய்ய முடியாது என நினைப்பவர்கள்
தினமும் குறைந்தது 5 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்துபாருங்கள்

9 அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணியே பலர் தன்


திறமைகளை உணராமல் வாழ்கிறார்கள்.நம்மில் பெரும்பாலானோர் உறவினர்,
நண்பர் ஆகியோரது நன்மதிப்பை பெற நினைக்கிறோம். இயல்பாகவே இது
உங்கள் மூளையில் பதிந்திருக்கும். இதனை மாற்றுங்கள். உங்களை பற்றி
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைப்பது முற்றிலும் தவறு.

1௦ சுய விமர்சனத்தை தவிருங்கள்.நீங்கள் எது செய்தாலும் உங்கள் மனம்


உங்களை விமர்சிக்கும். இந்த எண்ணத்தை மாற்றுங்கள். சுய விமர்சனம்
நல்லதுதான். ஆனால் அதனை கட்டுக்குள் வையுங்கள்

தன்னம்பிக்கை கொண்டவர்கள் வெற்றிக்கு வழி தேடுவார்கள். வெற்றியை


நேசிப்பார்கள். வெற்றி பற்றி கனவு காணுவார்கள்.

நாம் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள்.மற்றவர்களை போல வாழ கடவுள்


நம்மை படைக்கவில்லை. நமக்கென்று ஒரு திறமையையும், வாழ்க்கையையும்
கடவுள் கொடுத்திருக்கார். அதை உணர்ந்து உங்கள் மேல் நம்பிக்கையை
கொள்ளுங்கள். நிமிர்ந்து நின்று சாதிக்க புறப்படுங்கள்

You might also like