Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

நவன

ீ கற்காலத்தின் இலக்கிய ஓனர் திருமிகு ஜெமோ அவர்களின் மனக்குகை


ஓவியமும், நிகிலிசத் தத்துவங்களும், பிளாஸ்டிக் முகமும்.

-யுகாந்தன்

உலகின் தொல்குடி மக்கள் தொகுதிகளுக்கு'மரபு' என்றால் என்ன..? இங்கிருந்து


நாம் தொடங்குவோம். ஆனால்,

"இலக்கிய ஓனர் ஜெமோவிற்கு மரபு என்றால்..

நினைவுக்குவிப்பில் தாய் தந்தை, கோவில் உருவகங்கள்.

தொன்மம் என்றால்..

தொன்மம் + மனிதர் = 16 ஆம் நாள் போட்டோ மாட்டுவது.

தந்தை என்றால் வெறும் படிமம், தந்தை என்பதே புனைவு. அப்பா என்பது


அதிகாரத்தின் தொனி. முறிந்து கடந்து போவதின் ஒரு எதிர்மை. Nihilist அப்பா.

நாடு என்றால் நமக்கு பெண்.. பாகிஸ்தானுக்கு அப்பா

பாரதமாதா என்பது படிமம். பூமாதேவி, காவேரி அன்னை, தமிழன்னை,


குமரிமாவட்ட அன்னை ஆகிய Templates களிலிருந்து பாரதம் என்கிற படிமம்
உருவாகிறது.

வங்காளத்தில் காளி கருமையான அன்னை என்று பக்கிம் சந்திர சட்டர்ஜி


சொல்கிறார்.

ஆர்எஸ்எஸ் சிவப்பு அன்னை அல்ல. தாமரை வண்ணன், தாமரை கண்ணன்,


தாமரை மலர்ப்பாதம்.

சுடலைப் பொடி பூசி உள்ளம் கவர் கண்ணன்." மரபு என்றால் தாய் தந்தை
வரலாற்றுக்குட்பட்டது மட்டுமே.

- இந்தக் கருத்துக்களை திருமிகு இலக்கிய ஓனர் அவர்கள் தமது முன்னூறு


ரூபாய் கொட்டடியில் வசிய
ீ 'மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?' ஒரு
நாள் பேச்சின் ஒரு பகுதி.
இனி விளக்கத்திற்குள் செல்வோம்.

தமிழின் இலக்கிய பக்கங்களை புரட்டுபவன், புரட்டாய் ஒரு பாட்டின் வரிகளின்


ஒரு சொல்லினை மாற்றினாலும் அறிய வந்துவிடும். தமிழ் மொழியின் மீ து
காதல் கொண்டவர்களுக்கு இது எளிதில் கிட்டிவிடும்.

கவனித்துப் பாருங்கள்..

சுடலைப் பொடி பூசி உள்ளம் கவர் 'கண்ணன்'

அது கண்ணன் அல்ல கள்வன். ஆரியத்தை தலையில் சுமப்பவர்கள்தான்..


வெகு நேர்த்தியாக அந்தப் பாடலின் வரிகளைச் சொல்வது போல.. திரித்துச்
சொல்லி தனக்கு ஒரு ஒளிவட்டம் பூசிக் கொள்கிறார்கள்.

அந்தப் பாடல்..

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் 'கள்வன்'

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த

பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.

திருஞான சம்பந்தரின் இந்தப் பாடல் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு


பாடல். காடுகளின் இடையிலும், பிணங்களை எரியூட்டி கிடைத்த சுடலைப்
பொடியை பூசியவனும் (திருநீறு அணிந்தவனும்) ஆகிய எனது உள்ளத்தை
கொள்ளை கொண்ட கள்வன் என சிவனை அப்பனும் அம்மையுமாக
கொண்டு பாடுகிறார்.

கண்ணன் ஏன் சுடலைப் பொடி பூசிக் கொள்கிறான். வடக்கத்தி


இலக்கியங்களிலோ, அல்லது தெற்கத்தி இலக்கியங்களிலோ யாரேனும்
கண்ணன் சுடலைப் பொடி பூசிக்கொண்டதாக இருப்பின் யாராவது
கண்டெடுப்பின் எனக்கு சுட்டுக. என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.
சரி.. மரபு விஷயத்திற்கு வருவோம்.

மரபு என்பதை பாரம்பரியம் (Heredity) என்றும் கொள்ளலாம்.

வரலாற்றின் வழி வரும் சந்ததிகளுக்கு, முன்னோர்களிடமிருந்து


கடத்தப்படும் ஒரு செயல்முறை, உயிரணு DNA, ஆக, மனிதனின் மரபு
என்றால் அது பல ஆயிரம் மனிதநதியின் பாதையில் செறிவுகளை
ஏற்படுத்திக் கொண்டு இன்றளவில் வந்து நிற்கும் மனித இனத்திடம்
செறிந்து நிற்பதை மரபு எனலாம். இது இயற்கை. அது போன்றே
மொழியின் ஆரம்பகால மொழியமைப்பினை செறிவாக்கி, செறிவாக்கி
வரலாற்றின் வழி பயணித்து வந்து இன்றைய செறிவை அடைந்திருப்பது
என்பதுதான் மரபு. இதைப் படிவளர்ச்சிக் கொள்கை என்று சார்லஸ்
டார்வின் விளக்கினார்.

இயற்கை வழி மனிதன் எதையெல்லாம் கற்றுத் தேர்ந்து அதை


செறிவாக்கி சேமித்து வைத்திருக்கிறானோ (மொழி, இனம், இடம், காலம்)
அவற்றை எல்லாம் மரபு என்று சொல்லிவிடலாம்.

நன்னூல் இப்படிச் சொல்கிறது..

எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே (நூற்பா எண் 387)

மரபு, மரபியல், மரபினம், மரபுக்கூறு, மரபுக்கலை, மரபுத் தொடர்,


மரபுநோய், மரபணு.. இப்படி ஆகி வழி வழி வந்துக் கொண்டேதானே
இருக்கிறது. இது ஒரு விரிந்த பொருள்.

திருமிகு இலக்கிய ஓனர் முற்றும் அறிந்த முனிவர் ஜெமோ அவர்களுக்கு..

நினைவுக்குவிப்பில் தாய், தந்தை, கோவில் உருவகங்கள் மட்டுமேதான்


மரபாம்.
நீங்கள் முடிவு செய்துக் கொள்ளுங்கள். எது மரபு என்று.

மரபு என்பது சுமை என்கிறார். தவறுதானே.

மரபு என்பது பதிவு. மரபு என்பது செறிவு. மரபு என்பது சேமிப்பு..


இயற்கையாகவே நிகழ்வது. நினைவுக்குவிப்பில் ஊறுவதல்ல.

அடுத்து தொன்மம் என்பதற்கு வருவோம்.

தொன்மம் என்பதற்கு நவன


ீ யுகத்தில் புராணம், இதிகாசம், சரித்திரம்
இவற்றோடு தொடர்புபடுத்திச் சொல்கிறார்கள். தொன்மம் என்பது
காலத்தினோடு தொடர்புடைய ஒரு சொல். பனியுறை காலம்
ஒன்றிருந்திருக்கிறது, அடுத்து கற்காலம், இரும்புக்காலம்.. இப்படியான
காலத்தின் அடிப்படையிலான விஷயங்களை தொன்மம் எனக்
கொள்ளலாம். தமிழில் புராணம் என்கிற சொல்லைப் பயன்படுத்துவதற்கு
பதிலாக தொன்மம் Mythology என்று பயன்படுத்துகிறோம்.

தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே - இப்படி


தொல்காப்பியரும், சிலம்பில் "இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்
பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகினும் தோலென மொழிப தொன்னெறிப்
புலவர்" தொன்மையின் பரிணாம நிலையில் வளர்ந்து வரும் நிலையையே

தொன்மம் என்கிறார்.

தொன்மம் என்பது ஒரு குறியீடு. பன்முகப் பொருளாற்றல் கொண்டது.

ஆக நவனத்
ீ தெய்வப் புலவர் திருமிகு ஜெமோக்கு தொன்மம் என்றால்..
தொன்மம் + மனிதர் = 16 ஆம்நாள் போட்டோ மாட்டுவது என்று.. எப்படி
பொருள் கொள்வது தந்தை இறந்து போனால்.. அவர் எப்படி படிமம்
ஆகிவிடுகிறார். நமது இலக்கிய ஓனர் ஜெமோக்கு வேண்டுமானால் தந்தை
என்பதே புனைவாக இருக்கலாம். உலகத் தொன்மத்தின் வரலாறே தந்தை
எனும் சரடில்தான்.. வளர்ந்து கொண்டே போகிறது மனிதநதி. தந்தையர்
நாடெனும் எனும் கருத்தாக்கத்தில் வளர்ந்தவருக்கு.. நாடு என்பதும், மண்
என்பதும் தாய் என்கிற படிமத்தின் ஊற்று என்று அறிந்திருக்க
வாய்ப்பில்லை போலும்.

ஆதாம், ஏவாள் என்றால் மனிதநதியின் தொடக்கப் படிமம். அதற்காக


ஆதாளை ஏவாளையும் நாம் எந்தக் கண்ணால் பார்த்திருக்க முடியும். ஒரு
உருவாகத்தின் காட்சிப்புலனாக ஆதாம், ஏவாள் சொற்கள் ஆளப்படுவதும்..
இதுபோன்றே நிறைய வரலாற்றுறை சொற்கள் ஆளப்படுவதும் எல்லா
மொழிகளிலும் இயற்கையே.

நாடு என்பதன் வரையறை என்ன..?

எல்லைக்கோடுகளுக்குள் அடங்கி இருக்கும் பூகோள பரப்பு நாடு என்பதா..?

குறிப்பிட்ட பண்பாடுகளை கொண்ட மக்கள் தொகுதியை நாடு என்பதா..?

தேசம் என்னும் சொல் நாடு எனும் சொல்லுக்கு இணையானதா..?

நாடு என்பது ஒரு கற்பனைக்கோடு என்று வைத்துக் கொள்ளலாமா..?


காலத்திற்கு காலம் நாடு என்பதின் எல்லைக்கோடுகள் கலைத்து மாற்றம்
பெற்றுக்கொண்டே வரும் என்பதையும் ஏற்றுக் கொள்ளலாமா..?

நாடு என்பது பாகிஸ்தானுக்கு அப்பா.. நமக்கு மட்டும் எப்படி


அம்மாவாகிவிட முடியும்..?
வேறொரு பார்வையில் இதை அணுகிப் பார்ப்போம்.

உயிரியல் பூங்கா என்பதை ஒரு நாடு என்று ஏற்றுக் கொண்டால், அங்கு


வாழும் அனைத்து இனங்களுக்கும் ஒரே மாதிரியான உணவு, ஒரே
மாதிரியான உறையுள், ஒரே மாதிரியான இடவெளி ஏற்படுத்தி வாழ
வைக்க இயலுமா..?

மயிலையும், புலியையும் ஒரே கூண்டில் அடைத்து வைத்து அதை ஒரே


நாடு, இரண்டும் இணைந்து வாழும் பண்பை ஏற்றுக் கொள்ளும் என்று
பணிக்க முடியுமா..?

வரலாற்றின் வழி வந்த மனித இனங்களும் இப்படித்தானே வெவ்வேறு


பழக்க வழக்கங்களும், மொழிக்கூறுகளும், சிந்தனா போக்குகளும்
கொண்டவர்களாக இருப்பவர்களை.. ஒரே மொழியை ஏற்றுக்கொள், ஒரே
உணவு முறையை ஏற்றுக் கொள், ஒரே உடையை ஏற்றுக் கொள் என்பது
சாத்தியமா.. அப்படியொரு நாட்டினை உருவாக்கிட இயலுமா..?

மண் என்பது பிறப்பின் ஊற்று. அதன் மணம், குணம் அத்தனையும் மனித


உருவில் படிந்திருக்கும். மண்ணிலிருந்து ஏற்றுக் கொண்ட எந்த ஒரு
விஷயத்தையும் மனிதனிலிருந்து பிரித்தெடுப்பது இயலாது என்றே
எனக்குத் தோன்றுகிறது.

உலகப் பேராசான் திருமிகு ஜெமோ அவர்களே வலதுசாரி கருத்தாக்கத்தை


தாங்கி எழுதுக. அதையும் சரியாக எழுதுக. ஒப்பீட்டளவில் உளறுவதை
எல்லாம் ஒப்புக் கொள்ள இயலாதல்லவா..?
தரவுகளை திரித்து வைக்காமல் நேரடியாக வையுங்கள். எங்களைப்
போன்றவர்களுக்கு எலக்கிய அறிவெல்லாம் உங்கள் அளவிற்கு
இல்லையென்றாலும் ஒரு இலக்கிய ரசிகனாக எமது தேடல்கள் தொடரும்.

நவன
ீ இலக்கிய ஓனர்/சித்தர் திருமிகு ஜெமோவின் ஒரு நாள் பேச்சின்
ஒரு பகுதிக்குத்தான் இது.. இன்னும் இருக்கிறது.. அடுத்தடுத்த பதிவுகளில்..

பயந்தகோழி பறப்பது போல..

மண் பெரிய அளவில் நகர முடியாது

ஒளி ரொம்ப தூரத்திற்கு போக முடியாது

மனிதனுக்கு மரபு கிடையாது

பார்த்திப பரமாணு. உள்ளே புகுந்தவுடன் நான் இங்கே இருக்கிறேன்.

முகநூலெங்கும் பார்த்திப பரமாணுதான் இருக்கிறது.

ஒன்றை ஒன்று புரிந்து கொள்பது ஞானம்.

ஞாதா நேயி ஞானம்.

அறிபடு பொருளும், அறிபவன், அறிவு - அத்வைதம். மூன்றும் ஒன்றுதான்


என்று புரிந்தால் ஒழிய தனிமை போகாது.

உடலிலிருந்து உடல் கடத்துதல் மரபு.

உறுவது உறவு.. ஈட்டிக்கொள்வது அல்ல. உறவு. உறவிலிருந்து குலம்


ஜாதி அடுத்து இனம். குருதி மரபு.

Bard - Criod / பாணன் / சூதன் மாகதன் தங்களின் வம்வ வரிசையை


பட்டியலிட்டுக் கொள்வதுதான் மரபு.

அதிதியில் பிறந்தவர்கள் ஆதித்தியர்கள் திதியில் பிறந்தவர்கள்


ரைசியர்கள் அசுரர்கள்.

Ramayanam & Mahabatham Classical Text & Savage Text

Ethnic Text - Vedha வசுதேவ குடும்பகம்.


மரபு என்பது ரூபா நோட்டுன்னா பண்பாடு என்பது கோல்ட்

இன்றைக்கு சமூகவிமரிசனத்தை செய்துக் கொண்டிருப்பவர்களிடம்


எங்கேயோ கேதரி மேயோ ஒளிந்திருப்பதை காணலாம்.

சுவாமி நாராயணன் இயக்கம்.. பெரும்பாலான குஜராத்திகள்

உலகம் முழுக்க பிரம்மாண்டமாக கோயில்கள் கட்டி வைத்தார்கள்

கணஷ்யம் கோஸ்வாமி.. அவர் நீல்கண்ட்

அந்த மதத்தை நவன


ீ மயமாக்குகிறார்.

அதை சிறிய மாற்றங்களோடு

ஹரேகிருஷ்ணா ஹரேராமா இயக்கம்

வட்டிற்குள்
ீ ஆசார மதம். பேஸ்புக்ல விவேகானந்தரின் மொழியில்
பேசுவாங்க.

இப்படி அதியற்புத சங்கதிகளை எல்லாம் அள்ளித் தெளித்துக் கொண்டு


போகும் அந்தப் பேச்சின் இறுதியில்..

நாராயண குரு மரபு ஜெயமோகன்.

ஏற்பு மறுப்புமாக மரபை பார்க்கக்கூடியவன்.

அவர்களின் மத நம்பிக்கை எதிராக பேசமாட்டேன்.

மதமீ ட்பு..வழியாக தன் மதப் பண்பாட்டை மறுகண்டுபிடிப்பு..

இப்படி வேறு சொல்கிறார். இதோடு விடவில்லை கம்யூனிஸ்ட்டுகளையும்


ஒரு பிடிபிடித்து.. சு. வெங்கடேசன் வரையிலும் வந்து முங்கி எழுகிறார்.
பிறகு, பைபிள் சந்தை மொழி பேச்சு மொழி பாதி தமிழ் என்கிறார்.
அள்ளித் தெளித்த அத்தனைக்கும் நாமும் நமது சிற்றறிவிற்கு எட்டிய
அளவில் ஒரு எதிர்வினையை வரும் காலங்களில் வைப்பதற்கு முயற்சி
செய்வோம்.

"பெரியாரையும் கம்யூசத்தையும் படித்தப் பிறகு.. மூளை கெட்டியாகிப்


போகிவிடும்." என்று நவன
ீ பகுத்தறிவுப் பகலவன் ஜெமோ சொல்கிறார்.
அப்படி கெட்டியாகிப் போன மூளைகளில் ஒன்றுதான் நம்மூளையும்.
வேலை செய்கிறதா இல்லையா என்று பார்ப்போம்.

-யுகாந்தன்

You might also like