Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

அணிலும் குரங்கும்

ஓர் அடர்ந்த காட்டில் சுறுசுறுப்பான அணில் ஒன்று வாழ்ந்து வந்தது. அல்லும் பகலும், மழை
வெயில் பாராது காட்டிற்குச் சென்று பழங்களையும் காய்கறிகளையும் தேடி சேமிப்பதே அணிலின்
தலையாயக் கடமையாகும். சேகரித்த உணவுகளைத் தன் வசிப்பிடத்தில் சேமித்து வைக்கும். ஒரு நாள்
உணவை எடுத்துச் செல்கையில் எதிரே குரங்கு ஒன்றைச் சந்தித்தது. குரங்கு மிகவும் சோம்பேறித்
தனமாக ஒரே மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

குரங்கு : ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?


அணில் : நான் உணவைச் சேமித்து வைக்கிறேன்.
குரங்கு : ஹா.. ஹா.. ஹா.. ஹா.. எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு உணவு தேடி அலைந்து
கொண்டிருக்கிறாய்? நமக்குதான் தினமும் உணவு கிடைக்கின்றதே.
அணில் : உண்மைதான். ஆனால், நான் மழைக்காலத்திற்கு உணவைச் சேகரிக்கிறேன்.
குரங்கு : ஹா..ஹா..ஹா..ஹா.. மழைக்காலத்திற்குத் தான் இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றதே!
அதற்குள் நீ ஏன் உணவைச் சேகரிக்கின்றாய்? இப்பொழுது ஆனந்தமாக இருந்துவிட்டு பிறகு
சேமித்தால்தான் என்ன ?

அணில் குரங்கின் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளாமல் உணவை எடுத்து சென்றது. மறுநாள்


காலையில் அணில் உணவு தேட ஆயத்தமானது. போகும் வழியில் குரங்கு தன் வசிப்பிடத்தில் ஆடல்
பாடல் நிகழ்ச்சியில் திளைத்திருந்தது. அணிலைச் சந்தித்ததும் அதனைக் கேலி செய்து நகைத்தது.
அணில் அதனைப் பொருட்படுத்தாது தன் வேலையைச் செவ்வனேச் செய்து கொண்டிருந்தது.
குரங்கோ சோம்பேறித் தனமாக அங்கும் இங்கும் ஆடிப்பாடி திரிந்தது. நாட்கள் உருண்டோடின. அணில்
தேவையான அளவைவிட அதிகமாக உணவுகளைச் சேகரித்திருந்தது. அணிலோ, எந்தவொரு
கவலையும் இன்றி ஆனந்தமாக இருந்தது. பருவக்காலமும் வந்தது. பச்சை பசேலென்று இருந்து மரம்,
செடி கொடிகள் யாவும் பழுப்பு நிறமாக மாறின. இலைகள் காயத்தொடங்கின ; காற்றும் குளிர்ந்து வீசத்
தொடங்கியது. ஆனால், அணிலோ தன் உணவு மற்றும் வசிப்பிடம் முறையாக இருந்தும் முயற்சியைக்
கைவிடாது உணவு தேடிக் கொண்டிருந்தது. குரங்கோ அப்பொழுதுதான் உணவைத் தேட ஆயத்தமானது.

அணில் தன் வீட்டில் சொகுசாக ஓய்வெடுத்து கொண்டிருந்தது. மழைக்காலமும் வந்தது.


குரங்கோ மழைக்காலம் சீக்கிரம் முடிந்து விடும் என்றெண்ணி குறைவான உணவையே சேமித்து
வைத்திருந்தது. ஒரு மாதம் உருண்டோடியது. மழைக்காலம் முடிந்த பாடில்லை. குரங்கோ அணிலின்
வீட்டின் சன்னலின் வழி அதன் சொகுசு வாழ்க்கையைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது.

இறுதியில், மிகவும் வெட்கத்துடன் அணிலிடம் உதவி கேட்கச் சென்றது.

அணில் : ஹா.. ஹா.. நான் உணவு சேகரிக்கும் பொழுது நீ உல்லாசமாகச் சுற்றித் திரிந்தாய் ! இப்பொழுது
நீயே என்னிடம் வந்து உதவி கேட்கிறாய்.. நீயே சொந்தமாக உணவைத் தேடிக் கொள் !
குரங்கு மிகுந்த ஏமாற்றத்துடனும் அவமானத்துடனும் அணில் வீட்டிலிருந்து வெளியேறியது.
அணிலைத் தன் வழிகாட்டியாக எண்ணி நேரம் பாராமல் சிறுக சிறுக உணவைச் சேமிக்க
ஆயத்தமானது. ஒரே மாதத்தில் அதற்கும் அதன் குடும்பத்திற்கும் தேவையான உணவைச் சேகரித்தது.
அன்று இரவே, அணிலைத் தேடிச் சென்று நடந்தவற்றைக் கூறி தனக்கு நல்ல பழக்கத்தைக் கற்றுத்
தந்ததற்கு நன்றி கூறிவிட்டு தனக்கான உணவைச் சேகரிக்க சென்றது.

மூலம்: வெட்டுக்கிளியும் எறுப்பும் கதை (படித்தது)

You might also like