மொழி

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

மொழி

மனிதர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்துவது மொழியாகும். மனிதர்கள்


மட்டுமே மொழியைப் பயன்படுத்துகின்றனர், மற்ற விலங்குகள் வேறு வழிகளில் தொடர்பு
கொள்கின்றன. இலக்கணப்படிச் சொற்களை அடுக்கி சொற்றொடர்களாக்கி தொடராகச்
செய்தியையோ வினாவையோ மொழியில் உருவாக்க முடியும். மேலும் கருத்துகளை விவரிக்க
வாக்கியத்தில் புதிய சொற்களைச் சேர்த்து விரிவாக்கலாம். மொழியைப் பேசுவதனாலோ
எழுதுவதனாலோ சைகை அடையாளங்களாலோ வெளிப்படுத்தலாம். மனித தொடர்பாடலில்
சில சொற்களற்றவை. தோற்றப் பொலிவுகள், முகபாவங்கள், கண் பார்வைகள், சைகைகள்,
குரலின் தொனிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சொற்களற்ற குறிப்புகளும் செயல்பாடுகளும்
உள்ளன. கைக்குலுக்குவதிலிருந்து சிகை அலங்கார பாணி வரை சொற்களற்ற விவரங்கள்
நம்மை வெளிப்படுத்துகின்றன. மனிதர்கள் சிந்தித்துக் கருத்துகளையும் உணர்வுகளையும்
வெளியிடுவதற்கு மொழியைப் பயன்படுத்துகின்றனர். மொழி என்றாலே ஒரு சமூகம் அல்லது
நாட்டின் மொழி, பேசும் திறன், கணிதம்/கணினி போன்றவற்றின் மொழி, காது கேளாதவர்களின்
சைகை மொழி, தேசிய வகைப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் மொழியையும் குறிக்கும்.

You might also like