விளையாட்டு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

விளையாட்டு 

(Game) என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில


வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக்
கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை,
என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது. ஆனால், வேலை
ஊதியத்துக்காகச் செய்யப்படுவது. விளையாட்டு ஒரு கலை என்றும்
குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் கலையைப்போல் உணர்வுகளை
வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு இருப்பதில்லை. இருந்தாலும், எப்போதும்
இவற்றுக்கு இடையேயான எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. தொழில்
முறை விளையாட்டு வரர்களுக்கு
ீ விளையாட்டு வருமானத்துக்கான ஒரு
தொழிலாகவே உள்ளது.

"ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு


பாப்பா" என்பது பாரதியின் கூற்று. விளையாட்டு அனைத்து மனிதர்களும்
இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று.

நாம் விளையாட்டுக்களை போட்டியாக விளையாடுகின்றனர்.இதனால் மனிதர்கள்


வெற்றி தோல்வியை சாதரணமாகக்கொண்டுள்ளனர்.

உள்ளக விளையாட்டு[தொகு]
இடங்களுக்கு உள்ளே விளையாடும் விளையாட்டுகளை உள்ளக விளையாட்டு
என்று அழைப்பார்கள்.

எ.கா.:-

 சதுரங்கம்
 கேரம்
 ஏணியும் பாம்பும்
 தாயம்
 மேசைப்பந்து
 பூப்பந்து

வெளியக விளையாட்டு[தொகு]
இடங்களுக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகளை வெளியக
விளையாட்டு என்று அழைப்பார்கள்.

எ.கா.:-
 துடுப்பாட்டம்
 கரப்பந்து
 கூடைப்பந்து
 உதைபந்து
 வலைப் பந்தாட்டம்
 எறிபந்து
விளையாடுவதால் மனிதன் உடல் நலத்தையும், மன நலத்தையும், சமூக
நலத்தையும் பெறலாம். விளையாட்டுகளை விளையாடுவதால் ஒற்றுமை
வளர்கின்றது. விளையாட்டுகளை விளையாடுவதால் ஒவ்வொருவரிடமும்
தலைமைத்துவத்தன்மை வளர்கிறது.

உடலினை உறுதி செய்” என்று கூறிய பாரதியார் “ஓடி விளையாடு


பாப்பா” என்றும் நமக்காக பாடி உள்ளார். சத்துணவு, உடற்பயிற்சி,
மாலை நேர விளையாட்டுக்களினால் நம் உடலை ஆரோக்கியமாக
வைத்துக் கொள்ளலாம். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு
உடையதால் மனமகிழ்ச்சியினால் உடல் புத்துணர்ச்சி அடைகின்றது.

விளையாட்டுக்களினால் குழுஒற்றுமை, விட்டுக்கொடுக்கும்


மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும்
சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் வளருவதுடன் உடலில் உள்ள
கழிவு உப்புகள் வியர்வையாக வெளியேறும்.

அதிக வியர்வை நீராவியாகும் போது நம் உடல் குளிர்ந்து உடல்


வெப்பம் சீராகின்றது. வியர்வைச் சுரப்பிகள் நம் உடலின் ஓர் கூலகக்
கருவியாகப் பயன்படுகின்றது. நம் உடல் பருமனைக் குறைக்க உதவும்
‘டாப்மைன்’ என்ற சுரக்கும் பொருள் மூளையில் சுரக்கின்றது.

கிராமங்களில் பொதுவாக விளையாடும் விளையாட்டுக்கள்


பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், குலை குலையாய்
முந்திரிக்காய், பரமபதம், நொண்டி, கண்ணாமூச்சி, தட்டாங்கல் மற்றும்
கபடி எனப் பல உள்ள

 
புதிய வருடத்தில் பாடசாலை சென்று பழைய நட்புகளை மீ ண்டும்
சந்தித்தல், புதிய நண்பர்களை உருவாக்குதல், புதிய விடயங்களை செய்தல்
மற்றும் புதிய குழு வேலைகள், விளையாட்டுக்கள் என்பவற்றில் ஈடுபடல்
போன்ற காரணங்களினால் சிறுவர்கள் புதிய வருடத்தில் பாடசாலைக்கு
செல்லும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கின்றனர்

சிறுவர்கள், விளையாட்டு மற்றும் புதிய விடயங்களை செய்வதில்


மாத்திரம் அதிகம் விருப்பம் கொள்வதில்லை. குறிப்பாக, அவர்கள்
ஆச்சரியமான விடயங்களை செய்வதிலும், குழு விளையாட்டுக்களில்
ஈடுபடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.

இவ்வாறு குழு விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை


நீங்கள் அறிந்ததுண்டா? இது சிறுவர்களுக்கு சிறந்த மகிழ்ச்சியையும்,
உட்சாகத்தையும் வழங்குவது மாத்திரமன்றி, அவர்களின் குழு
செயற்பாட்டுத்திறன் மற்றும் சமூகத்துடனான தொடர்பை
அதிகரிப்பதற்கும் உதவுகின்றது.  

குழு விளையாட்டுக்களில் ஈடுபடுவதனால் கிடைக்கும் நன்மைகள்

1) நம்பிக்கை அதிகரித்தல்

சிறுவர்கள் ஒரு விளையாட்டில் ஈடுபடும்பொழுது, அவர்களுக்கு தமது


திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது, சுய
விழிப்புணர்வு ஏற்படுகின்றது. அதேபோன்று, அவர்கள் தாம் விரும்பும்
விளையாட்டில் ஈடுபட்டு, அதன்மூலம் முழுமையான மகிழ்ச்சியை
அடைவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.

2) சீரான உடற்பயிற்சி வழங்கப்படுதல்

குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு சிறுவன், தனது அதிகமான நேரத்தை


விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக
மேற்கொள்கின்றான். அதில் முக்கியமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு
அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே, அவர் நோய் எதிர்ப்பு சக்தி
கொண்டவராகவும் முழுமையான சுகாதார ஆரோக்கியம் உள்ள
நபராகவும் மாறுகின்றார்.

3) உறவுகளை வளர்த்துக்கொள்ளல்

பயிற்சிகள் மற்றும் விளையாட்டுக்களின்போது, சிறுவர்கள் ஏனைய பல


சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் உறவுகளை
ஏற்படுத்திக்கொள்கின்றனர். இதனால் சிறுவர்களின் எதிர்பார்ப்புகள்
நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் தமது திறமைகளை
பகிந்துகொள்கின்றனர்.

4) கல்வியிலும் திறமையானவர்களாக மாறுகின்றனர்

குழு விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் கல்வித் துறையிலும் தம்மை


சிறந்தவர்களாக வளர்த்துக் கொள்கின்றனர். விளையாட்டில்
ஈடுபடும்பொழுது நேர முகாமைத்துவத்தின் முக்கியத்துவம், ஒழுக்கம்
மற்றும் கட்டுப்பாடு என்பவற்றை கற்றுக்கொள்கின்றமையினாலேயே
அவர்கள் கல்வியிலும் சிறந்தவர்களாக மாற காரணமாக இருக்கின்றது.

5) வெற்றிக்கு வழிவகுத்தல்

குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு சிறுவன் வெற்றி, தோல்வி ஆகிய


இரண்டினையும் எதிர்கொள்வார். இதனால் அவரிடம் தோல்வியைத்
தாங்கிக்கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும்
இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது தமது அணியின் ஏனைய வரர்களின்

நிலைமையை அறிந்துகொள்ளல் போன்றவற்றை அவர்
கற்றுக்கொள்கின்றார். இவை அனைத்தும் அவர் எதிர்காலத்தில் தனது
இலக்குகளை வெற்றிகொள்வதற்கு அதிக பங்களிப்பு செலுத்துகின்றன.

6) மதிக்கும் மனப்பாங்கை ஏற்படுத்தல் 


குழு விளையாட்டில் ஈடுபடும் ஒருவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள்,
நடுவர்கள் மற்றும் தமது சகாக்களை மதித்து நடக்க வேண்டிய ஒரு
கட்டாயம் இருக்கின்றது. எனவே, விளையாட்டில் உண்டாகும் இந்த
ஏனையோரை மதிக்கும் பழக்கம், பின்னர் அது அவரது வாழ்கையிலும்
தானாகவே  நிலைத்து நிற்கின்றது.

7) குடும்பத்துடனான ஈடுபாட்டை ஊக்குவித்தல்

ஒரு சிறுவன் விளையாட்டில் ஈடுபடும் பொழுதும், அதற்கான


பயிற்சிகளின்போதும் அவரது பெற்றோர், சகோதரர்கள் மற்றும்
உறவினர்கள் அதனை பார்ப்பதற்கும், அவனுக்கு தமது ஆதரவை வழங்கி
அவனை உட்சாகப்படுத்துவதற்கும் போவார்கள். இவ்வாறு செய்வதனால்,
குறித்த சிறுவன் தனது குடும்பத்தினருடன் கொண்டுள்ள ஈடுபாடு மேலும்
அதிகரிக்கின்றது.

இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்தும் குழு விளையாட்டுக்கள் நிச்சயம்


ஒரு சிறுவனின் முன்னேற்றத்திற்கு பாரிய அளவில் பங்கு வகிக்கின்றது
என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும்


நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை.
மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை.
இதனால் பாதிப்படைய போவது உடல் தான். ஆகவே உடற்பயிற்சி
செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று.
உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு
வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்கு பல வகையான
உடற்பயிற்சிகள் உள்ளன

பல்வேறு காரணங்களால் அலுவலகத்திலும், வட்டிலும்


ீ நமக்கு மன
அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை தவிர்க்க
உடற்பயிற்சி செய்வது ஓர் நல்ல வழியாகும். உடற்பயிற்சி மன
அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது.

சொற்றொடர்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்த வரக்கூடிய இடைச்சொற்கள்


சில:

:அடுத்ததாக, அடுத்து, அதற்கேற்ப, அதன்படி, அதனால், அது போலவே, அது


போன்றே, ஆகவே, ஆகையால், ஆயினும், ஆனாலும், இத்துடன், இரண்டாவதாக,
இருந்தாலும், இவ்வாறாக, எடுத்துக்காட்டாக, என்றாலும், எனவே, எனினும்,
ஒருவழியாக, தவிரவும், பிறகு, பின்பு, பின்னால், முடிவாக, முடிவில், முதலாவதாக,
முன் கூறியவாறு, மேலும்.

You might also like