Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தோஷணா நல்லப்பன் (எஸ் 6)

அச்சு இதழ் – மின்னிதழ் இவற்றில் எதனை நீங்கள் வாசிக்க அதிகம் விரும்புகிறீர்கள்? ஏன்?

அச்சு இதழ் என்பது அச்சிட்டு நாம் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கும் ஓர் இதழாகும். மின்னிதழ் என்பது
மின்னியல் முறையில் நாம் தேடி வாசிக்கும் இதழாகும். இவ்விரண்டு இதழ்களில் நான் விரும்பி வாசிப்பது
அச்சு இதழாகும். தொழில்நுட்பத்தால் மின்னிதழ்களின் பயன்பாடு அனைவரிடத்திலும் எளிய முறையில்
கிடைக்கப்பெற்றாலும், அச்சு இதழ் போல் தொடுவுணர்வு கொண்டு வாசிக்கும் தன்மை கிடையாது எனக்
கருதுகிறேன். அதொடு, குயில், மயில் போன்ற அச்சிதழ்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி
வாசிக்கப்படுகின்றன. அச்சிதழ்கள் வண்ணத்தோடும் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கும். எங்குச்
சென்றாலும் இதழ்களைக் கொண்டு செல்ல இயல்வதோடு, நேரத்தை நன்முறையில் செலவிடவும்
வழிவகுக்கின்றது. மேலும், மின்னிதழில் பயன்படுத்தி வாசிக்க தொலைபேசியைக் கைக்குள்ளே
வைத்திருக்க வேண்டும். இதன்வழி, தொலைபேசி ஒஅயன்படுத்துவோரின் கவனம் மின்னிதழ்கள்
படிப்பதிலிருந்து சிதற வாய்ப்புண்டு. அச்சு இதழ் வாங்கி படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டால் வரும்
தலைமுறையினருக்கு அதன் அறிமுகம் இல்லாமலே போய்விடும். மேலும், மக்களை நம்பி அச்சு
நிறுவனங்களும் இதழ்களை வெளியிட முடியாமல் சிக்கலுக்குள்ளாவர். ஆக, அதிகமாக அச்சு இதழ்
வாங்கி வாசிப்பது வருங்காலத்தில் தொடர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like