Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

இடுபணி : பாக்கள் எத்தனை வகைப்படும்? ஒவ்வொரு வகைப் பாவையும் பற்றிச் சிறுகுறிப்பு எழுதுக.

வெண்பா கலிப்பா

ஆசிரியப்பா வஞ்சிப்பா
பா
வகைகள்

ஆசிரியப்பா

பாக்களில் எளிமையாக இயற்றக்கூடிய பாவாக விளங்கின்றது. இதனை அகவற்பா எனவும் அழைக்கலாம்.

1. சீர் – ஈரசைச்சீர்கள் உரியதாக இருக்கும். காய்ச்சீர் சிறுபானமை வரலாம். ஆனால், கனிச்சீர்


வராது.
2. தளை - இதற்கான தளை ஆசிரியத்தளையாகும். வெண்டளையும் கலித்தளையும் வரலாம்.
3. ஓசை – இதர்குரிய ஓசை அகவலோசையாகும்.
4. அடி – 2, 3 அல்லது 4 சீர்கள் கொண்ட அடிகள் இப்பாவில் வரும். நான்கிற்கும் அதிகமான
சீர்கள் வராது.
5. பா நீடட
் ம் – குறைந்தது 3 அடி, அதர்குமேல் எத்தனை அடிகளும் வரலாம்.
6. தொடை - முதற்சீரும் மூன்றாம் சீரும் மோனை/எதுகை பெறும். இரண்டு அடிகளின்
முதற்சீர்கள் எதுகை/மோனை பெறலாம்.
7. மரபு – பாவின் இறுதி அடியின் இறுதி அசை, ஏகாரத்தில் முடிவது மரபு.
இந்தப் பா நான்கு வகைப்படுகிறது. அவை நிலைமண்டில், நேரிசை, இணைக்குறள், அடிமறி மண்டில
ஆசிரியப்பா என்பனவாகும்.
வெண்பா
வெண்பா என்பதனை வெண்மை அதாவது தூய்மை எனப் பொருள்படுவதோடு, பிழையில்லாத
இலக்கணத்தோடு பாடவேண்டிய பா என்று பொருள்படுகிறது. நால்வகைப் பாக்களில் சிறப்புக்குரியதாகக்
கருதப்படுகின்றது.
1. சீர் – இந்தப் பாவில் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) என ஈரசைச்சீர்களும் (தேமாங்காய்,
புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) என மூவசைச்சரீ ்களும் வரும். கனிச்சீர் வருதல் கூடாது.
2. தளை – இப்பாவில் வெண்டளை மட்டுமே வரும்.
3. அடி - இறுதி அடி மட்டும் 3 சீர்கள், மற்ற அடிகள் 4 சீர்கள் பெற்று வரும்
4. ஓசை – செப்பலோசை
5. பா நீடட
் ம் – 2 அடிகளுக்கு மேல் வரலாம்
6. தொடை - முதற்சீரும் மூன்றாம் சீரும் மோனை/எதுகை பெறும். இரண்டு அடிகளின்
முதற்சீர்கள் எதுகை/மோனை பெறலாம்.
வெண்பா 5 வகைப்படும். அவை குறள், சிந்தியல், அளவியல், பஃறொடை, கலி வெண்பா ஆகும்.
கலிப்பா
ஓசையின்பம் இந்தப் பாவின் சிறப்பாகும். இசைப்பாடல்கள் இப்பாவின் அடிப்படையிலேயே பெரும்பாலும்
எழுதப்படுகின்றன.
1. சீர் – கூவிளம், கருவிளம், தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய், மாங்கனி, போன்ற
சீர்கள் வரலாம். நடுவில் நிரையசை உடைய சீர்கள் வராது.
2. தளை – கலித்தளை
3. அடி – நான்கு சீர்கள் கொண்ட அடிகள் வரும். விதிவிலக்காக மற்றவகை அடிகளும் வரலாம்.
4. ஓசை – துள்ளலோசை, பலவகையான ஓசைகள் கலந்தும் வரும்.
5. பா நீடட
் ம் – குறைந்தது 4 அடிகள் கொண்டுள்ளன.
6. தொடை - முதற்சீரும் மூன்றாம் சீரும் மோனை/எதுகை பெறும். இரண்டு அடிகளின்
முதற்சீர்கள் எதுகை/மோனை பெறலாம்.
கலிப்பா மூன்று வகைப்படும். அவை ஒத்தாழிசை, வெண்கலிப்பா, கொச்சகக் கலிப்பா ஆகும். மற்ற
பாக்களுக்கு இல்லாதது, கலிப்பாவிற்கு உரிய சிறப்பு உறுப்புகள் உள்ளன. அவை தரவு, தாழிசை, அராகம்,
அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகும்.
வஞ்சிப்பா
வஞ்சிப்பாவின் பிரிவை மூவகையாகப் பிரிக்கலாம். இதன் முதற்பகுதி வஞ்சிப்பாக்குரிய சீரும் தளையும்
பெற்றுத் தூங்கலோசை அமையும். இரண்டாவது பகுதி முதற்பகுதியையும் இரண்டாம் பகுதியையும்
இணைக்கும் தனிச்சீரத
் ான். மூன்றாம் பகுதி ஆசிரியப்பாவுக்குரிய இறுதிப் பகுதிபோல் அமைவது. இதன்
அடியின் சீர் என்ணிக்கையின் அடிப்படையில் இரு வகைப்படும். அவை:
1. குறளடி வஞ்சிப்பா- முதற்பகுதி இருசீர் அடிகளைக் கொண்டிருக்கும்.
2. சிந்தடி வஞ்சிப்பா- முதற்பகுதி முச்சீர் அடிகளைக் கொண்டிருக்கும்.

You might also like