Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 15

[Type here]

1. யாழினி பேருந்து நிலையத்தில் தன்னைச் சந்திப்பதாகக் கூறிய மலர்விழியை


____________________ தேடினாள்.
A அல்லும் பகலும்
B அங்கும் இங்கும்
C அன்றும் இன்றும்
D சுற்றும் முற்றும்

2. உலக நீ திக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

A பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது.


B அறம் செய்ய ஒரு போதும் மறக்கக்கூடாது
C மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
D தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது

3. கீ ழ்க்காணும் உரையாடல் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான


ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

கமலி : தமிழிசை, கபிலன் மாளிகை ஒன்றை வாங்கிவிட்டான் என்பதற்காக


மிகத் தற்பெருமையாக இருப்பதைக் கவனித்தாயா?
தமிழிசை : கமலி, பிறர் மீ து பொறாமைக் கொள்வது சரி இல்லை. அவன்
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்துள்ளது.

A ஔவியல் பேசேல்
B உடையது விளம்பேல்
C ஏற்பது இகழ்ச்சி
D ஒப்புர வொழுகு

4. பிழையான இணையைத் தெரிவு செய்க.


A ஆணித்தரம் - உறுதி
B தலை குனிதல் – அவமானம் ஏற்படுத்துதல்
C கரை கண்டவர் – ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சி
பெற்றவர்
D ஈவிரக்கம் - மனக்கசிவு

1
[Type here]

5. சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

I பள ீர்பள ீர் என அப்பா அமுதாவைக் கன்னத்தில் அறைந்தார்.


II அந்தக் கோபுரம் மடமடவென சரிந்து விழுவதைக் கண்ட மக்கள் உயிரைக்
காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர்.
III கோகிலம் அணிந்த கொலுசின் மணிகள் ஒன்றோடொன்று உரசி கிலுகிலு
என்ற ஓசையை எழுப்பியது.
IV பளபள என மின்னிய விலையுயர்ந்த வைரத்தைப் பொது மக்கள் கண்டு
இரசித்தனர்.

A I, II C I, IV
B II, III D III, IV

6. கோடிடப்பட்ட சொற்றொடரின் பொருளினை விளக்கும் உவமைத் தொடரினைத்


தெரிவு செய்க.

இளஞ்செழியன் மிகவும் அமைதியான மாணவன். வெளிப்படாமல் மறைந்திருந்த


அவனின் ஆற்றல் ஓரங்க நாடகத்தின் போது எல்லாராலும் அறியப்பட்டது.

A குன்றின் மேலிட்ட விளக்குப் போல


B சிலை மேல் எழுத்துப் போல
C இலைமறை காய் போல
D கண்ணினைக் காக்கும் இமை போல

7. உரையின் தலைப்பு : கல்வியின் அவசியமும் கல்விக்குச் சிறப்பும்

மேற்கண்ட தலைப்பில் நீ உரையாற்ற வேண்டும். தலைப்புக்கு ஏற்ற வெற்றி


வேற்கைகளைத் தெரிவு செய்க.

I கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே


II செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
III கல்விக் கழகு கசடற மொழிதல்
IV பெருமையும் சிறுமையும் தான்தர வருமே

A I, II C I, III
B I, II, III D I, II, III, IV

2
[Type here]

8. கீ ழ்க்கண்ட படம், விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக.

A முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
B சிறு துளி பெரு வெள்ளம்
C சிக்கனம் சீரளிக்கும்
D வெள்ளம் வருமுன் அணை போடு

9. கீ ழ்க்கண்ட விளக்கத்தைத் தாங்கி வரும் மூதுரையின் செய்யுளடியைத் தெரிவு


செய்க.

இவ்வுலகில் வாழும் நல்லவர் ஒருவருக்காகப் பெய்யும் மழை அனைத்து


உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கிறது.

A நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு


எல்லார்க்கும் பெய்யும் மழை

B நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை


அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

C அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்


கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்

3
[Type here]

10 கீ ழ்க்கண்ட திருக்குறளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தேர்ந்தெடுக.


.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

A விருந்து வைப்பவர்
B விருந்தினர்
C விருந்து உணவு

11 கீ ழ்க்கண்ட சொற்களில் இடையின எழுத்துகளைக் கொண்டு தொடங்கும்


. சொற்களைத் தெரிவு செய்க.

I வழலை
II கப்பம்
III நகப்பூச்சு
IV வியாழன்

A I, II C I, III
B I, IV D II, III

12.

படத்திற்கு ஏற்ற திணை மற்றும் பால் வகையைக் காட்டும் இணையைத்


தேர்ந்தெடுக.

4
[Type here]
A அஃறிணை , பலர்பால்
B அஃறிணை , பலவின்பால்
C உயர்திணை , ஒன்றன்பால்
D உயர்திணை , பலவின்பால்

13. கீ ழ்க்கண்ட வாக்கியத்திற்கு ஏற்ற வினையடையைக் கொண்டு நிறைவு செய்க.

சுமன் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை _______________________________


செய்தான்.

A முழுமையாகச் / தாமதமாகச்
B மென்மையான / அழகான
C கருப்பாகச் / அவசரமாகச்
D தாமதிக்காமல் / பிடிக்காமல்

14 கீ ழ்க்கண்ட வாக்கியத்தில் உள்ள வினையெச்சத்தைத் தெரிவு செய்க.


.
முரளி தான் வாங்கிய மிடிவண்டியை அழகான தாள்களைக் கொண்டு
அழகுப்படுத்தி ஓட்டிக் காட்டினான்.

A வாங்கிய மிதிவண்டியை
B அழகான தாள்களைக்
C அழகுப்படுத்தி
D ஓட்டிக் காட்டினான்

5
[Type here]
15 கீ ழ்க்கண்ட வாக்கியங்களில் கட்டளை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
.
A அப்பா புற்களைக் கத்தியால் வெட்டினார்.
B அங்கே செல்லாதே.
C ஐயோ! வலிக்கிறதே!
D நீ எங்கே செல்கிறாய்?

16 கீ ழ்க்கண்ட வாக்கியத்திற்கு ஏற்ற இடைச்சொற்களைத் தேர்ந்தெடுக.


.
கண்மணி மிகவும் குறும்புக்காரி. ____________________________________ அவள்
எல்லாப் பாடங்களிலும் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற்றாள்.

I இருப்பினும்
II இருந்தபோதிலும்
III ஆகவே
IV ஆயினும்

A I, II ,III C I, IV
B I, II, IV D I, II, III, IV

17 சரியான மரபு வழக்குச் சொற்களைத் தெரிவு செய்க.


. குயவர்கள் மட்பாண்டங்களை _________________________ சந்தையில்
விற்றனர்.

A வனைந்து
B முடைந்து
C கொய்து
D வேய்து

18 கீ ழ்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடுக.


.

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்


A பறந்தன பறக்கின்றன பறக்கும்
B சிரிப்பான் சிரிக்கிறான் சிரித்தான்
C சமைத்தாள் சமைப்பாள் சமைக்கிறாள்
D நடக்கிறது நடக்கும் நடந்தது

19 படங்களுக்கு ஏற்ற பெயர்ச்சொற்களைத் தேர்ந்தெடுக.


.

6
[Type here]

அ ஆ

அ ஆ
A பொருட்பெயர் இடப்பெயர்
B இடப்பெயர் சினைப்பெயர்
C சினைப்பெயர் பண்புப்பெயர்
D சினைப்பெயர் பொருட்பெயர்

20 சேர்த்தெழுதுக.
.
காரம் + வடை

A காரம்வடை
B காராவடை
C காரவடை
D காராடை

7
[Type here]

கேள்வி 21

அ. காலியான இடத்திற்கு ஏற்ற சொற்களைக் கொண்டு நிரப்புக.


(இடம்-தன்மை, முன்னிலை, படர்கை)

1 முகிலன் “ ___________________________ அம்மா செய்த அணிச்சல் மிகவும் சுவையாக


.
இருந்தது,” என அமுதாவிடம் கூறினான்.
(1 புள்ளி)

2 பில் கேட் மற்றும் மைக்கேல் டெல் இருவரும் உலக மக்கள் அறிந்த பெரும்
.
பணக்காரர்கள். __________________________ தங்களின் உழைப்பால் முன்னேறினார்கள்.
(1 புள்ளி)

3 ________________________ பயணித்த வானூர்தி எதிர்நோக்கிய பிரச்சனைகளை


.
நாளிதழ் நிருபரிடம் விவரமாகக் கூறினோம்.
(1 புள்ளி)

4 சரித்திரப் பாடத்தின் போது “ மலேசியா _________________ நாடு,” என்று ஆசிரியர்


.
திரு. அமாட் மாணவர்களிடம் கூறினார்.
(1 புள்ளி)

ஆ. கொடுக்கப்பட்ட இணைமொழிகளுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து


இணைத்திடுக.

ஆடை அணிகலன் படிப்பு


1.

கல்வி கேள்வி ஆடையும் ஆபரணமும்


2.

நன்மை தீமை கீ ர்த்தி


3.

4. பேரும் புகழும் நல்லது கெட்டது

8
[Type here] (2 புள்ளிகள்)

(6 புள்ளிகள்)

கேள்வி 22

கொடுக்கப்பட்ட விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு


விடை எழுதுக.

9
[Type here]

அ. இந்த விளம்பரத்தில்
அருந்ததி வல்லாரை குறிப்பிடப்பட்ட பொருள்
பானம்! மருத்துவ யாது?
மூலிகைப் பயன்பாடு கொண்ட பானம்!

___________________________________________________________________________________________

ஆ.
அருந்ததி
விளம்பரப்படுத்தப்பட்ட பானத்தின் தனி சிறப்புகள் இரண்டை எழுதுக.
வல்லமைமிக்க கீரை வல்லாரை
i) ________________________________________________________________________________
அருந்ததி

வல்லாரை பானம்
ரி.ம 9.90
ii) ________________________________________________________________________________
மட்டுமே!
வல்லா
தனி சிறப்புகள் :
ரை
இ.  ஞாபகச்
இப்பானத்தை சக்தியை
எங்கு வளர்க்கும்
வாங்கலாம்? சரியான விடைக்கு (√) அடையாளமிடுக.
பானம்
 இரத்தச் சுத்திகரிப்புச் செய்யும்
அருந்ததி கடை இராசாயண கலவை அற்றது !
 உடல் புண்களை ஆற்றும்
மருந்தகம் கிடைக்குமிடம்:
உள்ளடங்கிய சத்துகள் : அனைத்து மருந்தகங்களிலும் மற்றும் அம்பானி
அம்பானி பேரங்காடி பேரங்காடிகளிலும்
 இரும்புச்சத்து
 சுண்ணாம்புச்சத்து
ஈ. இப்பானத்தில் உயிர்ச்சத்து _______________ மற்றும் __________________உள்ளது.
 உயிர்ச்சத்து ‘எ’ மற்றும் ‘சி’

உ. இந்தப் பானத்தில் _______________________________________________ இல்லாததால்


மக்கள் தயக்கமின்றி வாங்கி அருந்துவார்கள் என நம்பலாம்.

(6 புள்ளிகள்)

கேள்வி 23

கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை


எழுதுக.

10
[Type here]

அ) இப்படத்தில் சிறுவன் எதிர்நோக்கும் பிரச்சனை யாது ?

___________________________________________________________________________________________
(1 புள்ளி)
ஆ) இச்சிறுவனின் நிலைக்கு எது முக்கிய காரணமாகும் ?

____________________________________________________________________________________________

(1 புள்ளி)
இ) இந்நிலை தொடருமானல் இச்சிறுவன் எத்தகைய பாதிப்புகளை எதிர்நோக்குவான் ?

i) ________________________________________________________________________________

ii) ________________________________________________________________________________
(2 புள்ளி)
ஈ) இந்தப் பிரச்சனையைக் களைய நீ என்ன செய்வாய் ?

i) ________________________________________________________________________________

ii) ________________________________________________________________________________
(2 புள்ளி)

(6 புள்ளிகள்)

கேள்வி 24

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள உரையாடலை வாசித்து, அதன் பின்வரும் வினாக்களுக்கு


விடை எழுதுக.

நிருபர் : வணக்கம். திரு.செல்வன் அவர்களே!

11
[Type here]
செல்வன் : வணக்கம். வாருங்கள். இங்கு அமருங்கள்.
நிருபர் : நான் ‘மலேசிய மலர்’ நாளிதழின் நிருபர். தங்களைப் பேட்டி காண
வந்துள்ளேன்.
செல்வன் : ஓ! தாராளமாக!
நிருபர் : தாங்கள் நீண்ட காலமாக பெருநடை போட்டியில் ஈடுபட்டு
வருகிறீர்கள். ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
தாங்கள் எதிர்நோக்கிய சிரமங்களைச் சொல்ல முடியுமா?
செல்வன் : பல சமயங்களில் நான் எத்தனையோ சிரமங்களை அனுபவித்து
இருக்கிறேன். ஆரம்பக் காலத்தில் போட்டிக்கான பயிற்சிகளைத்
தகுந்த முறையில் செய்ய முடியாமல் அவதிப்பட்டிருக்கிறேன். சில
சமயங்களில் பட்டினியாகக் கூட இருந்து பயிற்சி மேற்கொண்டேன்.
நிருபர் : இந்தக் குறைகளை எவ்வாறு களையலாம் என்று தாங்கள்
கருதுகிறீர்கள்?
செல்வன் : விளையாட்டு துறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு
அவர்கள் பயிற்சி பெறுவதற்கான வசதிகளைச் செய்து தர
வேண்டும். அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற
வாய்ப்புகள் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி
விளையாட்டாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்கி வருமானத்திற்கு
வழி செய்தால் அவர்கள் விளையாட்டில் முழு கவனத்தைச்
செலுத்தலாம்.
நிருபர் : பெருநடை போட்டியில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத்
தாங்கள் கூறும் ஆலோசனை என்ன?
செல்வன் : முதலாவதாக ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்படப் பழகிக் கொள்ள
வேண்டும். அடுத்ததாக முறையான பயிற்சிகளைத் தவறாமல்
செய்ய வேண்டும். போட்டிகளில் தோல்வி ஏற்படும் போது துவண்டு
விடாமலும் வெற்றி கிடைக்கும் போது கர்வம் கொள்ளாமலும்
இருக்க வேண்டும்.
நிருபர் : நன்றாகக் கூறின ீர்கள். சமீ பத்தில் தங்களுக்கு மலேசியாவின் சிறந்த
விளையாட்டு வரர்
ீ எனும் விருதை வழங்கினார்கள். அதற்கு எனது
மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிக்குக் காரணமாகத்
திகழ்ந்தவர்கள் என யாரைக் குறிப்பிடுவர்கள்?

செல்வன் : கண்டிப்பாக என் வெற்றிக்கு உந்துதலாக இருந்தவர்கள் என்
பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் என் பயிற்சியாளர்
திரு. அலெக்ஸ் வோங் அவர்கள். இந்த வேளையில் அவர்களுக்கு
நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நிருபர் : தங்களின் அடுத்த இலக்கு என்ன?
செல்வன் : எதிர்காலத்தில் ஒரு முறையாவது ஒலிம்பிக் போட்டியில் கலந்து
வெற்றி பெற வேண்டும் என்பதே என் இலக்காகும்.
நிருபர் : தங்களின் ஆசை நிறைவேற என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். எங்கள் நாளிதழுக்குப் நேரம் கருதாமல் பேட்டி
அளித்ததற்கு நன்றி.
செல்வன் : நன்றி, வணக்கம்.
(வெற்றி நிச்சயம் புத்தகத்திலிருந்து சில மாற்றங்களுடன்)

12
[Type here]

அ) திரு. செல்வன் என்பவர் யார் ?

___________________________________________________________________________________________

(1 புள்ளி)
ஆ) திரு செல்வன் எதிர்நோக்கிய சிரமம் என்ன ?

____________________________________________________________________________________________

____________________________________________________________________________________________

(2 புள்ளி)
’ஆலோசனை’ என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளுக்கு (√) அடையாளமிடுக.

1 அறிவுரை
2 கருத்து
(1 புள்ளி)
இ) பெருநடை போட்டியில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டியவையில் ஒன்றை
எழுதுக.

____________________________________________________________________________________________

(1 புள்ளி)
ஈ) மலேசிய மலர் நிருபர் திரு.செல்வனை எதற்காகப் பேட்டி கண்டார்?

i. _________________________________________________________________________________

ii. _________________________________________________________________________________

(2 புள்ளி)

(7 புள்ளிகள்)

13
[Type here]

கேள்வி 25

கீ ழே கொடுக்கப்பட்டுள்ள சிறுகதைப் பகுதியை வாசித்து, அதன் பின்வரும்


வினாக்களுக்கு விடை எழுதுக.

காலை தென்றல் இதமாக வசியது.


ீ அம்மா பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க அமுதா
தேம்பி தேம்பி அழும் ஓசை கேட்டது. தன் வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு
மகளைத் தேடியது தாயுள்ளம். “ஏம்மா அழற? யார் அடித்தது செல்லத்தை? அழாதமா..,”
என அழும் மகளைச் சாந்தப்படுத்தினார் அம்மா.
அம்மாவிற்கு அமுதா அழுவதற்கான காரணம் புரியவில்லை. அமுதாவும் தன்
அழுகையை நிறுத்த வில்லை. கதவின் இடுக்கு வழியாக இவர்களையே பார்த்துக்
கொண்டிருந்தது ஓர் உருவம். அம்மாவின் கண்கள் யாரையோ தேடியது. ”கபிலா!
கபிலா! எங்குப் போய் தொலைந்தான்? டேய், கபிலா..,” எனக் கூவி அழைத்தார் அம்மா.
கபிலனின் கண்களில் பயத்தை விட கோபமே வழிந்தோடியது. “டேய் கபிலா!” அம்மா
தன் அடிக்குரலில் உரக்கக் கத்தி அழைத்தார்.
கபிலன் கதவின் மறைவிலிருந்து வெளியே வந்தான். அம்மா அவனை
முறைத்துப் பார்த்தார். “உன்ன தங்கச்சிய பாத்துக்க சொன்னா, நீ எங்க போன ? பார்
எப்படி அழறானு? என்னாச்சுனு தெரியல?” என புலம்பும் அம்மாவையே உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தான். பதில் ஏதும் கூறாமல் சிலையாய் நிற்கும் மகனின் மேல்
இருந்த கோபம் அதிகமாக அம்மா அமுதாவைத் தொட்டிலில் கிடத்தினார். அதே
வேகத்தில் அறைக்குள் சென்றார். கண்களில் கோபக்கனல் தெறிக்க கையில் பிரம்புடன்
வந்த அம்மா கபிலனைக் கோபம் தீர அடித்தார். ஆறே வயது நிரம்பிய கபிலன் அடித்
தாங்காமல் அலறினான். “அம்மா..அம்மா..அடிக்காதீங்க.....விட்டுடுங்க.........இனிமேல்
பாத்துக்கிறேன்...வேணாம்மா..” என்ற பிஞ்சுக் குரலின் கெஞ்சல் அம்மாவின் மனதை
உலுக்கியதால் அடியை நிறுத்தினார். பிரம்பைக் கீ ழே போட்டுவிட்டு மீ ண்டும் தன்
வேலையைத் தொடர தளர்ந்த நடையோடு சென்றார்.
அழுதுக் கொண்டிருந்த கபிலனின் ஓசை அடங்கியது. அம்மா தன் மனதில் பல
கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணம் கபிலனிடம் வந்தார். “கபிலா
எழுந்திருடா..கபிலா...கபிலா..,” என அவனை மடியில் வைத்து உலுக்கினார். கபிலன்
கண் விழிக்கவில்லை. அம்மா சிறிதும் தாமதிக்காமல் கபிலனின் முகத்தில் நீரைத்
தெளிக்க கண் திறந்து பார்த்தான் கபிலன்.
அம்மா அவனைக் கட்டிக் கொண்டு “ஏன்டா, அம்மாவிற்கு கோபம் வர மாதிரி
நடந்துக்கிற? உனக்கு ஏதாவது ஆயிருந்தா நான் உயிரோட இருந்திருக்க மாட்டேன்,”

14
[Type
என here]
அழுதார். அம்மாவின் அன்பு வெள்ளிடை மலையாக வெளிப்பட்டது. தனக்காக
உயிரைக் கொடுக்க கூடிய தன் அம்மாவைத் தவறாக நினைத்து விட்டோமே என்ற
குற்ற உணர்வில் கபிலனின் கண்கள் நனைந்தன. “அம்மா, அழாதீங்க, நீங்க தங்கச்சி
பிறந்ததிலிருந்து என்னிடம் பாசமாக இல்லனு நினைச்சன். அந்தக் கோபத்துல தான்
தங்கச்சிய கிள்ளிட்டேன், என்ன மன்னிச்சுடுங்க அம்மா,” என்றான் கபிலன்.
அம்மா இவ்வளவு நாள்கள் மகனை அலட்சியம் செய்து விட்டதை அப்போது
தான் நன்கு உணர்ந்தார். இனிமேல் தன் இரு பிள்ளைகளையும் பாராபட்சம் இன்றி
வளர்க்க வேண்டும் என்ற உறுதியுடன் கபிலனின் நெற்றியில் அன்பு முத்தம் இட்டார்.
கபிலன் புன்னகையோடு தன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு தன் தங்கையை
நோக்கி ஓடினான். “என் செல்லக்குட்டி, அண்ணனை மன்னிச்சிடும்மா,” என்று
கூறியவன் தங்கையின் கன்னத்தைத் தடவி விட்டான். கபிலன் கூறியது புரிந்தது போல்
அந்த மழலைச் சிரித்தது.
(எழுதியவர் : அ. கோமதி)

அ) இக்கதையின் முதன்மை கதைமாந்தர் யார் ?

___________________________________________________________________________________________
(1 புள்ளி)

ஆ) கபிலன் தன் தங்கையைக் கிள்ளியதற்கான காரணம் என்ன ?

____________________________________________________________________________________________

(2 புள்ளி)

இ) அம்மா எப்பொழுது கபிலனைக் கவனிப்பதைக் குறைத்தார் ?

____________________________________________________________________________________________

(1 புள்ளி)

ஈ) கபிலன் தன் அம்மாவின் அன்பை உணர வைத்த வரியை எழுதுக.

____________________________________________________________________________________________

(1 புள்ளி)

(5 புள்ளிகள்)
-முற்றும்-

15

You might also like