Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

திருவருட் பிரகாச வள்ளலார் 

என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி


ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்,
வாடினேன்" என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர்
பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்
மனிதர்கள் பசி,பட்டினி,வறுமை முதலியவற்றால் துன்பப்படுவதைக் கண்டு
மனநடுக்கமும் வருத்தமும் அடைவதாக வள்ளலார் கூறுகின்றார்.மனித குலங்கள் அவலங்கள்
மட்டுமின்றி நீரின்றி வாடும் பயிர்களைக் கண்ட போதும் வாடியதாக கூறுகிறார் வள்ளலார்.
மழையின்மையாலும் வெயில் வெம்மையாலும் நெல்லும் புல்லுமாகிய பயிர்கள் வாடி
யுலர்வது காண வள்ளலார் உள்ளம் வருந்திய இயல்பை, “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்” எனவும், பசித் தீ வெதுப்புவதால் வீடு தோறும் சென்று இரந்தும் பெற்றது
நிரம்பாமையால் வருந்தும் வறியவர்களை, “பசியினால் இளைத்து வீடுதோ றிரந்தும் பசியறாது
அயர்ந்த வெற்றவர்” எனவும் உரைக்கின்றார். வெற்றவர்-வெறுமை யுடையவர். வீடு தோறும்
சென்று இரந்தும் போதிய உணவு பெறாமை, இன்மையின் கொடுமை மிகுதியைக் குறிக்கிறது;
அந்நிலைமை நினைக்கும் நெஞ்சினை வருத்துவதாகலின், “கண்டு உளம் பதைத்தேன்” என
வுரைக்கின்றார். நெடுநாட்களாகியும் நீங்காப் பிணியால் துன்புறுவோரை, “நீடிய பிணியால்
வருந்துகின்றோர்” என்றும், அவரை நேரிற் காண்பது காண்போர் மனத்தை
நோயுறுவிக்குமாதலின், “நேருறக் கண்டுளம் துடித்தேன்” என்றும் எடுத்தோதுகின்றார். ஈடு -
ஒப்பு. மானக்கேடு வரின் நல்லோர் உயிர் துறப்பராதலின், அவர்களை “ஈடில் மானிகள்” எனப்
புகழ்கின்றார். ஒருவர்பால் ஒன்று இரத்தற்கு மனம் செல்லாத உயர்ந்தோர் வறுமையுற்று வாடுவது
மிக்க துன்பமாதலின், “ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்தமைக் கண்டு
இளைத்தேன்” என இயம்புகின்றார்.
பசி நெருப்பை அணைப்பதே சீவகாருண்யம் என்ற புதிய கொள்கையை
தோற்றுவித்தவர் வள்ளலார். தனது தலையாய கொள்கையான சீவகாருண்யத்தின் முக்கிய
நோக்கமாகிய பசிக்கொடுமையை போக்கியவர்..'பசி' தான் கொடிய நோய். இன்றளவும் மக்கள்
அனைவரும் உழைப்பது வயிற்று பசிக்காக தான்! மக்களின் வயிற்று பசியை போக்கிய மகான்
இவர்.
வறுமையில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்
என்கிறார் வள்ளலார்.உலகில் எதுவும் நிரந்திரமில்லை ஆகவே வாழும் காலம் வரை நல்ல
காரியங்களைச் செய்ய வேண்டும் என்கிறார்.கருணை உள்ளம் கொண்டிருக்க வேண்டும்
எண்கிறார்.கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்புமே.
அக்கருணைக்கு ஓருமை வரவேண்டும்.வறுமையை நீக்க பாடுபட வேண்டும் என்கிறார்.

You might also like