Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

1.

0 முன்னுரை

மனிதனின் கருத்தைப் புலப்படுத்தும் ஊடகமாகத் தோன்றியது மொழி. ஒரு மொழி பேசும் மனிதனின்
அறிவு அல்லது கருத்துநிலையை வளர்ச்சியைவத்துதான் அம்மொழியின் வளர்ச்சி காலப்போக்கில்
அமைந்தது. மொழியின் வளம் இலக்கியத் தோற்றத்திற்கு வித்திட்டது எனலாம். சங்க இலக்கியத்தின்
இலக்கியச் செழுமையையும், பண்பாட்டு வளத்தையும் நன்குணர்ந்த அறிஞர்கள் செவ்வியல் இலக்கியத்தின்
சிறப்பினை, மனிதவாழ்விற்கு வழிகாட்டும் வளமான சிந்தனைகளை உலகிற்கு உணர்த்தினர். செவ்விலக்கியம்
என்பது முன்மாதிரியாகவும், புனிதமான உன்னதமாகவும், நெறியாகவும், உச்சநிலை படைப்புகளாகவும்
விளங்குவதாகும். உணர்ச்சி, வடிவம், அறிவுக்கூறு, கற்பனை இவையாவும் செவ்வியல் சிறப்புகளாக
கருதப்படுகிறது. அறிவும், கற்பனையும் முதிர்ந்திடக் காப்பியம் கனியுமென்று கூறுவர். அவ்வகையில் கம்பன்
இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு சிறந்த காட்டாக அமைகிறது.

டாக்டர் சு. சிவகாமசுந்தரியின் (1988) புகழ்க் கம்பன் எனும் நூலில், தமிழ் காப்பியங்களின்
காலத்தை மூவகைப்படுத்துவர் என குறிப்பிட்டுள்ளார். இதில் கம்பராமாயணம் வடநூலாரால் இதிகாசம்
எனக் கருதப்பட்டாலும், தமிழின் பெருங்காப்பியமாக ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது என்பர்
இலக்கிய வரலாறு இயம்புநர். ‘கல்வியில் பெரியவன் ‘கம்பன்’ என்ற முதுமொழி காலத்தில் நின்று,
காலந்தாண்டி வளர்ந்து வரும் ஒரு பொது உண்மையாகும். வான்மீகத்தோடு கம்ப காதையை ஒப்பிட்டுக்
காணும்பொழுது கதைப் போக்கிலே பல மாற்றங்களைக் கம்பன் செய்துள்ளார். கம்பனின் இலக்கிய
நயத்தை மட்டும் எடுத்துக்காட்டாமல் மக்கள் எப்படி வாழவேண்டும், எப்படி வாழ்ந்தால் மனிதன்
மாமனிதனாக உயரலாம் என்ற வாழ்க்கை நெறிமுறைகளையும் வாழ்க்கை இலக்கணத்தையும்
இக்காப்பியத்தில் கம்பன் எடுத்து இயம்பியுள்ளார்.

2.0 கம்பராமாயணச் செவ்வியல் சிறப்புகள்

இலக்கியத்தின் முதன்மை கூறாக அமைவது உணர்ச்சி. ஐந்து வகையான உண்ர்ச்சிகளால் இலக்கியம்


நொடிது வாழும் என்கிறார் எம். நுஃமான் (2006). ஒரு காட்சியை நம் கண் முன்னேயும் மனக்கண்
முன்னேயும் கொண்டு நிருத்துவது உணர்ச்சியாகும். அவ்வகையில், கம்பராமாயணத்தில் கைகேயின்
அலங்கோல நிலையானது அவளின் சாதிக்க வேண்டும் என்ற பிடிவாத உணர்வை உணர்த்துகிறது.

தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,


நாவி மொன்குழல் நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகன் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
கைகேயி அணிகலன்களை வீசி எறிந்து, தன் கூந்தலைப் பூமியில் படும்படி அவிழ்ந்து விட்டு, கண் மையை
களைத்து கரைந்து வழியும்படி அழலானாள். இது அவளின் பிடிவாத உணர்ச்சியையும் சாதித்து விட
வேண்டும் என்ற உணர்சியையும் அழகாக வருணையுடன் கம்பன் படைத்துள்ளான்.

கற்பனை என்பது உள்ளதை உள்ளவாறு கூறாமல், உள்ளதில் சிறிது குறைத்தும் சிறிது


மிகைப்படுத்தியும் இருக்கும். கற்பனை எந்த அளவிற்கு இனிமையாகவும் அழகாகவும் அமைகிறது என்பது
படைப்பாளரின் கற்பனைத்திறன், சிந்தனைத்திறன், பட்டறிவு ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அவ்வகையில், பல நூற்றாண்டுகள் சென்றும் கம்பராமாயணம் இன்னும் அழியாது இருப்பதற்குக் காரணம்
கற்பனையே. காட்டாக,

சோனை வார்குழல் கற்றையில் சொருகிய மாலை,


வான மாமழை நுழைதரு மதிபிதிர்ப் பாள்போல்
தேன் அ வாவுறு வண்டினம் அலமரச் சிதைத்தாள்

கைகேயி பெருமழை பொழியும் கார்மேகம் போல விளங்கும் தன் நெடிய கூந்தலில் இருந்த
மலர்மாலைகளை, வானத்தில் உள்ள கார்மேகத்தில் உள்ள முழுநிலைவினை எடுத்துக் கீழே சொரிபவள்
போல வண்டுகள் அலரும்படி பிய்த்து எறிந்தாள். அதாவது, கூந்தலுக்குக் கார் காலத்து மேகம்
உவமையாகவும் மலர்களுக்கு முழு நிலவு உவமையாகவும் உவமையணி பயின்று வந்துள்ளது என்றால்
மிகையாகாது.

மேலும், இலக்கியத்திற்கு இன்றியமையாத கூறுகளில் அறிவுக்கூறும் ஒன்றாகும். அறிவுக்கூறு என்பது


செய்தி, சிந்தனை, மானிட உண்மை அல்லது வாழ்க்கை நெறிகள் ஆகியவைக் குறிக்கும் (ப. ஆறுமுகம்,
1999). சிறந்த இலக்கிய வாழ்க்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்டு அமைதல் வேண்டும்.
ஆதுபோன்று, இக்காப்பியத்தில் பல இடங்களில் , பல வகைகளிலும் அறிவுக்கூறுகளை கம்பன்
குறிப்பிட்டுள்ளார். காட்டாக,

வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்


உயிர் எலாம் தனுயிர் ஒப்ப ஓம்பலால்

நாட்டு மக்களைத் தனது உயிரினும் மேலாக எண்ணுகின்ற அறிவாற்றல் பெற்று விளங்குகின்ற மன்னனை
உடைய மலர்தலை உலகம் அமையும் பொழுதுதான் அறிவுடைச் சமுதாயமாக விளங்கும். மிதிலையில்
இராமனும், சீதையும் கண்டு இதயம் மாறிப் புகுந்த செய்தியைக் கூறுவது பண்டைக் களவு மணநெறியைக்
காட்டுகிறது. இராவணன் சீதையை நிலத்தோடு பெயர்த்துச் சென்றதும் அச்செய்தியைப் பன் முறை சடாயு
அனுமன் உரை வாயிலாக காட்டுவதும், கற்பின் பெருமையும் பெண்ணைப் பிறர் தீண்டாப் பெற்றிமையும்
நிலை நாட்டப்படுகிறது. ஆக, இக்காப்பியத்தில் கூறப்படும் அறிவுக்கூறுகளானது இலக்கியம் படிபோறின்
வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்.
செவ்விலக்கியத்தில் வடிவம் ஒரு கூறாக அமைகிறது. கம்பராமாயணம் பல வடிவங்களில்
அமைந்துள்ளன. அவை, உரைநடை வடிவம், உரையாடல் வடிவம், செய்யுள் வடிவம், கதை வடிவம் ஆகும்.
அதே வேளையில் சொல் நயம் கருத்து நயம் வடிவத்திற்கு மெருகு சேர்க்கிறது. ஒரு இலக்கியத்தின்
வடிவம் இலகுவாக இருப்பின் அதைப் படித்துப் புரிந்துக் கொள்ள எளிதாக இருக்கும். அவ்வகையில்
கம்பன் இயற்றப்பட்ட இக்காப்பியமும் படிப்போர் மனதில் பதியும் படி அமைந்துள்ளது. ஆக,
இவ்வனைத்து செவ்வியல் சிறப்புகளைக் கொண்டுள்ளதால் தான் கம்பராமாயணம் மிகச் சிறந்த இலக்கிய
காப்பியமாக கருதப்பட்டது.

3.0 கைகேயி சூழ்வினைப்படலத்தில் காணும் வாழ்வியல்; நன்னெறி, முருகுணர்ச்சி கூறுகளுக்கு


முரணான கருத்துகளை அடையாளங்கண்டு, அவற்றின் விளைவுகளையும், படிப்பினையும்
பகுத்தாய்ந்து இன்றைய வாழ்வியலோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்து விவரித்திடுக.

பெருமை வாய்ந்த இதிகாசமான, தொன்மை வாய்ந்த இலக்கியமாக கருதப்படுவதுதான் கம்பராமாயணம்.


இக்காதையில் கைகேயின் சூழ்வினை படலத்தில் பல வாழ்வியல் நெறிகள் இடம் பெற்றுள்ளது. அவை
முரணான பல கருத்துகளையும் கொண்டு உள்ளது என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. தயரதனின்
இரண்டாம் மனைவியான கைகேயி, இராமனின் திருமுடி விழாவுக்கு இடையூறாக இருந்து, அவள் செய்த
செயலைக் கூறும் பகுதியானது தான் இச்சூழ்வினைப் படலமாகும். இதில் பல முரணான கருத்துகளும்
இடம் பெற்றுள்ளன.

3.1 கூனி- சூழ்ச்சி மற்றும் பழிவாங்கும் எண்ணம்

முதலாவதாக, கூனியின் சூழ்ச்சி அதாவது கூனியின் சொல்கேட்டு நற்பண்பும் பாசமும்


உடையவலாக இருந்த கைகேயி தீய குணத்திற்கு ஆளானாள். கூனிக்கு இராமன் மீதுள்ள பகையின்
காரணமாக கைகேயியைப் பயன்படுத்தி இராமனைப் பழிவாங்க எண்ணுகிறாள். இராமணுக்குப் பதவி
கிடைத்தால், பரதன் ஒன்றுமில்லாத கதிக்கு ஆளாவான். பின் இராமனின் வாரிசுகளுக்குதான் அரசு பதவி
போகும் என்று பலவாறு பொய் கூறி கைகேயின் மனத்தை மாற்றினாள் கூனி. அதுமட்டுமின்றி, தயரதன்
கைகேயிக்கு அளித்த இரண்டு வரத்தை இப்பொழுது அதை பயன்படித்தி மன்னரிடம் கேட்டுபெற
தூண்டுகிறாள்.

3.1.1 விளைவு

இதன் விளைவாகக் கூனியின் சூழ்ச்சி நல்ல குணம் வாய்ந்த கைகேயின் மனத்தை மாற்றி
இராமனின் மீதுள்ள மதிப்பையும் பாசத்தையும் உடைத்துவிட்டது எனலாம். சூழ்ச்சியின் காரணமாக
கைகேயி தன் சுயபுத்தி இழந்து கொடுரமானவளாகினாள். இதன் விளைவாக தான் கைகேயி
மனமாற்றத்திற்குஆளாகி தன் கணவன் தயரதன் மனம் வருந்தும் நிலை ஏற்பட்டது. கூனியின் இச்சூழ்ச்சி
இறுதியில் இராமன் நாட்டை ஆள முடியாமல் போய்விட்ட்து அதே வேளை தான் நினைத்த்தைச்
சாதித்துவிட்டால் கூனி.

3.1.2 படிப்பினை

மானிடராய் பிறந்த நமக்கு பழிவாங்கும் எண்ணம் இருத்தல் கூடாது. ஒருவர் நமக்கு தீங்குச்
செய்தாலும் நாம் அவர்களுக்கு ஒரு போதும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கக்
கூடாது. முடிந்த மட்டில் அவர்களுக்கு நன்மையே செய்தல் வேண்டும். இல்லையேல் பிறர் செய்த தீமையை
மறந்து விட வேண்டும். இதைதான் பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர்,

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்


நாண நன்னயம் செய்துவிடல்’

என அழகாக வகுத்துள்ளார். ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்குப் பழத்தைத் தருகிறது.
ஆறறிவு உடைய நாம், நமக்கு துன்பம் செய்தவருக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டும். இல்லையேல்
அவர்களுக்கு தீங்கு செய்தல் கூடாது.

3.1.3 இன்றைய காலத்தோடு ஒப்பீடு

இக்காலத்திலும் நண்பர்கள், கனவன் மனைவி போன்ற உறவுகளுக்கிடையே சூழ்ச்சி எனும்


ஆயுதம் இருந்து வருகிறது. சூழ்ச்சி செய்யும் குணமுடையவர்களுடன் உள்ள நட்பு பிறகு அந்நட்புக்கே
சேதாலம் ஏற்படுத்துகிறது. சிலர் முற்பகையால் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான
தகவல்களை விமர்சனம் செய்து வருகிறார்கள். இவ்வாறாக பிறரைப் பற்றிய தவறாக கூறிக் கொண்டு;
சூழ்ச்சி எனும் எண்ணத்தை இகால மக்கள் கொண்டுள்ளனர் என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
உதாரணமாக, சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளினால் பழிவாங்கும் அளவுக்கு இக்கால இளைஞர்கள்
செயல்ப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் இவ்வாறான செயல்கள் நம் கண்முன்னே நடந்து கொண்டுதான்
இருக்கிறது. அதுமட்டுமின்றி, தன் சக நண்பர்களுக்கிடையே மூட்டிவிடும் பழக்கமும் இளைஞர்களிடையே
அதிகமாகவே இருக்கிறது.

3.2 கைகேயி- சுயநலம் மற்றும் சுயமாக சிந்தித்து செயல்ப்படும் ஆற்றலின்மை

கைகேயி இயல்பிலேயே ஒரு கொடுமைக்காரியா? இல்லை. இராமனயும் தன் மகனாகவே கருதி


வாழ்ந்த மிகச்சிறந்த தாயாக திகழ்ந்தவள். இங்கு கைகேயி யோசிக்காமல் சுய சிந்தனையிள்ளாமல் பிறர்
பேச்சைக் கேட்டு நடக்கிறாள். அதோடு, சுயநலத்துடனும் செயல்ப்படுகிறால். இதில் பெண்ணின்
முருகுணர்ச்சியை முரணாக காட்டப்பட்டுள்ளது. கூனி சென்றதும் கைகேயி தன் கூந்தலை விரித்துக்
கொண்டு, அணிகலன்களை அறுத்து எறிந்து அலங்கோல நிலையில் வந்து தயரதனிடம் இச்சமயத்தைப்
பயன்படுத்தி அவ்விரண்டு வரங்களைக் கேட்கிறாள். அதாவது, ஒன்று பரதன் அந்நாட்டை ஆள வேண்டும்.
மற்றொன்று சீதாப்பிராட்டியின் கணவன் இராமன் இந்நாட்டை விட்டுச்சென்று காட்டிலே வசம்செய்ய
வேண்டும் என்பதாகும். இங்கு முருகுணர்ச்சியை முரணாக காட்டப்பட்டுள்ளது. சான்றாக,

ஏய வரங்கள் இரண்டின், ஒன்றி னால்என்

சேய்உலகு ஆள்வது, சீதை கேள்வன் ஒன்றால்

போய்வனம் ஆள்வது’ எனப்பு கன்று நின்றாள்

தீயவை யாவை யினும்சி றந்த தீயாள் (14)

தன் மகன் பரதன் தான் இந்நாட்டை ஆள வேண்டும் என்ற சுயநலத்துடன் இருக்கிறாள் கைகேயி.

3.2.1 விளைவு

இதன் விளைவாக தன் மீது பாசமும் நம்பிக்கையும் வைத்த கணவன் தயரதனின் மனம் வருந்தும்
நிலைக்குட்படுத்தியுள்ளாள் கைகேயி. கைகேயி தன் சுயநலத்தால் தன் கணவனை இழந்தால். பிறகு
இராமனின் மீதுள்ள பாசத்தையும் இழந்தால். தன் மனைவி இதுவரை இராமபிரான்பால் பேரன்பு காட்டி
தன்மகனாகவே எண்ணி வந்தவள், திடீரென்று இந்த வஞ்சனை எண்ணம் அவளுக்கு வந்ததை எண்ணி
மனம் வருந்தினார் தயரதன். பெண்ணுக்குரிய பண்பை அவ்விடத்தில் அவள் இழக்கிறாள். தன் கணவன்
முன் அலங்கோல நிலையில் நிற்கிறாள். இதன் விளைவாக தன் கணவன் தயரதன் மன வருத்தம்
கொண்டார். தன் உயிரான மகன் இராமனும் தன் நாட்டை விட்டு காட்டுக்குச் சொல்லும் நிலமை
ஏற்பட்டுள்ளது.

3.2.2 படிப்பினை

மற்றவறின் சொல் கேட்டு நடப்பினும் சற்று நாம் சிந்தித்து செயல்படல் வேண்டும். தன்நலத்துடன்
இருக்காது பொது நலத்துடனும் வாழ கற்று கொள்ள வேண்டும் என முன்னவர் பட்டாபிராமன் (2007)
கூறியுள்ளார். ஒரு சிறந்த ஒழுக்கமிக்க ஒற்றுமையான குடும்பத்தை உருவாக்குவதற்குக் குடும்ப தலைவனும்
தலைவியும் சுயநலத்தோடு இன்றி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் நல்லதொருக் குடும்பம் பல்கலைக்கழகம் என்பது கேற்ப செழுமையான ஒரு
குடும்பத்தை உருவாக்க முடியும். இது ஒரு சிறந்த படிப்பினையாக கருதப்படுகிறது.

3.2.3 இன்றைய காலத்தோடு ஒப்பீடு

இது போன்று இக்காலத்திலும் சில குடும்பங்களில் மூன்றாவது நபரின் தலையிடுதலால்


அக்குடும்பத்தில் பிளைவு ஏற்படுகிறது. சில வேலைகளில் கணவன் மனைவி இருவரும் தன்னலமாக
இருப்பதாலும் உறவுக்கிடையே விரிசல் ஏற்படுகிறது. அதும் இந்நவீன காலத்தில் மனைவிமார்கள்
ஆண்களுக்கு ஈடாக இருப்பதாலும், அவர்கள் சுயநலத்துடன் செயல்ப்படுகிறார்கள். அதோடு, அவர்கள்
நண்பர்களின் சொல் கேட்டு, தீர விசாரிக்காமல் உடனடியாக நம்பி செயலில் இறங்கிவிடுகிறார்கள். சுயமாக
சிந்தித்து செயல்ப்படாமறுக்கிறார்கள். காட்டாக, நண்பன் நாளிதழில் 4 ஆம் திகதி ஆகஸ்ட் 2017 இல்
வெளிவந்த செய்தியில் வளர்ப்பு பிள்ளைகளுடன் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு ஓர் ஆடவரின் மீது
வழங்கப்பட்டுள்ளது (பின்னிணைப்பு 1). இச்செய்தியின் படி அவ்வாடவர் ஒரு வினாடி தன் பகுத்தறிவைப்
பயன்படுத்திச் சிந்தித்திருந்தால் இக்குற்றம் நடந்திருக்காது. ஆக, இக்காலத்தில் மக்கள் இவ்வாறு தன்
மகிழ்ச்சிக்காக சிந்திக்காமல் மிருகதனமாக நடந்து கொள்கிறார்கள்.

3.3 தயரதன் – சிந்திக்காமல் வரம் கொடுத்தல்

அதோடு, கைகேயி அலங்கோல நிலையில் தயரதனிடம் வரம் கேட்க வந்த போது ‘உன்மனம்
விரும்பியதை நான் நிச்சயம் செய்வேன் அதோடு எக்காரணம் கொண்டும் நீ விரும்பியதைக் கொடுக்காமல்
இருக்க மாட்டேன்; இது நின்மைந்தனாகிய மேலான இராமபிரானின் மீது ஆணை’ என கைகேயிடம்
கூறினான். சான்றாக,

கள்அ விழ்கோதை கருத்துஉண ராத மன்னன்

வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் நக்கான்;

உள்ளம் உவந்த்து செய்வன்; ஒன்றும் உலோபேன்;

வள்ளல் இராமன் உன் உன்மைந்தன் ஆணை என்றான். (11)

3.3.1 விளைவு

இதன் விளைவாக தயரதன் தன் மகன் இராமன் காட்டுக்குப் போகும் சூழல் ஏற்பட்டது. அச்சமயம்
தயரதன் ஒரு வினாடி சிந்தித்து வாக்குறுதி தந்திருந்தால் இதுபோன்ற விளைவுகள் ஏற்பட்டிருக்காது.
இதனால், கைகேயி இதை பயன்படுத்தி காரியத்தைச் சாதித்துக் கொண்டாள். நாட்டு மக்கலையே கவலை
வெள்ளத்தில் அடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளன. அதோடு மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்
உடைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

3.3.2 படிப்பினை

இக்கருத்தின்படி நாம் மகிழ்ச்சியான நிலையிலோ துக்கத்திலோ இருக்கும் போது எவ்வித


வரங்களைத் மற்றும் வாக்குறுதிகளைத் தருவதைத் தவிர்த்து கொள்ளல் வேண்டும். நாம் மகிழ்ச்சியில்
இருக்கும் போது நம் எண்ணங்கள் ஒரு நிலயில் இருக்க இயலாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
அதேபோல் துக்கத்திலும் கோபத்திலும் நம் எண்ணங்களும் போசும் வார்த்தைகளும் ஒரு நிலையற்ற
நிலையில் தான் இருக்கும். அவ்வகையில், நாம் கூறும் வாக்குகள் வரங்கள் அனைத்தையும் ஒரு நொடி
சிந்தித்து வழங்க வேண்டும்.
3.3.3 இன்றைய காலத்தோடு ஒப்பீடு

பெரும்பாலும் காதலர்களிடையே அதிகம் இப்போன்று வாக்குறுதிகள் அளித்துக் கொள்வது


இயலபான ஒன்றாகும். காதலிக்கும் சமயம் ஒருவர்கொருவர் பல சத்தியங்களைச் செய்து கொல்வார்கள்.
அவ்வாக்குறுதிகள் நீண்டு நிலைத்திருக்கும் என்பது சாத்தியமில்லை. சிந்திக்காமல் மன மகிழ்வுக்காக
வாக்குகள் கொடுத்து கொள்வார்கள். சான்ற்றக, திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்த காதலனே
தன் காதலியைத் துண்டு துண்டாக வெட்டி கொளைச் செய்த செய்தி தமிழ் மலர் நாளிதழில் 13 ஆம் திகதி
ஆகஸ்ட் 2016 இல் வெளிவந்துள்ளது (பின்னிணைப்பு 2). அதோடு, சத்தியமானது திருமணம் நடந்த பிறகு
ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளாமல் அதுவே பெரிய பிரச்சனைக்கு ஆளாக்கிவிடும். இதன் விளைவாக
கண்வன் மனைவுக்கிடையே விவாகரத்து போன்ற பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.

3.4 இராமன் – மக்கள் நலத்தைக் கருதவில்லை

இச்சூழ்வினைப் படலத்தில் இராமனின் முடிவு முரணான நன்னெறி கருத்தைக் காட்டுகிறது.


காட்டுக்குச் செல்வது மன்னனின் கட்டளை இல்லையென்றாலும் கைகேயின் கட்டளை மறுக்காமல், தன்
தம்பி பரதன் அரச்செல்வம் பெறுவது நான் பெறுவதைப் போன்றதாகும் என கூறி விடை பொற்றுக்
காட்டிற்குச் சென்றான் இராமன். காட்டாக,

‘மன்னவன் பணியன்று ஆகில், நும்பணி மறுப்பனோ? என்

பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?

என்னிதின் உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;

மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்’ (114)

இருப்பினும், தன் தாயின் சொல் கேட்ட இராமன், மக்களின் மனக் குமுறலைக் கேட்க்கவில்லை.
தன் தம்பி பரதன் அரசாளுவதை மக்கள் விரும்பவில்லை. இதை அறிந்தும் இராமன் சிறிதும்
பொருட்ப்படுத்தாது தன் தாயின் கட்டளைக்குப் பணிந்து காடுக்குச் செல்வதை ஏற்றுக் கொண்டான்.
காட்டுக்குப் போவது அந்நாட்டு மக்களுக்கு விருப்பம் இல்லை என்று அவனுக்குத் தெரிந்தும் செல்ல
சம்மதித்தான் இராமன். நற்குணமும் பண்பும் மிக்க இராமன் இந்நாட்டை ஆள வேண்டும் என்ற
மக்களின் வேண்டுதலை அவன் மதிக்கவில்லை.

3.4.1 விளைவு

இதன் விளைவாக பரதன் நாட்டை ஆள்பான். பரதன் அரசு பதவியைப் பெற்றாலும்


இராமனுக்கு ஈடாக முடியாது. அதுமட்டுமின்றி, மக்களின் முழு சம்மதமின்றி பரதன் அரசு பதவியை
ஏற்றிருப்பான். மக்களின் எதிர்பார்ப்பு அனைத்தும் முற்றிலும் உடைந்து போனது. அதோடு, அந்நாடு
ஒரு சிறந்த ஒழுங்குமிக்க ஆட்சியை இழந்தது எனலாம். இருப்பினும், கைகேயியும் கூனியும்
அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். கூனியின் பழிவாங்கும் எண்ணமும் நிறைவேறியது.

3.4.2 படிப்பினை

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் படிப்பினையானது, நாம் ஒரு முடிவை எடுக்கும் போது
தீர சிந்தித்தப் பின்னரே செயல்ப்பட வேண்டும். ஒரு தரப்பில் இருந்து சரி என்று நினைத்துவிட்டு
முடிவை எடுத்தல் கூடாது. அதுமட்டுமின்றி, மற்றவரின் மனம் புன்படும்படி நடந்துக் கொள்ளக்கூடாது.
நம் மேல் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் பண்பும் பாசமும் வைத்திருப்பவரிடம் நாமும் சற்று
அக்கறைக் கொள்ள வேண்டும்.

3.4.3 இன்றைய காலத்தோடு ஒப்பீடு

இன்றைய காலத்தில் பலர் சிந்தித்து பொறுமையுடன் செயல்ப்படாமல், எண்ணத்தில் தோன்றுவதை


உடனே செயல்படுத்துகிறார்கள். காட்டாக, இரண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளைக்
களைப்பதற்கு ஓர் ஆசிரியர், இரண்டு தரப்பிலும் நின்று சிந்தித்தப் பின்னரே ஒரு சரியான முடிவுக்கு வர
வேண்டும். ஆனால், இக்காலத்திலோ சில ஆசிரியர்கள் மன உழைச்சலாலும் தான் மாணவர்களுக்கிடையெ
கொண்டுள்ள வேறுப்பாட்டினாலும் எதையும் சரிவர சிந்திக்காமல் சட்டென்று முடிவு எடுக்கிறார்கள்.
காட்டாக, அன்மையில் ஆரம்பப்பள்ளி மாணவியான வசந்தபிரியாவின் கோர செய்தி அனைவரின் மனதில்
அம்பு போல் பதிந்துள்ளது (பின்னிணைப்பு 3). இதற்கு, அவ்வாசிரியரின் முடிவும் அவரின் செயளும்
முதன்மை காரணமாக திகழ்கிறது. ஆக, நாம் ஒரு வேலையிலோ அல்லது செயலிலோ மேற்கொள்ளும்
போது அனைவரின் நலத்தைக் கருத்தில் கொண்டு செயல்ப்படுவது சாலச்சிறந்தது.

ஆக, இக்காப்பியத்தில் கைகேயின் சூழ்வினைப்படலத்தில் பல முரணான கருத்துகள் நன்னெறி,


முருகுணர்ச்சி போன்ற கருத்துகள் மழை துளிப் போல் பரவிகிடக்கின்றன. அதை படிப்பத்துடன்
நிறுத்தாமல் அதை பகுப்பாய்ந்து நன்மை தீமை போன்ற விளைவுகளைச் சிந்திது வாழ்க்கையில்
செயல்ப்படுத்த வேண்டும்.

4.0 முடிவுரை

கம்பராமாயணம் அனைத்து இலக்கிய காப்பியத்திற்கும் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கின்றது


என்றால் அது மிகையாகாது. இக்காப்பிய இலக்கியத்தில் வாழ்வியற் கூறுகள் அதிகமாக
காணப்படுகின்றன. ஆதலால் இலக்கியங்களை நுணுகிக்கற்று உணர்ந்து அவை கூறும் அனுபவ
நெறியை மேற்கொண்டு ஒழுகினால் வளர்நிலையை அடைய வேண்டும். ஆக, கம்பராமாயணம்
வாழ்க்கையோடு மிக நெருங்கிய ஒன்றாக இருக்கிறது. அனுபவங்களை விளக்கிக் காடும் வழியாகவும்
தனிமனித நலம் என்னும் எல்லையையும் கடந்து சக மனிதர்களோடு நம் தொடர்புனை விரிவுபடுத்திக்
கொள்ளும் வழியாகவும் இருக்கிறது.

You might also like