தமிழர் அடையாளம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தமிழர் அடையாளம் 

தமிழ் மொழியை அடிப்படையாக் கொண்டது. தமிழை தாய் மொழியாகக் கொண்ட


அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா
விட்டாலும் தமிழர் பண்பாடு அல்லது தமிழர் பின்புலத்தில் இருந்து வந்து தம்மை தமிழர் என்று
அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர்.

மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழி, மக்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் இந்த நுாற்றாண்டிலும்


இளமையாகவும் இனிமையாகவும் உயிர்ப்போடும் இருக்கிறது. உலக நாடுகளில் 90 மில்லியன் மக்களாலும்
பேசப்படும் மொழியாக நம் அன்னைத் தமிழ் திகழ்கிறது.

எத்திசையும் புகழ் மணக்க எல்லோராலும் விரும்பப்படும் மொழியான நம் தாய்மொழியில் பேசும்போது, நமக்குக்
கிடைக்கும் இன்பம் கொஞ்சநஞ்சமா?'என்றுமுள தென்தமிழ்' என
கம்பரால் புகழ்ந்து பாராட்டப்பட்ட தமிழ் பழமையானது. தமிழ் பேசினாலும் கேட்டாலும் இனிமை தரும் மொழியாய்
திகழ்வதால் மகாகவி பாரதியார், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என
பாடியுள்ளார். தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை என்பதாகும்.

தமிழ் என் தாய் மொழி! என் பண்பாடு, என் வாழ்ககை


் ! எனக்கும் என் சந்ததிக்கும் அதுவே முதன்மை.இதனை
மறக்காமல் வாழ்வது என் கடமை. இப்படி ஒவ்வொரு தமிழனும் நினைத்தால் அதுவே மேன்மை.

You might also like