Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

கார்த்திகையில் கார்த்திகை நாள்

முழு நிலவு நாளில் எந்த நட்சத்திரம் அமைகிறதோ அதன் அடிப்படையில்


மாதங்களின் பெயர்கள் அமைந்திருக்கின்றன. சித்திரை நட்சத்திரத்தில்
முழுநிலவு நாள் (சித்திரா பௌர்ணமி) அமைந்தால் அந்த மாதம் [மதி (நிலவு) -->
மாதம்] சித்திரை மாதம். விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு நாள் அமைந்தால்
அந்த மாதம் வைகாசி (வைசாகி --> வைகாசி). அப்படியே ஒவ்வொரு மாதத்திற்கும்
பார்த்துக் கொண்டு வந்தால் கார்த்திகை நட்சத்திரத்தில் முழு நிலவு அமையும்
மாதம் கார்த்திகை மாதம். திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும்
தீபத்திருநாள் என்றும் கொண்டாடப்படும் இந்தத் திருநாள் கார்த்திகை மாதத்தில்
கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாள். பண்டைய தமிழ்
இலக்கியங்களில் விளக்கீ டு என்னும் இந்தத் தீபத்திருநாள் பெரும்
கொண்டாட்டமாக இருந்தது என்பதற்கு நிறைய தரவுகள் இருக்கின்றன.

திருவண்ணாமலையிலும் திருப்பரங்குன்றத்திலும் இன்னும் பல


திருத்தலங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா தற்காலத்தில்
கொண்டாடப்படுகிறது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால்
கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் திருமுருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம்
மிக உகந்த நட்சத்திரமாக அமைவதால் திருக்கார்த்திகைத் திருநாள்
முருகப்பெருமானுக்கும் மிக உகந்த திருநாளாக அமைகிறது.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்னும் நாலாயிரம் பாசுரங்களின் தொகுப்பான


வைணவ பக்தி இலக்கியத்தில் ஓர் ஆயிரத்தைப் பாடிய நம்மாழ்வாரும்
இன்னோர் ஆயிரத்தைப் பாடிய திருமங்கையாழ்வாரும் திருமுருகனுக்கு உகந்த
நாட்களில் பிறந்திருக்கிறார்கள். முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகத்தில்
பிறந்தவர் நம்மாழ்வார். முருகனுக்கு உகந்த கார்த்திகையில் கார்த்திகை நாளான
இன்று பிறந்தவர் திருமங்கையாழ்வார்.
பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ

ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் - ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த

கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.

பேதை நெஞ்சமே! இன்றைக்கு என்ன பெருமை என்று அறியமாட்டாயோ?

ஏது பெருமை? இன்றைக்கு என்ன?

சொல்கின்றேன் கேள். பெரும்புகழ் கொண்ட திருமங்கைமன்னன் இந்த மாபெரும்


பூமியில் வந்து உதித்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள்
இந்த நாள்.

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்

ஆறங்கம் கூற அவதரித்த - வறுடைய


கார்த்திகையில் கார்த்திகை நாள் என்றென்று காதலிப்பார்

வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.

ஆகா! இன்று திருமங்கைமன்னன் திருவவதாரத் திருநாளா?! அருமை!


அவருடைய பெருமைகளை இன்னும் சொல்லுங்கள்.
நான்கு வேதங்களுக்கு ஒப்பான நான்கு தமிழ்ப் பனுவல்களை செய்தார்
நம்மாழ்வார். வேதங்களுக்கு ஆறு பகுதிகள் என்னும் ஆறங்கம் உண்டு. அதே
போல் நம்மாழ்வார் செய்த தமிழ் மறைக்கு ஆறங்கம் செய்தார்
திருமங்கையாழ்வார். அப்படி ஆறங்கம் பாட அவர் அவதரித்த மிக்க
பெருமையுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று மனம் மகிழ்ந்து
அதனைக் காதலிப்பவர்களின் திருவடி மலர்களை நமக்கு பாக்கியம் என்று
சொல்லி வாழ்த்துவாய் நெஞ்சமே!

You might also like