மெர்டேகா கவிதை

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

3) 

      நம் நாடு
துங்குவை கண்ட மலேசிய நாடு
துரிதமாய் முன்னேறி வருகின்ற நாடு
எங்குமே ஏற்றத்தாழ் வில்லாத நாடு
எல்லோரும் சமமெனக் கொண்டநம் நாடு!

பலவின மாந்தர்கள் வாழ்ந்திடும் நாடு


பன்மொழி பேசி மகிந்திடும் நாடு
கலைபல கொண்டு தவழ்ந்திடும் நாடு
கண்ணிய மாய்உயர்ந் தோங்கிடும் நாடு!

ஒற்றுமை வித்திட்ட நம்மலை  நாடு


ஒப்பற்ற உயரிய உன்னத நாடு
ஏற்ற இறக்கங்கள் இல்லாத நாடு
எவரையும் வரவேற்று மகிழ்ந்திடும் நம்நாடு!

ஈயம்ரப்பர் தென்னை நிறைந்திட்ட நாடு


இன்பமாய் வாழவழி செய்திடும் நாடு
நேயமாய் வாழ்கின்ற சிங்கார நாடு
நல்லோர்கள் பார்த்து மகிழுமோர் நாடு!

தேசிய மொழிக்குமுதல் இடங்கொண்ட நாடு


தன்மார்க்க நெறியில் செல்கின்ற நாடு
ஆசியாவி லேபுகழ் மங்காத நாடு
அருமை மிகும்நம் மலேசியா நாடு!
மெர்டேகா
மலேசியா சுதந்திரத்தை
நேசித்துக் கொண்டு இருக்கும்
மூவின மக்களும் கூடி நின்று
சுவாசிக்கும் நாள் முப்பத்தியோராம் திகதி.

ஒன்றாக இணையும் கரங்கள் அன்றைய நாள்


ஒன்றென ஒலிக்கும் குரல்கள்
ஒரே மொழி
மெர்டேகா மெர்டேகா மெர்டேகா என்னும் ஒலி.

பொது இடங்கள் இல்லத்தின்


வாசல் அரச கட்டிடம்
எங்கும் காற்றுடன் சண்டையிடும்
மலேசியா சுதந்திரக் கொடி
திறந்த இல்ல உபசரிப்பு மக்கள் வாய்
மலர்ந்து சிரிப்பு நாளும் உழைக்கும்
தொழிலாளிக்கு விடுமுறை தினம்.

ஒலி அலையில் தொடரும்


வாழ்த்து மழை
காணும் நேர்காணல்
அனைத்தும் நினைவின் அலை
தொலைக்காட்சி பெட்டியிலே
வித விதமான
சுதந்திரத்தை மையப்படுத்தும் சினிமா
இடையிடையே மெர்டேகா என்னும் ஓசை எழும்.

வானூர்தியும் மலேசியா சுதந்திரத்தின்


அடையாளச் சின்னமான வண்ணக் கொடியை
சுமந்த படி குறுக்கும் நெடுக்கும் பறக்க
பாதை எங்கும் படை வீரர்கள் பரவசத்தோடு
அணி வகுக்க மக்கள் மனம் மகிழ்ச்சி கொடுக்கும்.

படை வீரர்களின் சாகாச விளையாட்டும்


துப்பாக்கி சத்தமும் இராணுவ வாகனத்தின்
ஊர்வலமும் வீரர்களுக்கான மரியாதை
அணிவகுப்பும் பார்பப் ோரை பிரமிக்க வைக்கும்.

மகிழ்வோடு முழுமையான சுதந்திரத்தை


அனுபவிக்கும் மலேசியா மக்களை சுமந்து
உள்ள மண்ணில் நாமும் உண்டு வாழ்த்துவோம்
மனம் திறந்து நல் ஆட்சி சிறக்கட்டும்
நாட்டின் புகழ் பெருகட்டும்
மூவினத்தோரும் முத்தாக ஜொளிக்கட்டும்
அன்பு நிலைக்கட்டும் ஒற்றுமையே பலம் ஒன்றாகவே
எப்போதும் உறவோடு வாழட்டும் என்று வாழ்த்தோவோம்

மெர்டேகா மெர்டேகா மெர்டேகா.


இன்று சுதந்திர தினத்தை வரவேற்கும்
மலேசிய நண்பர்கள் அனைவருக்கும்
எனது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

சுதந்திர ஒற்றுமை

காடுகள் அழித்தோம்… கன்றுகள் நட்டோம்…

சாலைகள் போட்டோம்… சோலைகள் அமைத்தோம்…


மூவினம் சேர்ந்து கடும் முயற்சிகள் செய்தோம்…

முடிவில் கிடைத்ததே சுதந்திரம் அன்று …

நாடும் வளர்ந்தது…. நகரம் பெருகியது….

ஊரும் மெச்சியது…. உலகம் போற்றியது….

பார் போற்றும் பெருமை தேசமாய்

மலேசியா இன்று வளர்ந்து நிற்கின்றது….

சுதந்திரம்…

இனத்திற்கு அப்பாற்பட்டது…

மொழிக்கு அப்பாற்பட்டது…

மதத்திற்கு அப்பாற்பட்டது…

மனிதநேயத்தோடு பிணைந்தது…

இன்றைய நாளில்…

ஒற்றுமை எங்கும் நிலவி…

ஒருவருக்கொருவர் செய்வோம் உதவி…

மெர்டேகா
மலேசியா சுதந்திரத்தை
நேசித்துக் கொண்டு இருக்கும்
மூவின மக்களும் கூடி நின்று
சுவாசிக்கும் நாள் முப்பத்தியோராம் திகதி.

ஒன்றாக இணையும் கரங்கள்


அன்றைய நாள்
ஒன்றென ஒலிக்கும் குரல்கள்
ஒரே மொழி
மெர்டேகா மெர்டேகா மெர்டேகா என்னும் ஒலி.

பொது இடங்கள் இல்லத்தின் வாசல்


அரச கட்டிடம் எங்கும்
காற்றுடன் சண்டையிடும்
மலேசியா சுதந்திரக் கொடி

மகிழ்வோடு முழுமையான சுதந்திரத்தை


அனுபவிக்கும் மலேசியா
மக்களைச் சுமந்து
உள்ள மண்ணில் நாமும் உண்டு
வாழ்த்துவோம் மனம் திறந்து

நல் ஆட்சி சிறக்கட்டும்


நாட்டின் புகழ் பெருகட்டும்
மூவினத்தோரும் முத்தாக ஜொளிக்கட்டும்
அன்பு நிலைக்கட்டும்

ஒற்றுமையே பலம்
ஒன்றாகவே எப்போதும்
உறவோடு வாழட்டும்
என்று வாழ்த்துவோம்
மெர்டேகா மெர்டேகா மெர்டேகா.

You might also like