இடுபணி 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

இடுபணி 1

பல்வேறு ஊடகங்களில் வழி காணப்படும் புணரியல் விதி மீறலை பட்டியலிட்டு பகுத்தாய்ந்து


200 சொற்களில் எழுதுக. .

1.0

காலத்தின் பரிணாமத்தின் எழுத்தாணியோடு தொடங்கிய எழுத்துகள் இன்று ஊடகம் வரை


பரவியுள்ளது மார்தட்டி பெருமைப்பட வேண்டிய புலனமே. தொழில்நுட்பம் வானளவு வளர்ந்தும்
நவீனம் ஆகாயத்தைத் தாண்டி சென்றெனினும் தமிழின் நிலையானது இன்னமும் நிலையாக இல்லை.
ஊடகங்களில் வழி தமிழ் புணரியல் பிழைகள் இன்னமும் இருந்து வருவது தான் இதற்கு காரணம்.
இதனை அடையாளங்கண்டு அதற்கான நிவர்த்தி செய்யும் விதிகளை விளக்கந்தருவதே இச்செய்பணி
எனக்களித்த கட்டளை.

1.1 இடைச்சொல் புணரியல் ( அந்த, இந்த, எந்த என்ற சுட்டு வலிமிகுந்து புணரும் )

என்ற தொடர்களில் புணரியல் விதி மீறல் தவறு நிகழ்ந்துள்ளது என்பதை உணரலாம். இந்த என்ற
சொல்லுக்குப் பின் க், ஆகிய வல்லெழுத்து வந்தும் வலிமிகவில்லை. பெயரெச்சம் சக வல்லினத்தை
மொழி முதலாகக் கொண்ட சொற்கள் என்ற பகுதியினில் ஒரு விதிதனில் அந்த, இந்த, எந்த ஆகிய
பெயரெச்சங்களின் பின் வல்லொற்று மிகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே வருமொழி முதலுடன்
இப்பெயரெச்சங்கள் இணைந்திடும் போது ‘க்’ என்ற ஒற்றுகள் மிகுந்திருந்திருக்க வேண்டும். அதாவது
‘இந்தக் கொடுமை’ எழுதிய படி இருந்திருப்பதே மிகச் சரி.

1.2 இரண்டாம் வேற்றுமை உருபு புணரியல்

இதில் ( மனிதர்கள் + ஐ ) என யாவும் இரண்டாம் வேற்றுமை உருபோடு சேர்ந்து வருகிறது.


நிதர்சனத்தினில் இவற்றிற்கெல்லாம் ஒற்று மிகுந்திருத்தல் மிகவும் அவசியம். நிலைமொழி ஈற்றினில்
‘ஐ’யிருந்து வருமொழியினது வல்லெழுத்துகளுடன் சேர்ந்திடும் தருவாயில் ஆங்கே வல்லொற்றான ‘ச்’
மிகுந்திருந்து வரும். மனிதர்களைச் சந்தித்து என்பதே சரி.

1.3 ( இ, ஈ, ஐ ஈறுகள் + உயிர் ) = ய்


நிலைமொழி இறுதியில் இ, ஈ, ஐ ஈறுகள் இருந்தால் இடையில் யகர ( ய் ) உடம்படுமெய் வந்து
அடுத்துவரும் உயிருடன் சேர்ந்து உயிர்மெய் ஆகிவிடும். இதில் தீ அணைப்பு என்ற தொடர் தீ + ய்
+ அணைப்பு = தீயணைப்பு என்று இடம் பெற வேண்டும். ( ஈ + அ ) ஈ ஈறு யகர உடம்படு மெய்
பெற்றது.

1.4 மெய் + உயிர் = உயிர்மெய்

புணரியலில் மெய் + உயிர் புணர்ச்சியில், நிலைமொழி ஈற்று மெய்கள், வருமொழி முதல்


உயிருடன் சேர்ந்து இயல்பாக உயிர்மெய்யாகிப் புணருதல் வேண்டும். இதில் தமிழ் உணர்வு என்பது
தவறுதலாகப் புணர்ந்துள்ளது. தமிழ் ( மெய் ) + ( உயிர் ) உணர்வு = தமிழுணர்வு என்று புணந்த்திருக்க
வேண்டும்.

1.5 வினையடை + வல்லெழுத்து

இதில் சிறப்பாக என்ற சொல்லுக்குப் பின் ஒற்று வந்திருக்க வேண்டும். இலக்கணம் செதுக்கிய
விதியின்படி, தொடர் அடைகளின் பின்னும் இணைப்பிடைச் சொற்களின் பின்னும் வல்லினம்
வருமொழியாக இருப்பின் அச்சொல்லமைப்புகேற்ப சந்தி விதி அமையும். இச்சொற்றொடரில்
காணப்பெறும் ‘சிறப்பாக’ எனும் சொல் ஒரு வினையடை. அதனுடைய ஈற்றில் ‘ஆக’ என்ற உருபின்
பின்னே ‘செ’ என்ற வல்லெழுத்து வருமொழியின் முதல் எழுத்தாக விளங்கி நிற்பதால் அச்சொல்லோடு
‘ச்’ என்ற ஒற்று மிகுந்திருந்து வரும். ‘சிறப்பாக செய்து’ என்பதற்கு பதிலாக ‘சிறப்பாகச் செய்து’ என்று
ஒற்று மிகுந்து வருவதே இலக்கணம் நமகிட்ட ஒழுங்குமுறையான பாதை.

You might also like