Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

திருவண்ணா ”மலை” குறியீடும் தானக்கல்வெட்டுகளும்

நடுநாட்டுத் தலமான திருவண்ணாமலை இன்று மாபெறும் ஆன்மீ க


நகராகவே அறியப்படுகிறது. இவ்வூரில் தற்போது நடைபெறும் கிரிவலமும்
தீபத்திருவிழாவும் திருவண்ணாமலையின் வரலாற்றையும் இவ்வூரில் எழுந்த
இலக்கியமான அருணகிரிநாதரின் திருப்புகழையும் சற்றே பின்னுக்குத் தள்ளின.
திருவண்ணாமலையின் வரலாற்றை திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பாடலில்
தொடங்கி 20 ஆம் நூற்றாண்டு வரை நடைபெறற சிறப்பு மிக்க நிகழ்வுகள் மூலம்
வரையறுக்கலாம்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் முற்கால
சோழரான முதலாம் ஆதித்தியன் முதல், காடவராயர், வாணர்கள்,
சம்புவராயர்கள், பாண்டியர்கள், விஜயநகர நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள்,
சிற்றரசர்களான மலையமான்கள், பிரிதிவிகங்கரையர்கள், தெலுங்கு சோழர்கள்,
நகரத்தார் வரை சுமார் 500 கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில்
விளக்குதானம், நிலதானம், திருவிழா நடத்த கொடை உள்ளிட்ட பல்வேறு
நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
திருவண்ணாமலை கோயிக்கு தானம் வழங்கும் கல்வெட்டுகள்
திருக்கோயில் வளாகத்தில் மட்டுமில்லாது திருவண்ணாமலையைச் சுற்றிலும்
பல்வேறு ஊர்களில் காணக்கிடைக்கின்றன. திருவண்ணாமலையைச் சுற்றி சுமார்
30 கிமி. சுற்றளவில் பலகைக்கல்லிலும், பாறைகளிலும், கோயில்களிலும் சுமார்
30 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுகளில் இந்தியத்
தொல்லியல் ஆய்வுத்துறை சில கல்வெட்டுகளை பதிவுசெய்துள்ளது.
திருவண்ணாமைலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இது வரை 15
கல்வெட்டுகளை படியெடுத்து பதிவு செய்துள்ளது. இக்கல்வெட்டுகளில்
சிறப்பம்சமாக விளங்குவது கல்வெட்டில் முகப்பிலோ, பக்கவாட்டிலோ அல்லது
பின்பக்கதிலோ திருவண்ணாமலையின் உருவத்தை கோட்டுருவாமாக
செதுக்கியிருப்பது ஆகும். கல்வெட்டை பார்த்த உடனே இக்கல்வெட்டு
திருவண்ணாமலை கோயிலுக்கு கொடை அளிக்கும் கல்வெட்டு என எளிதில்
உணரத்தக்கதாக இந்த மலை சிற்பம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை
இயல்பாக ஒரு முக்கோண அமைப்பிலும் பக்க வாட்டில் இரண்டு இடங்களில்
சற்று உயர்ந்தும் காணப்படும். இதை அப்படி படம்பிடித்தார் போல
கல்வெட்டுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது வியப்புக்குரியதாககும்.
திருவண்ணாமலையின் உருவத்தை கல்வெட்டில் சிற்பமாக வடிப்பதற்கு
காரணங்களை ஆராயும் போது, “மலை” உருவம் பொறிக்கப்பட்டால் அது ஒரு
தெய்வகத்தன்மை
ீ அடையும் என்பதற்காகவோ அல்லது மக்கள் அக்கல்வெட்டை
எந்நாளும் பாதுகாப்பார்கள் என்றோ அக்காலத்தில் நினைத்து செய்திருக்கலாம்.
மேலும் மலையே சிவனாக வழிபடும் வழக்கம் அந்நாளிலிருந்தே மக்களிடம்
இருந்ததை இது சுட்டிக்காட்டுவதாகவும் கொள்ளலாம்.
திருவண்ணாமலையை சிற்பமாக கொண்ட கல்வெட்டுகளில் காலத்தால்
முந்தையதாக செங்கம் வட்டம் வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள
பாறையில் உள்ள சுந்தர பாண்டியன் கல்வெட்டைக் கூறலாம். இக்கல்வெட்டில்
சூரியன், சந்திரன், விளக்கு, சூலம் போன்ற
வடிவத்துடன் முக்கோண அமைப்பில்
திருவண்ணாமலையும் இடம்பெற்றுள்ளது.
இந்த முறை விஜயநகர கல்வெட்டுகளில்
அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ள. இது
போல கல்வெட்டுகளில் மலையின்
உருவம் பொறித்தது போல வேறு
ஊர்களில் இது ஊருக்கான குறியீடுகள்
கொண்ட கல்வெட்டுகள் காண்பதரிது. இது
திருவண்ணாமலைக்கேயான சிறப்பு
குறியீடாகும். இக்குறியீடு 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை
கிடைக்கும் கல்வெட்டுகளில் இடம்பெறுவதால் திருவண்ணாமலை பகுதி
மக்களுக்கு அம்மலையின் மீ தான தாக்கம் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளதும,
மலையே சிவனாக வழிபடும் வழக்கத்திற்கு இது ஒரு காரணமாகவும்
இருந்துள்ளதை அறியலாம்.
அண்மையில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
செங்கம் வட்டம் வாய்விடாந்தாங்கலில் கண்டெடுத்த சுந்தர பாண்டியன்
கல்வெட்டின் வாசகம் வருமாறு-

1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மர் திருபுவன சக்கரவர்த்திகள் சுந்தர


2. பாண்டிய தேவற்கு யாண்டு 13 ஆவது ஆடையூர் நாடாழ்வா
3. ரும் படுவூர் பற்று நாட்டவரும் இனக்குந்தத் மடப்புறமாக தந்த
4. •••• மைசாற்றுப் பெருவழிக்கு மேற்கு குளக்கரபா
5. டி வடக்கு தெற்கு வதெ விட்ட வட்டக் கொல்லைக்கு தென்மருவுக்கு
வடக்கு
6. •••• கிழக்கு தெற்கு உட்பட நாற்பாற்கொல்லையும்
7. நன்சை புன்சையும் இன் அண்ணாமலை உடைய நாயனார்க்கு பாதியும்
8. சோமபிள்ளையார்க்கு பாதியும் தேவதானமாக குடுத்தேந் நம்பியார்
9. னேன் இத்தந்மத்தை இலங்கணம் பேசினவந் கெங்கை
10. கரையிலே காராம்பசுவை கொன்ற பாவங்கொள்வான் பரமேசுர இலக்சை.

திருவண்ணாமலை உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்


திருவண்ணாமலை அடுத்த கோசாலை, பவித்திரம், வேளாநந்தல், பொலக்குணம்,
காங்கேயநல்லூர், புதுப்பாளையம், காப்பலூர், வாய்விடாந்தாங்கல்,
பெரியகோலாப்பாடி, சின்னகல்தாம்பாடி, மல்லவாடி, சதகுப்பம், பனை ஓலைப்பாடி,
வேட்டவலம் உள்ளிட்ட பல ஊர்கள் ஆகும்.

ச.பாலமுருகன்,
செயலர்,
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்,
9047578421
bala606902@gmail.com
(நன்றி- முனைவர் சுதாகர், சத்தியபிரகாஷ்)

You might also like