Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

RASHMIKA MURUGAN ( 1 ADIRATNA)

கணினியின் தேவை

கணினியின் தேவை தற்போதைய காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. அரசு அலுவலகம்


தனியார் அலுவலகம் வங்கிகள் கல்லூரிகள் பள்ளிகள் என கணினி இல்லாத இடமே
தற்போது இல்லை. மனித சமூகம் கணினியை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைத்து பல
வருடங்கள் ஆகிவிட்டன. மனிதனுக்கு உதவும் வகையில் வேளாண்மை, தொழில்நுட்பவியல்,
பொறியியல், மருத்துவம், ராணுவம், வானியல் ஆராய்ச்சி என அனைத்து இடங்களிலும்
கணினி தனது சேவையை செய்கிறது.

 மனித சமூகம் தகவல்களை சேமிக்க தொடங்கிய நாள் முதலாக கணினியின் ஆதிக்கம்


தொடங்கியது. சிறிய அளவில் தொடங்கிய கணினியின் வளர்ச்சி தற்போது விஸ்வரூபம்
எடுத்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்னதாக இருந்த கணினியை விட தற்போது ஆயிரம்
மடங்கு சக்தி வாய்ந்த கணினி நமது கைகளில் தவழ்கிறது. 

வேளாண்மை துறையில் சென்ற ஆண்டின் வளர்ச்சி புதிய வேளாண் முயற்சிகள்


போன்றவற்றை இணையத்தில் பகிரவும் முந்தைய காலங்களில் ஏற்பட்ட வேளாண் வளர்ச்சி
மற்றும் தாக்கங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் கணினி
பயன்படுத்தப்படுகிறது அரசு. தற்சமயம் கணினி வழியாக வேளாண் பாடங்களை
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கற்பிக்கிறது. கணினியின் உதவி கொண்டு வேளாண்மை
வளர்ச்சி என்பது தற்போது தேசத்திற்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

மருத்துவத்துறையில் கணினியின் பங்கு மேலும் மேலும் அதிகரித்து கொண்டே உள்ளது


எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற மருத்துவ வேலைகள் தற்போது கணினியின் உதவியுடன் மிக
வேகமாக நடைபெறுகிறது. மருத்துவருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மருந்து
உட்கொள்ளும் அவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மருந்துகள் பற்றிய
ஆராய்ச்சி மற்றும் மருந்துகளை பற்றிய விவரங்களை கணினி மூலமாக நாம் தெரிந்து
கொள்ளலாம். புத்தம் புதிய வியாதிகள் வரும் பொழுது அவற்றை எதிர்கொள்ளும் திறனை
கணினி மற்றும் இணையம் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்துகிறது அரசு. 2019 ஆம்
ஆண்டு ஏற்பட்ட கோரோனோ பெரும் தொற்று பற்றிய ஆய்வுகளை உலக அளவில்
தெரிய செய்தது இணையமே. இணையம் மூலமாகவே நோய்களை கட்டுப்படுத்தும்
முயற்சிகளில் அரசு அதிகம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது

இராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் கணினியின் பங்கு இன்றியமையாததாக


மாறிவிட்டது . இன்றைய காலகட்டங்களில் ராணுவத் தளவாடங்கள் அனைத்தும்
கணினியின் புதிய ஏற்பாட்டில் இயங்குகின்றன . துல்லியமாக தாக்கும் காலங்களையும்
அதிவேக ஆயுதங்களையும் கணினியின் உதவி கொண்டே இயக்கமுடியும்.

 கணினி இல்லாமல் ஒரு தனி மனிதன் வாழ்வது கடினம் என்ற அளவுக்கு உயர்ந்த
கணினியால் நமக்கு ஏற்படும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. அதிக நேரம் கணினியை
உபயோகித்தல் தனிநபர் விஷயங்களை திருடுதல் போன்ற இணைய வழி குற்றங்கள்
நடக்கவே செய்கிறது. கணினி அறிவு பெற்ற ஒரு நபர் மூலம் இத்தகைய திருட்டுக்களை
தடுக்க முடியும் .வங்கிக் கணக்குகளில் இருந்து திருடப்படுவது சாதாரண ஒரு நிகழ்வாக
தற்சமயம் உள்ளது. இவற்றை கணினி மூலமாக ஆய்வுசெய்து தடுக்கமுடியும் இணையவழி
குற்றங்களை தடுக்க ஒவ்வொரு அரசும் அதிகமான பொருட்செலவு செய்கிறது 
கணினி ஒரு மின்னனு சாதனம் என்ற நிலைமாறி மனிதனுக்கு உதவும் இன்னொரு விலங்கு
என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. மிக சக்திவாய்ந்த குழப்பமான கணக்கு மற்றும் மனித
வேலைகளை சுலபமாக முடிப்பதற்கு கணினி நமக்கு உதவுகிறது மனித கலாச்சாரத்தில்
கணினி கண்டுபிடிப்பு அசுர வேக அறிவியல் வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைகிறது

SHAHANA RANEE A/P CHANDIRAN ( 1 SUJANA)

இயற்கையின் அழகு

“சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்


நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்”

“மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே


வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,


ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.


திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்.

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;


நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”

SHIVAANI A/P SILVARAJAH ( 4ST1 )


நான் உருவாக்க விரும்பும் ஒரு விநோத மிதிவண்டி

மிதிவண்டியை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், நான் ஒரு விநோத


மிதிவண்டியை உருவாக்க விரும்புகிறேன். அம்மிதி வண்டியைப் பற்றி அனைவரும்
பேசுவர். அம்மிதிவண்டிக்கு பல விநோததத் தன்மைகள் இருக்கும்.

நான் உருவாக்கும் மிதிவண்டிக்குப் பறக்கும் ஆற்றல் இருக்கும்.


அம்மிதிவண்டியைக் கொண்டு, நான் இந்த மலேசியத் திருநாடு முழுக்கும் பறந்து
செல்வேன். அம்மிதிவண்டியின் மூலம், நம் நாட்டின் அழகிய காட்சிகளைக் கண்டு
இரசிப்பேன்.
நான் உருவாக்கும் மிதிவண்டிக்கு உருமாறும் ஆற்றல் இருக்கும், அதனால்,
மிதிவண்டியை நிறுத்தி வைக்கும் பிரச்சினை ஏற்படாது. அதைச் சிறியதாக்கி என்
சட்டைப் பையிலோ
பென்சில் பெட்டியிலோ வைத்துக் கொள்வேன். அதனால், என் மிதிவண்டி களவு
போகாமல் பாதுகாப்பாக இருக்கும்.
என் விநோத மிதிவண்டி அதீத விரைவாகச் செல்லும் வகையில் உருவாக்குவேன்.
அதன் மூலம், நான் விரும்பிய இடங்களுக்கு விரைவாகச் சென்று வருவேன்.
மேலும், அம்மிதிவண்டி மிதிக்காமலேயே ஓடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.
அதனால், எவ்வளவு விரைவாகச் சென்றாலும் எனக்கு அசதி ஏற்படாது.

இன்னும் ஒரு மிக விநோதமான தன்மை கொண்ட மிதிவண்டியை நான்


உருவாக்குவேன். அது என்னவென்றால், நான் உருவாக்கும் மிதிவண்டி நீர் மேல்
ஓடும் தன்மை கொண்டிருக்கும். பினாங்கு, லங்காவி போன்ற எழில் கொஞ்சும்
தீவிகளுக்குப் படகின் மூலமோ கப்பல் மூலமோ சென்று வராமல், என் மிதிவண்டி
மூலமே சென்று வருவேன்.
இத்தகைய மிதிவண்டியை உருவாக்க நான் சிறந்து படிப்பேன். அறிவியல் பாடத்தில்
கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாகி இம்மிதிவண்டியை
உருவாக்குவேன்.

You might also like