Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 11

கௌரவத்தின் பெயரால்

சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திடீரென்று பெருகி வரும் "கௌரவக்


கொலைகளின்" எண்ணிக்கையானது, ஆணாதிக்கச் சாதிக் குழுக்களின்
தொன்றுதொட்டு வளர்ந்து வரும் செல்வாக்கினைத் தெளிவாகச் சுட்டிக்
காட்டுகிறது.

இளங்கோவன் ராஜசேகரன்
இந்த இழப்பு மிகவும் கொடூரமானது. ஏனெனில், 25 வயதான, ஒரு தலித் இளைஞர் என்.நந்தீஷ், மற்றும் 23 வயதான வன்னியார்
சமூகத்தைச் சேர்ந்த (மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி, அல்லது எம்.பி.சி), எஸ்.சுவாதி, ஆகிய இருவரும் ஆகஸ்ட் 15, 2018 அன்று ஒரு
கோவிலில் திருமணம் செய்து கொண்ட பின்னர் வாழ்க்கை மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்கள்
தங்களது திருமணத்தைப் பதிவு செய்தனர். இத்திருமணத்தினால் குடும்பக் கௌரவத்திற்குக் கேடு உண்டானதாகவும் சாதி புனிதத்தன்மை
மீறப்பட்டதாகவும் நம்பிய சுவதியின் குடும்பத்தினரிடமிருந்து, மிகுந்த விரோதப் போக்கைத் தைரியமாக எதிர்கொண்டது இந்த ஜோடி.
இத்தம்பதியினர், அவர்களது குடும்பங்கள் வாழ்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலகொண்டபள்ளி கிராமத்திலிருந்து சுமார் 50
கிலோமீட்டர் தொலைவிலும், கர்நாடகாவின் எல்லையிலுமுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓசூர் நகரில் குடியேற முடிவு செய்தனர்.

காவல்துறையினரிடமிருந்து பாதுகாப்புக் கோரியிருந்த இந்தத் தம்பதியினர் நவம்பர் 10 ஆம் தேதியன்று காணாமல் போயுள்ளனர்.
நந்தீஷின் சகோதரர் என்.சங்கர் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அக்காவல்நிலையம் "காணாமல் போனவர்கள்"
தொடர்பானதொரு வழக்கைப் பதிவு செய்து, தம்பதியினரின் புகைப்படங்களைத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலுள்ள மற்ற காவல்
நிலையங்களுக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்பியது. மூன்று நாட்களுக்குப் பிறகு, நந்தீஷின் உடல் சிவன சமுத்திர ஆற்றில் இருந்து
மீட்கப்பட்டதாகக் கர்நாடகாவில் உள்ள மாண்ட்யா காவல் நிலையத்திலிருந்து ஓசூர் காவல் நிலையத்திற்குச் செய்தி வந்தது. இரண்டு
நாட்களுக்குப் பிறகு, ஸ்வதியின் உடலும் மிகவும் அழுகிய நிலையில் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில், சுவதியின் குடும்பத்தினர் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துவைப்பதாக ஆசைவார்த்தையை


வாக்குறுதியளித்துத் தம்பதியரைத் தங்கள் கிராமத்திற்கு வரவைத்ததாகத் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் தம்பதியரைக்
கர்நாடகாவிற்கு அழைத்துச் சென்று அங்கு கழுத்தை நெரித்துக்கொலைச் செய்தபின் உடல்களை ஆற்றில் வீசியுள்ளனர். பெண்ணின்
உடலில் ஆழமான பல வெட்டுக் காயங்கள் இருந்தன. வெளிப்படையாக அவளை அவமானப்படுத்தும் முயற்சியாக அவளுடைய தலை
மொட்டையடிக்கப்பட்டிருந்தது, அவளது கருப்பை, அதில் மூன்று மாதக் கருவுடன் கிழிந்து கிடந்தது. இரண்டு உடல்களும்
கொடுமைப்படுத்தப்பட்டதின் அறிகுறிகளைக் கொண்டிருந்தன.

சுவதியின் தந்தை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் இந்தக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர். சீனிவாசனின்
உறவினர்களும் அவரது சாதியைச் சேர்ந்த மற்றவர்களும் சேர்ந்து அவரது மகளையும் அவளது கணவனையும் கொல்லும்படித் தூண்டி
அவருக்குத் தொல்லை கொடுத்ததாக சங்கர் ஃப்ரண்ட்லைனிடம் தெரிவித்தார். "நாங்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்
எடுத்தோம், ஆனால் அவர்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம்," என்று அவர் கூறினார். இந்தச் சம்பவம் "கௌரவக் கொலை"க்கான ஓர்
உதாரணம், இது சாதிக் கொலைகளுக்குப் பொதுவெளியில் கூறத்தகாத சொல்லிற்கான ஓர் அலங்காரச் சொல், இதில் சாதி மற்றும்
கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாகத் தங்களைக் கருதும் மக்கள் தங்கள் சாதிக்குப் புறத்தேத் திருமணம் செய்து கொள்ளும்
இளைஞர்களையும் பெண்களையும் கொல்வதன் மூலம் சுயசாதியினுள் திருமணத்தைத் தீவிரமாகப் பாதுகாக்கின்றனர். 2013 முதல்
தமிழ்நாட்டில் இதுபோன்ற கொலைகளில் ஓர் உச்சம், சுமார் 200 த் தொட்டது, இது வயதுவந்தோர் தங்களின் வாழ்க்கைத் துணையைத்
தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை விரும்பாத மற்றும் அடக்குகிற ஒரு சமூகத்தின் இருப்புக்குச் சான்றாகும்.

பட்டியல் சாதியான பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வேலுச்சாமி சங்கர் என்பவரது இதே போன்றதொரு கொலை 2016 ஆம்
ஆண்டில் தலைப்புச்செய்தியை எட்டியது. இடைநிலை அகமுடையார் சாதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவரைத் திருமணம்
செய்ததற்காகத் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை நகரில் பொதுமக்கள் முன்பே அவர் வெட்டிக்
கொல்லப்பட்டார். இந்தக் கொலைகள் சாதி அடிப்படையிலான வெறுப்பின் குறியீடாகவும், ஒரு காலத்தில் ஒரு முற்போக்கானச்
சமுதாயமாகக் கருதப்பட்ட கட்டமைப்பை சுக்குநூறாகக் கிழிக்க முற்படும் இடைக்கால நடைமுறைகளின் பரவலாகவும் இருக்கின்றன.
நாடு முழுவதுமான அனைத்துக் குற்றங்கள் குறித்த வருடாந்திர புள்ளிவிவரங்களை வழங்கும் அதிகாரபூர்வ நிறுவனமான தேசிய குற்ற
ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) 2017 முதல் இதுபோன்ற கொலைகள் குறித்த எந்தவொரு குறிப்பிட்டத் தகவலையும்
வெளியிடவில்லை, எனவே தமிழ்நாட்டில் இத்தகைய குற்றங்கள் குறித்த தரவுகளின் ஆதாரமாக மதுரையைச் சார்ந்த எவிடன்ஸ் போன்ற
அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மட்டுமே விளங்குகின்றன.

இந்த நிறுவனங்கள் காவல்துறை ஆவணங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ)
கேள்விகளுக்கான பதில்கள் போன்ற பல மூலங்களிலிருந்து தகவல்களைச் சேகரிக்கின்றன.
பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்ட மாநில அரசாங்கத் தகவல்கள்,
பெரும்பாலும் குறைந்தபட்ச ஓர் எண்ணிக்கையையே அளிக்கின்றன, எவிடன்ஸ் போன்ற
அமைப்புகள் வழங்கும் புள்ளிவிவரங்களுடன் எப்போதும் ஒத்துபோவதில்லை.

சாதிக் கற்பையும் குடும்பக் கௌரவத்தையையும் பாதுகாப்பதென்ற குற்றவாளிகளின்


கூற்றுக்கள் தாவாறாகத் திசைதிருப்பும் செயலாகும். குடும்பச் சொத்துக்களைப்
பாதுகாப்பதே உண்மையான நோக்கம். சாதியின் வெளிப்படையான காரணிகளைத் தவிர,
இந்தக் கொடூரமான கொலைகளுக்குப் பின்னால் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்துடன்
இணைக்கப்பட்ட பிற காரணங்களும் உள்ளன.
உச்சநீதிமன்றம், அதன் ஒரு தீர்ப்பில், கொலைகளுக்கு பல காரணங்களை அடையாளம் கண்டுள்ளது;

இளவரசன் மற்றும் திவ்யா, ஒரு கோப்பு புகைப்படம்.

துக்கத்துடன் உறவினர்கள் ஜூலை 4, 2013 அன்று தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில்
பாதையின் அருகே இறந்து கிடந்த நத்தம் காலனியைச் சேர்ந்த இளவராசன்.
மழுப்பலான நீதி
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. 2003 ஆம் ஆண்டில் ஒரு தலித் இளைஞர், எஸ். முருகேசன், மற்றும்
வன்னியார் சாதி பெண் டி. கண்ணகி ஆகிய கலப்புத்திருமண தம்பதிகளின் கொடூரமான கொலை வழக்கில் இந்தக் கூற்று
உண்மையாகிறது. இந்த குற்றம், தமிழ்நாட்டில் சாதி தடைகளைக் கடந்துச் செல்ல துணியும் இளம் தம்பதிகளை கொலை
செய்ய தயங்காத ஒரு சமூகத்தின் சீரழிவை வெளிப்படுத்தியது.

பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மேற்கு
தமிழ்நாட்டின் நகரமான உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வி.சங்கரைக் கொன்றவர்கள் குற்றம் நடந்த ஒரு
வருடத்திற்குள் தண்டிக்கப்பட்டாலும், முருகேசன்-கண்ணகி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில்
வெளியேறி, தண்டனை ஏதுமின்றி பெரும்பாலும் சகஜமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இந்த வழக்கை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல விருத்தாசலம் காவல்துறை தயக்கம் காட்டியபோது
பிரச்சினைகள் தொடங்கியது. இந்த வழக்கை "தற்கொலை" என்று போலீசார் முடிக்க விரும்புவதாக முருகேசனின்
உறவினர்கள் தெரிவித்தனர். முதல் தகவல் அறிக்கையைக் கூட (எஃப்.ஐ.ஆர்) பதிவதற்கு தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட
சேவைகள் இயக்கத்தின் ஆதரவுடன் மூத்த வழக்கறிஞர் பி.ரத்தினம் மற்றும் ஆர்வலர்கள் ஜி.சுகுமாரன் மற்றும் ஆர். பாபு
ஆகியோர் தலைமையில், வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் அடங்கிய ஒரு குழு தலையிட வேண்டியதாயிற்று.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 147, 302 மற்றும் 201 பிரிவுகளின் கீழ் எட்டு பேர் மீது விருத்தாசலம் போலீசார்
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். வியத்தகுவகையில், அது (போலீஸ்) பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தலித்தாக
இருந்தபோதிலும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், 1989 இன் விதிமுறைகளைப்
பயன்படுத்துவது அவசியம் என்று கருதவில்லை. அதற்கு பதிலாக, முருகேசனின் தந்தை சமிகண்ணு மற்றும் மாமா
அய்யசாமி ஆகிய இருவரோடு, தலித்துகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பெண்ணின் தந்தை சி. துரைசாமி
மற்றும் அவரது சகோதரர் மருதபாண்டியன் உள்ளிட்ட நான்கு வன்னியர்களையும் போலீசார் கைது செய்தனர்.

எஃப்.ஐ.ஆரில் தனது பெயர் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு சமிகண்ணு அதிர்ச்சியடைந்தார். தனது மகனின்


கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கடுமையாக மறுத்தார். தம்பதியர் இறக்கும் வரை தனது மகனின்
திருமணத்தைப் பற்றி தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.

கிராமத்தின் வன்னியார் சமூகத்தின் வன்முறை மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு பயந்து, தங்கள் நிலங்களையும்
வீடுகளையும் கைவிட்டு சமிகண்ணுவின் மொத்த குடும்பமும் வாழ்வாதாரத்திற்காக வேறொரு கிராமத்திற்கு
குடிபெயர்ந்தனர். அவர்கள் இன்னும் அங்குதான் வாழ்கிறார்கள்.

விருத்தாசலம் காவல்துறையினர் சக்திவாய்ந்த இந்து வன்னியச் சாதி குழுவிடம் விலைபோனதாகக் குற்றம் சாட்டினர்
முருகேசனுடன் நெருங்கிய நபர்கள். இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே காவல்துறையினர் தலித்துகளை
குற்றத்தில் சேர்த்ததாக ஃப்ரண்ட்லைனிடம் அவர்கள் தெரிவித்தனர். ஒரு சக்திவாய்ந்த சாதி அடிப்படையிலான அரசியல்
ஆதரவு திரட்டும் பிரிவினர், குற்றவாளிகளை காப்பாற்ற ஆதரவளித்ததாக அவர்கள் கூறினர். ஆனால் ரத்தினம் மற்றும்
அவரது குழுவின் ஆலோசனையின் பேரில், மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை கோரி சமிக்கண்ணு
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அணுகினார், அதற்கு நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

சிபிஐ தனது விசாரணையை முடிக்க மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டு, எஸ்.சி.க்கள் மற்றும் எஸ்.டி.க்கள்
(வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்), 1989 இன் விதிமுறைகளை அனுசரித்து கடலூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு
புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சிபிஐ அதன் குற்றப்பத்திரிகையிலிருந்து சாமிகண்ணை விடுவித்து, இந்த
குற்றத்தில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாகக் கூறி அய்யசாமி மற்றும் மற்றொரு தலித்தின்
பெயர்களை நீக்கவில்லை. சிபிஐ மொத்தம் 15 நபர்களின் பெயர்களை குறிப்பிட்டது, அவர்களில் 11 பேர் வன்னியர்கள்,
இரண்டு பேர் முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த விருத்தாசலம் காவல் நிலைய ஊழியர்கள் மற்றும் இருவர் தலித்துகள்.
இந்த வழக்கு விசாரனை கடலூரில் சமீபத்தில் நிறுவப்பட்ட S.C./S.T சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது, மேலும்
விரைவான தீர்ப்பை வழங்குவற்கு உறுதியளிக்கின்றது.

முருகேசன் மற்றும் கண்ணகி இருவரும் அவர்களின் இருபதுகளின் ஆரம்பத்திலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள
புத்துக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர், அவர்கள் சிதம்பரத்தின் அண்ணாமலை
பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தபோது காதலிக்கத் தொடங்கினர். கண்ணகியின் குடும்பத்தாரிடமிருந்து எதிர்ப்பு
வருமோ என்ற அச்சத்தில் அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்தை மே 5, 2003
அன்று கடலூரில் பதிவு செய்தனர். முருகேசன் வேதியியல் பொறியியலில் பட்டதாரி, கண்ணகி வர்த்தகபடிப்பில் பட்டதாரி,
கூடுதளாக கூட்டுறவுத்துறையில் டிப்ளோமாவும் பெற்றிருந்தார்.

முருகேசனுக்கு வேலை கிடைக்கும் வரை அத்தம்பதியினர் தங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருக்க முடிவு
செய்தனர். கண்ணகி முருகேசனின் உறவினர் ஒருவரின் குடும்பத்துடன் வாழ அனுப்பப்பட்டார். ஒரு மாதத்திற்குள்
அவருக்கு திருப்பூரில் வேலை கிடைத்தது, இருவரும் சேர்ந்து ஒரு வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தனர். அந்த
காலகட்டத்தில் தான் கொலை செய்யப்பட்டனர்.
கன்னகியின் குடும்ப உறுப்பினர்கள், அப்போது பஞ்சாயத்துத் தலைவராக இருந்த அவரது தந்தை துரைசாமி, அவரது
சகோதரர் மாருதபாண்டியன், ரங்கசாமி என்ற நெருங்கிய உறவினர் மற்றும் பலர், ஜூலை 7, 2003 அன்று முருகேசன்
தனது வீட்டிலிருந்த சில ஆவணங்களை எடுக்க வந்தபோது பிடித்துச் செய்தனர். பின்னர், கன்னகியையும் அந்த கும்பல்
கண்டுபிடித்தது.

பின்னர் அந்த காட்டுமிராண்டித்தனமான குற்றம் நடந்தது. 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி அதிகாலை
கிராமப்புறத்திற்கு அருகேயுள்ள போட்டால் காட்டில் வைத்து பலர் முன்னிலையில் தம்பதியினர் விஷம் குடிக்க
கட்டாயப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன மேலும் அவர்களிருவரும் தற்கொலை செய்து
கொண்டதாக செய்தி பரவியது. ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகு, ஒரு உள்ளூர் தமிழ் பத்திரிகை கொடூரமான
குற்றத்தை விரிவாக அம்பலப்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்த பிரச்சினையை கையிலெடுத்துக்
கொண்டது. விடுத்தலை சிறுத்தைகள் கட்சியும் இந்த பிரச்சினையை எழுப்பியது. நான்கு வன்னியர்கள் மற்றும் நான்கு
தலித்துகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் (குற்ற எண் 356/2003) பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூன்று
வாரங்களுக்குள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்த வழக்கறிஞர் பி.கே. இளவரசன், சிபிஐ விசாரணை
அதிகாரிகள் “ஊழல்வாதிகள் மற்றும் தந்திரமானவர்கள்” என்று கூறினர், ஏனெனில் சி.பி.ஐ, இந்த கொடூரமான
சம்பவத்திற்கு, நேரில் கண்ட சாட்சியாக முருகேசனின் மாற்றாந்தாய் சின்னபிள்ளையை குறிப்பிடவில்லை.

இந்த மனு "தலித் அரசியல் கட்சியின் தலைவரின் நாகரீகமற்ற தலையீடு" குறித்து கவனத்தை ஈர்த்தது, அவர் குற்றம்
சாட்டப்பட்டவர்கள் வழங்கும் பெரும் தொகையை ஏற்றுக்கொள்ளுமாறு சமிக்கண்ணுக்கு அழுத்தம் கொடுத்தார். மேலும்,
கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று மனு கோரிக்கை
வைத்தது.

ஆனால் இந்த வழக்கில் சின்னப்பிள்ளையைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து சாட்சிகளும் விரோதமாக


மாறிவிட்டனர். சாட்சிகளில் ஒருவரான எம்.செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டார். "புற சக்திகளின் தலையீட்டிற்கு
எதிராக நாங்கள் ஒரு வலுவான வழக்கை உருவாக்க வேண்டும். குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு
அப்பாவி தலித்துகளை நாங்கள் காப்பாற்ற வேண்டும், முருகேசன் மற்றும் கண்ணகியின் மரணங்களுக்கு நீதி
கிடைக்கப்பெற வேண்டும்” என்று ஆர்வலர் சுகுமாரன் கூறினார்.

கடலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது.

இளங்கோவன் ராஜசேகரன்

அதில் திருமணத்திற்கு வெளியே கன்னித்தன்மை இழப்பு, குடும்பத்தினர்களால் அங்கீகரிக்கப்படாத உறவுகள், குடும்பத்தினர்கள்


ஏற்பாடு செய்த திருமணத்தை ஏற்க மறுத்தல், பெண்களின் விவாகரத்து, குழந்தைகளின் பொறுப்பேற்றல் மற்றும் கற்பழிப்பு ஆகியவை
அவற்றில் அடங்கும். இந்த பிரச்சினைகள் அனைத்தும் பெண்களுடன் தொடர்புடையவை.

இத்தகைய குற்றங்களின் நீண்ட வரலாற்றில் ஒரு சமீபத்திய நிகழ்வு தலித் உட்பிரிவினரிடையேயும் நடைமுறையில் இருக்கிறது.
இத்தகைய கொலைகள் நிகழ்வது முற்றிலும் புதியதல்ல, ஆனால் அவை இன்று நிகழும் அளவாக்கம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு எஸ்.சி. உட்பிரிவுகளைச் சேர்ந்த ஒரு இளம் தலித் தம்பதியின் சமீபத்திய கொலையானது, இந்த
குழுக்களிடையே மேலாதிக்கவாத மனப்பாங்குகளின் இரக்கமற்ற வெளிப்பாடாக இதைக் கண்ட சமூகவியலாளர்களை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கொளத்தூர் அருகேயுள்ள ஒரு


உப்பளத்தில், தினசரி கூலித் தொழிலாளர்களான பரையர் சமூகத்தைச் சேர்ந்த
டி.சோலைராஜ் (24), மற்றும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஏ.பெச்சியம்மாள் என்ற
ஜோதி (24) இடையே பூத்த காதலை எடுத்துக்கொள்வோம். இருவரும் தலித்
உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். சோலைராஜின் மருமகன் ஆனந்தராஜ்
ஃப்ரண்ட்லைனிடம் தனது மாமா பெச்சியம்மாளை ஏப்ரல் 15, 2019 அன்று ஒரு
கோவிலில் திருமணம் செய்து கொண்டார் என்றும், இந்த ஜோடி சோலைராஜின்
பெற்றோருடன் கொளத்தூரில் வசித்து வந்ததாகவும் கூறினார். பெண்ணின்
குடும்பம் திருமணத்திற்கு எதிராக இருந்தது, ஏனெனில் அவர்கள் பறையர்கள்
பள்ளர்களை விட தாழ்ந்தவர்கள் என்று கருதினர். ஜூலை 3, 2019 அன்று,
தம்பதியினர் மின் தடை காரணமாக தங்கள் வீட்டிற்கு வெளியே
தூங்கிக்கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் இருவரும் இறந்து கிடந்தனர்.
அந்தப் பெண்ணின் தலை நசுக்கப்பட்டும் இடது கை துண்டிக்கப்பட்டுமிருந்தது.

இந்த ஜோடி முன்பு கொளத்தூர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக


புகார் அளித்து பாதுகாப்பு கோரியிருந்தது. அந்த பெண்ணின் தந்தை அழகர்,
காவல்துறையிடம், ஒரு திமிர்த்தனமான ஒப்புதலில் கூசாமல் தானே அந்த
கொலைகளைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். இறக்கும் போது கர்ப்பமாக இருந்த
தனது மகளை, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் "அகௌரவத்தை"
உண்டாக்கியதற்காக, "மன்னிக்க" அவர் விரும்பவில்லை. "தனது மகள் ஒரு
நந்திஷுடன் ஸ்வாதி - கோப்பு புகைப்படம்
பரையர் இளைஞரை திருமணம் செய்துகொண்டது தனக்கு அவமானம் என்று அவர் போலீசாரிடம் கூறினார்," என்றார்
ஆனந்தராஜ்.தமிழ்நாட்டில் “கெளரவக் கொலைகள்” என்பது சாதிகள் மற்றும் மதங்கள் கடந்த கலப்புத் திருமணங்களுக்கு மட்டுமல்லை.

அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தில், திருநெல்வேலியில் நங்குநேரிக்கு அருகிலுள்ள மருகல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது
நம்பிராஜன் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை 25 நவம்பர் 2019 அன்று திருமணம் செய்ததற்காக கொல்லப்பட்டதோடு
அவரது தலையும் வெட்டப்பட்டது. பையன், பெண் இருவரும் இடைநிலை மரவர் சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் பையனின்
குடும்பத்தை விட பெண்ணின் குடும்பம் வசதியானதாக இருந்தது. பையன் ஏழையாக இருந்ததால் பெண்னின் சகோதரர்கள் அவர்களின்
திருமணம் குறித்து அதிருப்தி அடைந்தனர் என்றது கொலை தொடர்பான உண்மை கண்டறியும் எவிடென்ஸ்‌ வெளியிடப்பட்ட
அறிக்கை.

நவம்பர் 18, 2019 அன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு தலித் இளைஞரை திருமணம் செய்ய முடிவு
செய்ததற்காக ஒரு சாதி இந்து தாய் தனது மகளுக்கு தீ வைத்தார். சிறுமி ஒரு வாரத்தில் 18 வயதை எட்டவிருந்ததால் தம்பதியினர்
திருமணத்தை ஒத்திவைத்தனர். இருப்பினும், அவர் மருத்துவமனையில் இறந்தார்.

கௌரவ-அடிப்படையிலான வன்முறை (HBV) தொடர்பாக பணிபுரியும் சர்வதேச டிஜிட்டல் வள ஆதார மையமான, கௌரவ-
அடிப்படையிலான வன்முறை விழிப்புணர்வு வலையமைப்பின் (ஹானர்-பேஸ்டு வாயலன்ஸ் அவேர்னேஸ் நெட்வொர்க் (HBVAN)),
“தனிநபர்களின், முக்கியமாக பெண்களின், நடத்தைகளைக் கட்டுப்படுத்தி, கௌரவத்தைப் பாதுகாக்க”, சமூக குழுக்களின்
குடும்பங்களுக்குள் “கௌரவக் கொலைகள்” செய்யப்படுகின்றன என்ற கூற்றை இந்த கொலைகள் நிரூபிக்கின்றன

சாதி-ஆணாதிக்கம் இடைவினை
இந்த குற்றங்களின் மூலத்தில் இருப்பது கடுமையான, ஆணாதிக்க மற்றும் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் ஆகும், அவை தன்
இனத்திற்கு வெளியே மணம் புரியத்தடையை வைராக்கியத்துடன் பாதுகாக்கின்றன, மேலும் பெண்களை அடிமைப்பண்டங்களாக
கருதுவதைத் தொடர்கின்றன.

பெண்களின் உடல்கள் மற்றும் மனங்களின் மீதான சமூக மற்றும் கலாச்சாரக் கட்டுப்பாடுகள்

இத்தகைய குற்றங்களின் நீண்ட வரலாற்றில்


ஒரு சமீபத்திய நிகழ்வு தலித் உட்பிரிவினர்
இடையேயும் இது நடைமுறையில் இருப்பது
தான். இன்று அவை நிகழும் அளவு
அதிர்ச்சியளிக்கிறது.
கௌரவம் மற்றும் கற்பு என்ற கருத்துகளின் அடிப்படையில் பெண் வெறுப்பு மற்றும்
வரலாற்று இடைக்கால (பழங்கால) நடைமுறைகளுக்கு ஏற்ப அடிபணிந்து
ஒத்துப்போகும் மனநிலைக்கு அவர்களை நிர்பந்திக்கிறது. இந்த கட்டுப்பாடுகளிலிருந்து
விடுபடத் துணிந்த இளம் பெண்களைத் தண்டிப்பது எப்போதும் சமூகம் மற்றும்
குடும்பங்களின் கூட்டு முடிவு.

தலித்துகளிடமும் இதேபோன்ற நிர்பந்தித்தல் நடைபெறுகிறது. இந்த சிக்கலான


நிகழ்வைப் புரிந்துகொள்ள, தமிழ் சமுதாயத்தின் நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க மற்றும்
சாதிவெறி மனநிலையையும், அது எவ்வாறு பல வழிகளில் கூட்டாக இயங்குகிறது
என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் பிறப்பு அடிப்படையிலான
பரம்பரைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட சமூக படிநிலையோடு, பெண் பாலியல்பு
மற்றும் இந்து கூட்டுக் குடும்ப சொத்துக்களின் மீதுமான ஆணாதிக்க கட்டுப்பாட்டிற்கு
இணங்கக்கூடிய வகையிலும் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அமைப்பு சாதிக்கு வெளியே திருமணம் செய்வதை தடை செய்கிறது.


சாதி-இந்து குழுக்களிலும் குழுக்களிடையேயும், அதாவது - பிற்படுத்தப்பட்ட
சாதிகளுக்குள்ளும் (பி.சி), மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளும் (எம்.பி.சி)
மற்றும் இரு சாதி குழுக்களுக்கிடையேயும் அடிக்கடி நடக்கும் மிருகத்தனமான
KAUSALYA SHANKAR with Amruthavarshini, another
victim, in Nalgonda in Telangana on September 21, கொலைகளை சுட்டிக்காட்டி இந்த அமைப்பை விளக்குகிறார் எவிடென்சின் நிர்வாக
2018. இயக்குனர், ஏ. கதிர்.

"கொலைகளில் பொருளாதார காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும்


சொத்துக்கள் குடும்பங்களை விட்டு வெளியே போய்விடக்கூடாது என்பதே இதன் அடிப்படை. அனைவரும் குறுகிய
இனப்பற்றுள்ளவார்களாக நடந்து கொள்கிறார்கள், ”என்றார்.

நந்தீஷின் சகோதரர் ஷங்கரும் பொருளாதார கோணத்தைக் குறிப்பிட்டுள்ளார். தனது சகோதரனின் மனைவியின் குடும்பத்தின் நிலம்
மற்றும் வீடுகள் போன்ற பொதுவான சொத்துக்கள் பிரிக்கப்படாமல் இருந்தன என்றார் அவர். "எனவே, தலித்தான என் சகோதரரை
மணந்த சுவாதிக்கு ஒரு பங்கைக் கொடுக்க அவரது மாமாக்கள் விரும்பவில்லை," என்று கூறினார்.

ஏவிடென்ஸ் சேகரித்த புள்ளிவிவரங்களின்படி, சாதி இந்து குடும்பங்கள் இடையே கலப்புத் திருமணங்கள் காரணமாக பல
கொலைகள் நடந்துள்ளன. 2014 ஆம் ஆண்டில், கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சித்தோட் கிராமத்தில், மற்றொரு இடைநிலைக் சாதிக்
குழுவான கொங்கு வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை மணந்ததற்காக சத்தியபாமா என்ற எம்பிசி பெண்
கொல்லப்பட்டார்; அதே ஆண்டில், தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூரில், உடையார், பி.சி. சமூகத்தைச் சேர்ந்த பூபதி என்ற பெண்,
மற்றொரு பி.சி. இளைஞரை திருமணம் செய்து கொண்டதற்காக கொலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டில், திருநெல்வேலியில்
கள்ளர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக ஒரு நாடார் இளைஞர் கொல்லப்பட்டார். இதுபோன்ற பல வழக்குகள் பதிவு
செய்யப்படாமலும் போகின்றன. இந்த ஆண்டு ஜூலை மாதம் திருச்சியில் தனது சகோதரியை திருமணம் செய்ததற்காக ஒரு பிராமண
இளைஞர் கூட ஒரு தலித் இளைஞரால் கொல்லப்பட்டார் என்று கதிர் கூறினார். "இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது," என்றார் அவர்.

டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் நடந்த “சில சம்பவங்கள்” அல்லாமல், கெளரவக் கொலைகள் பெரும்பாலும் ஹரியானா, பஞ்சாப்,
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து புகார் வருவதாக பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம்
குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு ஜூலை 29, 2019 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல்
செய்திருந்தது, அதில் 2003 ஆம் ஆண்டு முதல் 23 கொலைகள் நடந்ததாகக் கூறியது. இந்த துறையில் பணிபுரியும் ஆர்வலர்கள் இதை
மிகக் குறைத்து அளிக்கப்பட்ட அறிவிப்பாகக் கருதுகின்றனர்.

மூர்க்கத்தனமான மிருகத்தனமான கொலைகள்


2012 ஆம் ஆண்டில், பட்டாளி மக்கள் கட்சி (பி.எம்.கே) தலைவர் டாக்டர் எஸ்.ராமதாஸ், தலித் இளைஞர்கள் "கண்ணாடி, டீ-சர்ட்
மற்றும் ஜீன்ஸ் அணிந்து" தலித் அல்லாத பெண்களை கவர்வதாக குற்றம் சாட்டினார். மாநிலத்தில் பதிவான கௌரவக் கொலைகளின்
எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்துள்ளது. முதன்முதலாக, இதுபோன்றதொரு அறிக்கையில், 2003 ஆம் ஆண்டில், ஒரு ஜோடி
கட்டாயமாக விஷம் கொடுக்கப்பட்டார்கள். எஸ்.முருகேசன் என்ற தலித் இளைஞரும், டி.கண்ணகி என்ற வன்னியார் பெண்ணும்
சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் முதலில் ஒரு தமிழ் வார இதழில் வெளிவந்தது.

இந்த சம்பவத்தில், தம்பதியினர் கண்டுபிடிக்கப்பட்டு, விருத்தாசலம் நகருக்கு அருகிலுள்ள தங்கள் கிராமத்திற்கு அழைத்து
வரப்பட்டனர். அப்பெண் வாய் திறக்க மறுத்தபோது, விஷம் அவரது காதுகள் மற்றும் மூக்கில் வழியே ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் இறந்துவிட்டனர். பெண்ணின் உறவினர்கள் கிராமத்தில் இக்கொடூரமான குற்றத்தைச் செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது,
அதே நேரத்தில் பையனின் உறவினர்கள் சிலர் தூரத்திலிருந்து அக்கொடுமையை நிர்கதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த
வழக்கு கடலூர் நகரில் உள்ள நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை நிலையில் உள்ளது.

மற்றொரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குயவங்குடி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான இரண்டு
குழந்தைகளுக்குத் தாயான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பவானி, கடலூரைச் சேர்ந்த தலித், சதீஷ்குமாரை திருமணம்
செய்ததற்காக அவரது சகோதரரால் 2014 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை
தொழிற்சாலயில் சந்தித்தனர் மேலும் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் முதலில்
திருப்பூரிலும் பின்னர் கடலூரிலும் வசித்து வந்தனர், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. சதீஷ்குமாருக்கு மலேசியாவில்
வேலை கிடைத்த பிறகு, பவானி தனது குழந்தைகளுடன் ராமநாதபுரத்திற்கு குடிபெயர்ந்தார், கொலை செய்யப்பட்டபோது தாத்தா
பாட்டியுடன் வாழ்ந்து வந்தார். திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கொலை நடந்துள்ளது.
அதே ஆண்டில், அருகிலுள்ள முத்துக்குளத்தூரில், தலித் இளைஞருடன் ஓடிப்போனதாகக் கூறப்படும் தனது 16 வயது மகள்
திவ்யாவைக் கொன்றதற்காக அல்லிராஜன் என்ற சாதி இந்து கைது செய்யப்பட்டார். அல்லிராஜன் இந்த கொலையை தற்கொலைப்
போன்று தோன்றச்செய்து அதை மறைக்க முயன்றார். அவர் தனது மகளை தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணைக் கொண்டு
மூச்சடைக்கச் செய்து கொன்றதாக பின்னர், போலீசில் ஒப்புக்கொண்டார்.

வேலுச்சாமி சங்கரின் கொடூரமான கொலை மார்ச் 13, 2016 அன்று உடுமலைப்பேட்டையில் நடந்தது. பயங்கர ஆயுதங்களை
ஏந்திய ஒரு கும்பல் நகர பெருந்து நிலையத்தின் எதிரே பட்டப்பகலில் அவரை வெட்டிக்கொன்றது. அவரது மனைவி கௌசல்யாவும்
பலத்த காயமடைந்தார். பின்னர், பெண்ணின் தந்தை, ஒரு வட்டித்தொழில் செய்பவரும், வீடு மனை தரகருமான எம். சின்னசாமி, இந்தக்
கொலையின் சூத்திரதாரி என்பது தெரியவந்தது. இந்த கொலை அருகிலுள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக
ஊடகங்களில் வைரலாகியது. வீடியோ சான்றுகள் மற்றும் கௌசல்யாவின் தைரியமான வாக்குமூலம் ஆகியவை கொலையாளிகளை
தண்டிப்பதை நீதிமன்றத்திற்கு எளிதாக்கியது. "என்னைப் போன்ற தப்பிப்பிழைத்தவர்களுக்கு அதிகாரம், தைரியம் மற்றும் ஊக்கம்
அளிக்கப்பட்டால் மட்டுமே இந்த வன்முறை சங்கிலியை உடைக்க முடியும்" என்று கௌசல்யா கூறினார்.

சேலம் நகரத்திற்கு அருகிலுள்ள ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் வி.கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர், வெள்ளாள
கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அவரது தலையில்லாத உடல் ஜூன் 24, 2015 அன்று ஈரோடு நகரத்திற்கு
அருகே ஒரு ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டது. இறப்பு குறித்து விசாரிக்க ஒரு தலித்துமான, காவல்துறை துணை கண்காணிப்பாளர்
ஆர். விஷ்ணுபிரியா நியமிக்கப்பட்டார்; பின்னர், அவர் திருச்செங்கோட்டிலுள்ள தனது முகாம் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய
நிலையில் இறந்து கிடந்தார். இந்த இரண்டு வழக்குகளும் இப்போது மாநில காவல்துறையின் குற்றப்பிரிவு-குற்றவியல் புலனாய்வுத்
துறைக்கு (சிபி-சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளன (“போரை இழத்தல்”, ஃப்ரண்ட்லைன், அக்டோபர் 16, 2015).

திருவாரூர் மாவட்டத்தில் கீழமருத்தூரைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்ற மாற்றுத்திறனாளி தலித் பெண், அவரது கணவர்
பழனியப்பன், பி.சி. சமூகம், மற்றும் அவர்களின் 40 நாளேயான பச்சிளங்குழந்தை 2014 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். கீழ் நீதிமன்றம்
இளைஞர்களின் குடும்பத்தில் ஒரு சிலரை குற்றவாளிகளாகக் கண்டறிந்து அவர்களுக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இன்றும், கலப்புத் திருமணங்களில் சாதி இந்துக்கள் சம்பந்தப்பட்ட கொலைகள் பதிவாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட சாதியான
யாதவா சமூகத்தை சேர்ந்த இசக்கி சங்கர், திருநெல்வேலியில் நவம்பர் 20, 2018 அன்று கொலை செய்யப்பட்டார். அவரது காதலி,
எம்.பி.சி சமூகத்தைச் சேர்ந்த சத்யா பாமா, மறுநாள் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார்.

சிவா மற்றும் சௌமியா, இருவரும் பி.சி. சமூகத்தினர், நாகர்கோயிலிலுள்ள வடசேரியில் மே மாதம் 2013 ஆம் ஆண்டில் கொலை
செய்யப்பட்டனர்.

2014 ஆம் ஆண்டில், மதுரை மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 17 வயது பி.சி. பெண், தற்கொலை செய்து கொண்டதாகக்
கூறப்பட்டவர், உண்மையில் அவரது தந்தையால் கொலை செய்யப்பட்டவர். அப்பெண் பி.சி. சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனுடன்
ஓடிவிட்டதாகவும், அவர் தூங்கும்போது தலையணைக் கொண்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“காதலிக்கும் அல்லது திருமணமானாதுமான இப்பெண்கள் தஞ்சமடைய வேறிடமில்லை. அவர்கள் முயல்களைப் போல


வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகின்றனர். கண்டுபிடிக்கப்பட்ட பல பெண்கள், பொய்யான வாக்குறுதிகளின் பேரில் பெற்றோரின்
வீடுகளுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டப்படுகின்ற அவர்கள் குடும்பத்தின் கோரிக்கைகளுக்கு
செவிசாய்க்காவிட்டால், கொல்லப்படுகிறார்கள்,” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.

மேலும், சாதி இந்து இளைஞர்களை மணந்த பல தலித் பெண்கள் தங்கள் கணவரின் வீடுகளில் இருந்து விரட்டப்படுகின்றனர்
அல்லது கைவிடப்படுகின்றனர் என்று கதிர் கூறினார். சில சந்தர்ப்பங்களில், அத்தகைய பெண்களின் பெற்றோர் தற்கொலை செய்து
கொள்கின்றனர்.

தூய்மையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வாளர்கள் உள்ள ஒரு சூழலில், காதலுக்கு
இடமில்லை. "இளம் தம்பதிகள் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க ஏங்குகையில், சாதியும் குடும்பமும் தலையிடுகின்றன,
அச்சுறுத்துகின்றன, அவர்களின் காதல் உலகத்தை அழிக்கின்றன, கற்பு மற்றும் கௌரவத்தின் ஒரு கொலைகார ஒழுக்கமுறையைச்
செயல்படுத்துகின்றன. என்னைப் போன்ற ஒரு அதிர்ஷ்டசாலி சிலர் எங்கள் அற்புதமான காதல் மற்றும் கசப்பான கதைகளை விவரிக்க
பிழைத்திருக்கிறார்கள்,” என்று சங்கரின் மனைவி கௌசல்யா ஃப்ரண்ட்லைனிடம் கூறினார். தனது போராட்டத்தைப் பற்றி விரிவாகப்
பேசிய அவர், சங்கரின் மரணத்திற்குப் பிறகு, தனது கணவரின் கொலையின் மன வேதனையிலிருந்து மீள முயற்சித்தபோதும் சமூக
புறக்கணிப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றார்.

இருப்பினும், சங்கரின் கொலை, "சாதி அமைப்பையும், அதன் பெருமை மற்றும் தூய்மை என்ற கருத்தையும் ஒழிக்க வேண்டுமென்ற
அவரது கனவுக்காக இருந்து போராட வாழவேண்டும் என்று என் மன உறுதியை வலுப்படுத்தியது. கௌரவக் கொலை என்பது காதல்
வாழ்க்கைக்கான எங்கள் அழகிய கனவுகளை சிதைத்தது. நாம் நேசிக்கும் மற்றும் நம்பும் மக்கள் கொலையாளிகளாக மாற்றும்போது இது
ஒரு கொடுங்கனவாக மாறுகிறது, ”என்று கூறினார் அவர்.

கௌசல்யா தன் தந்தைக்கு எதிராக சாட்சியளித்து அவருக்கு மரண தண்டனை பெற்றுத்தந்தார். "கௌரவக் கொலை தொடர்பான
வலுவான மற்றும் தனிபட்ட சட்டத்தை நான் ஆதரிக்கிறேன். நான் இறந்து, ஷங்கர் [தாக்குதலில்] உயிர் பிழைத்திருந்தால், அவருக்கு
எதுவும் கிடைத்திருக்காது, ஏனென்றால் நான் தலித் அல்லாதவள். இதேபோல், எந்த சட்டமும் என்னை ஆதரிக்கவில்லை, ”என்று அவர்
கூறினார் (“ ஸ்டாண்டிங் டால்”, ஃப்ரண்ட்லைன், ஏப்ரல் 27, 2018.)

கௌசல்யாவின் கூற்றை எதிரொலிக்கும் விதமாக, கலப்புத் திருமணத்தினால் பலியானவர் தலித்தாக இருந்தால், அரசும் தலித்
அமைப்புகளும் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று கூறினார் கதிர். "ஆனால் பாதிக்கப்பட்டவர் தலித் அல்லாதவராக
இருந்தால், ஒரு சாதாரண கொலை வழக்கு பதிவு செய்யப்படும். பாதிக்கப்பட்டவர் தலித் அல்லாதவராகவும், எஞ்சியிருக்கும்
வாழ்க்கைத்துணை ஒரு தலித் ஆகவும் இருந்தால், அவர் அல்லது அவள் எந்த நன்மையும் பெற மாட்டார்கள். அதனால்தான் கௌரவக்
கொலை தொடர்பாக தனிச் சட்டத்தை நாங்கள் கோருகிறோம், ”என்றார் அவர்.
அவர் மேலும் கூறுகையில், அத்தகைய சட்டத்தின் தேவை இப்போது அதிக முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் பல
சந்தர்ப்பங்களில் குற்றவாளிகள், பெரும்பாலும் பெற்றோர்களும் உறவினர்களும் ஆவர், அவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை
எரித்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர், என்றார்.

சங்கரின் குடும்பத்திற்கு மாநில அரசிடமிருந்து உதவி கிடைத்தது. அவரது தந்தைக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. சாதி, மத
வேறுபாடின்றி, கௌரவ கொலையால் பாதிக்கப்பட்டவர்களை சட்டத்தின் கீழ் "சிறப்பு பாதிப்படைந்தவர்களாக" கருதப்பட வேண்டும்
என்று கௌசல்யா வலியுறுத்துகிறார். பாதிக்கப்பட்டவர்கள் போதுமான இழப்பீடு மற்றும் மறுவாழ்வுத் திட்டம் மூலம் தங்கள்
வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அரசு தலையிட்டு உதவ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். "சங்கரின் கொலைக்குப் பிறகு
என்னை தற்காத்துக் கொள்ள நான் எஞ்சியிருந்தேன்," என்று அவர் கூறினார். அவர் மறுமணம் செய்து கொண்டார், இப்போது ஒரு
அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிகிறார், இது தனது சொந்த முயற்சிகள் மூலம் தான் என்று அவர் கூறினார்.

கௌசல்யா இப்போது கௌரவக் கொலைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். "இருண்ட, மனச்சோர்வடைந்த
மற்றும் மீளமுடியாததாக தோன்றிய வாழ்க்கை மேம்பட்டதாக மாறியுள்ளது. நிச்சயமாக, ஒவ்வொருவரின் துயரமும் தனித்துவமானது.
எனது நிகழ்கால வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியை நான் இழந்துவிட்டேன். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இழந்த
பின்னர் தங்கள் எதிர்கால வாழ்க்கையை இழந்துவிட்டனர். சங்கரின் தந்தையும் சகோதரர்களும் இன்று இருப்பது போல அவர்களின்
நினைவுகளோடு மட்டுமே வாழ வேண்டியிருக்கும், ”என்றார் அவர்.

ஆனாலும், பல பெற்றோர்களும் உறவினர்களும் பெருமை மற்றும் மரியாதைக்காக தங்கள் அன்பானவர்களையும்


அருகிலுள்ளவர்களையும் கொலை செய்வதில் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். "அவர்கள் எங்களைப் போன்ற
இளைஞர்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்கியுள்ளனர்" என்று கௌசல்யா கூறினார். அவளுடைய தந்தை, அவள் மீது
அளவுக்கு மீறிய அன்பு வைத்திருந்தார்.

அழகருக்கும் அவரது மகள் பேச்சியம்மாளை மிகவும் பிடிக்கும். "அவள் அழகானவளாகவும் ஓரளவு படித்தவளும் ஆவாள்.
சோலைராஜை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று அழகர் அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் பேச்சியம்மாள்
அவரின் பேச்சைக் கேட்கவில்லை. அவரது மகள் தனது விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டார் என்ற உண்மையை அவரால் ஜீரணிக்க
முடியவில்லை. அவர் ஆத்திரமடைந்து ஆக்ரோஷமாக மாறினார், ”என்றார் ஆனந்தராஜ். காவல் நிலையத்தில் கூட, அவர் வீட்டிற்கு
வரும்படி கெஞ்சினார். "அவள் மறுத்துவிட்டது மட்டுமல்லாமல், அவள் அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி அவரிடம் கொடுத்தாள்,"
என்று அவர் கூறினார். திருமணத்திற்குப் பிறகு, அழகர், சாதி மேலாதிக்கத்தைப் பற்றி இறுமாப்பு கொண்ட சிலருடன் நட்பிலிருந்ததாக
அனனதராஜ் கூறினார். "ஒரு விரிவான விசாரணை மட்டுமே அதையெல்லாம் வெளிப்படுத்தும்," என்று அவர் கூறினார்.

இதுபோன்ற மிருகத்தனமான கொலைகளை சமூகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று நந்தீஷின் சகோதரர் சங்கர் கூறினார். “நாங்கள்
ஏழை, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள். எங்கள் சகோதரர் எங்கள் குடும்பத்தை கவனித்துக்கொண்டார். என் சகோதரனின் இழப்பை
இன்றுவரை என் பெற்றோரால் கடந்துவர முடியவில்லை. இந்த வழக்கு மண்டியா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் (மார்க்சிஸ்ட்) ஒரு பிரிவான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) எங்களுக்கு சட்டரீதியாகவும் தார்மீக
முறையிலும் ஆதரவளித்து வருகிறது. எனது ஒரே ஆசை என்னவென்றால், எனது சகோதரனையும் அவரது மனைவியையும்
கொன்றவர்களை சட்டத்தால் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போது தான் அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையும், ”என்றார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த சர்குனத்திற்கும் இது ஒரு கீழ்த்தரமான துயரக் கதை, தலித் பெண்ணான அவரது மனைவி கல்பனா
கொல்லப்பட்ட பின்னர் அவரும் அவரது நான்கு வயது மகனும் தங்களுக்குத் தங்களே என்று தள்ளிவை தற்காத்துக் கொள்ள
விடப்பட்டதாகக் கூறினார். சர்குனம் கூறினார்: "அவள் எந்த தவறும் செய்யாமல் கொல்லப்பட்டாள். அவளுடைய சகோதரன் தான் ஒரு
பெண்ணுடன் ஓடிப்போனான். சிறுமியின் பெற்றோர் மிருகத்தனமானவர்கள். தம்பதியர் இருக்கும் இடம் பற்றி தனக்குத் தெரியாது என்று
என் மனைவி வற்புறுத்திக் கூறிய போதிலும், அவர்கள் அவளைக் கொன்றார்கள். மெட்ராஸ் உயர் நீதிமன்றம் கொலையாளிகளை
விடுவித்தது. எவிடென்சின் ஆதரவுடன், நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்,”என்று அவர் கூறினார். அந்த
ஜோடி தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
‘கற்பும் கௌரவமும்’

தமிழ் சமூகம் இன்று ஒருபுறம் தாராளவாத மற்றும் முற்போக்கான விழுமியங்கள், மறுபுறம் நிலப்பிரபுத்துவ மற்றும்
சாதிய மனநிலை எனும் வித்தியாசமான கலவையை வெளிப்படுத்துகிறது. இக்கூறுகளின் இடைவினையால்
உருவாக்கப்பட்ட பதட்டங்களில் தலித்துகளும் பெண்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2011 மக்கள் தொகை
கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் தலித்துகளில் 309 உட்பிரிவு சாதிகள் இருக்கின்றன. இன்று தமிழ்நாட்டின்
தலித்துகளிடையே குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள பள்ளர்களிடையே பெருகிவரும் ஒரு கவனிக்கப்பட வேண்டியதொரு
கருத்தாக்கம் சாதி மேலாதிக்கத்தை நிறுவுவதென்பதாகும், இது வலதுசாரி சித்தாந்தத்தின் எழுச்சியின் காரணமாக
இருக்கலாம். இது தாழ்வு அல்லது உயர்வு மனப்பான்மை உணர்வைக் காட்டிலும், கற்பு மற்றும் கௌரவம் என்ற கருத்தின்
அடிப்படையில் சாதி உணரத் தொடங்குவதேயாகும். அருந்தாத்தியர்களிடையே பணிபுரியும் அமைப்புகளில் ஒன்றான
மதுரையை அமைவிடமாகக்கொண்டு இயங்கும் ஆதி தமிழர் கட்சியின் (ஏ.டி.க) நிறுவனர் தலைவர் ஜி. ஜக்கையன், தலித்
துணைப்பிரிவுகளிடையே சாதி வரிசைமுறை எவ்வாறு நிலைபெறுகிறது என்பதையும், இது எவ்வாறு சாதி புனிதங்களின்
மீறல்கள் என்று கருதி தூண்டப்பட்டு கொலைகளுக்கு வழிவகுத்தது என்பதைப் பற்றியும் ஃப்ரண்ட்லைனுடன் பேசினார்.

பள்ளர் குடும்பத்தினர் பறையர்களுடனான எந்தவொரு திருமண தொடர்பையும் ஏற்றுக்கொள்வதை சங்கடமாக


உணர்வதாக அவர் கூறினார், அதே நேரத்தில் பறையர்களும் பள்ளர்களும் அருந்ததியர்களுடனான திருமணத்
தொடர்புகலிருந்து விலகிச் சென்றனர். அருந்ததியர் இளைஞர்கள் பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் கீழே இருப்பதாக
உணரப்பட்டதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதி பாகுபாடு போன்ற பொதுவான பிரச்சினைகளில் நாங்கள்
ஒரே கூரையின் கீழ் ஒன்றுபடுகிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் துணைப்பிரிவுகளாகப் பிரிந்து,
உட்பிரிவினர்களுகு இடையேயான திருமணங்களுக்கு வரும்போது சாதி மேலாதிக்கத்தைப் பற்றி பேசுகிறோம்” என்று
அவர் கூறினார். “தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து சாதிகளும் பிராமணமயமாக்கப்பட்டுள்ளன. தலித்துகளும் இதற்கு
விதிவிலக்கல்ல.”

எல்லைகளை மீறுவதாகக் கருதப்படும் மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஜக்கையன் மேற்கோள்


காட்டினார்.விழுப்புரம் மாவட்டத்தின் கரடிச்சிதூர் கிராமத்தில் 2003 ஆம் ஆண்டில் ஒரு அருந்ததியார் பெண் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கார்த்திகேயன் என்ற அருந்ததியார் பையனை மணந்ததால், 2012
ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் காந்தமங்கலம் கிராமத்தில் கோகிலா என்ற பறையர் சாதி பெண்ணிற்கு
சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம் ஏற்பட்டது.

அஜித்குமார் என்ற பறையர் சாதி இளைஞர், 2019 ஆம் ஆண்டில் ராமநாதபுரத்தில் தோண்டியில் ஒரு பள்ளர் சாதி
பெண்ணை மணந்ததால் கொல்லப்பட்டார். நமக்கலில் மல்லூரில் ஒரு குலாளர் (தொழிலால் குயவர்) பையனை மணந்த
அருந்ததியார் பெண்ணான பிரியங்கா 2013 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். ஜூலை 2019 ஆம் ஆண்டில்,
விருத்தாசலம் அருகே விலங்கட்டூர் கிராமத்தில் ஒரு தலித் பெண்ணுடன் தப்பி ஓடிய தலித் பையனின் 45 வயது தாய்
ஒரு விளக்கு கம்பத்தில் கட்டிவைத்து பெண்ணின் உறவினர்களால் சாட்டையால் விளாசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மூத்த அருந்ததியார் தலைவரும், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆதி தமிழர் பேரவையின் நிறுவனருமான


இரா.ஆத்தியமான், “பிராமண இறையாண்மையின்” மனநிலையைப் பற்றி பேசினார். அரசியல் கட்சிகளின் பிரபல தலித்
தலைவர்கள் எப்போதும் ‘இந்து சனாதனத்திற்கு’ எதிராக பேசுகிறார்கள். ஆனால் பணியாளர்கள் மற்றும் நடுத்தர
அளவிலான செயல்பாட்டாளர்கள் தங்கள் தலைவர்களின் வார்த்தைகளை கடைபிடிப்பதில்லை. அவர்கள் எல்லா
வகையான பாரபட்சமான நடைமுறைகளையும் பின்பற்றுகிறார்கள். பள்ளர்களுக்கு சொந்தமான நிலபுலன்கள் உண்டு,
அதே சமயம் கிறிஸ்தவ மிஷனரிகளின் முயற்சிகளால் பறையர்கள் நன்கு படித்தவர்களானார்கள். எனவே அவர்கள்
இயல்பாகவே அருந்ததியர்களான எங்களை தாழ்வாகப் பார்க்கிறார்கள், ”என்றார்.

சில சாதியினருக்கு இடையிலான திருமணங்கள் அதிக கவனம் பெறாமல் நடந்தன என்கிறார் சென்னையிலுள்ள
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.:
"தலித்துகள் மேல்தட்டு நபர்களை திருமணம் செய்து கொள்ளும் போதெல்லாம், அவை ஒரு குற்றமாகவும், அந்தஸ்தை
மீறுவதாகவும் கருதப்படுகிறது." பிராமணர்களின் பூசாரி சமூகத்தைத் தவிர மற்ற அனைவருக்கும் தொழில் ரீதியாக
பிரிவுகள் இருந்தாலும், இந்தியாவில் சாதி என்பது தெய்வீக புனிதத்தன்மை கொண்ட ஒரு வகுப்பாக இருந்தது என்று
கூறுகிறார் அவர். "தலித் உட்பிரிவுகள் உட்பட பிற சாதிகளின் மாறிவரும் தொழில்முறை அடிப்படைகள்
நிலைநாட்டப்படவில்லை, ஆனால் அது மேல்தட்டு கீழ்தட்டு எனும் அடுக்குகளின் அடிப்படையில் தலித்துகளிடையே
வர்க்க உணர்வை வலுப்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சம்பவத்தையும் இந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், ”என்றார்.

சாதி, குலம், குடும்பம், கற்பு, கௌரவம் ஆகிய கோட்பாடுகள் தமிழ்நாட்டில் தலித்துகள் உட்பட அனைத்து சாதிக்
குழுக்களிலும் ஆழமாக பதிந்துள்ளன. புத்திய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜக தலைமையிலான
மத்திய அரசுடன் இணக்கமேற்பட்டதை அடுத்து, பள்ளர்களை பட்டியல் சாதி பட்டியலில் இருந்து அகற்றி இடைநிலை
சாதி இந்து குழுக்களுடன் இணையாகக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதாகியுள்ளது. சமுதாயத்தில்
பிறப்பு அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு வழிவகுக்கும் ஒரு
பொதுவான தலித் அடையாளத்தின் கருத்தை மாற்றுவதற்கான அவரது ஒரு முயற்சியாக தலித் ஆர்வலர்கள் இதைப்
பார்க்கிறார்கள். உண்மையில், இது சாதி தூய்மை மற்றும் ஆணாதிக்கத்திற்காக நிற்கும் சக்திகளை ஊக்குவித்துள்ளது.
டாக்டர் கிருஷ்ணசாமி, பள்ளர்கள் ஒருபோதும் "தீண்டத்தகாதவர்" அல்ல என்றும், பிரிட்டிஷ் அவர்களை மற்ற
பட்டியல் சாதியினருடன் இணைத்து "வரலாற்று அநீதி" செய்ததாகவும் கூறுகிறார். "தாழ்த்தப்பட்ட சாதி பட்டியலிலிருந்து
அகற்றுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் தலித்துகள் என்று அழைக்கப்படுவதை
விரும்பவில்லை. இது எங்கள் இளைய தலைமுறையை தன்னம்பிக்கையை இழக்கச்செய்கிறது,” என்று அவர் சமீபத்தில்
ஃப்ரண்ட்லைனிடம் கூறினார். வலதுசாரிக் கோட்பாட்டை அவர் ஏற்றுக்கொண்டது, பள்ளர்களை சாதிய அடுக்கில்
உயர்த்தும் என்று அவர் உறுதியாக நம்புவது, சமூக ஆர்வலர்கள் மற்றும் தலித்துகள் அதிர்ச்சியமடைய வைத்துள்ளது.
எவ்வாறாயினும், சாதியினருக்கு இடையிலான திருமணங்களுக்கு அவர் அளித்த ஆதரவு தெளிவான ஒன்று என்று அவர்
கூறினார். "எனது கட்சி கௌரவக் கொலைகளுக்கு எதிராக மாநாடுகளை நடத்தியிருக்கிறது," என்று அவர் கூறினார்.

மற்றொரு பள்ளர் தலைவரான ஜான் பாண்டியனும், எஸ்.சி. பட்டியலிலிருந்து அச்சமூகத்தை நீக்குவதற்கு


கோருகிறார். பள்ளர்களிடையே ஒரு பெரும்பான்மை கருத்தாக்கம் வெறித்தனமாக உருவாகி வருகிறது. சமூகவியலாளரும்
ஆர்வலருமான மீனா சோமு, தலித்துகளிடையே அதிகரித்து வரும் சாதிவாத போக்குகள் குறித்து தனது வேதனையை
வெளிப்படுத்திய அவர் பள்ளர் மற்றும் பறையர் சாதி மாணவர்கள் கூட சாதி மேலாதிக்கத்தைப் பற்றி பேசுகிறார்கள்
என்றார். "அவர்கள் பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் இடையேயான உட்பிரிவுத் திருமணங்களை கூட எதிர்க்கிறார்கள்.
தலித்துகளிடையே வர்ணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட தரமற்ற சமத்துவமின்மையைக் கட்டமைக்க முயற்சிப்பது
அவர்களின் மேல்நோக்கிய சமூக பெயர்ச்சிக்கு மட்டுமே குந்தகம் விளைவிக்கும்,” என்று அவர் எச்சரித்தார். தலித்
அறிஞரும் எழுத்தாளருமான ஏ.ராமையா எழுதிய “கிராமப்புற இந்தியாவில் தீண்டாமை மற்றும் சாதிகளுக்கு-
இடையிலான உறவு முறைகள்: தென்தமிழ் கிராமங்கள் ஓர் ஆய்வு” (மத கலாச்சார இதழ், 2004) கட்டுரை ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அவரைப்
பொறுத்தவரை, "பள்ளர் சாதி, தாழ்த்தப்பட்ட அல்லது பட்டியலின சாதி மத்தியில் உயர்ந்த சாதியெனவும், உயர் சாதி
அல்லது தமிழ்நாட்டில் உள்ள சாதிய இந்துக்கள் மத்தியில் தாழ்ந்த சாதியெனவும் கருதப்படுகிறது." ராமநாதபுரத்தின்
பெரும்பாலான கிராமங்களில் உள்ள பள்ளர்கள் தங்களை பறையர்களுக்கு மேலானவர்கள் என்று கருதி அவர்களை
“தீண்டத்தகாதவர்களாக” நடத்தினர் என்று அவர் கூறுகிறார். "சாதி அடுக்கில் பறையர்களுக்கு அடுத்தபடியாக இருப்பது
சக்கிலியார்கள் [அருந்ததியர்கள்]."

“பறையர்கள், சக்கிலியர்கள் மற்றும் பிற பட்டியல் சாதிகளைப் போலவே, பள்ளர்களும் பிரதான கிராம
வாழ்விடங்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் பட்டியல் சாதியினரிடையே ஒரு உயர்ந்த அந்தஸ்தைப்
பெறுகிறார்கள். எனவே, குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டியல் சாதியினரிடையே அவர்களை
உயர்ந்தவர்களாக வைத்திருக்கும் சமூக கலாச்சார மற்றும் பொருளாதார காரணங்களை புரிந்துகொள்வது முக்கியம்.”
என்று அவர் விளக்குகிறார். பல ஆய்வுகள் பட்டியல் சாதியினரிடையே சாதி பாகுபாடு நிலவுவதை சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும், "இந்த ஆய்வுகள் இத்தகைய பாகுபாட்டிற்குப் பின்னிருக்கும் காரணங்களை விரிவாகக் கவனிக்கவில்லை"
என்று அவர் கூறுகிறார்.

கல்வியாளர், பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதும் கட்டுரையாளர், குடியியல் உரிமைகள் ஆர்வலர் மற்றும்


இந்தியாவின் முன்னணி புகழ்பெற்ற அறிவுஜீவிகளில் ஒருவரான ஆனந்த் டெல்டும்ப்டே, “தலித்துகளுக்கிடையில் இரு
குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கு சாதியினருக்கு இடையேயான கலப்புத் திருமணம் வழிவகுக்காது” என்றும், மேலும்,
தலித்துகளே சாதியைக் கைவிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். "இன்று மஹர், சம்பர், மங் அல்லது மேளா, மடிகா
அல்லது பறையா அல்லது பள்ளர்கள் அல்லது அருந்ததியர்கள் ஜாதிகளிடையே மட்டுமல்லாமல், அவற்றின்
துணைப்பிரிவுகளிலும் பிளவுகள் காணப்படுகின்றன. இது எல்லா இடங்களிலும் வெளிப்படையாகத் தெரிகிறது,”என்றார்.

இளங்கோவன் ராஜசேகரன்

நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்,”என்று அவர் கூறினார். அந்த ஜோடி தலைமறைவாக இருப்பதாக
கூறப்படுகிறது.

தனக்கும் தனது இரண்டு மகன்களுக்கும் வாழ்க்கை ஒரு போராட்டமாக இருந்ததாக சதீஷ்குமார் ஃப்ரண்ட்லைனிடம் கூறினார்.
“என் மனைவி அவளது பெற்றோரை நம்பினாள். எங்களுக்கு குழந்தைகள் இருந்ததால் அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று
அவள் உறுதியாக நம்பினாள். ஆனால் சாதி பெருமையும் குடும்ப கௌரவமும் குடும்பத்தில் மிகவும் ஆழமாக பதிந்துவிட்டதால்,
அவளை தியாகம் செய்வது பற்றி அது நினைத்தேப் பார்க்காமல் இருந்தது. ஒரு தலித்தான என்னை அவள் திருமணம் செய்து
கொண்டதால், அவளுடைய சகோதரருக்கு அவள் சாதியில் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை எனவே என் மனைவி கொலை
செய்யப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவளுடைய சகோதரர் பவானியை ஆத்திரத்தில் கொன்றார் என்று எனக்குத்
தெரிவிக்கப்பட்டது. கொலைக்குப் பிறகு அவளுடைய சாதியைச் சேர்ந்த பல பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள
முன்வந்ததாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் ஜாமீனில் வெளியே வந்து மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டார்,” என்று
அவர் கூறினார்.

சதீஷ்குமார் தனது மனைவியின் மரணம் குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். பொலிஸ் விசாரணை
இல்லை என்றும் அவர் கூறினார். பிரேத பரிசோதனை வீடியோகிராப் செய்யப்படவில்லை மற்றும் தகனம் அவசரமாக செய்யப்பட்டது.
அவரது சகோதரர் மீது கொலை வழக்கு (இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302) காவல்துறையினர் பதிவு செய்திருந்தாலும்,
முழு குடும்பமும் கொடூரமான செயலில் ஈடுபட்டதாக சதீஷ்குமார் தெரிவித்தார். "என் குழந்தைகள் தங்கள் தாயைக் கொன்றதற்கு நேரில்
கண்ட சாட்சிகள்" என்று அவர் கூறினார். ஏவிடென்ஸ் அவருக்கு சட்டப்பூர்வமாக ஆதரவு அளித்து வருகின்றது.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் ஆண்கள். தலித் மற்றும் சாதி-இந்து பிரிவுகளில் இருந்து பெண்கள் அடுத்து
வருகிறார்கள். பல ஜோடிகள், சாதிகளுக்கு இடையேயும், சாதிகளுக்குள்ளும், சாதிகளின் உட்பிரிவுளுக்கு இடையேயும், சாதிகளின்
உட்பிரிவுளுக்குள்ளும் மதங்களுக்கு இடையேயுமான திருமணங்கள், தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களிலிருந்து உருவாகும்
அழுத்தத்திலிருந்து தப்பிக்கும் ஒரு வழியின்றி, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தர்மபுரியின் நத்தம் காலனியில் உள்ள
இளவரசன் என்ற தலித் இளைஞர், தர்மபுரிக்கு அருகிலுள்ள ரயில் பாதையில் ஜூலை 4, 2013 அன்று இறந்து கிடந்தார் (“டிராஜிக்
எண்ட்”, ஃப்ரண்ட்லைன், ஜூலை 26, 2013). அவர் பெண்ணின் குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக திவ்யா என்ற வன்னியார்
பெண்ணை மணந்தார். காவல்துறையும், அவரது மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷனும் அவர்
தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினர், அதே நேரத்தில் இது ஒரு கௌரவக் கொலை என்று ஆர்வலர்கள் கூறினர் (“ஏ குளோஸ்ட்
சாப்டர்?”, ஃப்ரண்ட்லைன், ஜூன் 21, 2019).

You might also like