Solavadaikal

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

★ கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்

வானமேறி வைகுந்தம் போனானாம்.


★ ஆரா மீ னுக்கும் அயிர மீ னுக்கும்
நடு ஏரியில சண்ட
வெலக்கப் போன வெறா மீ னுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட
★ அறுக்க மாட்டாதவன் இடுப்புல
அம்பத்தெட்டு அருவாளாம்
★ வேண்டா வெறுப்புக்கு பிள்ளையப் பெத்து காண்டாமிருகம்னு பேர்
வச்சானாம்.
★ பகல்லயே பசுமாடு தெரியாது....ராத்திரில எருமை மாடா தெரியப்
போகுது...?
★ ஏரு ஓட்றவன் இளிச்சவாயனா இருந்தா, மாடு கூட மச்சான்னு
கூப்பிடுமாம்.
★ பணக்காரன் வட்டுல
ீ இருக்குற கடனும்,
செவத்தவ உடம்புல இருக்குற அழுக்கும் வெளில தெரியாது.
★ அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே
உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே’
★ எள்ளு எண்ணெய்க்குக் காயுது
எலிப்புழுக்கை எதுக்குக் காயுது”
★ ‘கோழி களவாணிப்பய குடம் கிடைச்சா விடுவானா’
★ அக்காள் பண்டம் அரிசி, தங்கச்சி பண்டம் தவிடா?
★ அக்கரையில் படர்ந்த பாகற்கொடிக்கு, இக்கரையில்
பந்தலிடுவானேன்?
★ அணில் ஊணும், ஆமை நடையும் மெல்லத்தான்.
★ அத்தோடு நின்றது அலைச்சல், கொட்டோடு நின்றது குலைச்சல்
★ அப்பன் அருமையும், உப்பின் அருமையும் இல்லாத போது தெரியும்.
★ கடுங்காத்து மழை கூட்டும்; கடும் நேசம் பகை கூட்டும்
★ தையில் முளைக்காத புல்லுமில்லை, மாசியில் விளையாத
மரமுமில்லை
★ குடல் கூழுக்கு அழுகிறது, கொண்டை பூவுக்கு அழுகிறது
★ ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இருக்காது
★ நரிக்கு நாட்டாமை குடுத்தா, கெடைக்கு ஒரு ஆடு கேக்குமாம்..
★ கறையானுக்கு றக்க மொளச்சா, பறந்து பறந்தேதான் சாவும்
★ போரோட திங்கற மாட்டுக்கு பொறுக்கிப்போட்டா பத்துமா?
★ புண்ணுக்கு மருந்து கட்டலாம்.. புடிவாதத்துக்கு மருந்து கட்ட
முடியுமா??
★ சொப்பனத்துல கண்ட அரிசி, சோத்துக்கு ஆகுமா?
★ விஷங்கொடுத்தும் கொல்லலாம்...வெல்லங் கொடுத்தும்
கொல்லலாம்
★ கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
★ சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும்
எதுவரையில் நிற்கும்?
★ “கூந்தலுள்ள சீமாட்டி கொண்டையும் போடுவா, அள்ளியும்
முடியுவா”
★ “கோவணத்தில ஒரு காசு இருந்தா

கோழி கூப்பிட பாட்டு வரும்”

★ “பேச்சுப் பிடிச்ச நாயி

வேட்டைக்கு உதவாது ”

You might also like