தமிழ் தேர்வு 5

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தமிழ் தேர்வு- 5

I.பலவுள் தெரிக.
1. ‘கேட்டவர் மகிழ பாடிய பாடல் இது’ தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும்
முறையே
i. பாடிய, கேட்டவர் ii. பாடல், பாடிய iii. கேட்டவர்,பாடிய iv. பாடல், கேட்டவர்
2. உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிப்பது
 i..ஒற்றளபெடை ii. உயிரளபெடை  iii. உயிர்மெய்  iv.அளபெடுத்தல்
3. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாக திரிந்து அளவெடுப்பது
 i. செய்யுளிசை அளபெடை ii. இன்னிசை அளபெடை
iii.  சொல்லிசை அளபெடை iv. ஒற்றளபெடை
4. விகுதி பெறாமல் வினை பகுதியே தொழில் பெயரதல்
i. முதனிலை திரிந்த தொழிற்பெயர் ii.வினையாலணையும் பெயர்
 iii.முதனிலைத் தொழிற்பெயர் iv. எதிர்மறை தொழிற்பெயர்
5. சொல் என்பது
 i. இருதிணை,ஐம்பால் குறிக்கும் ii. மூவகை இடங்களில் வரும்
 iii. வெளிப்படையாகவும்,குறிப்பாகவும் வரும் iv. மேற்கூறிய அனைத்தும்
II. குறுவினா.
1.வேங்கை - என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
2. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையை சுட்டிக்காட்டி இலக்கணம்
தருக.
3.தேன், நூல்,பை,மலர்,வா- இத்தனி மொழிகளுடன் சொற்களைச் சேர்த்து தொடர் மொழிகளாக்குக.
4.  வினையடி விதிகளுடன் இணைத்து தொழில்களை உருவாக்குக. -  காண், சிரி, படி, தடு. 
5. கட்டு,சொட்டு,வழிபாடு,கேடு - இத்தொழிற் பெயர்களை வகைபடுத்துக.

 III. சிறுவினா.
1.அறிந்தது, அறியாதது,புரிந்தது,புரியாதது,தெரிந்தது,தெரியாதது,பிறந்தது- இவற்றிலுள்ள வினை முற்றுகளை
தொழில் பெயர்களாக மாற்றி எழுதுக.
2.  மலை என்னை அடிக்கடி அழைக்கும் ;மலைமீது ஏறுவேன் ;ஓரிடத்தில் அமர்வேன் ;மேலும் கீழும் பார்ப்பேன்
;சுற்றுமுற்றும் பார்ப்பேன் ;மனம் அமைதியை ஏயதும். இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளை தனியே எடுத்து
எழுதி தொழில் பெயர்களாக மாற்றுக.
3. தனிமொழி ,தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலை தொடரக.
 அண்ணன் : எங்கே செல்கிறாய்? (தொடர்மொழி)
 தம்பி : _____________________ (தனிமொழி)
 அண்ணன் : _________ __________ வாங்குகிறாய்? (தொடர்மொழி)
 தம்பி : _____________________(தொடர்மொழி)
 அண்ணன் : ____________________ தனி மொழி
 தம்பி : ____________________ தொடர்மொழி 
4. செய்யுளிசை அளபெடையை எடுத்துக்காட்டுடன் விளக்குக
5. கெடுதல், சுடுதல்,படுதல், எடுத்தல் ,கொடுத்தல் - இவற்றை முதல் நிலை திரிந்த தொழிற்பெயர் மாற்றுக.

You might also like