Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்

எப்படி தயாரித்தனர் ஓலைச்சுவடிகளை?


ஓலைச்சுவடிகள் செய் ய பனை மர ஓலைகள் பயன் படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில்,
குறிப்பாக மூன் று வகை பனை மரங் களான, தாளைப்பனை, கூந்தல் பனை, இலாந்தர்
பனை போன் ற மரங் களின் ஓலைகளையே ‘ஓலைச்சுவடிகள் ’ செய் ய
பயன் படுத்தியுள்ளனர்.

இவ்வகை பனைமரங் களின் குருத்து ஓலைகளை எடுத்து, அதில் மஞ்சள் தடவி, நன் கு
பதப்படுத்தியபின் பு, சரியான அளவில் வெட்டப்பட்ட பிறகு, அதில்
எழுத்தாணியைக்கொண் டு எழுதி, அதன் மேல் சுடர்க்கரி அல்லது மீண் டும் மஞ்சள் தடவ,
ஓலைச்சுவடி தயாராகிறது. மேலும் அது பூச்சிகளின் அரிப்பிற்கு உள்ளாகாமலிருக்கும்
பொருட்டு, அதன் மேல் வேம்பு அல்லது வசம்பு போன் ற, திரவியங் கள் அல்லது
எண் ணெய் கள் தடவப்படுவதும் உண் டு. மேலும் எலுமிச்சை புல் எண் ணெய் அல்லது கற்பூர
எண் ணெய் ஓலையின் நெகிழ்வுத்தன் மைக்காக தடவப்படும்.

நவீன காலங் களில், ஓலைகளை பூஞ்சை அரிக்காமல் பாதுகாக்க, ‘தைமோல் நீ ராவி


புகையூட்டம்’ கொண் டு பதனிடப்படுகிறது.

தயார் செய் யப்பட்ட ஓலைகள் , இளம் பழுப்பு நிறத்தை அடைந்ததும், எழுதப்பட தயாராக
உள்ளதென் று பொருள் . ஓலைகள் எழுதி முடித்ததும், அந்த கட்டின் மேலும் கீழும் ஓலையின்
அளவைவிட சற்று பெரிய மரத்தாலான பலகைகள் கொண் டு பாதுகாப்பு உறை போன் று
 மூடப்படுகிறது. சிறிய நூல் நுழையும் வண் ணம், துளையிடப்பட்டு, ஒட்டுமொத்தமாக
கோர்க்கப்படுகிறது. கோர்க்கப்பட்ட பின் , அஃது ஒரு துணியினால் சுற்றப்பட்டு, தூசு
படியாமல் பாதுகாக்கப்படுகிறது.

ஓலை காலப்போக்கில் வறட்சியடைந்தால், மீண் டும் அதன் மீது எண் ணெய் தடவப்படும்.
அப்போது, மெல்ல ஓலையின் நிறம் கருமையை தழுவ ஆரம்பித்திருக்கும்.

ஓலைச்சுவடிகள் , பொதுவாக 15-60 செ.மீ நீ ளமும் , 3-12 செ.மீ அகலமும் கொண் டதாக


இருக்கும். உலகிலேயே பெரிய ஓலைச்சுவடி ஒன் றை மைசூரு கண் காட்சியில், ‘ஓரியண் டல்
ரிஸர்ச் இன் ஸ் டிடியூட்’ காட்சிப்படுத்தியிருந்தது. அந்த சுவடி சுமார் 90 செ.மீ நீ ளமும், 4-5
செ.மீ. அகலமும் இருந்தது. விரமஹேஸ் வராச்சார சங் க்ரஹா(Viramahesvarachara Sangraha)
எனும் அந்த ஓலைச்சுவடியை, நீ லகந்த நாகமாதாச்சாரியா(Nilakantha Nagamathacharya)
என் பவர் எழுதியிருந்தார்.

https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 1/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்

இப்போதும், சிலர் ஓலைச்சுவடிகளில் எழுதும் அல்லது தகவல் கள் , இலக்கியங் களை நகல்
செய் யும் பொருட்டு ஓலைச்சுவடிகளை பயன் படுத்துகின் றனர். பொள்ளாச்சியின்
‘நல்லிக்கவுண் டன் பாளையத்தை’ சேர்ந்த சோதிட சிகாமணி என் பவர், சில இலக்கியங் கள்
மற்றும் புராணங் களை ஓலைச்சுவடிக்கு நகலெடுத்துள்ளார்.

Olai Chuvadi (Pic: tamilwin)

ஓலைச்சுவடி வரலாறு
ஓலைச்சுவடிகள் , கி.மு 5-ஆம் நூற்றாண் டு காலத்திலிருந்து கிட்டத்தட்ட கி.பி.19-ஆம்
நூற்றாண் டு வரை எழுதப்படுபொருளாக தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய
பகுதிகளில் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தியா, நேபாளம், மியான் மர், லாவோஸ் ,
தாய் லாந்து, கம்போடியா மற்றும் சில தென் கிழக்கு ஆசிய நாடுகள் இதில் அடக்கம்.
எனினும், ஓலைச்சுவடியில் எழுதும் இந்த முறையை, மிகச்சரியாக யார் கண் டறிந்தார்கள்
என் பதற்கான தெளிவான சான் றுகள் இல்லை.

பெரும்பாலானவை, கட்டிடக்கலை, கணிதம், வானியல், சோதிடம் மற்றும் மருத்துவம்


பற்றின ஓலைச்சுவடிகள் . ஒவ்வொரு முறையும், ஓலைச்சுவடிகள் ஏதேனும் பாதிப்பிற்கு

https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 2/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்

உள்ளாகும்போதோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலங் களுக்கு ஒரு முறையோ மற்றொரு


புதிய ஓலைச்சுவடிக்கு அதன் தகவல் கள் மாற்றப்பட்டு வந்துள்ளன.

அதாவது, திருக்குறள் , திருவள்ளுவரால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருந்தால், அந்த


ஆதிச்சுவடி தற்போது நமக்கு கிடைப்பது அரிது. அஃது, கி.மு 1-ஆம்
நூற்றாண் டில்  எழுதப்பட்டிருப்பின் , இப்போது, குறைந்தபட்சம் 9 தலைமுறைகளில் ஓலை
மாற்றி எழுதப்பட்ட, அண் மைய சுவடிகளையே நம்மால் காண இயலும். ஏனெனில்,
சரியாக பாதுகாக்கப்பட்டிருந்தால், ஒரு ஓலைச்சுவடியின் ஆயுட்காலம், சராசரியாக, 200-
லிருந்து 300 ஆண் டுகள் வரையே.

இலங் கையில் இருக்கும் அநுராதபுரத்தில், 1100 வருட பழமை வாய் ந்த ஓலைச்சுவடிகள்


கண் டிபிடிக்கப்பட்டன.

மு. வரதராசனின் ‘தமிழ் இலக்கியம் ’ நூலில் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு,

பழங் காலம்
    சங் க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)

    நீ தி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)

இடைக்காலம்
    பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)

    காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)

    உரைநூல் கள் (கிபி 1200 - கிபி 1500)

    புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)

    புராணங் கள் , தலபுராணங் கள்

மேற்கூறிய அனைத்து, இலக்கியங் களும், மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகளும்,


ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டிருந்தன. தமிழின் பெருமைகளை கூற வேண் டும்
என் றால், அந்த பெருமைகளை திறமையாக காத்துக்கொடுத்த பெருமையும்
ஓலைச்சுவடிகளையே சாரும். இன் றளவும் செந்நாப்போதார் என் றழைக்கப்படும்
வள்ளுவரின் திருஉருவம், வலது கையில் ஓர் எழுத்தாணியும், இடது கையில்
‘ஓலைச்சுவடியுமாகவே’ நமக்கு மனதில் பதிந்திருக்கும்.

https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 3/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்

At Sea-Shore (Pic: flickr)

ஓலைச்சுவடிகள் தற் காலம்


முதல், இடை, கடை என மூன் று சங் க காலங் களை கடந்து வந்தபின் , தற்காலத்தில், சிற்சில
அவதூறுகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. சோதிடக்கலைகள் தலைமுறை தலைமுறையாக
சுவடிகளிலேயே கடத்தப்பட்டு வந்து, பின் போலிகளையும் தற்சமயம் சந்தித்துள்ளது
வருத்தத்திற்குரிய செய் தியாகும். அதிலும், அகத்தியர் எழுதியதாக கூறப்படும் ‘நாடி
சோதிட நூல் கள் ’.

https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 4/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்

அண் மையில் தொலைக்காட்சி ஒன் றில், தமிழகத்தின் சீர்காழியில் உள்ள, ‘வைத்தீஸ் வரர்
கோவிலைச்சுற்றி’ அமைந்திருக்கும், பல நாடி சோதிட நிலையங் களைப்பற்றியும்,
அவற்றின் உண் மைத்தன் மையினை பற்றியும் எடுத்துரைக்க முனைந்தபோது, சற்று
அதிர்ச்சியூட்டும் தகவல் கள் கிடைக்கப்பெற்றன. அந்த கோவிலைச்சுற்றியுள்ள,
கதிராமங் கலம், பாகசாலை மற்றும் காத்திருப்பு போன் ற கிராமங் களில் மக்கள் ,
தொன் மையான சுவடிகள் போலவே, போலி நாடி சோதிட ஓலைச்சுவடிகள் தயார் செய் யும்
தொழிலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

ஆசியாவிலேயே, பெரிய நூலகங் களில் ஒன் றாக இருந்த, யாழ்ப்பாணம் பொது நூலகம் ,


1981-இல்  எரிக்கப்பட்டது. அதில், தற்போது திராவிடம் என் று சொல்லப்படும்
பகுதிகளைச்சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தின் பண் டைய ஓலைச்சுவடி நூல் கள்
ஏராளமானவை தீக்கிரையாகின. அன் றைய தினம், எரிக்கப்பட்டதில் சுமார் 95,000
ஓலைச்சுவடிகளும், மீண் டும் கிடைக்கப்பெறாத பல புத்தகங் களும் அடக்கம். பல
வருடங் கள் கழித்து இலங் கை அரசாங் கம் இதற்கு மன் னிப்பு கோரியிருந்தது. இரண் டு
நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீக்கு, அத்துணை அறிவுசார், பாரம்பரிய நூல் களும்,
பாழும் அரசியல் மற்றும் இனவெறி காரணங் களால் எரிக்கப்பட்டதற்கு, எந்த
மன் னிப்பையும் ஏற்க முடியாத மனப்பாங் கிலேயே நாம் உள் ளோம்.

சில ஓலைச்சுவடிகளை ‘டிஜிட்டல்’ முறைக்கு, அதாவது படங் களாக


மாற்றிக்கொண் டிருப்பது சற்றே ஆறுதலளிக்கும் செய் தியாகும்.

நம்மிடம் இந்த நூற்றாண் டில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் , நூறில் இருபது சதவீதம்


கூட இல்லையென் றாலும், அதன் பின் னும் நாம் அந்த அரும்பொருளை, பாதுகாக்காமல்
வீணாக அழியவும் தொலையவும் விட்டது, மிக்க வேதனை தரும் செய் கையாகவே
தோன் றுகிறது.

https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 5/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்
Jaffna Library (Pic: tamilguardian)

தன் பங் கிற்கு, இலக்கியங் களையும் காப்பியங் களையும் மொழியின் இலக்கண மற்றும்
வரலாற்றையும் தாங் கி நின் று, அதன் இறுதிக்காலம் வரை அவற்றை பத்திரப்படுத்திய
ஓலைச்சுவடிகளை, அடையாளம், ஆதி மொழி என் று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம்
பராமரித்து, பாதுகாக்க தவறியதை எங் ஙனம் கூறுவது? நாம் இழந்தது வெறும் மர
ஓலைகளை அல்ல. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, ஆராய் ச்சி முடிவுகளை..
நோய் தீர்க்கும் மருந்துகளை.. வாழ்வியல் நெறிகளை.. சிந்தையில் கொஞ்சும் கவிகளை..
அனைத்திற்கும் மேல், நாம் இழந்ததும், இழந்துகொண் டிருப்பதும், ஏறத்தாழ
குறைந்தபட்சம் 2000 வருட அனுபவங் களை...

https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 6/6

You might also like