Sasikumar

You might also like

Download as txt, pdf, or txt
Download as txt, pdf, or txt
You are on page 1of 3

பரட்டை தலை, மழிக்கப்படாத தாடி, பெல் பாட்டம் பேன்ட், நீளமான காலர் வைத்த சட்டை அணிந்த

5 வாலிபர்களுக்கு நடுவில் தாவணி பாவாடை அணிந்த ஒரு பெண் இருக்கும் பர்ஸ்ட் லுக்
வெளியான போது அந்த திரைப்படத்தின் மீது சிறு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது உண்மைதான்.
ஆனால் அந்த வாலிபர்கள் இடுகாட்டில் சாராயம் குடித்துவிட்டு ஆட்டம் போடுவது, கைகளில்
கத்தியை சுழற்றிக் கொண்டு அலப்பறை கொடுப்பதும் போன்ற ஒரு பாடல் வெளியான போது, இது
காமெடி படம் என்றே அனைவரும் நினைத்திருக்கக் கூடும். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, அது
தமிழ் சினிமாவின் தவிர்க்கவியலாத தலைசிறந்த படைப்பாக மாறும் என்று அந்த படத்தின்
இயக்குநரை தவிர வேறு யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

சிறு பட்ஜெட் படங்களுகே உரிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 2008 ம் ஆண்டு ஜூலை 4 ம்
தேதி, 'சுப்ரமணியபுரம்' வெளியானது. ஆனால் அப்படம் ஏற்படுத்திய அதிர்வலை, தமிழ்
திரையுலகில் எக்காலத்துக்கும் நிலைத்திருக்குமாறு செய்துவிட்டது. ஹாலிவுட்டில் மட்டுமே
எடுக்கப்பட்டு வந்த ‘கல்ட் கிளாசிக்’ வகையை, சுப்ரமணியபுரம் படமே தமிழ் சினிமாவிற்கு
அறிமுகப்படுத்தியது. தனது முதல் படைப்பிலேயே இந்த பெருமைக்கு சொந்தக்காரரான சசிகுமார்,
இப்படத்தின் மூலம் வருங்கால தமிழ் இயக்குநர்களுக்கும் ஒரு புதிய வாசலை திறந்துவிட்டார் என்றால் மிகையல்ல.

இப்படத்தின் முதல் சீன், கொட்டும் மழையில் துரோகத்தின் கொடூரத்தை விவரிக்கத் தொடங்கும். இறுதி
சீன், விசுவாசத்தின் அடர்த்தியை விளக்குவதாக முடியும். ஒரு சிற்பி தான் செதுக்கும்
சிலையில், ஒரு மில்லி கிராம் கல்லை கூட தேவையில்லாமல் விட்டுவைக்க மாட்டான். அது போல ஒவ்வொரு
சீனையும் சசிகுமார் காட்சிப்படுத்திய விதத்தில் அவரது உழைப்பும் நேர்த்தியும்
வெளிப்படையாக தெரிந்தது.

80 களின் காலகட்டத்தில் நிகழும் கதையில் சாலிடர் டிவி, சைபால் களிம்பு, காளிமார்க்


சோடா, டி.ஏ.எஸ். பட்டணம் பொடி, ஊர்வசி சோப்பு, ‌ சைக்கிள், உலகத் தமிழ் மாநாடு போஸ்டர்
என காட்சியின் பின்னணியில் வைத்து அசத்தியிருபார். திரையரங்கில் முரட்டுக்காளை பட
கொண்டாட்டம், வானொலியில் சரோஜ் நாராயணசாமியின் குரல், சில்வர் கலர் பல்லவன் பஸ், ஊர்
திருவிழா என அக்கால வாழ்வியலை செல்லுலாய்டில் அற்புதமாய் வார்த்தெடுத்த சசிகுமார்,
படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் 80 களில் வாழும் மனிதர்களாகவே மாற்றிவிடுகிறார்.

படத்தின் முதல் பாதியில் நக்கல், நையாண்டி, கொண்டாட்டமான நட்பு, அழகான காதல் என


மதுரைக்கே உரிய மண் மணத்துடன் பேசி குதூகலப்படுத்திய சசிகுமார், இரண்டாம் பாதியில் அதிர வைக்கும்
துரோகம், உயிர் பறிக்கும் வஞ்சம், உறைய வைக்கும் வன்முறை என சரிவிகிதத்தில்
கலந்தளித்து பார்ப்பவரின் நெஞ்சை உலுக்கி எடுத்திருப்பார்.

சண்டை காட்சிகளில் சரளைக் கற்களை எறிந்து கொள்வது, சோடா பாட்டில்களை உடைத்து அடிப்பது,
பாத்திரங்களை எடுத்து சாத்துவது என இது படம் என்பதையும் தாண்டி, நமது ஊரில் நடக்கும்
சண்டையை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த அனுபவத்தை தந்துவிடுகிறார் இயக்குநர்.

இப்படத்தின் ‘கண்கள் இரண்டால்’ பாடல் காதலின் அழகைச் சொன்னால், ‘காதல் சிலுவையில்’


வலியைச் சொன்னது. ‘மதுரை குலுங்க’ பாடல் உற்சாகம் கொடுத்தால், ‘சுப்ரமணியபுரம்’ என்ற
தீம் சாங் பரபரப்பை பற்ற வைத்து விடுகிறது.

நட்பு, காதல், துரோகம் ஆகியவற்றை களமாக கொண்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு ஒன்றும்
புதிதில்லை. ஆனால் அழகர்-பரமனின் நட்பும் விசுவாசமும், துளசி, கனகு, காசி ஆகியோரது
துரோகமும் ரொம்பவே புதியது.
பழக்கத்துக்காக கொலைகாரர்களாக மாறும் நண்பர்கள் இருவர், உயிருக்கு உயிராய் பழகிய காதலி
மூலமாகவும் நண்பன் மூலமாகவும் கொடூரமாக கொலை செய்யப்படுவது துரோகத்தின் உச்ச கட்டம்.

28 வருடங்களுக்கு பிறகு ஜெயிலிலிருந்து வெளியே வரும் காசி கத்தியால் குத்தப்பட்டு


மருத்துவமனையில் கிடக்கிறான். சாவின் விளிம்பில் இருக்கும் காசியின் மூச்சை நிறுத்திவிட்டு செல்வார்
டும்கான். போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நொண்டியவாறு செல்லும் அவரது நடையில்
கம்பிரமாய் தெரியும் நட்பின் விசுவாசம்.

எந்தவொரு சிறந்த கலை படைப்பும் மற்றொரு சிறந்த படைப்புக்கு வழிவகுக்கும். அந்த வகையில்
`சுப்ரமணியபுரம் படத்தை இந்தியில் உருவாக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால்
பெருமை’என்றும், ‘எனது கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்துக்கு அது தான் இன்ஸ்பிரேஷன்’என்றும் பாலிவுட்
இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியது சுப்ரமணியபுரம் ஆகச்சிறந்த படைப்பு என்பதற்கு மற்றுமொரு சாட்சி.

2
பரட்டை தலை, மழிக்கப்படாத தாடி, பெல் பாட்டம் பேன்ட், நீளமான காலர் வைத்த சட்டை
அணிந்த 5 வாலிபர்களுக்கு நடுவில் தாவணி பாவாடை அணிந்த ஒரு பெண். அடுத்த சீனில் அந்த
வாலிபர்கள் இடுகாட்டில் சாராயம் குடித்துவிட்டு ஆட்டம் போடுவது, கத்தியை சுழற்றி
அலப்பறை செய்வது போன்ற அப்படத்தின் ட்ரைய்லரை பார்த்தவர்கள் இது காமெடி படம் என்றே நினைத்திருக்
கூடும். ஆனால் அது தமிழ் சினிமாவின் தவிர்க்கவியலாத, தலைசிறந்த படைப்பாக மாறும் என்று
அப்படத்தின் இயக்குநரை தவிர வேறு யாரும் நினைத்து பார்க்கவில்லை.
(( breathe - சுப்ரமணியபுரம் ட்ரைலர்))
சிறு பட்ஜெட் படங்களுகே உரிய எந்த வரவேற்பும் இல்லாமல் 2008 ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதி,
'சுப்ரமணியபுரம்' வெளியானது. ஆனால் அப்படம் ஏற்படுத்திய அதிர்வலை, தமிழ் திரையுலகில்
எக்காலத்துக்கும் நிலைத்திருக்குமாறு செய்துவிட்டது.
(( breathe - முதல் ஷோ - ரசிகர்களின் கருத்து ))
ஹாலிவுட்டில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த ‘கல்ட் கிளாசிக்’ வகையை, சுப்ரமணியபுரம் படமே
தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது. முதல் படைப்பிலேயே இந்த பெருமையை பெற்ற
சசிகுமார், இப்படத்தின் மூலம் வருங்கால தமிழ் இயக்குநர்களுக்கும் ஒரு புதிய வாசலையே திறந்துவிட்டார்
என்றால் மிகையல்ல.

இப்படத்தின் முதல் சீன், கொட்டும் மழையில் துரோகத்தின் கொடூரத்தை விவரிக்க தொடங்கும். இறுதி
சீன், விசுவாசத்தின் அடர்த்தியை விளக்குவதாக முடியும். ஒரு சிற்பி தான் செதுக்கும்
சிலையில், ஒரு மில்லி கிராம் கல்லை கூட தேவையில்லாமல் விட்டுவைக்க மாட்டான். அது போல இப்படத்தின்
ஒவ்வொரு சீனையும் சசி செதுக்கி இருப்பார். அதில் அவரது உழைப்பும் நேர்த்தியும்
வெளிப்படையாக தெரியும். அது தான் இந்த படைப்பின் தனித்தன்மை.

80 களின் காலகட்டத்தில் நிகழும் கதையில் சாலிடர் டிவி, சைபால் களிம்பு, காளிமார்க்


சோடா, டி.ஏ.எஸ். பட்டணம் பொடி, ஊர்வசி சோப்பு, ரிக் ஷா சைக்கிள், உலகத் தமிழ் மாநாடு
போஸ்டர் உள்ளிட்டவற்றை காட்சியின் பின்னணியில் வைத்து அசத்தியிருப்பார்.
(( breathe - சுவர் விளம்பரங்கள், போஸ்டர்))
திரையரங்கில் முரட்டுக்காளை பட கொண்டாட்டம், வானொலியில் சரோஜ் நாராயணசாமி குரல்,
சில்வர் கலர் பல்லவன் பஸ், ஊர் திருவிழா என அக்கால வாழ்வியலை செல்லுலாய்டில்
அற்புதமாய் வார்த்தெடுத்த சசிகுமார், படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் 80 களில் வாழும்
மனிதர்களாகவே மாற்றிவிடுகிறார்.
(( breathe - visuals ))
படத்தின் முதல் பாதியில் நக்கல், நையாண்டி, கொண்டாட்டமான நட்பு, அழகான காதல் என
மதுரைக்கே உரிய மண் மணத்துடன் பேசி குதூகலப்படுத்திய சசிகுமார், இரண்டாம் பாதியில் அதிர வைக்கும்
துரோகம், உயிர் பறிக்கும் வஞ்சம், உறைய வைக்கும் வன்முறை என சரிவிகிதத்தில்
கலந்தளித்து பார்ப்பவரின் நெஞ்சை திக்குமுக்காட செய்வார்.
சண்டை காட்சிகளில் சரளைக் கற்களை எறிந்து கொள்வது, சோடா பாட்டில்களை உடைத்து அடிப்பது,
பாத்திரங்களை எடுத்து சாத்துவது என இது படம் என்பதையும் தாண்டி, மதுரையில் நடக்கும்
சண்டையை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த அனுபவத்தை தந்துவிடுகிறார்.
(( breathe - காதல் மற்றும் வன்முறை காட்சிகள் ))
இப்படத்தின் ‘கண்கள் இரண்டால்’ பாடல் காதலின் அழகைச் சொன்னால், ‘காதல் சிலுவையில்’
வலியைச் சொன்னது. ‘மதுரை குலுங்க’ பாடல் உற்சாகம் கொடுத்தால், ‘சுப்ரமணியபுரம்’ என்ற
தீம் சாங் பரபரப்பை பற்ற வைத்து விடுகிறது.
(( breathe - visuals ))
நட்பு, காதல், துரோகத்தை களமாக கொண்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதில்லை.
ஆனால் அழகர்-பரமனின் நட்பும் விசுவாசமும், துளசி, கனகு, காசி ஆகியோரது துரோகமும்
ரொம்பவே புதியது.
பழக்கத்துக்காக கொலைகாரர்களாக மாறும் நண்பர்கள் இருவர், உயிருக்கு உயிராய் பழகிய காதலி
மூலமாகவும் நண்பன் மூலமாகவும் கொடூரமாக கொலை செய்யப்படுவது துரோகத்தின் உச்ச கட்டம்.
(( breathe - அழகர், பரமன் கொலை visuals ))
ஜெயிலிலிருந்து வெளியே வரும் காசி கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சாவின்
விளிம்பில் கிடக்கிறான். அவனது உயிர் மூச்சை, எந்த குற்ற உணர்வும் இல்லாமல்
நிறுத்திவிட்டு நொண்டியவாறு செல்லும் டும்கான் நடையில் கம்பிரமாய் தெரியும் நட்பின்
விசுவாசம்.
(( breathe - டும்கான் visuals ))
இப்படத்தை பார்த்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், `சுப்ரமணியபுரத்தை இந்தியில்
உருவாக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால் பெருமை’ என்றும், ‘எனது கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்
படத்துக்கு அது தான் இன்ஸ்பிரேஷன்’ என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு சிறந்த கலை படைப்பும் மற்றொரு சிறந்த படைப்புக்கு வழிவகுக்கும் என்பதற்கும் சுப்ரமணியபு
ஆகச்சிறந்த படைப்பு என்பதற்கும் அனுராக் காஷ்யப் கூறியது மற்றுமொரு சாட்சி.
முழுநேர நடிகரான சசிகுமார் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்து தமிழ் சினிமாவையும்
தாண்டி இந்திய சினிமாவையும் பிரமிக்க வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின்
எதிர்பார்ப்பு. அதனால் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம் வாழ்த்துகள் சசிகுமார்.

ஒரு பொண்ண பார்த்துட்டே இருந்தா பத்தாது அவ மனசிலயும் என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும்,


'அய்யோ பரமா... நீ எதச் சொன்னாலும் நான் அப்புறமா கேட்கிறேன். முதல்ல அவங்கள
கொல்லணும். எனக்கு சாவு பயத்த காட்டிட்டாய்ங்கடா'
பழக்கத்துக்காக பழக்கத்துக்காகனு வாழ்க்கையே பாழாக்கிட்டோமேடா போன்ற வசனங்கள்
எப்போதும் நிலைத்திருக்கும்.
மதுரைக்கே உரிய ரவுசும் தினுசும் படம் எங்கும் நிறைந்திருக்கும்
மொக்கச்சாமியின் பூட்டிய வீட்டில் லந்து கொடுப்பது
திருவிழாவில் மொக்கச்சாமியை தூக்கிச் சென்று அடிப்பது
ராசாத்தி-மொக்கச்சாமியை வீட்டில் வைத்து பூட்டுவது
80 களில் போலியோ பாதிப்பு அதிகம் என்பதால் ஐவரில் ஒருவராக, போலியோவால் பாதிக்கப்பட்ட
டும்கானை பயன்படுத்தியது
துளசி, காசி கதாபாத்திரங்கள் துரோகம் செய்யும் என்பதை ‘விசுவல் ஸ்டோரி டெல்லிங்’
முறையில் அழகர், பரமன் ஆகியோரின் முதுகுக்கு பின்னாடி நிறுத்தி இருப்பது.

You might also like