Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

கண்டிப்பாக வாக்களியுங்கள், உதயசூரியனுக்கு

வணக்கம்.

சொந்தமா ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு, ஆனா இத பேசியே ஆகணும்னு


தோனுச்சு. இன்னொரு காரணம், இன்னிக்கு செய்திதாள்களில் வந்த விளம்பரம்.
ஆனால் அது விளம்பரம் மாதிரியை இல்லாம செய்தி மாதிரி வந்தது தான்
முகம் சிவக்க வச்சது.

நாம கொஞ்சம் பேசணும். இந்த சமயத்த விட்டா இனி பேச வாய்ப்பே


இல்லாமல் போகலாம். ஏன்னா, எனக்கு தெரிஞ்சு வேறு எந்தத் தேர்தல்களையும்
விட இந்தத் தேர்தல் தமிழ் நாட்டுக்கு வாழ்வா சாவா தேர்தல். கடந்த பத்து
வருடமா ஆதிமுக தான் ஆட்சியில இருக்கு. இதையெல்லாம் தொட வாய்ப்பை
இல்லன்னு நெனச்சிக்கிட்டு இருந்த எல்லாத்தயும் மத்தியில் ஆளும் காவி அரசு
கைய வச்சுடுச்சு. அதையெல்லாம் எதிர்க்காம தமிழ்நாட்டின் ஆளும் வர்க்கம்
சங்கி கூட்டமா மாறி கிடக்குறாங்க.

1. NEET கொலைகள்:
NEET மரணங்கள் எல்லாமே அரசாங்கக் கொலைகள் தான். NEET
கொண்டுவந்து நம்மோட மருத்துவ இடங்களை திருடிட்டாங்க. இந்த
கட்டமைப்பெல்லாம் நம்மோட வரிப்பணத்துல நம்ம பிள்ளைங்களுக்காக
உருவாக்குனது. எதிர்த்து கேள்வி கேட்காம, காலடியில் விழுந்து
கிடந்தானுங்க. அதன் விளைவு, விலை மதிப்பில்லாத நம் மக்களுடைய
உயிர் போனது தான்.
NEET அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்ற பொழுது ஒரு
தோழர் இப்படி எழுதினார் – இத்தனை வருடங்களா ஒவ்வொரு
கலந்தாய்வின் பொழுதும் வேட்டி கட்டிக்கிட்டு, கைலி கட்டிக்கிட்டு,
கையில மஞ்சப்பையோட, மத்தியானம் சாப்பிட சோறு கட்டிக்கிட்டு வரும்
அப்பாக்கள், கசங்குன சட்டை போட்டுகிட்டு வந்த பசங்க அதிகமா
இருப்பாங்க. கலந்தாய்வு முடிச்சிட்டு போகும்போது பசங்க மற்றும் அப்பா
முகத்துல அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும். கலந்தாய்வுக்கு கார்ல வர்ற
பசங்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனால் NEET அடிப்படையில
நடந்த கலந்தாய்வுல மேல் சொன்ன எதுவுமே நடக்கல. வேட்டி, கைலி,
கசங்குன சட்டை, கட்டிச்சோறுன்னு எதையும் பாக்கல. வழக்கத்துக்கு
மாறாக எண்ண முடியாத அளவுக்கு கார்கள் தான் வந்துதுன்னு
எழுதிருந்தார். இதுல பாதிக்கபட்டது முழுக்க கிராமப்புற ஏழை எளிய
மாணவர்கள். நம்ம பசங்களோட மருத்துவ கனவுல லோடு கணக்குல
மண்ணை அள்ளிப் போட்டுட்டு வெற்றி நடைப் போடும் தமிழகம்ன்னு
விளம்பரம் ம** வேற. ஓட்டளிக்கும் போது தங்கை அனிதாவோட
விரலாக இருங்க.
2. நவன
ீ குலக்கல்வி – புதிய கல்விக்கொள்கைகள்:
அதோட நிக்கல. அடுத்து தேசியக் கல்விக் கொள்கைன்னு ஒன்ன
கொண்டுவந்தானுங்க. இது எதுக்காகன்னு கேட்டா, கல்வியோட தரத்த
உயர்த்தவாம். எப்படி டா உயர்த்துவன்னு கேட்டா, அஞ்சாம் வகுப்பு,
எட்டாம் வகுப்பு பசங்களுக்கு பொதுத்தேர்வு வச்சாம். அதோட இல்லயாம்,
பசங்களுக்கு பள்ளிப் படிப்பின் போதே தொழிற்கல்வி பயிற்சி கொடுத்து
நம்முடைய கலைகளை அழியாம காப்பாத்துவாங்களாம். சமீ பத்துல ஒரு
வடியோ
ீ (பல வடியோக்கள்
ீ இருக்கு) ஒன்னு சமூக வலைத்தளங்களில்
பரவுச்சு. அதுல ஒருத்தர் (‘அவா’ யாருன்னு உங்களுக்கே தெரியும்) தச்சன்
புள்ள தச்சன் தான், துணி துவைக்கிறவன் புள்ள துணி துவைக்கிறவன்
தான், முடி வெட்டுறவன் புள்ள முடி வெட்டுறவன் தான், அப்டீன்னு
ரொம்ப வரியமா
ீ பேசிக்கிட்டு இருந்தாரு. திராவிட ஆட்சிக்கு முன்பு
இராஜாஜி கொண்டுவந்த குலக் கல்வி முறையோட modern version தான்
இந்தப் புதியக் கல்விக் கொள்கை. சரி இதையாவது அடிமைங்க
எதிர்த்தாங்களா? இல்ல. மோடியோட கால நக்கிக்கிட்டு கெடந்தானுங்க.
இந்தக் கல்விக் கொள்கையும் கிராமப்புற ஏழை எளிய பிற்படுத்தபட்ட
ஆதிதிராவிட மாணவர்களுக்கு எதிரானது தான். இந்தக் கல்விக்
கொள்கையால கிராமப்புற பசங்க இனி கனவுக்கூட காண முடியாது.
ஒருத்தன்கூட முன்னேற முடியாது. சம்புகனோட உயிரை எடுத்த,
ஏகலைவனோட கட்டை விரலை வெட்டியக் கூட்டதுக்கு இது ஒன்னும்
புதுசு இல்ல. ஓட்டளிக்கும் படித்து கொண்டிருக்கும், படிக்கப் போகும்
நம்ம பசங்களை நெனச்சு பாருங்க.
(https://panampazham.blogspot.com/2020/01/blog-post.html - கல்வி சார்ந்து கொஞ்சம்
நாளுக்கு முன்னாடி இதை எழுதினது)
3. தூத்துக்குடி கொலைகள்:
தூத்துக்குடியில நல்ல காத்து வேணும்னு கேட்டதுக்கு 13 பேர சுட்டு
கொன்னாங்க. சொந்த மக்களை கொல்ல எப்படி மனசு வரும். அனில்
அகர்வாலுக்காக இந்த அடிமைங்க சுட்டு கொன்னாங்க. எடப்பாடிகிட்ட
கிட்ட கேட்டா அவரு செய்தி பாத்துதான் தெறிஞ்சிக்கிட்டன்ன்னு
சொன்னாரு. மக்களோட உயிருக்கு மரியாதை இவ்வளவுதான் இந்த
ஆட்சியில. இன்னும் மனசு கனமா இருக்கு. ஓட்டளிக்கும் போது
கொல்லப்பட்ட மக்களோட குடும்பங்களின் விரலாக இருங்க.
4. பாலியல் வன்கொடுமைகள்:
பொள்ளாச்சியில ஆதிமுக கட்சி ஆளுங்க பாலியல் கொடுமையில
ஈடுபட்டது. வடநாட்டுல நடக்குற கொடுமையெல்லாம் இங்க நடந்துச்சு.
அந்தப் பொண்ணுங்களோட அழுகுரலுக்கு இன்னும் நீதி கிடைக்கல.
எல்லாரையும் இன்னும் கைது செய்யல. கைய்யில எல்லா ஆதாரங்களும்
இருக்கு. அப்படி இருந்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இன்னும் கைது
செய்யல. அதுல சம்பந்தப்பட்ட ஒருத்தருக்கு திரும்ப சீட்டு கொடுத்திருக்கு
ஆதிமுக. எவ்வளவு ஆணவம் இருந்தா சீட்டு கொடுப்பானுங்க. சட்ட
ஒழுங்கு இல்லாத இடத்துல பொருளாதார முன்னேற்றம் இருக்காது.
பொருளாதார முன்னேற்றம் இல்லாத இடங்களில் தான் பாசிசம்
எளிமையா வளரும். அதுக்கு தான் இந்த பாஜக முயலுது. ஓட்டளிக்கும்
போது பாதிக்கப்பட்ட பெண்களோட விரலாக இருங்க.
5. சாத்தான்குளம் கொலைகள்:
தூத்துக்குடி காவல் நிலயத்தில் நடந்து கொலைகள். அப்பாவையும்
மகனையும் அடிச்சே கொன்னுருக்காங்க. ஆதிமுக ஆட்சியில லாக்கப்
மரணங்களுக்கு பஞ்சமே இருக்காது. எம்‌
ஜி‌
ஆர் காலந்தொட்டே
இப்படிதான். பிம்பச்சிறை (by MSS Pandiyan) படிச்சி பாருங்க, புரியும். அந்த
புத்தகத்தில் இருந்து சில வரிகள்......
“எண்பதுகளின் இறுதியில் இந்தியா முழுக்க உள்ள பத்திரிக்கைகள் வட
தமிழகத்தின் வட ஆர்க்காடு, தருமபுரி மாவட்டங்களில் இந்திய
கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிய) கட்சியினரை சல்லடை போட்டுத்
தேடி எப்படி போலீஸ் வேட்டையாடின எனத் தொடர்ந்து செய்தி
வெளியிட்டன. ஆகஸ்ட் 6 முதல் டிசம்பர் 28 வரை காவல்துறை
ஈவிரக்கம் காட்டாமல் நிராயுதபாணியான 15 சி.பி.எம். (மா-லெ)
செயல்பாட்டாளர்களைக் கொன்றார்கள். ஜூன் 1981-ல் மேலும் நான்கு
பேரை காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த பொழுது கொன்றார்கள்.
இறந்து போனவர்களில் செல்வம், ராஜப்பா, பெருமாள், சுப்பிரமணியன்,
சண்முகம், பாலன், மனோகரன், கண்ணமணி, தனபால், அன்பு, சரவணன்,
சின்னத்தம்பி, தர்மன், நடராசன், மச்சக்காளை ஆகியோரில் எட்டு பேர்
பட்டியல் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பழங்குடியினப் பிரிவைச்
சேர்ந்தவர்.1 இவர்கள் தங்களின் உயிர்களை, இந்த வறண்ட, பின்தங்கிய
மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளிகளின் நலனுக்காக, சில
கொடூரம் மிகுந்த, வன்முறையைக் கையாண்ட நிலச்சுவான்தார்களை
எதிர்கொண்டதற்காக விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. எந்த
உறுத்தலும் இல்லாமல் எம்.ஜி.ஆர். பொதுவெளியில் தன்னுடைய
காவல்துறையினரின் செயல்களுக்கு ஆதரவாய் நின்றார்”
மேலும் சில வரிகள்....
“ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு (எம்.ஜி.ஆரின் கீ ழே உள்ள) இந்த
மாநிலம் காவல்துறையின் தகாத அட்டூழியங்களுக்குப் பெயர்
பெற்றுவிட்டது - அரசு அனுமதித்த கொலைகளாக என்கவுன்டர் என்கிற
பெயரில் வட ஆர்க்காடு, தருமபுரி மாவட்டங்களில் 22 இளைஞர்கள்
கொல்லப்பட்டது; இந்தப் பகுதிகளில் கடந்த ஐந்து வருடங்களில்
காவல்துறையின் பேரச்சம் தரும் ஆதிக்கத்தைச் செயல்பட விட்டது;
சிறை மரணங்கள் கைதுகளுக்கு இடையேயான விகிதம் மிக அதிகமாக
இருப்பது; ஒரு வருடத்துக்கும் மேலே சிறையில் மிக அதிக மக்களை
(1.5 லட்சம்) முதல் தகவல் அறிக்கை தராமலே வைத்திருப்பது;
செயல்பாட்டாளர்கள், அமைப்புகளின் பொது உரிமைகள் மீ தான தொடர்
தாக்குதல்கள்.... இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-அ (தேசத்துரோகம்)
கீ ழ் இந்தியாவிலேயே மிக அதிக வழக்குகளை, நான்கு வருடத்தில் 300
வழக்குகள் என்கிற அளவுக்கு, பதிவு செய்தது. அச்சட்டத்தின் மூலம்
ஏழைகள், கல்வி அறிவில்லாத கிராமப்புற குடிமகன்கள், வக்கீ ல்கள்,
பதிப்பாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், பத்து வயது சிறுவன்,
ஏன் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்று பல அப்பாவிகளை அரசு
கொடுமைப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டது.”
ஓட்டளிக்கும் போது ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அவர்களோட
விரலாக இருங்க.
6. வேலைவாய்ப்பு:
இந்த அடிமை அரசாங்கம் தமிழர்களுக்கு இழைத்த இன்னொரு பெரிய
துரோகம், நம்ம வேலை வாய்புகளை வட நாட்டு இளைஞர்களுக்கு
தாரைவார்த்தது. படித்த திறமையுள்ள இலட்ச கணக்கான இளைஞர்கள்
நாம ஊர்ல இருக்குற பொழுது, வட நாட்டு ஆட்களை நம்ம ஊர்க்குள்ள
விட்டதெல்லாம் மன்னிக்கவே முடியாத குற்றம். வருமான வரித்துறை,
தென்னக ரயில்வே, SBI, என்‌
எல்‌
சி என எல்லா துறைகளிலும் நாம
வஞ்சிக்கப்பட்டோம். காரணம் இந்த அடிமைகளின் ஆட்சி. TNPSC, TNEB யில்
கூட அவனுங்க உள்ள வந்துட்டானுங்க. அதனால ஓட்டளிக்கும் போது
படித்த இளைஞர்களோட விரலாக இருங்க.
7. சமூக நீ திக்கு அடிப்படையான இடஒதுக்கீ ட்டில் கைவைத்தல்:
இந்த மத்திய அரசாங்கம் எல்லோருக்குமான அரசாங்கமே கிடயாது.
ஒருபக்கம் நமக்கான வேலை வாய்ப்புகளை பறிச்சு வடக்கன்களுக்கு
கொடுக்குறாங்க. இதுவே ஒரு பெரிய துரோகம். அதோட இல்லாம சமூக
நீதிய குழி தோண்டி புதைக்கிற வேலைகளை எப்பவோ ஆரமிச்சுட்டாங்க.
அதற்கு அச்சாரமா தான் இந்த 10% EWS இட ஒதுக்கீ டு. ஆவாளுக்கு
தேவைப்படும் cut-off mark எஸ்‌
சி/எஸ்‌
டி பிரிவுக்கான cut-off mark ஐ விட
கம்மி. இதெல்லாம் எவ்வளவு பெரிய கொடூரம். அரசியல் அமைப்பு
சட்டத்திலயே இதற்கு அனுமதி கிடயாது. ஆனால் அதையெல்லாம்
பொருட்படுத்தாமல் சர்வாதிகார போக்கை இந்த அரசாங்கம்
கடைபிடிக்கிறது. இதையெல்லாம் தட்டி கேட்க வேண்டிய ஆதிமுக அரசு,
அவங்க கால்ல விழுந்து கிடக்கு. அதனால ஓட்டளிக்கும் போது சமூக
நீ தியின் பக்கம் நின்று வாக்களியுங்கள்.
8. மற்ற கொடூரங்கள்:
CAA/NRC சட்டத்தை கொண்டு வந்தாங்க. ஆதிமுக பாமக ஓட்டு
போடலன்னா அந்த சட்டம் நிறைவேறி இருக்காது. இந்த ஒருக் காரணம்
போதும் இவனுங்களை தோற்கடிப்பதற்க்கு. அப்புறம் சேலம் எட்டு
வழிச்சாலை. அதுவும் விவசாய நிலங்களை அழித்து. GST நிலுவைத்
தொகை இன்னும் வரல. புயல் வெள்ளத்தின் போது கேட்ட இழப்பீடு
ஒழுங்கா கொடுக்கல. பெட்ரோல் டீசல் விலை தினமும் ஏத்துறாங்க.
அதனால அத்தியாவசிய பொருட்களின் விலை அதிமாயிட்டே போகுது.
கொரோனா வை சரியாக கையாளல, அதனால் லட்ச கணக்கான மக்கள்
இறந்தாங்க. கோடிக்கணக்கான மக்கள் நடந்தே சொந்த ஊருக்கு
போனாங்க. போற வழில கொல்லப்பட்டவர்கள் ஏராளம். நடுத்தர வர்க்கம்
30% குறைந்துள்ளது. ஏழைகளின் எண்ணிக்கை 7.5 கோடியாகவும் உயர்ந்து
இருக்கலாம் என்று ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது. கீ ழடி ஆராய்ச்சிய
முடக்க எவ்வளவு முயற்சி செஞ்சாங்க. திரு அமர்நாத் ராமகிருஷ்ணன்
மற்றும் திரு. சு. வெங்கடேசன் இல்லன்னா கீ ழடிய ஊத்தி மூடி
இருப்பானுங்க.
https://www.thehindu.com/news/national/coronavirus-pandemic-may-have-doubled-poverty-in-
india-says-pew-study/article34110732.ece

இன்னும் நிறைய எழுதிகிட்டே இருக்கலாம். மறந்தும் கூட ஆதிமுக


வுக்கு ஓட்ட போட்டுடாதீங்க. நம்மல ஆமாம் சாமி போட
வச்சுருவானுங்க. அதனால் ஓட்டளிக்கும் போது மேல்சொன்ன
எல்லாத்தாயும் மனதுல வச்சு யோசிச்சு பார்த்து வாக்கை செலுத்துங்கள்.
DMK கிட்ட குறை இல்லயா ன்னு கேப்பானுங்க. குறைகள் இல்லாத
காட்சிகளே உலகத்தில் கிடயாது.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
பொருள்: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும்
ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை
என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான
முடிவுக்கு வரவேண்டும்.
வாரிசு அரசியல் செய்றாங்கன்னு சொல்லுவாங்க. ADMK வுல எம்‌
ஜி‌
ஆர் க்கு
அப்புறம் எந்த தொண்டனும் வரல, ஜானகி தான் முதலமைச்சர் ஆனாங்க.
அவங்களுக்கு அப்புறமும் எந்த தொண்டனும் வரல. எம்‌
ஜி‌
ஆர் கை
காட்டுன ஜெயலலிதா தான் வந்தாங்க. அப்புறம் OPS ஐ ஜெயலலிதா கை
காட்டுனாங்க. EPS உருண்டுகிட்டே போயி சசிகலா கிட்ட அழுது பதவியை
வாங்கிக்கிட்டாரு. இப்படி தான் எல்லாமே. இந்த அரசியல் புரிதல்
இருக்கணும்.
ஊழல் கட்சின்னு சொல்லுவாங்க. நிரூபிக்கப்பட்ட வழக்கு ஒன்னு
காட்டுன்னு கேட்டா மூடிக்கிட்டு போய்டுவானுங்க.
இந்தியாவிலயே ஊழலுக்காக ஆட்சியில் இருந்த முதலமைச்சர் சிறைக்கு
போனது ஜெயலலிதா (ஏ 1) தான். அவங்க உயிரோட இருந்திருந்தா
பார்ப்பன சிறையில ஊதுவத்தி உருட்டிட்டு வந்துருப்பாங்க.
இன்னும் நிறைய சொல்லலாம். இப்போதைக்கு இது போதும்.

தமிழகத்தின் உயிர் உங்களோட விரல்களில் உள்ளது.

உதய சூரியன் உதிக்கட்டும். இருள் விலகட்டும்...

நன்றி.
ஒன்று மதத்தின் பெயரில் கொலை செய்யும் கூட்டம், மற்றொன்று
சாதியின் பெயரில் கொலை செய்யும் கூட்டம். இவனுங்களுக்கு
உங்களுடைய வாக்கை செலுத்தலாமா? ‘பூ’ கட்சியையும் ‘பழ’க்
கட்சியையும் தான் சொல்றன். சிந்தியுங்கள். இவனுங்கள ஒழிச்சா தான்
தமிழ்நாடு அமைதியா இருக்கும். மற்ற கட்சிகளெல்லாம் பாஜக வுக்கு
உழைச்சு ஓட்ட பிரிக்க தேர்தலில் நிக்குறாங்க. கமல்ஹாசனுக்கு சமூக
நீதித் தெரியல, இட ஒதுக்கீ டு பத்தி தெரியல.
சீ(சா)மானுக்கு???? ஒரு போட்டோஷாப் செஞ்ச படத்தை வச்சுசுகிட்டு
அந்தாளு பேசுற பேச்சையெல்லாம் கேட்க ஒரு பாவப்பட்ட
கூட்டம்கூட்டம். தேர்தல் முடிஞ்ச இவங்க எல்லாம் காணாம
போய்டுவாங்க.

You might also like