Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

இன்றைய காலத்தில் இணையத்தில் பரிட்சயமான பெரியவர்கள் முதல், கணினியை கையாளத்தெரிந்த

சிறு பிள்ளைகள் வரை ஒரு சேர தற்பெருமை அடித்துக்கொள்ளும் களம் தான் இந்த சமூக
வலைத்தளங்கள் .

முதலாவதாக இணையவழி விளம்பரப்படுத்தும் நிறுவனங்களுக்கே இது பெரிதும் பயன்படுகின்றது.


அதாவது ஒவ்வொரு உறுப்பினர்களின் சுய தகவல்கள் மற்றும் அவர்களுடைய இருப்பிடம்,
விருப்பமானவைகள் , அவர்கள் இணையத்தில் தேடும் தகவல்கள் அல்லது உலவும் பக்கங்களை வைத்து
, அதற்கு தொடர்புடைய நிறுவனங்களின் விளம்பரங்களை அவர்களிடத்தில் சேர்க்கின்றது. தொழில்
புரிவோர் மற்றும் அலுவல்களில் உள்ளோர்க்கு, தங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களை தொடர்பு
கொண்டு, தகவல் பரிமாற்றங்கள் மற்றும் காணொளி சந்திப்புகள் மூலம் தங்களின் குறைவான நேரத்தில்
அதிக உற்பத்தி திறனை ஏற்படுத்திக்கொள்ள பயன்படுகின்றது.

கல்வி மேம்பாடு – மின் இணைவு தளம், சமூகவியல் வலைகள் சிறந்த அறிவுக் களஞ்சியங்கள் ஆகும்.
புதிய அறிவைப்பெற, கல்வி சம்பந்தமான அறிவைப் பெற, கேள்வி பதில்களை உடனுக்குடன் பரிமாற,
சமூகவியல் வலை சிறப்பான சாதனமாகும்.

இளைஞர் சமுதாயத்தில் பலரை தற்பெருமை மிக்கவர்களாக உருவாக்குகின்றது. தங்களின் இயல்பான


வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை , புகைப்படம் , குறும்படம் மூலம் பகிர்ந்துக்கொள்ளுதல் என்பது
ஏற்றுகொள்ளகூடியதாக இருந்தாலும் , அதைவிட அதிகமாக தன் நிலைமைக்கு மீறிய
இயல்புவாழ்கைக்கு புறம்பான ஒரு பெருமை உலகை காண்பிக்கும் வகையிலேயே தகவல்கள்
பதியப்படுகின்றது. பிறருடைய புகைப்படம் மற்றும் தகவல்கள் மூலம், தன்னிலைக்கு மீறிய வாழ்ககை ்
தரத்தை வாழ முற்படுத்துகின்றது. இதனால் பெற்றோர்களுக்கும் , பிள்ளைகளுக்கும் இடையே மன
உளைச்சலையே விதைக்கின்றது.

வங்கிகளில் நம் அடையாளத்தை உறுதிசெய்துக்கொள்ள பயன்படுத்தும் பிறந்த நாள் , மற்றும் பலவித


இரகசியம் பேணப்பட வேண்டிய தகவல்களையும் பொதுவில் வைத்து விடுகின்றோம். இதனால், தகவல்
திருட்டு மூலம் பலவிதமான இழப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றது.

நாம் பொதுவில் வைக்கும் தகவல்களை பயன்படுத்தி நாமே அறிந்திராத சில தீயவர்கள், நம்
நண்பர்களிடமோ , உறவினர்களிடமோ மோசடிகள் செய்வதற்கு வழிவகுக்குகின்றது.

You might also like