கதிர் எழுந்திரு மணியாச்சு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

“கதிர் எழுந்திரு மணியாச்சு”

என்று அம்மாவின் குரல் கேட்டதும் கதிரவன் எழுந்தான். எழுந்ததும் அவனுடைய காலை


கடனை முடித்தான். கதிரவன் தன் நண்பர்களுடன் காற்பந்து விளையாடுவதற்கு தயாராகிக்
கொண்டிருந்தான். அவ்வேளையில் தான் அவன் பள்ளியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது;
அதில் அவன் நிச்சயமாக கலந்துகொள்ளவேண்டும் என்று ஆசிரியர் கூறியது நினைவுக்கு
வந்தது.
‘அய்யோ இப்பவே மணியாச்சு’
என்று கதிரவன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். உடனே அவனுடைய கால்கள்
அவன் அப்பாவின் அறையை நோக்கி சென்றது.
“ அப்பா! உடனே தயாராகுங்கள் நான் பள்ளி நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும்.”
என்றான் கதிரவன்.
“பள்ளி நிகழ்ச்சியில் ஏன் என்னிடம் கூறவில்லை நான் முன்பே தயாராகி இருப்பேன்
அல்லவா. இன்று எனக்கு நிறைய வேலை உண்டு.”
என்றார் கதிரவனின் அப்பா. கதிரவன் அவன் அப்பாவிடம் ஏதோ ஏதோ கூறி சமாதானம்
செய்தான். கதிரவனும் அவனுடைய அப்பாவும் விரைவாக மகிழுந்தில் ஏறி
பள்ளிக்கூடத்திற்கு சென்றனர்.
“ மணியாச்சு! நிகழ்ச்சி முடியறதுக்குள்ள போகணும்பா… சீக்கிரம் வண்டி ஓட்டுங்க…”
என்றான் கதிர்.

அப்பா முடிந்தவரைக்கும் வாகனத்தை வேகமாக ஓட்டினார் . அப்பொழுது ஒரு வயதான


பாட்டி சாலையோரத்தில் மயங்கி கிடந்தார். கதிரவனும் அவனுடைய அப்பாவும் என்ன
செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
“நிகழ்ச்சிக்கு நேரமாகுது பாட்டியை பார்த்தாலும் பாவமா இருக்கு என்ன செய்யலாம்?”
என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தான் கதிரவன். கதிர் அவனுடைய கதிர் அவனுடைய
நண்பன் அவன் அப்பாவுடன் வாகனத்தில் அந்த சாலையை தாண்டினார்.
அப்பொழுதுதான் கதிரவனுக்கு ஒரு யோசனை வந்தது.
“நீங்கள் பாட்டியை உங்கள் வாகனத்தில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு கூட்டிச்
செல்லுங்கள் நான் என் நண்பனின் அப்பா வாகனத்தில் சென்று கொள்கிறேன்.”
என்றான் கதிரவன். அவன் சொன்னது போலவே பாட்டியும் மருத்துவமனைக்கு கூட்டிச்
சென்று நண்பன் அவனுடைய அப்பா வாகனத்தில் சென்று அந்த நிகழ்ச்சியில்
கலந்துகொண்டன். பிறகு அவனுடைய அப்பாவும் வேலைக்கு சென்றார். நான் ஒரு உயிரை
காப்பாற்றி உள்ளேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்று நடந்த சம்பவத்தை
என் மனதில் சிலை மேல் எழுத்து போல பதிந்துள்ளது

You might also like