Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

மலேசியா

மலேசியா (Malaysia), தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு


நாடாகும். 13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக்
கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என 2 பிராந்தியங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தீபகற்பம் வடக்கே தாய்லாந்துடன் நில, மற்றும் கடல் எல்லையையும், தெற்கில்
சிங்கப்பூர், வடகிழக்கே வியட்நாம், மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும்
கொண்டுள்ளது. 

கிழக்கு மலேசியா புரூணையுடனும், இந்தோனேசியாவுடனும் நில, மற்றும் கடல்


எல்லைகளையும், பிலிப்பீன்சு, வியட்நாம் ஆகியவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவின்
தலைநகரும், மிகப்பெரிய நகரமும் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜாயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகராகும்.
30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்களடர்த்தி
கூடிய நாடாகும். ஐரோவாசியாக் கண்டத்தின் தென்முனையான தாஞ்சுங் பியாய் மலேசியாவில்
அமைந்துள்ளது. வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான
மலேசியாவில் இனப்பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த
பரப்பளவு 329,847 சதுர கிலோமீ ட்டர்கள் (127,350 சதுர மைல்கள்). தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும்
20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில்
பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர்.
பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய
சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.

1957 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக ஐந்தாம்


முகம்மது ஆட்சியில் உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற
நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.

2018 மே 9 இல்நடைபெற்ற 14 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின் மகாதீர் பின் முகம்மது மலேசியாவின் 7 வது


பிரதமராக 10 ஆம் திகதி மே மதம் 2018 பதவியேற்றார்.

சமயம்
18 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோட பாருவில் கட்டப்பட்ட பள்ளிவாசலே மலேசியாவில் மிகவும் பழையதாகும்

மலேசிய நாட்டின் அதிகாரபூர்வமான சமயமாக இஸ்லாம் இருந்தபோதிலும் மற்ற சமயங்களை சுதந்திரமாகப்


பின்பற்றச் சட்டம் அனுமதிக்கிறது. தோராயமாக 61.3% பேர் இஸ்லாம் சமயத்தையும் 19.8% பேர் புத்த
சமயத்தையும் 9.2% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.3% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய
சமயம் மற்ற சீன சமயங்களையும் 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப்
பின்பற்றுவர்களாகவும் உள்ளனர்.

சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் ஆவர். 2010 மக்கள் தொகை கணக்கின் படி சீன
வம்சத்தவர்களில் 83.6% பேர் பௌத்த சமயத்தையும் 3.4 % பேர் தாவோ சமயத்தையும் 11.1% பேர் கிறுத்துவ
சமயத்தையும் சிறிய அளவில் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சத்தவர்களில் 86.2% பேர்
இந்து சமயத்தையும் 6.0% பேர் கிருஸ்த்துவ சமயத்தையும் 4.1% பேர் இஸ்லாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள்.
மலாய் இனம் அல்லாத பூமிபுத்திரர்களில் 46.5% பேர் கிருஸ்த்துவ சமயத்தையும் 40.4% பேர் இஸ்லாம்
சமயத்தையும் பின்பற்றுகிறார்கள் [33].

முஸ்லிம்களின் சமயம் தொடர்பான சிக்கல்களைச் சரியா நீ திமன்றங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக


மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம், மதத்திலிருந்து விலகல் போன்றவற்றை அது விசாரிக்கும்.
குற்ற வழக்குகளும் உரிமையியல் குடிசார் வழக்குகளும் இதன் வரம்புக்குள் வராது. முசுலிம் அல்லாதவர்களின்
சிக்கல்கள் சரியா நீ திமன்ற வரம்புக்குள் வராது. உரிமையியல் நீ திமன்றங்கள் இசுலாம் தொடர்பான
வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றைச் சரியா நீ திமன்றங்களிடம் அனுப்பிவிடும்.
மொழி

மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத்தப்பட்ட


வடிவமாகும். ஆங்கிலம் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. 1969 இல் நடந்த கலவரத்துக்குப் பின்
மலேசிய மொழி முதன்மைப்படுத்தப்பட்டது [35] . ஆங்கிலம் இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது. பொதுப்
பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது [36]
[37]
. பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட மலேசிய ஆங்கிலம் வணிகத்தில் பெரும்பாலும்
பயன்படுத்தபடுகிறது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய்,
சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும் [38][39].

மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன [40] இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள்


பேசப்படுகின்றன.[41] கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின்
மொழியைப் பேசுகின்றனர். இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள்
இபான் மொழியையும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர் [42]. மலேசியாவிலுள்ள சீனர்கள் தென்
சீனத்தின் பல வட்டார மொழிகளைப் பேசுகின்றனர். கண்டோன ீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய
மொழி போன்றவை அவற்றுள் சில. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில்
பெரும்பான்மையினர் ஆவர். இவர்கள் மலேசியத் தமிழர் என்று அறியப்படுகின்றனர்.

பண்பாடு

கோலாலம்பூரில் சமையற்காரர் முட்டைகள், இறைச்சி மற்றும் வெங்காயத் துண்டுகள் கலந்த முர்டாபாக் எனப்படும் ஒருவகை

தோசையைச் சுடும் காட்சி.

தட்டை நூடுல்களுடன் மீ ன் கேக், கிளிஞ்சல்கள், முளைவிட்ட பீ ன்சு ஆகியவற்றை வறுத்துச் சமைக்கப்படும் சார் குவே

டியோவ் மலேசியாவில் மிகவும் பரவலானது.

மலேசியாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மற்றும் பல்வேறு
மொழிபேசும் மக்கள் உள்ளனர். இப்பகுதியின் துவக்கநிலை பண்பாடு இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள், இங்கு
இடம் பெயர்ந்த மலாய் இனத்தவரால் உருவானது. வெளிநாட்டு வணிகம் துவங்கிய வரலாற்றுக்காலத்திலேயே
சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. பாரசீகர், அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத்
தாக்கங்களைப் பின்னதாக உள்வாங்கியது. அரசமைப்பு, சமூக உடன்பாடு போன்றவை காரணமாக இனச்
சிறுபான்மையினரின் பண்பாடு தன்வயமாகவில்லை.[43]

1971 இல் மலேசிய அரசு "தேசிய பண்பாட்டுக் கொள்கை"யை அறிவித்தது; இதன்படி மலேசியப் பண்பாடு
பழங்குடியினரின் பண்பாட்டின்படி அமையும் என்றும் பிற பண்பாடுகளிலிருந்து பொருத்தமானக் கூறுகளை
உள்வாங்கும் என்றும் இசுலாம் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வரையறுத்தது.[44] மேலும் மலாய் மொழியே
மற்ற மொழிகளை விடப் பரப்பப்படும் எனக் கூறியது.[45] இவ்வாறான அரசின் தலையீட்டை மலாய் அல்லாத
சிறுபான்மையினர் தங்கள் பண்பாட்டுச் சுதந்தரத்தைக் குறைப்பதாக எதிர்த்தனர். சீனர்களின் சங்கங்களும்
இந்தியச் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மனு ஒன்றை அளித்தனர்.[44]

மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே (குறிப்பாக இந்தோனேசியா) பண்பாட்டுச் சண்டைகள்


ஏற்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் ஒன்றையொத்த பாரம்பரியமும் வழைமையான பழக்கங்களும் உள்ளன.
இருப்பினும் உணவுப் பொருள்களிலிருந்து மலேசியாவின் நாட்டுப்பண் வரை பல பிணக்குகள் எழுந்துள்ளன.
[46]
 இந்தப் பிணக்குகளைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் பலமுறை முயன்றுள்ளன.[47]

மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்காகும்.


விளையாட்டு

மலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாகக் காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம்,


பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட்
பலகையோட்டம் ஆகியன .[48] இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை
ஈர்க்கின்றன; 1948 ஆம் ஆண்டு முதல் தாமசு கோப்பையைத் தக்க வைத்துள்ள மூன்று நாடுகளில் ஒன்றாக
மலேசியா விளங்குகிறது.[49] மலேசிய புல்தரை பௌல்ஸ் கூட்டமைப்பு 1997 இல் பதிவு செய்யப்பட்டது.
[50]
 பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டில் முதல் போட்டி
1939 இல் நடத்தப்பட்டது. ஸ்குவாஷ் பந்தடி மட்டைச் சங்கம் சூன் 25, 1972 இல் உருவானது.[51] மலேசியா
தென்கிழக்கு ஆசியாவிற்கான ஓர் கால்பந்துக் கூட்டிணைவைப் பரிந்துரைத்துள்ளது.[52] ஆகத்து 2010 இல்
மலேசியாவின் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி உலகத் தரவரிசையில் 15 வதாக இருந்தது.[53] கோலாலம்பூரில்
உள்ள மெர்டெக்கா விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் மூன்றாவது மற்றும்
பத்தாவது போட்டிகள் நடத்தப்பட்டன.[54] மலேசியாவில் பார்முலா 1 தடம்– செபாங் பன்னாட்டு சுற்றுகை உள்ளது.
310.408 கிலோமீ ட்டர்கள் (192.88 mi) தொலைவுள்ள இச்சுற்றுகையில் முதல் கிராண்ட் ப்ரீ போட்டி 1999 இல்
நடந்தது.[55]

மலேசியாவின் பார்முலா 1 தடம், செபாங் பன்னாட்டு சுற்றுகை.

1953 இல் உருவான மலேயா ஒலிம்பிக் குழுவிற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அங்கீ காரம் 1954 இல்
கிடைத்தது. மலேசியா 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றது. 1964 இல் இக்குழுவிற்கு
மலேசியா ஒலிம்பிக் குழு என மறுபெயரிடப்பட்டது. துவங்கிய காலத்திலிருந்து ஒன்றைத் தவிர அனைத்து
ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. 1972 ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு மிக
உயர்ந்தளவில் பங்கேற்பாளர்களை(57) அனுப்பி உள்ளது.[56] மலேசிய போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை
நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்; இவை அனைத்துமே இறகுப்பந்தாட்டத்தில் என்பது
குறிப்பிடத்தக்கது.[57] பொதுநலவாய விளையாட்டுக்களில் 1950 முதல் மலாயா என்றும் 1966 முதல் மலேசியா
என்றும் பங்கெடுத்து வந்துள்ளது. 1998 இல் இந்த விளையாட்டுக்கள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன.[58] தற்காப்புக்
கலைகளில் மலேசியாவில் சிலாட் மற்றும் டோமோய் என்னும் இரு வகைகள் பயிலப்படுகின்றன.

ஊடகம்

மலேசியாவின் முதன்மை செய்தித்தாள்கள் அரசுடமை அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின்


உடமையாக உள்ளன.[59] இருப்பினும் சில பெரிய எதிர்க்கட்சிகளும் நாளிதழ்களின் உரிமையாளர்களாக உள்ளனர்.
[60]
 நாட்டின் இரு பகுதிகளிலிருந்து வெளியாகும் ஊடகங்களிடையே பிளவு உள்ளது. தீபகற்ப ஊடகங்கள் கிழக்குப்
பகுதி செய்திகளுக்குக் குறைந்த முன்னுரிமை வழங்குகின்றனர்; அப்பகுதியை தீபகற்ப மலேசியாவின்
குடியேற்றப் பகுதியாகக் காண்கின்றனர்.[61] மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வளரும்
சிக்கல்களுக்கு ஊடகங்கள் குறை சொல்லப்படுகின்றன. இந்தோனேசியர்களைக் குறித்து தாழ்வான கருத்து
நிலவவும் அவர்களே காரணமாக்கப் படுகின்றனர்.[62] மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள்
வெளியாகின்றன.[61]

ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள காரணத்தால் அரசிற்கு பொறுப்புடைமை குறைவாக உள்ளது.[63] அரசு


தேர்தல்களுக்கு முன்னர் எதிர்கட்சி நாளிதழ்களை அடக்க முயன்றுள்ளது.[60] 2007 இல் எதிர்க்கட்சித்
தலைவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப வேண்டாமென்று அனைத்து
தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டன;[64] இதனை எதிர்க்கட்சியான
சனநாயக செயல் கட்சி கண்டித்துள்ளது.[65] சபாவில் ஒன்றைத் தவிர அனைத்து நாளிதழ்களும் தனியார்
வசமுள்ளன. இப்பகுதியே மலேசியாவில் மிகவும் சுதந்திரமான ஊடகங்கள் இருக்குமிடமாகும்.[61] அச்சகங்கள்
மற்றும் வெளியீடுகள் சட்டம் போன்றவை கருத்துச் சுதந்திரத்திற்கு தடங்கலாக இருப்பதாகச் சுட்டப்படுகிறது.
உள்கட்டமைப்பு

வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மலேசியா

மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.


[67]
 4.7 மில்லியன் நிலைத்த இடத் தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும்
கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில்
உள்ளது.[68][69] மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன; முக்கியமான
துறைமுகமாகக் கிளாங் துறைமுகம் உள்ளது. 200 தொழிற் பேட்டைகளும் டெக்னாலஜி பார்க்,
மலேசியா மற்றும் குலிம் ஹ-டெக் பார்க் போன்ற சிறப்பு கட்டமைப்புக்களும் தொழில் வளர்ச்சிக்கு
ஊக்கமளிக்கின்றன.[48] 95% மக்களுக்குத் தூய குடிநீ ர் வழங்கப்படுகிறது.குடிமைவாத காலங்களில் பொருளியல்
தாக்கமுள்ள நகரங்களிலும் பாதுகாப்பிற்கு வழிகோலும் இடங்களிலுமே மேம்பாட்டு கட்டமைப்புக்கள்
உருவாகியிருந்தன. விடுதலைக்குப் பின்னதாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியைக் குவியப்படுத்தி வளர்ச்சித்
திட்டங்கள் தீட்டப்பட்டபோதும் அவை இன்னமும் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை விடப்
பின்தங்கி உள்ளன.[70] தொலைத்தொடர்பு சேவைகளும் நகரப்பகுதிகளில் சிறப்பாக இருந்தபோதும் உள்நாட்டுப்
பகுதிகளில் அணுக்கம் குறைவாகவே உள்ளது.[68]

மலேசியாவில் 98,721 கிலோமீ ட்டர்கள் (61,342 mi) தொலைவிற்கு சாலைகள் இடப்பட்டுள்ளன; இவற்றில் 1,821
கிலோமீ ட்டர்கள் (1,132 mi) தொலைவு விரைவுச்சாலைகளாகும்.[19] நாட்டின் மிக நீ ண்ட நெடுஞ்சாலையாக
விளங்கும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை,தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை 800 கிலோமீ ட்டர்கள்
(497 mi) தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் சாலைகள் நன்கு அமைக்கப்படாததுடன்
தீபகற்ப மலேசியச் சாலைகளைப் போல் இல்லாது அவற்றின் தரமும் குறைந்த நிலையில் உள்ளன.
[71]
 மலேசியாவில் 38 நன்கு பாவப்பட்ட நிலையங்கள் உட்பட 118 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின்
அரசுசார் மலேசியா ஏயர்லைன்சுடன் மேலும் இரு வான்பயண சேவை நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு
வான்பயணச் சேவைகளை நல்குகின்றன. தொடர்வண்டிச் சேவைகள் அரசுமயமாக்கப்பட்டுள்ளது; 1,849
கிலோமீ ட்டர்கள் (1,149 mi) தொலைவிற்கு சேவை அளிக்கின்றன.[19] கோலாலம்பூர் போன்ற சில நகரங்களில்
ஒப்புநோக்கில் குறைந்த செலவான உயரத்தில் செல்லும் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு
நிறுவப்பட்டுள்ளது.[72] ஆசியான் விரைவுத் தொடருந்து (Asean Rail Express)
கோலாலம்பூரை பாங்காக்குடன் இணைக்கும் தொடர்வண்டிச் சேவையாகும். இச்சேவை மூலம் எதிர்காலத்தில்
சிங்கப்பூரையும் சீனாவையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[67]

வழமையாக, மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே


உள்ளது.[73] நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 GW ஆக உள்ளது.[74] இன்னமும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை
எரிவாயு இருப்பும் 19 ஆண்டுகளுக்கான எண்ணெய் இருப்புமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க
ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த அரசு முயன்று வருகிறது.[73] 16 சதவதம்
ீ நீ ர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற
84 சதவதம்
ீ அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[74] எண்ணெய் மற்றும்
எரிவாயு உற்பத்தியில் அரசுடமை நிறுவனமான பெட்ரோனாசு பெரும்பங்கு வகிக்கிறது.[75] மின்சார ஆணையம்
சட்டம், 2001 இன்படி மலேசிய ஆற்றல் ஆணையம் (Energy Commission of Malaysia) தீபகற்ப மற்றும் சாபாவில்
ஆற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.

You might also like