Professional Documents
Culture Documents
அங்கீகரிக்கப்பட்ட மனைக்கான நிபந்தனைகள்
அங்கீகரிக்கப்பட்ட மனைக்கான நிபந்தனைகள்
Instant Grammar Checker - Grammarly Makes Sure Everything You Type Is Effective And Mistake-
Free. Try Now! www.grammarly.com
Ads by Google
வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர்
COMMENT (1) · PRINT · T+
பகிர்2
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA) மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் (DTCP) இவை
தமிழகத்தில் நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் அதிகரம் பெற்ற அரசு அமைப்புகள். CMDA-
வின் அதிகார வரையரை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குட்பட்ட அதிகார
எல்லைகளுக்குள்ளேயே உள்ளது. மாநிலத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும்
(DTCP)யின் அதிகார வரையறையுள்ளது. நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் பொறுப்பு 10 ஏக்கர்
(5 ஏக்கரிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது) வரை உள்ளூர்த் திட்ட அதிகார அமைப்பால் (LPA)
வழங்கப்படுகிறது. LPA, DTCP அமைப்பின் துணைக்குழு. 10 ஏக்கருக்கு மேல் நில அமைப்பு
ஒப்புதல் வழங்கும் பொறுப்பு சென்னையில் உள்ள DTCP தலைமை அலுவலகத்தில் உள்ளது.