Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 4

அரபிக் கடலோரத்துக் கவிதை

2 & 3 BHK in Coimbatore - Just launched self- contained community starting at Rs. 71


Lacssalarpuriasattvanavaratna.net/
Ads by Google
ஜெய்
COMMENT   ·   PRINT   ·   T+  

தாஜ்மஹால், தஞ்சாவூர் கோயில், நாயக்கர் மஹால் போன்ற கட்டிட அதிசயங்களுக்கான


கட்டுமானப் பொருள்கள் கடல் கடந்து கொண்டுவரப்பட்டன எனச் சொல்லிக்
கேள்விப்பட்டிருப்போம். அதாவது கண்ணாடி பெல்ஜியத்திலிருந்து, மரங்கள்
பர்மாவிலிருந்து, பளிங்குக் கற்கள் அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாகச்
சொல்லப்படும் இல்லையா? ஆனால் இதுவெல்லாம் நூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
நடந்த கதை. அதுபோல இன்று சாத்தியமா எனத் தோன்றும்.

ஆனால் அப்படி ஒரு கட்டிட அதிசயத்தைக் கட்டியிருக்கிறார் கன்னியாகுமரி


மாவட்டத்தைச் சேர்ந்த மீ னவர் அந்தோணி ராஜ். இந்தக் கட்டிடத்துக்காக
மும்பையிலிருந்தும், கொச்சியிலிருந்தும் கட்டுமானப் பொருள்களை வாங்கி
வந்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டணத்துக்கு அருகில் உள்ளது தூத்தூர் என்னும்
கடற்கரை கிராமம். அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள இந்தச் சிற்றூரின் ஊடே ஏவிஎம்
(ஆனந்த விக்டோரியா மார்த்தாண்டம்) கால்வாய், செல்கிறது. இந்தக் கால்வாயில்
அருகில்தான் அந்தோணி ராஜ் தன் கனவு இல்லத்தை எழுப்பியிருக்கிறார்.
எல்லோரையும்போல் தன் சின்னஞ்சிறிய குடும்பத்துக்கு ஒரு வடு
ீ கட்ட வேண்டும் என
விரும்பியிருக்கிறார். ஆனால் அது எல்லோரும் கட்டுவதுபோன்று வெறும் கான்கிரீட்
கட்டிடமாக இருக்கக் கூடாது எனத் தீர்மானித்திருக்கிறார்.

“நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். என் மனைவி கவிதாவுக்கு ஒரு


காதல் பரிசு தர வேண்டும் என்பது ரொம்பநாள் ஆசை. அவள் தாஜ்மஹால் போல ஒரு வடு

கட்டித் தரச் சொன்னாள். அதுதான் ஷாஜகான், மும்தாஜூக்காகக் கட்டிவிட்டானே நாம்
எதற்கு அதை மீ ண்டும் கட்ட வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் கொச்சியில் நான்
பார்த்த படகு வடு
ீ என் மனத்துக்குள் வந்தது” என்கிறார் அந்தோணி ராஜ்.

மீ னவரான அந்தோணி ராஜ், தொழில் முறையாக கேரள மாநிலம் கொச்சி அருகே வைபின்
தீவுக்குச் செல்வது வழக்கம். அப்படிப் போகும்போது அங்குள்ள சுற்றுலாப் படகு வடுகளைப்

பார்த்திருக்கிறார். அங்கு தன் மனைவி, குழந்தைகளுடன் தங்க வேண்டும் என அவருக்கு
விருப்பம். ஆனால் இந்தப் படகு வடுகளில்
ீ தங்குவதற்கான கட்டணம் ஒரு நாளைக்கு
பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் என்பதால் அவரால் அது சாத்தியப்படவில்லை. அதுபோல்
ஒரு படகு வட்டை
ீ நாமே உருவாக்கலாம் என நினைத்திருக்கிறார். அந்த எண்ணத்தின்
விளைவுதான் இந்தக் கனவு இல்லம். ஆனால் தண்ணரில்
ீ மிதக்கும் படகு வட்டுக்குப்

பதிலாக, தரையில் இருக்கும் படகு வட்டை
ீ உருவாக்க நினைத்தார்.

அவரது இந்த எண்ணத்துக்குப் பக்கபலமாக அவரது நண்பர் பைஜூ இருந்துள்ளார். இவர்கள்


இருவரும் சேர்ந்தே இந்தக் கனவு இல்லத்துக்கான திட்டத்தை உருவாக்கியுள்ளனர். பட்டம்
பெற்ற, அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் உருவாக்குவதை விடவும் நேர்த்தியாக இந்த
வட்டை
ீ உருவாக்கியுள்ளனர்.

“நாங்களே கட்டிடத்துக்கான திட்டத்தைத் தீர்மானித்து, உள்ளூர் கொத்தனர்களை வைத்துக்


கட்டினோம். பார்க்கும் எல்லோரும் இது வேண்டாத வேலை என்றே சொன்னார்கள்.
கொத்தனாருக்கும்கூட கடைசி நேரத்தில் இந்த எண்ணம் வந்துவிட்டது. ஆனால்
அந்தோணியும் நானும் உறுதியாக இருந்தோம். எங்கள் உறுதிக்கான பலனாக இந்தப் படகு
வடு
ீ இந்தப் பகுதியினர் அதிசயக்கும் கட்டிடமாக உருவாகியிருக்கிறது.” என்கிறார் பைஜூ.

படகு வடு
ீ தண்ணரில்
ீ மிதப்பது போன்ற தோற்றத்தைத் தருவதற்காக, இந்த வட்டைச்

சுற்றிலும் நீரை நிரப்பி, மீ ன்களை வளர்த்து வருகின்றனர். அதுபோல படகு வட்டைப்
ீ போல
மேற்கூரை மூங்கிலால் வடிவமைத்துள்ளனர். கழிவறை, குளியலறையுடன் கூடிய இரு
படுக்கையறை, ஒரு வரவேற்பறை, தியானக் கூடம், சமையலறை என இந்த வடு

வடிவமைக்கப்பட்டுள்ளது. உள் அலங்காரத்துக்கு பெரும்பாலும் மரங்களைப்
பயன்படுத்தியுள்ளனர்.

இந்த வடு
ீ கட்டுவது சாத்தியமில்லை எனச் சொன்னவர்கள் எல்லாம் இந்த வட்டைக்
ீ கண்டு
வியக்கின்றனர் என்கிறார் அந்தோணி ராஜ். மேலும் இது இப்போது ஒரு சுற்றுலாத்
தலமாகவே ஆகிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சுற்றுலா வருவோர்கள்
அனைவரும் இந்த வட்டைக்
ீ காண வரத் தொடங்கியிருக்கின்றனர்.
2015-ம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தொடங்கிய இந்த வட்டை
ீ அதே ஆண்டில் டிசம்பர் 24
முடித்துவிட்டார்கள். இன்னும் சில விஷயங்கள் செய்ய வேண்டியிருந்தும் அவசரமாக
நிறைவுசெய்ய ஒரு காரணம் இருந்திருக்கிறது. அன்று அந்தோணி ராஜ் கவிதாவின்
ஏழாவது திருமண நாள். அது ஊரே கொண்டாடும் விழாவாக ஆனது.

மனைவி கவிதா, குழந்தைகளுடன் அந்தோணி ராஜ்

You might also like