பழமொழியும் உவமைத்தொடரும்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

ஏற்ற பழமொழியை எழுதுக

சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்கும் பொருளே நாளடைவில் பெருமளவில் சேரும்

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

பல நூல்களைக் கற்றவர்கள் அறிஞர்களாகத் திகழலாம்.

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

சிறுவயதில் கைக்கொள்ளும் பழக்க வழக்கம் இறக்கும் வரை உடன் இருக்கும்

தொட்டிர் பழக்கம் சுடுகாடு மட்டும்

தன் இயலாமையை வெளிக்காட்டிக் கொள்ளாதவர், பிறர் மீது குறைகள் கூறுவர்

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாலாம்

பிறர் உதவியை எதிர்பாராமல், அனைத்தையும் தானே செய்து கொள்வது

தன் கையே தனக்கு உதவி

சரியான உவமைத்தொடர்களைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க

1. மதியழகியும் கஸ்தூரியும் தொடக்கப்பள்ளி முதல் பல்கலக்கழகம் வரை இணைபிரியாமல் மணியும் ஒலியும் போல
பழகி வருகின்றனர்.

2. பேச்சுத்திறன் நிறைந்த அமுதன் தன் திறமைகளை இலைமறை காய் போல வெளிக்காட்டிக் கொள்ளாமல்
இருந்தான்.

3. தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் கற்றுக்கொடுத்த மூதுரை பசுமரத்தாணி போல இன்றும் நினைவில் உள்ளது.

4. அழகிக்குக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதுடன் நூறு ரிங்கிட் பணம் கிடைத்தது பழம் நழுவிப் பாலில்
விழுந்தாற் போல இருந்தது.
5. இடைநிலப்பள்ளியில் நெருங்கிய தோழிகளான உமையாளும் முல்லையும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்
சந்தித்தபொழுது தாயைக் கண்ட சேயைப் போல ஆரத் தழுவிக்கொண்டனர்.

You might also like