யார் பரமாத்மா

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

யார் பரமாத்மா ?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1.)தாயார் பரமாத்மா தானா ?
2.)விஷ்ணுமாயை கடப்பதற்கு அரிதா ?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^/
[குறிப்பு:- இன்றுவரை அடியேனை வாழ்விப்பது பெரியபிராட்டியார் தான். ஆயினும் அவர் விஷயமாக ஏற்பட்ட
சில வைஷ்ணவ குழப்பங்களை, தத்துவார்தமாக அதுவும் ஆழ்வார் பாசுர வடிவில் தெளிவிக்கவே இந்தக்
கட்டுரையினை அவள் அருளால் வரைகிறேன். திவ்யதம்பதியினரின் அருளும் ஸ்ரீமத் ஆழ்வார், ஸ்ரீமத்
உடையவர், பெரியஜீயர், ஆசார்ய ,பாகவதோத்தமர்களின் அருளும் அடியேனுக்கு என்றுமே வாய்பப் தாக! ]
அதாவது ஒரு நடிப்புக்காக கூட தவறு செய்யாதவரே பரமாத்மா . எந்த சூழ்நிலையிலும் தவறு செய்யாதவரே
பரமாத்மா. தவறுகளிலேயே மிகப்பெரிய தவறு பாகவத அபசாரமே !
“அமலன், விமலன், நின்மலன்” என்று அகிலஹேயப்ரத்யனீகத்வம் கொண்டாடுகிறார் ஸ்வாமி
திருப்பாணாழ்வார்.
பாகவதரை “வாஸுதேவ ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:” என்றும் “ஞானி து ஆத்மா ஏவ மே மதம்”
என்றும் கீதையில் எம்பெருமானே கொண்டாடுகிறார்.
அப்படிப்பட்ட பாகவதனுக்கு அபசாரம் செய்வதே மஹா பெரியதவறு ஆகும். எம்பெருமானுக்கு கைங்கர்யம்
செய்ய அவனுடன் லீலாவிபூதிக்கு வரும் நித்யசூரிகளும் சில சமயங்களில் தவறுகள் இழைப்பதுண்டு.
இதையே ஆழ்வாரும்
“விண்ணுலார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனவை” என்று திருவாய்மொய்மொழி -7-1-
6 ல் காட்டுகிறார். இதற்கு விளக்கமாக நித்யசூரிகள் கதைகளை பார்க்கலாம்.
1.)ப்ரஹ்மாண்டபுராணத்தில் வாயுதேவனுக்கும், அநந்தாழ்வானுக்கும் “யார் எம்பெருமானின் அருள் பெற்ற
பலசாலி ? என்று போட்டி ஏற்பட்டது. பல மலைச்சிகரங்கள் கொண்ட தொடரை ஆதிசேஷன் தனது உடலால்
பிடித்துக் கொண்டார். அதிலிருந்து ஒரு சிகரத்தையாவது வாயுதேவன் அசைக்கவேண்டும் என்பது போட்டி.
ஆயினும் எம்பெருமான் அருளால் வாயுதேவன் ஒரு சிகரத்தி பிடுங்கியே விட்டார். பிறகு பாகவத
அபசாரத்திற்கு மன்னிப்பும் கேட்டார் ஆதிசேஷன்.
அஹங்காரம் கழிந்த அவர் பெயரிலேயே, அப்படியொரு போட்டிநடந்த சிகரமே இன்று திருவேங்கடத்தொடரில்
சேஷாத்ரி என்று புகழப்பெறுகிறது.
2.)கருடாழ்வார் ஒருமுறை பகவானிடமும் வேறோருமுறை பாகவதரிடமும் அபசாரப்பட்டு இறக்கைகள் எரிந்து
போனது. இதற்கு மன்னிப்பும் கோரினார் -இதுபற்றி மஹாபாரதத்தில் உபாக்யானங்கள் காணலாம்.
3.)பூமாதேவியார் ப்ருதுசக்கரவர்தத் ியிடம் அபசாரப்பட்டார். அவளை மன்னித்து தனது மகளாக ஏற்றார்
ப்ருது. அதுமுதல் தேவிக்கு ப்ருதிவீ என்று திருநாமம் ஏற்பட்டது.
4.)ஸ்ரீமத் ராமாயணத்தில் பெரியபிராட்டி லக்ஷ்மணரிடம் அபசாரப்பட்டார். அதற்கு முதல் பெருமாளிடமே
அபசாரம் செய்தார்.
இதை அவரே சுந்தரகாண்டத்தில் ஆஞ்சனேயரிடம் சொன்ன
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத் அஸ்தி ந ஸம்ஶய: | என்னும் இச்சுலோகம் ஒருமுறைக்கு இருமுறை
சேவிக்கப்பெறுகிறது.
பிராட்டி ஹனுமானிடம் சொன்னதாக ஒருமுறை(38-48). ஆஞ்சநேயர் பெருமாளிடம் விண்ணப்பம் செய்வதாக
மற்றொரு முறை. (67-23)
இப்படி எங்குமே எம்பெருமான பகவான் தனது அடியார்களிடம் அபசாரப்பட்டதே இல்லை.

மாறாக அபசாரம் செய்த பூதேவி, ஸ்ரீதேவி, அநந்தன் ,கருடன் ஆகியோரை நித்யர்கள் என்று முடிக்கிறேன்.
பகவான் ஒருவனே பரமாத்மா என்று தீர்ப்பும் அளிக்கிறேன்.
ஸ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீபெரியபிராட்டி சமேத ஸ்ரீபெரியபெருமாள் திருவடிகளே சரணம்

^^^^^^^^^^^^^^^^^^^
யார் வைஷ்ணவன்
^^^^^^^^^^^^^^^^^^^/

You might also like